Wednesday, 19 August 2009

சூரியனின் ஒளி

சூரியனின் ஒளி அதன் மேற்பரப்பில் நிகழும் ஒருவித இரசாயன் செயல் முறையினால்தான் (Chemical Process) ஏற்படுகின்றது. இந்த இரசாயன செயல்முறை கடந்த 500 கோடி வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த இரசாயன செயல் முறை முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது சூரியன் தன் ஒளியை முழுமையாக இழந்து அணைந்து விடும். இதனால் புவியில் உயிரினங்கள் யாவும் அழிவை சந்திக்கும்.

சூரியன் வாழ்வு நிரந்தரமானது அல்ல என்பதை பின் வரும் வசனம் கூறுகிறது.
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையறைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவற்றையும் மிகைத்தோனும், நன்கறிந்தோனுமாகிய (இறை)வன்
விதித்ததாகும். 36:38 سورة يس

இங்கு கையாளப்பட்டுள்ள ‘முஸ்தகர்’ என்ற சொல்லுக்கு பொருள் தீர்மானிக்கப்பட்டு விட்ட ஓர் இடத்தை அல்லது காலத்தைக் குறிப்பதாகும். எனவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் சூரியனானது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் சென்றிடும். அதன் பின்னர் அது ஒரு முடிவுக்கு வந்து விடும் அல்லது அணைந்துவிடும். இக்கருத்தினை இன்னும் தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்கள். 13:2, 35:13, 39:5

அனைத்துப் பொருட்களிலும் இணைகள் அனைத்துப் பொருட்களிலும் இணைகள்
وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம்
படைத்தோம். 51:49 سورة الذاريات
இந்த இறைவசனம் மனிதர்கள், மிருகங்கள் செடிகொடிகள் பழவகைகள் என்ற இனங்களையும் கடந்து
மற்றவற்றிலும் பாலினம் இருக்கிறது என்பதை கூறுகிறது. நாம் அன்றாடம் பயன் படுத்தும்
மின்சாரம் கூட Negative, Positive என அமைந்திருப்பதை காணலாம்.

سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ
أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்)
எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப்
படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். 36:36 سورة يس
இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் இணைகள் உள்ளடங்கி நிற்கின்றன என்பதை இறைமறை கூறுகின்றது. ஆனால் சில உண்மைகளை இப்பொழுது அறியாமல் இருக்கலாம். எதிர் வரும்
காலங்களில் அவன் அவற்றைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிவிக்கக்கூடும்.
முதுகந்தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையே
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِن مَّاء دَافِقٍ يَخْرُجُ مِن بَيْنِ
الصُّلْبِ وَالتَّرَائِبِ மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகந்தண்டிற்கும், விலா
எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. 86:5-7 سورة الطارق

கரு வளர்ச்சியின் படிநிலையில் ஆண் மற்றும் பெண்ணுடைய உற்பத்தி உறுப்புகள், அதாவது ஆணிண் விதைப்பையும் (Testicles) பெண்ணின் கருவகமும் (Ovary) சிறுநீரகத்திற்கு (Kidney) அருகிலிருந்தே வளர்ச்சி அடையத் தொடங்குகின்றன. இச்சிறுநீரகம் முதுகந்தண்டிற்கும் 11வது, 12வது விலா எலும்புகளுக்குக் நடுவே அமைந்துள்ளது.

பின்னர் இந்த உறுப்புகள் கீழ்நோக்கி அமைகின்றன. பெண்ணின் கருமுட்டைப்பை இடுப்பருகில் அமைந்துள்ளது. ஆணின் விதைப்பை பிறப்பிற்கு முன்பிருந்தே தொடைக்கும் அடிவயிறுக்கும் இடையிலுள்ள (Groin) பாதை வழியே அண்ட கோசத்தை (Scrotum) நோக்கி கீழறங்கி விடுகிறது. ஆயினும் ஆணின் உற்பத்தி ஊறுப்புகள் அடிவயிறு பகுதியில் அமைந்துள்ள முக்கிய இரத்த நாளத்திலிருந்தே நரம்பு மண்டலத்தையும், இரத்த ஓட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றன. இந்த இரத்த நாளம்
முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் நடுவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கருவறையின் மூன்று இருட்திரைகள்
خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم
مِّنْ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ
خَلْقًا مِن بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ
الْمُلْكُ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُصْرَفُونَ سورة الزمر 39:6
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காகக் கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகள்) ஜோடி, ஜோடியாகப் படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத்தவிர, வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுவீர்கள்? سورة الزمر 39:6

