பெண்கள் விஷயத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் இந்திய நாட்டிலே நடந்து வருகின்றது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்க கூடிய ஒரு அவல நிலையை சந்தித்திருக்கின்றது. இந்த நிலை மாற அரபு நாட்டு சட்டம் மட்டுமே தீர்வு என்று சொல்லி அனைத்து சிந்தனை வாதிகளும் ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனர்.
இளம் வயது பெண் மருத்துவர் பிரியங்கா எரித்துக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் .தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான பிரியங்கா அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 27 ம் தேதி புதன்கிழமை வழக்கம்போல் பணிக்கு சென்ற பிரியங்கா இரவு வீடு திரும்ப வில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இறுதியாக அவரது சகோதரிக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட அவர் தன்னை யாரோ முறைத்து பார்ப்பதாகவும், பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பின் அவரது போனை தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விசாரணை மேற்கொண்ட போலீசார் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண் பிரியங்காதான் என்பதை உறுதி செய்தனர்.
இளம் வயது பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சிவா, நவீன், முகமது பாஷா, சென்னகேசவுலு ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள்தான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களாக பிரியங்காவை நோட்டமிட்டு வந்திருந்த வன்முறை கும்பல் அவருடைய இரண்டு சக்கர வாகனத்தை பஞ்சர் செய்துள்ளனர். அதை அவர் தள்ளி சென்று கொண்டிருக்கக்கூடிய வழியில் உதவுவது போன்று இந்த பயங்கர சம்பவத்தில் நால்வரும் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை உறுதிசெய்து அவர்களை கைது செய்துள்ளது.
பிரியங்கா வின் தாயார் 4 பேரையும் நடுரோட்டில் நிற்க வைத்து அப்படியே உயிரோடு எரிக்க வேண்டும் என்று கண்ணீர் சிந்த பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட பலரும் இந்த கருத்தைதான் கூறி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ளவர்களை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் இஸ்லாமிய சட்டத்தை ஆளும் ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
காவலன் என்ற அப்ளிகேஷன் மூலமாக செய்தி அனுப்பினால் உடனே பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சொல்லக்கூடிய இந்த சூழ்நிலையில் புகார் அளித்து அந்த புகாரை எந்த காவல் நிலையம் எடுக்க வேண்டும் என்று காலதாமதம் படுத்தியதாக சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை பார்க்கின்றோம். மக்களை பாதுகாப்பதற்கு தேவையான வகையில் சட்டங்கள் இயற்றப்பட கூடிய ஒரு சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுதான் உண்மையான சுதந்திரம் என்பதை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கின்றது. தவறு செய்யக் கூடியவர்கள் பயப்படும் நிலை இல்லாததை இது உணர்ந்துகிறது. கடுமையான சட்டங்கள் தான் தவறு செய்யக்கூடியவர்கள் அஞ்சும் நிலை ஏற்படும். கடுமையான சட்டங்கள் தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்..
No comments:
Post a Comment