Friday 15 November 2019

ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் பாத்திமா லத்தீஃப் நிறுவன படுகொலை !!!!


பார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்...


1.எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..?
2.ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..?
3. என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று சொல்கிறார்கள். அவளது அறையிலும் கயிறு இல்லை, வெளியிலிருந்தும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை..அந்த கயிறு எப்படி கிடைத்தது.
4.மரணிப்பதற்கு முன்பான இரவில் உணவகத்தில் வைத்து 1மணிநேரம் எனது மகள் அழுதிருக்கிறாள். அவளை சக மாணவி தேற்றியிருக்கிறார். யார் அந்த மாணிவி.? 1மணி அழுகிறாள் எனில் அப்படி என்ன தொல்லைகளை எனது மகள் சந்தித்தாள்.
Image may contain: 1 person, smiling, text5. மரணமடைந்த நாளில் கூட எனது மகளின் அறையில் வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். எனது மகளின் அறை அலங்கோலமாக களைந்து கிடந்த்து.
6.எனது மகளின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஏன்..? எனது மகளின் அறையிலிருந்த மற்றொரு மாணவி அறையை காலி செய்துவிட்டு வேறொரு அறைக்கு சென்று விட்டார்
7.தினமும் இரவு 8மணிக்கெல்லாம் விடுதிக்கு சென்றுவிடும் எனது மகள் சம்பவம் நடந்த அன்று 9மணிக்கு உணவகத்தில் வைத்து அழுதிருக்கிறாள் எனில் அப்படி என்ன துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.?
8.எப்பொழுதும் தேர்வின் விடைத்தாள்களை தானே சென்று வாங்கி வரும் என் மகள் பாத்திமா சம்பவம் நடப்பதற்கு முன்பாக தனது தோழியை அனுப்பி சுதர்சன் பத்மநாபனிடம் விடைத்தாளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் எனில் என்ன நடந்தது..?
9.சம்பவம் நடந்த அன்று 9 மணிக்கு உணவகத்தில் அமர்ந்து எனது மகள் பாத்திமா அழுது கொண்டிருக்கிறோம் போது 9:30வரை சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தில் தான் இருந்திக்கிறார்.
10. எனது மகள் மரணத்து இதுவரை ஐஐடி யின் அதிகாரப்பூர்வமாக என்னிடமோ, எனது மனைவியிடமோ பேசாசது ஏன்..? அதுமட்டுமல்லாது ஐஐடி யின் மாணவர்களோ, ஆசிரியர்களோ, பேராசிரியர்களோ யாருமே எங்களிடம் ஆறுதலைக் கூட சொல்லாதது ஏன்..??
ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு...
"எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.
முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.
ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.
பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.
சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.
அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?
சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?
என் கருத்து : ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.
இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..
IIT மாணவி பாத்திமா லத்தீஃப் மரணத்திற்கு காரணமான பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நெருக்கமானவனாக இருக்கிறான்.
ஆர்.எஸ்.எஸ் நடத்துகிற NGO-வான Infinity Foundation சார்பாக "Modern Hinduphobia and Dravidian Movement" என்ற பெயரில் இந்துத்துவ மதவெறியை நியாயப்படுத்தியும், திராவிட இயக்கத்தினை குற்றம் சாட்டியும் IITக்குள் கருத்தரங்கத்தை முன்னின்று நடத்தியிருக்கிறான்.
இவனை வழக்கிலிருந்து தப்பிக்கவைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் மொத்தமும் வேலை செய்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்-பார்ப்பனிய தீவிரவாத கும்பலின் மதவெறிக் கூடமாக ஐஐடி கல்வி நிலையங்கள் நீடித்து வருகின்றன. இதனால்தான் IIT-க்குள் பயில செல்கிற SC/ST, OBC, இசுலாமிய மற்றும் சிறுபான்மை மாணவர்கள் பலர் ஆண்டுதோறும் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவின் நவீன கல்வி நிலையம் என்று பெருமை பேசக் கூடிய ஐஐடி இந்த பிற்போக்குவாத மதவெறி பார்ப்பனிய கும்பலின் கையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. நம் மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் ஐஐடி மதவெறி-சாதிவெறிக் கூடாரமாக காவி கும்பலால் மாற்றப்படுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
பாத்திமாவை மதரீதியான பாகுபாட்டுக்கு உள்படுத்தி தற்கொலைக்கு தள்ளிய இந்த சுதர்சன் பத்மநாபன் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும்.
Infinity Foundation உட்பட ஆர்.எஸ்.எஸ்-ன் எந்த கிளை அமைப்புகளும் IIT வளாகத்தில் செயல்பட முடியாதபடி தடை செய்யப்பட வேண்டும்.
நவீன அக்ரகாரத்தைப் போல மாறிக் கொண்டிருக்கும் ஐஐடி-யை கேள்விக்குள்ளாக்க இதுவே சமயம்..

No comments:

Post a Comment