டாக்டர் கீத் மூர் அவர்களின் ஆய்வுப்படி திருக்குர்ஆன் குறிப்பிடும் மூன்று இருள் திரைகள் இவையே!
தாயின் அடிவயிறு (Abdominal wall)
கருப்பையின் சுவர் (Uterine wall)
குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் (Amniotic membrane)
உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டிகள் ‘முக்தா’ படிதரத்தில் கரு உள்ளபோதே அதனை ஒரு கத்தியைக் கொண்டு வெட்டினால், அதன்
உள்ளுறுப்பு இருகூறாக வெட்டப்பட்டு விடும். அப்பொழுது அக்கருவிற்குள் பெரும்பாலான உறுப்புகள் உருவாக்கப்பட்டதையும், அதே நேரத்தில் வேறு சில உறுப்புகள்
உருவாக்கப்படாமலும் இருப்பதை கண்டு கொள்ளலாம்.  எனவே அக்கரு ஒரு முழுமையான படைப்பா அல்லது முழுமையடையாத படைப்பா என்ற கேள்வி
எழுகின்றது. கரு உருவாக்கம் (Ebroyogenesis) பற்றிய படித்தரத்தை அதாவது உருவாக்கப்பட்டது உருவாக்கப்படாததும் எனும் நிலையை திருக்குர்ஆன் தரும் வர்ணனைத் தவிர சிறந்ததொரு வர்ணனை காண இயலாது இதனை பின் வரும் வசனத்தை பாருங்கள்.

يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم  مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ
ُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்டுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்)
மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்.) 22:5 سورة الحج
விஞ்ஞான ரீதியாகவே கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் உயிரணுக்களில் (Cells) சில வித்தியசாபடுத்தப்பட்டும் சில வித்தியாசப்படுத்த படாமலும் உள்ளதை பார்க்கிறோம்.  செவி,பார்வைப் புலன்கள் செவி,பார்வைப் வளர்ந்து வரும் கருவில் முதலில் உருவாவது செவிப்புலனேயாகும். 24வது வாரத்திற்கு பின்னர்
கருக்குழந்தை (Foetus) ஒலிகளை கேட்கத் தொடங்குகிறது. இதனைப் பின் தொடர்ந்து பார்வைப்புலனும் 28வது வாரத்த்தில் கண்ணின் விழித்திரை (Retina) வெளிச்சத்தை உணரும் தன்மையையும் பெறுகின்றது. கருவில் உருவாகும் இப்புலணர்வை இறைமறை இப்படி எடுத்துறைக்கிறது.

وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்: (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும். 32:9 سورة
السجدة إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக; அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும்
ஆக்கினோம். அத்தஹர் 76:2
இந்த வசனங்களிலிருந்து பார்வைப் புலனுக்கு முன்பு செவிப்புலனை குறிப்பிடுவதை பார்க்கலாம். எனவே நவீன கருவியல் கண்டுபிடிப்புகள் குர்ஆன் வர்ணனைகள் பொருந்திப் போவதை காணலாம்.

தோலில் அமைந்திருக்கும் வலி உள்வாங்கிகள் தோலில் அமைந்திருக்கும் வலி உள்வாங்கிகள் (Pain-receptors) உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மனித மூலையில்தான் உள்ளது என்று எண்ணினர். ஆனால் அண்மைக்கால கண்டுபிடிப்புகள், வலி உள்வாங்கிகள் (Pain-receptors) தோலில் அமைந்திருப்பதால்தான் ஒரு மனிதன் வலியை உணர்கிறான் என்று நிரூபித்துள்ளன. இந்த (Pain-receptors) இல்லையெனில் உடலில் ஏற்படும் வலியை உணர்ந்திட இயலாது.
தீக்காயங்களால் துன்புறும் ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர், அந்நோயாளியின் தீக்காயத்தின் அளவை கண்டறிய ஒரு குண்டூசியால் குத்திப் பார்க்கின்றனர். நோயாளி வலியை உணரும் பட்சத்தில் நோயாளி லேசான தீக்காயங்களோடு தப்பினார் என டாக்டர் மகிழ்ச்சி அடைகிறார். காரணம் தீக்காயங்களால் உள்வாங்கிகள் (Pain-receptors) பழுதாகாமல் நல்ல நிலையில் உள்ளது என்பதை எடுத்துகாட்டுகின்றது. இதற்கு மாறாக நோயாளி குண்டூசியினால் வலியை உணராமல் இருந்தால் அந்த தீக்காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதோடு உள்வாங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
إِنَّ الَّذِينَ كَفَرُواْ بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُواْ الْعَذَابَ إِنَّ اللّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا
யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதெற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக்கொண்டே இருப்போம்- நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4: 56
سورةالنساء

தாய்லாந்தில் உள்ள (Chieng Mai University) பல்கலைகழகத்தில் உடர்கூறு துறையின் தலைவர் Prof. Tagatat Tejasen என்பவர் தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து நீண்ட காலம் ஆய்வு மேற்கொண்டவர். 1400 ஆண்டுகளுக்கு முன் இந்த அறிவியல் உண்மை திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளதை அவரால் ஆரம்பத்தில் நம்பவே முடியவில்லை. இந்த மிகத் துல்லியமான அறிவியல் பேருண்மை திருக்குர்ஆனில் பொதிந்து கிடப்பதை கண்ட பேராசியரியர் தெஜாசன் ஆச்சரியப்பட்டார்.

