Friday 10 July 2020

கல்வியின் மூலம்தான் மாற்றம் சாத்தியம் என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் !!!


CBSE, students


பொதுமுடக்கத்தால் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள கால விரையத்தை சரி செய்ய 2020 -21 க்கான CBSE வாரியத்தில் 9 - 12 ஆம் வகுப்புப் பாடங்கள் 30 சதவீதம் குறைப்பு என்ற பெயரில் இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையான கருத்துக்களை பாடத்திட்டத்திலிருந்து துணிச்சலாக நீக்கியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு.அரசமைப்பு சட்டத்தை முழுமையாக மாற்றுவதற்கு முன்னர் அதன் உயிரோட்டமுள்ள உறுப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் முயற்சியின் அடுத்தகட்ட நகர்வுதான் இது.
9 ஆம் வகுப்பு பாடத்தில் ஜனநாயக உரிமைகள் என்ற பாடம் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.
10 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து ஜனநாயகம்,பன்முகத்தன்மை,பாலினம்,சமயம், சாதி, இயக்கங்கள், போராட்டங்கள், மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான சவால்கள் ஆகிய அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
11 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய அத்தியாயங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
12 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான வெளியுறவு கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி,திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டங்களில் இருந்து இவற்றை நீக்குவதின் மூலம் இந்தியா என்ற மகத்தான பன்முக தேசத்தை கட்டமைக்கும் சித்தாந்தத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு முறைப்படி கடத்தும் முயற்சிக்கு தடை போட்டுள்ளனர்.
எவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டாலும் இழப்புகள் ஏற்பட்டாலும் இலக்கை நோக்கிய பயணத்திலிருந்து ஒரு நூல் அளவு கூட விலக மாட்டார்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் இந்த நாட்டில் முஸ்லிம்களின் குடியுரிமை, கலாச்சாரத் தனித்தன்மை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகிய அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.
முஸ்லிம்கள் என்ன திட்டத்தை நாம் வைத்திருக்கிறோம்.அதை நம்மில் எத்தனை பேருக்கு பயிற்றுவித்திருக்கின்றோம். இந்த நாட்டில் நமது பிள்ளைகளை எத்தகைய சூழலில் விட்டுச் செல்லப் போகின்றோம். தனியொரு முஸ்லிமாக உங்களின் சமூக இலக்கு எது?ஒரு சமூகமாக நமக்கான இலக்கு எது? இந்த நாட்டில் நமது பிள்ளைகளுக்கான இலக்கு என்று அவர்களுக்கு எதை கற்பிக்கின்றோம் ?
இன்றைய நமது வாழ்வாதார நெருக்கடிகள் இன்ஷா அல்லாஹ் நாளை மாறிவிடலாம் ஆனால் பெருகிவரும் கல்வி சமூக அரசியல் சிக்கல்களுக்கு தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தாமல் போனோம் என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

The Central Board of Secondary (CBSE) has reduced up to 30 per cent of the syllabus for the 2020-21 academic session for classes 9 to 12. The idea is to reduce the course load for studens in the wake of the global crisis.

According to the updated curriculum, the chapters deleted from the Class 10 syllabus are those dealing with democracy and diversity, gender, religion and caste, popular struggles and movement and challenges to democracy.

For Class 11, the deleted portions include the chapters on federalism, citizenship, nationalism, secularism and growth of local governments in India.

Similarly, Class 12 students will not be required to study the chapters on India's relations with its neighbours -- Pakistan, Myanmar, Bangladesh, Sri Lanka and Nepal, the changing nature of India's economic development, social movements in India and demonetisation, among others.


Source : https://www.business-standard.com/article/education/cbse-syllabus-reduced-list-of-chapters-deleted-in-history-political-science-know-complete-revised-cbse-syllabus-for-class-9-10-11-12-120070800661_1.html?fbclid=IwAR2wDN_Jhr1OaQWvFnwLjHQTUG33jqWnb3sgdmNgv466kHnlFr9f_Z2dA1s

No comments:

Post a Comment