Friday 3 July 2020

இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பூசி COVAXIN !!

இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பூசி covaxin -ஐக் கண்டு பிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். திருத்தணியைச் சேர்ந்த ஒரு விவசாயி மகன்.ஜிகா வைரஸ்ஸுக்கு எதிரான விலை குறைந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்தவரும் இவரே!கொரோனாவை எதிர்த்த போராட்டத்தில், உலகமெங்கும் அதற்கான மருந்து, தடுப்பூசி என பலரும் பலமுனைகளில் தீர்வு காண முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாதைச் சேர்ந்த ‘பாரத் பயோடெக்’ 'COVAXIN' என்ற முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளனர். இதுவே இந்தியாவில் உருவாக்கப்படும் முதல் கொரோனா தடுப்பூசி ஆகும்.
அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்று அங்கேயே தங்கிவிட இருந்தவரை, தாய் நாடு திரும்பி வரச் செய்தது அவரது அம்மாவின் அன்பு!
அவரது பெயர் டாக்டர் கிருஷ்ணா எல்லா.
பாரத் பயோடெக் என்ற ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ‘Covaxin' தடுப்பூசி தயாரிப்பின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக அடைந்து, இரண்டாவது கட்டமான மனிதப் பரிசோதனைக்குத் தயார் நிலையில் இருப்பதாக அண்மையில் அறிவித்தது. அதன்படி, தேசிய மருந்தக ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.
“இது இந்தியாவில் முற்றிலும் தயாரான முதல் உள்நாட்டுத் தடுப்பூசி. இதுவே அரசின் தற்போதைய தலையாயப் பணியாக உள்ளது.மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இதைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்,” என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசி மருந்தின் மனிதப் பரிசோதனை இம்மாதம் ஜுலை 7 தொடங்கி, அதில் திருப்திகரமான முடிவுகள் வந்த பின்னரே, இதற்கு உரிய அனுமதி வழங்கப்படும்.
“மனிதப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டால், வரும் ஆகஸ்ட் 15, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்படும். பாரத் பயோடெக் இந்தத் தேதியை மனதில் கொண்டு வேகமாக செயல்பட்டு வருகிறது. எனினும் மனிதப் பரிசோதனையில் ஈடுபடும் அனைவரின் ஒத்துழைப்பைப் பொறுத்தே இதன் முடிவுகள் அமையும்,” என ஐசிஎம்ஆர் இயக்குனர் தடுப்பூசியை அனுப்பிவைத்த மருத்துவமனைகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்கு உட் படுத்தப்படும் இந்தியாவின் 12 மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்கள்... விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், காட்டங்கொளத்தூர் (தமிழ்நாடு), ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவா!

No comments:

Post a Comment