Tuesday, 18 August 2009

பல ஆண்டுகள் வாழ 10 எளிய வழிமுறைகள்..

1. நாம் வசிக்கும் இடத்தில் சூரிய வெளிச்சமும், சுத்தமான காற்றும் ஏராளமாகக் கிடைக்க வேண்டும்.

2. பல் ஈறு இவற்றைத் தினமும் காலை,மாலை இரு வேளையும் பல் துலக்கியால் தேய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

3. நிற்கும் போதும், நடக்கும்போதும் நமது உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

4. உடற்பயிற்சி உயிர்காக்கும்; உடற்பயிற்சியை தின்மும் திறந்த வெளி அல்லது காற்றோட்டமான இடங்களில் செய்ய வேண்டும்.

5. நோய்க் கிருமிகள் உடலில் நூழையா வண்ணம் சுகாதர விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

6. கோபம், உணர்ச்சி வசப்படுதல், கவலை இவைகளைத் தவிர்த்து, மன அமைதியுடன் இருக்க வேண்டும்.

7. உழைப்பிற்கு ஏற்ற உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று, மெதுவாக, அளவோடு சாப்பிட வேண்டும். (நொறுங்க தின்றால் நூறு வயது).

8. பச்சை காய்கறிகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

9. கொழுப்பு, காரம், புளிப்பு சேர்ந்த உணவுப் பொருட்களை அளவோடு சாப்பிட வேண்டும்.

10. இரவு மன ச்சிக்கல் இன்றி படுத்து, காலை மலச்சிக்கல் இன்றி எழல் வேண்டும்.
 
மனிதன் மனிதனாக வாழ சில  அம்சங்கள்

* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை

* மிக மிக நல்ல நாள் - இன்று

* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு

* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

* மிகக் கொடிய நோய் - பேராசை

* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

* கீழ்த்தரமான விடயம் - பொறாமை

* நம்பக் கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்

* செய்யக் கூடியது - உதவி

* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்

* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

* பிரியக் கூடாதது - நட்பு

* மறக்கக் கூடாதது - நன்றி


 இவைகளை மனிதர்கள் *பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்...

Monday, 17 August 2009

Indian Customs Baggage Rules for Gold & Silver ...





Rules in India,Maximum gold which you can carry exempted customs duty is INR 10000, which is equal to 1 gram value, But  females can wear the ornaments an earring avoiding the official customs duty. Is there any one who can change these stupid rules made in 18th century. My dear NRI's officially you can bring only 1 gm of gold avoiding official duty.

Can NRIs bring gold into India? 

Yes. 
NRIs can bring into India gold upto 10,000 grams as part of their baggage once in 
six months provided they have stayed abroad for a continuous period of six months. 



In what form can the gold be brought into India? 
The gold may be brought into India in any form, including ornaments (other 
ornaments studded with stones and pearls). 



Are NRIs required to pay customs duty on the gold brought by them into India? 
Yes. They are required to pay customs duty in any convertible foreign currency at a rate equivalent to Rs.220/- per 10 grams of gold. (may change from time to time)



How often can a NRI bring gold into India? 
A NRI can bring gold into India once in six months. 



Is it necessary that the NRI should have stayed abroad at least for a minimum period of six months prior to his return to India for being eligible to bring gold? 
Yes.





Import of Silver by NRI's 


Can NRIs bring silver into India? 
Yes. NRIs can bring to India silver upto 100 kilograms as part of their personal baggage. 

What is the rate of duty payment on such import? 
The rate of duty on import of silver is Rs. 500 per kilogram which is payable in foreign currency. (may change from time to time) 



Can NRI's bring both gold and silver? 
Yes. 


Can NRIs sell gold/silver imported by them to residents? 

Yes. Gold/silver so brought by NRIs can be sold to residents against payment in rupees. Reserve Bank has granted general permission to persons resident in India to make payment to NRIs in Indian rupees by means of a crossed cheque in India and that such rupees are credited to Ordinary Non-resident Rupee (NRO) account of the NRI seller. 








