நான் பாபர் மசூதி இடித்த விசயத்தை நினைவூட்ட விரும்பவில்லை.
ஆனால் இடித்த சமயத்தில் தமிழகம் எப்படி இருந்தது என்பதை நினைவூட்ட விரும்புறேன்.!
கிட்டத்தட்ட இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் மசூதி இடிப்பு தொடர்பாக ஏதேனும் ஒரு இஸ்லாமியனின் உயிரோ, இந்துவின் உயிரோ செத்துக் கொண்டு இருந்த சமயத்தில் "பெரியாரின்" தமிழகத்தில் மட்டும் எந்தக் கலவரமும் இல்லை..
உயிர் சேதமும் இல்லை..!!
மசூதி இடிப்பைக் கண்டித்து தமிழகத்தில் கூட்டம் கூட்டமாக கண்டன ஊர்வலம் போனார்கள், போனவர்கள் முஸ்லீம்கள் அல்ல, இந்து சகோதரர்கள்..!!
இடித்த போது எவர் கண்டன ஊர்வலம் போனார்களோ அந்த பங்காளிகளின், அந்த மாமன் மச்சான் கைகளில் இந்த தீர்ப்பை ஒப்படைத்து விட்டு நாம் நம் வேலையைப் பார்ப்போம்...
என் தாய்திரு நாட்டில், திருடியவனுக்கே பொருள் சொந்தம் எனும்
உன்னத தீர்ப்பை வழங்கி பெருமை பட்டு கொண்டிருக்கும் தருணத்தில்..
இறந்த சடலத்திற்க்கு மீண்டும்,மீண்டும்,பிணகூறு ஆய்வு செய்திட எனக்கு விரும்பமில்லை, ஆயினும் இராமனுக்காக கோவில் கட்டி அவன் பிறப்பிட பெருமை காக்க துடிக்கும் சொந்தங்களே!
நீங்கள் உண்மையிலேயே இராமனை படித்திருந்தால், பக்தி கொண்டிருந்தால்,
எழுதி முடிக்கபட்ட தீர்ப்பும் உங்கள் நெஞ்சை உருத்தியிருக்கும்..
களவெடுத்தவனுக்கே களவெடுத்த பொருள் சொந்தமென இராமன் எண்ணியிருந்தால்..
சேனைகளை கட்டமைத்து சீதையை மீட்டிருக்க மாட்டான்..
வனவாசம் சென்றயிடத்திலேயே தன் வாசம் அமைத்திருப்பான்.
கள்ளமிட்ட தனக்கே சீதை சொந்தமென இராவணவன் நினைத்திருந்தால்...
சீதையை,சீதையாகவே வைத்து பார்த்திருக்க மாட்டான்...
எழுதபட்ட மஹாபாரதத்தில் நீதியோடு தான் நடந்து கொண்டார்கள்...
ஹீரோவாக போற்றபடும் இராமனும,
வில்லனாக சித்தரிக்கபடும் இராவணனும் பாவம்..
நாங்கள் இராமனின் பக்தாள்கள் என்று சொல்லகூடிய நவீன சேனைகள் தான்.. இராமன் போதித்த நீதிக்கு..
பாபரின் பள்ளியில்...
ஒன்றையிழந்தால்,ஒன்றை பெறவேண்டுமென்பது இயற்கையின் நியதி,
அவ்வகையில் பள்ளியை இழந்தோம்.
அனைத்து தளத்திலும் சமுதாய வழி காட்டிகள் ன்ற, பாசாங்கு தலைமைகளை இனம் கண்டு கொண்டோம்.
போகட்டும்,சாவின் விழிம்பில் துடித்த போதும் தன் கவசகுண்டலத்தை தாரைவார்த்து தர்மத்தை கடைபிடித்த கர்ணனை போல்.என் தேசத்திற்க்காக,எம் முன்னோர்கள் எண்ணற்ற தியாகங்களை விதைத்து சென்றுள்ளார்கள்..
இறுதியாக எங்களிடம் முன்னோர்களின் பெருமையை தவிர இழப்பதற்க்கு வேறொன்றுமில்லை..
எடுத்து செல்லுங்கள் இராமனுக்கான விலாசமாய் பாபரை...
என் சமுதாயமுன்னோடிகள் சமூகநல்லிணக்கம் ஜனநாயகமென்று வெறும் அறிக்கைகளாக தருபவர்களல்ல..
நாளை..
இராமனின் கோவிலுக்கு மூலவர் சிலையை கூட எம் மூத்தவர்கள் பெற்று தருவார்கள்..
மகிழ்வோடு பெற்று செல்லுங்கள்.வேண்டுகோள் வேறொன்றுமில்லை ஒன்றை தவிர...
எழுப்பபடும் இராமனின் கோவிலிருந்தாவது தொடங்கட்டும் சாதிய ஒழிப்பும் சாதிய பாகுபாடும்...
இராமனின் முன்பாவாவது,சாதிகள்,பேதங்களற்ற இந்துவாய் இணைந்து நில்லுங்கள்.
இதோ.தொழுகை நேரம் வந்து விட்டது,வெறும் கட்டிடத்தை தேடவில்லை கண்கள்,தூய்மையான கட்டாந்தரையை தான் தேடுகிறது.இது தான் இஸ்லாம் கற்று தரும் இறை வழிபாடு...
எங்களின் துயருக்காக உங்களின் மகிழ்ச்சிகள் தடைபட வேண்டாம்.
உங்களின் மகிழ்ச்சிக்காக இனியும் எங்களை துன்புறுத்த வேண்டாம்...
அதே சகோதரதுவத்தோடும்,இறைவன்ஒருவனே எனும் நம்பிக்கையோடு..
உங்கள் சகோதரன் மு,அஜ்மல் கான்.
No comments:
Post a Comment