Rules & Regulations 

Jewellery which is in addition to the duty free jewellery otherwise allowed 
without payment of duty only is liable to payment of duty

(a) Who can import Gold as Baggage
  • Any passenger of Indian origin or
  • Any Passenger holding a valid passport issued under the Passport Act 1967


(b) Eligibility Conditions and Customs Duty
Short visits if any during this 6 months is ignored if the duration on such short visit does not exceed 30 days and the passenger has not availed of the exemption under this scheme at the time of such short visit.

  • The duty at the rate of Rs. 250 per 10 gm should be paid by the passenger in convertible Foreign currency
  • The weight of Gold (including ornaments) should not exceed 10 Kg per passenger
  • The gold is carried by the eligible passenger at the time of his arrival in India or is imported by him within 15 days of his arrival in India
  • Ornaments studded with stones and pearls will not be allowed to be imported under this scheme.
  • The passenger can also obtain the permitted quantity of gold from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the gold from the Customs bonded warehouse and pay the duty before clearance. Customs bonded warehouse and pay the he passenger can also obtain the permitted quantity of gold from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii)He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the gold from the duty before clearance.



Note: The jewellery, which is in addition to the jewellery otherwise allowed without payment of duty, only is liable to payment of duty under the above mentioned scheme for import of gold/silver. 




Clearence of Silver on payment of duty 



(a) Who can import Silver
  • Any Passenger of Indian Origin or
  • Any passenger holding a valid passport issued under the Passport Act 1967.

(b) Eligibility conditions and Customs Duty
Short visits if any during this 6 months is ignored if the duration on such short visit does not exceed 30 days and the passenger.has not availed of the exemption under this scheme at the time of such short visit.
  • The duty at the rate of Rs. 500 per Kilogram should be paid by the passenger in convertible Foreign currency
  • The quantity of Silver should not exceed 100 Kilogram per passenger
  • The Silver is carried by the eligible passenger at the time of his arrival in India or is imported by him within 15 days of his arrival in India
  • Ornaments studded with stones and pearls will not be allowed to be imported under this scheme.
  • The passenger can also obtain the permitted quantity of silver from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the silver from the Customs bonded warehouse and pay the duty before clearance.Customs bonded warehouse and pay the he passenger can also obtain the permitted quantity of silver from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the silver from the duty before clearance.

Collection by M.Ajmal Khan.

Sunday, 16 August 2009

Pipe Fittings & Types..

Fitting is a piping component that functions as a connective pipe with the pipe, the pipe direction, create a branch pipe, the pipe size, etc.. 
1. Elbow 
Elbow is the type of fitting used to alter the pipe direction retire to a corner 45 or 90 degrees. Review of radius elbow elbow is available in the following types: 
a. Long radius: radius = 1.5 x Diameter 
b. Short radius: radius = 1 x Diameter 

Method of connection can be: buttweld, Weld socket, and threaded 

2. Tee 
Is the type of tee fitting 3-hole (3-way fitting) is shaped like the letter "T" used to create a branch perpendicular to the main pipe. There are 2 types in common use in piping as follows: 

a. Stright Tee: Has 3 openings with the same cut size. 
b. Reducing Tee: Having a branch with the size of a small section of main pipe. 

Method of connection can be: buttweld (BW), Weld socket (WS), and threaded.

3. Reducer 
Reducer is a kind of fitting that be used for reducing piping size. There are 2 types reducer as follows: 

a. Concentric reducer: have a central axis (centerline) of the section between the large and small. 


b. Eccentric reducer: the central axis has a different (offset) between a large section and small. 

Concentric reducer is most commonly used and often eccentric reducer used in piping in about pump and piperack area. 

4. Cap 
Cap is the type of fitting used to close the ends of the pipe. 
Method of connection can be: butt Weld, Weld socket, treaded. 

5. Weldolet 
Weldolet is the type of fitting used to create a branch with the smaller size of main pipe. Weldolet usually used in piping with high pressure and temperature where the connection with the joint type buttweld. The use of reinforcing pad is not required on weldolet. 

6. Miter 
Miter is sometimes used to replace the elbow. Miter is fabricated material from the pipe. Use miter for large size pipes can be cheaper than the elbow. However, lack of which has a higher pressure drop and vulnerable to overstress. With the lack of consideration, the miter is usually used to piping with large size and low pressure. 

7. Coupling 
Coupling is the type of fitting used to create a branch (half coupling) on the pipe size 2 "up and to connect straight pipe (full coupling). 
Method of connection can be: Socket Weld, and treaded. 

8. Plug
 
The plug is the type of fitting used to close the open end of the part of the coupling or the tip of the valve from the vent or drain. 

9. Swage 
Swage is the type of fixture that has a function similar to the reducer. Swage used if pipe size reduction up to 1-1/2 "and smaller. Swage is also available in two types, namely concentric and eccentric. Form depending on the end of the continuation method is needed, as follows: 
a. Plan End (PE) 
b. Tread End (TE) 
c. Bevel End (BE) 


Usually the end of the swage in the form of combination, for example; BLE - TSE (Bevel large end - Thread small end)  BLE - PSE (Bevel large end - Plain small end), etc.. 

10. Union 

Union is basically used for the purpose of removing the fixture, and in some cases be used to connect (assemble) piping. 

11. Thredolet & Sockolet 
Threadolet and sockolet is fitting that has the same function, namely to make weldolet smaller branches from the main pipe. The difference is that in addition to the design end of the connection with the method and socketweld thread. 

12. Stub-In 
Stub-in is not the type of fitting but is a way to create a branch to the main pipe. Branch can be the same size or smaller than the main pipe. Stub-in with the use of fitting can be avoided only because the regular pipes. Use Stub-in only very limited services on piping with pressure and temperature because the concentration of low-voltage high enough on the draw. To strengthen the connection, usually can be added reinforcing pad.


Prepared by M.Ajmal Khan.

Thursday, 13 August 2009

மதுரையில் ஏழு ரோடுகளை ரூ.257 கோடிகளில் விரிவாக்கும் திட்டங்கள் எப்போது ?

Image result for 4 way road in tamilnadu மதுரையில் போக்குவரத்துநெரிசலை குறைக்கும் வகையில், ஏழு ரோடுகளை ரூ.257 கோடிகளில் விரிவாக்கும் திட்டங்கள் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. சட்டசபை தேர்தல் நடப்பதற்குள் இப்பணிகளை துவக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  


மதுரை உத்தங்குடி - கப்பலூர் இடையே 27 கி.மீ., தூரத்திற்கு ரிங் ரோடு அமைக்கப்பட்டும், நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. இதை தவிர்க்க, 133 கி.மீ., தூரத்திற்கு புது ரிங் ரோடு அமைக்கும் திட்டம் அரசுக்கு அனுப்பி ஓராண்டாகியும் இன்னும் கிடப்பில் உள்ளது. இதற்கிடையே இருவழிச்சாலையாக (12 மீ.) உள்ள ரிங் ரோட்டை, நான்கு வழிச்சாலையாக மாற்ற முன்பே, 30 மீ., அகலத்திற்கு இடம் கையகப்படுத்தப்பட்டது. நான்குவழிச்சாலையாக மாற்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்தும், இத்திட்டம் கிடப்பில் உள்ளது. நில ஆர்ஜித பணிகளால் உத்தங்குடி - சமயநல்லூர் இடையே, 21 கி.மீ., தூரத்திற்கு ரோடு அமைக்கும் திட்டம் பத்து ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. 

இதற்கிடையே மதுரையில் ஏழு ரோடுகளை ரூ.257 கோடியில் விரிவு படுத்தும் பணி பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. இதில், அழகப்பன்நகர், டி.வி.எஸ்.நகர், ஜீவாநகர், முத்துப்பட்டி வழியாகவும் விமான நிலையத்திற்கு (9.70 கி.மீ.,) புதிய பாதை அமைக்கும் திட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. இப்பாதை அமையும் பட்சத்தில், ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் குறையும்.

மூன்றுமாவடி, அய்யர்பங்களா, ஆனையூர், அலங்காநல்லூர் ரோடுகளை 9.50 கி.மீ.,க்கு விரிவுப்படுத்தும் பணியும், 5.20 கி.மீ., தூரத்திற்கு நிலையூர், பெருங்குடி, விமான நிலைய ரோடு விரிவுப்படுத்தும் பணியும் கிடப்பில் கிடக்கின்றன.

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பின்புறத்தில் 2 கி.மீ.,க்கு அண்ணா நகர் 80 அடி ரோடு, ரிங் ரோடு இணைக்கும் பணியும், 2.10 கி.மீ.,க்கு திருநகர், தென்பழஞ்சி ரோட்டை விரிவுப்படுத்தும் பணியும் முடங்கி கிடக்கின்றன. ஐந்து கி.மீ., தூரம் உடைய புதுக்குளம், மாடக்குளம் ரோடு மற்றும் மேலக்கால் ரோடு வளர்ச்சிபணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொலைநோக்குடன் தயாரிக்கப்பட்ட இத்திட்டங்கள், பல ஆண்டுகளாக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், இப்போதே இதற்கான முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்..

மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். அடுத்த வாரம் கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட செயற்பொறியாளர் பாலமுருகன் தலைமையிலான குழு டில்லி செல்கிறது. ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில், புதிய ரிங் ரோடு மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி எதிர்புறத்திலிருந்து அழகர்கோவில் ரோடு, கடச்சனேந்தல் பாலம், ஜெயவிலாஸ் கார்டன், ஊமச்சிக்குளம் வடபுறம் ஒரு கி.மீ., வழியாக அலங்காநல்லூர், சமயநல்லூர் மேம்பாலம் வழியாக அமையும்.



தொகுப்பு : அ . தையுப அஜ்மல்.

Wednesday, 12 August 2009

ஜோதிட புரட்டு. அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே!.



மனிதன் தோன்றிய நாளிலிருந்து பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். முதலில் காற்றுமழைஇடிமின்னல் ஆகியவற்றின் சீற்றத்திலிருந்தும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும்விலங்குகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருந்தது. மனிதன் அறிவியல் பலமுள்ளவனாக இருந்தாலும்மனவலிமையில் சில நேரங்களில் பலமற்றவனாகவே இருந்து வருகின்றான்.

பயந்த மனிதன்பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தனக்கு ஒரு வழியில் ஆதரவு கிடைக்கிறதென்றால் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டுஅதன் மூலம் பரிகாரமோ பலனோ கிடைத்திடுமென்ற நம்பிக்கை கொள்வது மனிதனின் இயல்பாக இருந்து வருகிறது.
நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள். குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும்குறத்தி சொல்லும் வாக்கையும்சோழி உருட்டி சோதிடம் கூறுபவனையும்கிளி ஜோதிடத்தையும் நம்புகிற நம்மக்களிடத்தில் ஜோதிடம் எளிதாக இடம் பெற்றுவிட்டது.

பொருளாதாரத்தில் சிக்கித் தவிப்பனையும்பெண்ணாசை கொண்டு அலைபவனையும் கயவர்கள்சமூக விரோதிகள்ஏமாற்றுப் பேர்வழிகள் நயந்து பேசி நம்பும் படியாகச் செய்து முடிவில் நம்பியவனை ஏமாற்றி இருப்பதைப் பறித்துச் செல்வதைப் போல,சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களையும்பணம் பணம் என்று அலையும் பேராசைக் காரர்களையும்பிரச்சினைகளைச் சந்திக்க திடமான மன உறுதி இல்லாதவர்களையும்அச்சத்தோடு வாழ்பவர்களையும் அவர்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி, ஜோதிடத்தால் எல்லாவற்றுக்கும் பரிகாரம் காணலாம். யோகம் இருக்கிறது. காலம் சரியில்லை என்றெல்லாம் பொய் கூறிபுரட்டுப் பேசிநம்பவைத்து பார்ப்பனர்கள் தங்கள் ஜோதிடத்தை புகுத்தியும் பரப்பியும் ஏமாந்த மக்களையும்அக்கால மன்னர்களையும் ஆட்டிப் படைத்தனர். பார்ப்பனர்களின் சுய நலத்திற்கு ஜோதிடம் நன்கு பயன்பட்டு வந்திருக்கிறது - வருகிறது.

தமிழ் மக்களின் வரலாற்றிலும்வாழ்க்கை முறையிலும் இல்லாத ஜோதிடத்தைப் பார்ப்பனர்கள் தமிழர்களிடையே புகுத்திட அக்கால மன்னர்களும் துணை செய்தனர். பார்ப்பனர்களின் பொய்யையும் புரட்டையும் நம்பியதால் ஜோதிடம் மாத்திரமல்ல,வடமொழி யான சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள். 
திருமண முறையில் வைதிகத்தைப் புகுத்தினார்கள். ஆலய வழிபாட்டை அவர்களின்ஆதிக்கத்திற்கு முழுமையாக ஆக்கிக் கொண்டனர். தமிழர்களின் வாழ்க்கை முறையிலும்வழிபாட்டு முறையிலும் பார்ப்பனர்களின் வேதபுராணக் கொள்கைகள் இடம்பெற்று வரலாயிற்று.

1300
 ஆண்டுகளுக்கு முன் நடந்த கண்ணகி - கோவலன் திருமணத்தில் வயதான பார்ப்பான் வேதம் ஓதி சடங்குகள் நடத்தி தீ வலம் சுற்றி வந்ததாகச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீ வலம் செய்வது காண்பார்கண் நோன்பு என்னை கி.பி 2-வது நூற்றாண்டிலேயே தமிழர்களின் திருமணச் சடங்குகளில் பார்ப்பனர்கள் ஆரிய கலாச்சாரத்தைப் புகுத்தி விட்டனர்.
ஜோதிடம் பார்ப்பனர்களால்தான் தமிழர்களிடையே புகுத்தப்பட்டது. 
பார்ப்பனராகிய விசுவாமித்திரர் ஒரு ஜோதிடர். இந்த பார்ப்பன ஜோதிடர்களின் கட்டுக்கதையைப் பாருங்கள்.
கிருத்திகை நட்சத்திரத்திலுள்ள 7 நட்சத்திரங்களும் 7 முனிவர்களின் மனைவியர்களாம். அம்மனைவிமார் முறையே அம்பாதுலாநிதத்நிஅப்யந்திமேகயந்தி,வர்ஷயந்திசுபுனிகா. இது பார்ப்பனர்களின் அறிவியல். ஜோதிடர்களின் வானவியல்.
விஞ்ஞானம் தரும் விளக்கத்தைப் பாருங்கள். கிருத்திகை நட்சத்திரம் சூரியனைவிட 1000மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கி.மீ. இங் கிருந்து 410ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது.
வேதத்திற்கும் - விஞ்ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப்பார். இந்த வேதம் கூறும் சோதிடத்தை நம்ப வேண்டுமாம்.

ரிக் வேதத்தை ஜோதிட நூல் என்கின்றனர்! மேலும் பிருஹத் சம்கிதைசாராவளி,காலப்பிரகாசிகா அர்த்த சாஸ்திரம் ஆகியவைகளும் ஜோதிட நூற்களாம். இந்த நூற்கள் ஒருவருடைய மரணம்நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள்நேரம் ஆகியவற்றை வினாடி சுத்தமாக முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய கணித முறைகளை விளக்கியிருக்கிறதாம். இப்படி எழுதி இருக்கிறார் தினமணி ஜோதிடர்.

இந்த வேதங்களிளெல்லாம் அறிவியல் இருக்கிறதாம்நாமெல்லாம் அதை நம்ப வேண்டுமாம். இப்படித் துணிந்து இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.
உண்மையிலேயே மனித வாழ்வை நிர்ணயிக்கக் கூடிய கணிதமுறை ஜோதிடத்தில் இருக்குமானால் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கும்.
உண்மையில்லாத பொய் நிறைந்த பார்ப்பனர்களின் ஜோதிடத்தை அறிவியல் உலகம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாது. வேத காலத்திலிருந்து பார்ப்பனர்கள் சொல்லிப்பார்க்கிறார்கள் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையே.
உலகின் வானவியல் அறிஞர்கள்கோபர்னிக்கஸ்கெப்ளர்பிராகேகலிலியோநியூட்டன்,லேப்லேஸ்சேம் பர்லின்மவுல்டன்பிரின்சியாஜேம்ஸ்பிரெட் ஹாய்ஸ்வான்வெய் ஜக்கர்ஹாய்லிஹெயின்ரிச்வேபேஈன்ஸ்டீன் ஆகியோர்களின் வானவியல் கருத்துகளை யெல்லாம் ஏற்றுக்கொண்ட விஞ்ஞான உலகம் ஜோதிடத்தையும்தினமணி ஜோதிடர் கூறியுள்ள அந்த வேதக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் அதிலே அறிவியல் இல்லைபொய்யும் புரட்டும் கொண்டதாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. 

அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே. அதை நம்பி ஏமாந்த இளித்த வாயர்களாக வாழ்பவர்கள் தமிழர்களே.

நன்றி:- "விடுதலை" 12-6-2009

Saturday, 8 August 2009

உங்கள் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி !! ஒரு தவகல்..

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். 
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். 
1-வது நாள் 1, 1, 1, = 3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்து ப்பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.
செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?


அவமானம் என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம், அவமானம் என்ற வார்த்தையில் சம்பந்தப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஏதாவது ஒரு வகையில், விசயத்தில் இதை நாம் சிறிதளவேனும் சந்தித்து இருப்போம் அல்லது சம்பந்தப்பட்டு இருப்போம்.

அந்த சமயத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது, எதையுமே பிடிக்காது வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போம் கொஞ்ச நாட்களுக்கு, எனக்கும் இதை போல பல நடந்துள்ளது, குறிப்பாக முன்பு பதிவுலகத்தில். அப்போதெல்லாம் அடைந்த மன உளைச்சல்கள் கணக்கில்லாதது, அந்த சமயத்தில் சரியான அனுபவம் இல்லாததால் அதிகளவில் கோபமே ஏற்பட்டது, புறம் தள்ள தெரியவில்லை.

பொதுவாக எனக்கு கஷ்டப்படுவது பிடிக்கும் அல்லது சவால்களை எதிர் கொள்வது பிடிக்கும். எனக்கு எதிரில் இருக்கும் சவாலை பொறுமையுடன் எதிர்கொள்வேன். பதிவுலகம் வந்த போது அதிகளவில் இந்த அனுபவம் கிடைத்தது. தற்போது ஓரளவு பக்குவம் அடைந்து விட்டேன். எதிலும் அவசரப்படக்கூடாது என்பதும் கிண்டலடிப்பவர்களை பற்றியோ நம்மை பற்றி அவதூறு கூறுபவர்களை பற்றியோ கண்டுகொள்ள கூடாது என்பதும் நான் தெரிந்து கொண்டதில் குறிப்பிடத்தக்கது. நாம் தவறு செய்து இருந்தால் நம் தவறை சரிபடுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருதுங்கள்.

நம்மை கிண்டலடித்தவர்கள் அல்லது அவமானபடுத்தியவர்கள் முன்பு நம்மை நிரூபித்து காட்ட கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே இதை கருத வேண்டும், நான் அப்படி தான். நான் எதையும் பேச மாட்டேன், யாரை பற்றியும் கூற மாட்டேன். என்னை பற்றி என் செயல்களில் காட்டவே எனக்கு விருப்பம். எனக்கு இதில் நல்ல ரோல் மாடல் என்றால் அது ரஜினி தான். ரஜினி சந்திக்காத பிரச்சனைகளா! அவமானங்களா!! எதற்கும் அசைந்து கொடுக்காமல் அமைதியாக இருப்பார். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.

நம்மை கிண்டலடிக்கும் போதோ அல்லது வெறுப்பேற்றும் போதோ அமைதி காப்பதே நல்லது, நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கும் போது புது வகையான சிக்கல்களில் வலிய போய் நாமே சிக்கி கொள்கிறோம். நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை என்றால் அவ்வாறு செய்தவர்கள் வெறுத்து போய் அமைதியாக இருந்து விடுவார்கள். நம் செயல் நேர்மையாக நியாயமாக நம் மனசாட்சிக்கு சரியாக இருந்தால் போதுமானது யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இதை உறுதியாக நம்புங்கள்.

நான் இணையத்தில் படித்து கொண்டு இருந்த போது லேனா தமிழ்வாணன் அவர்களின் இந்த பதிவை படிக்க நேர்ந்தது. இதில் என் மனதில் இருந்ததை அப்படியே கூறியது போலவே இருந்ததால் உங்களுடன் பகிர்கிறேன். இதை நான் கூறியதாகவே கூறி இருக்கலாம் இருந்தாலும் அனுபவம் மிக்க ஒருவர் இதை கூறுவதை கேட்கும் பொழுது அதற்க்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் வேறாக இருக்கும்.

இனி லேனா தமிழ்வாணன் அவர்கள்

"நம்மைக் கேலி செய்து மகிழ்கிறவர்கள் உண்டு. இவர்களைப் பெருந்தன்மையோடு விட்டுவிடலாம்.

ஆனால் நம்மை அவமானப்படுத்துகிறவர்களை என்ன செய்வது என்றே தெரியாதவர்கள் உண்டு.

நறநற என்று பல்லைக் கடிப்பவர்கள்; உனக்கு வச்சிருக்கேன், இரு, வரட்டும் என்று பதிலுக்குச் சந்தர்ப்பம் தேடுகிறவர்கள்; இந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று அழுகிறவர்கள் ஆகியோர் அவமானங்களைக் கையாளத் தெரியாதவர்களே!

அவமானப்படுத்துகிறவர்கள் இந்த மூன்று செயல்களையும் கண்டு முன்னிலும் மகிழ்கிறார்கள். நறநற என்று கடிக்கிறவர்களைப் பார்த்தும், அழுகிறவர்களைப் பார்த்தும் அட நம் முயற்சிக்கு நல்ல பலன் என்று பூரிக்கிறார்கள். பதிலுக்கு அவமானப்படுத்த முன்வந்தாலோ, முன்னிலும் தீவிரமான அவமானப்படுத்தல்களுக்குக் களங்களை உருவாக்குகிறார்கள்.

இதற்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு இருக்கிறது? இவர்கள் எடுக்கும் வீரிய ஆயுதங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் எதற்காக அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும்?

அப்படியானால் இவர்கள் செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகச் சொல்கிறீர்களா? என்கிற கேள்வி எழுகிறது. நியாயமான கேள்வி.

அவமானப்படுத்துகிறவர்களைச் சக்கையாக ஏமாற்றவும்; அடங்கிப் போகவும்; இது வீண் வேலை என்று ஒதுங்கிப்போகவும் செய்ய ஒரே வழி. இவர்கள் தரும் அவமானங்களை ஏற்றுக்கொண்டு சற்றும் பிரதிபலிக்காமலும் பொருட்படுத்தாமலும் அலட்சியப்படுத்தியும் நடந்து கொண்டால், சே! இது வீண் வேலை என்று வெறுத்துப் போகிறார்கள்.

வீசிய பந்தைத் திருப்பி அடித்தால்தானே எதிராளி மறுபடி வீசுவான்?"

THANKS TO SOURCE: http://www.giriblog.com/2009/07/blog-post_27.html