Tuesday, 11 December 2012

மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு!! ஒரு சிறப்பு பார்வை


சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,

வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
 - பாரதி.

தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.

* குயில் பாட்டு
* கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
* பாஞ்சாலி சபதம்

ஆகியன அவர் படைப்புகளில் சில.

பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தேசிய கவி
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கினைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகானவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.

பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.



பல நிறைவேறாத கனவுகளுக்குச் சொந்தக்காரனான ஒரு மாபெரும் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் நினைவு. மஹாகவி சுப்பிரமணிய பாரதியார். எட்டயபுரத்துக் கவிஞன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்பது உட்பட தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவன் கண்ட கனவுகள் பலவும் நிராதரவாகக் கிடக்கின்றன. முகநூல், டுவிட்டர் மற்றும் இன்னபிற தளங்களிலும் எல்லோரும் பாரதி புகழ் பாடுகின்றனர். எல்லாம் இன்றிரவோடு சரி. நாளைய ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடு எல்லாம் மறந்துபோய்விடும். வாருங்கள், ஒரு பாரதி பாடலைப் பார்த்துவிட்டுப் பேசலாம்.



இன்று மட்டுமில்லை, என்றுமே போற்றப்பட வேண்டிய கவிஞன் பாரதி. மண் விடுதலைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவன். பாரதியைப் பற்றி இன்றளவிலும் ஏராளமான ஆய்வுகள், விமர்சனங்கள் மற்றும் தரவு ரீதியான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இனி பாரதியைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டுமானால் புதியதொரு கோணத்தை கண்டுபிடித்தாக வேண்டும். ஆயினும் என்ன பயன்? பலருக்கு கலாநிதிப் பட்டங்களையும் இன்னபிற கௌரவங்களையும் பேரையும் புகழையும் வாங்கிக் கொடுத்துள்ளதே தவிர சமூகத்தின் பாமர மக்களிடையேயோ அல்லது உயர் வர்க்கத்தினரிடையேயோ எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்னும் ஒரு பாரதி பாடல் - நிற்பதுவே நடப்பதுவே......



 
ஏட்டில் மட்டும் வைத்துப் பாதுகாப்பதற்கு எழுதிவைக்கவில்லை நம் எட்டயபுரத்து முண்டாசுக் கவி. எடுத்துப் படித்து அதன்வழி மக்கள் பயனுற வேண்டும் என்றே எழுச்சி கொண்டு எழுதினான். இன்றைய நாளில் பாரதி எழுதிய கவிதைகளில் அது சிறந்தது, இது சிறந்தது என்று சிலாகித்துச் செல்ல நான் விரும்பவில்லை. பாரதிக்கும் நமக்கும் தூரம் அதிகம். அவன் எழுச்சி மிக்கவன். நாம் இன்னமும் எழுச்சியின் சுடரையே தரிசிக்காதவர்கள். ஒன்று மட்டுமே சொல்லலாம். உண்மையாய் உள்ளம் ஒன்றி உச்சரிக்க இயன்றவர்கள் மட்டும் பாரதி பற்றியும் மற்றைய உன்னதமான தமிழ்க் கவிகள் பற்றியும் பேசுங்கள். ஏனையோருக்கு இருக்கவே இருக்கிறார்கள் தெருவுக்கொரு போலிக் கவிகள். அவர்கள் வால் பிடித்துத் திரியுங்கள். சின்னஞ் சிறு கிளியே...... - பாரதி பாடல் 



 
முகநூலில் ஒருவர் இப்படிக் கூறியிருந்தார். 'உன்னைப் போல் தலைவர்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடும் வழக்கம் எம் மத்தியில் இருப்பதால் தான் இன்றைக்கு உன்னையும் நினைத்துப் பார்க்க முடிகிறது.' சமூகம் என்ன நிலையில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பாரதியின் கனவுகள் பலிதமாக வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர இந்நாளில் அவனுக்காய் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ஹாப்பி பர்த்டே சொல்வதற்கு உங்கள் வீட்டு நாய்க்குட்டியல்ல அவன். தயவு செய்து தமிழனின் பெயரைக் கெடுக்காதீர்கள். நல்ல வேளை பாரதி இன்று உயிரோடு இல்லை. இருந்திருந்தால் அவரது முகநூல் பக்கத்திற்கு வாழ்த்தட்டை அனுப்பியிருப்பார்கள். பாரதி பற்றிய தொகுப்புடன் ஒரு பாடல் - காணி நிலம் வேண்டும்.........



 
ஏட்டளவில் இருக்கும் பாரதியின் கனவுகளெல்லாம் நிஜமாக வேண்டும். அதுவரை பாரதியின் பிறந்தநாளையும் இறந்தநாளையும் நினைவு கூர்வதில் அர்த்தம் ஏதும் இருக்கப் போவதில்லை. சாதிக் கொடுமை, பெண் விடுதலை, தமிழின் அருமை என்று அவன் பாடியதெல்லாம் தன் சமூகத்தின் உயர்வுக்காகவே அன்றி தன் புகழ் கருதியல்ல. தன்னலம் மறப்போம். அவன் கனவுகள் மனதினில் சுமப்போம். நாளைய விடியல் தமிழர்களுக்கான உண்மையான விடியலாய் அமையட்டும். கேளடா மானிடா.... - பாரதி பாடல் 



 

அன்புடன்,
பாரதியின் கனவுகளுடன்,
மு.அஜ்மல் கான்.

படியில் பயணம் நொடியில் மரணம்!! ஒரு பார்வை...


Pesum Padamங்கே செல்லும் இந்த பயணம்... படியில் பயணம் நொடியில் மரணம் என விழிப்புணர்வு வாசகங்கள் எத்தனை வைத்தாலும் இவர்களுக்கு புரிவது எங்கே? பேருந்தில் குழந்தைகளையும், பெண்களையும் பஸ்சின் மேல் பகுதியில் ஏற்றிக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.பேருந்தின் வேகம் குறைந்து பயணிகள் தப்பினர் .பேருந்தில் அமைக்கப்பட்டிருக்கும்  படி மக்கள் உள்ளே ஏறி செல்ல மட்டுமே தவிர அதில் நின்று பயணம் செய்ய அல்ல .ரொம்ப   பேர் படியில்  நின்று கொண்டு  படியை ஒட்டியுள்ள கைபிடியை இறுக பற்றி பேருந்தின் வெளியே தொங்குவதை பார்க்கலாம் .அந்த கை பிடி எந்த சப்போர்ட் இல் இருகின்றது என்றால் மிக சாதாரணமான  போல்ட்  தான்.  அந்த போல்ட் சப்போர்ட் போக போக குறையும் ,போல்ட் லூசாக இருக்கும் பட்சத்தில் கைபுடி பிடுங்கி கீழே விழ வேண்டியதுதான்.படியில் பயணம் செய்வதை தவிர்த்து விடுவது உத்தமம்.
சென்னையின் புறநகர்ப்பகுதியான திருப்போரூரில் இருந்து தி.நகருக்கு இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர். பஸ் பெருங்குடி அருகே வந்த போது, முன்னால் சென்ற செங்கல் ஏற்றிய லாரி மீது பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த சேகர் (18), மனோஜ் குமார் (18), பால குமாரன் (16), விஜயன் (16) ஆகிய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை விபத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் சென்னைவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பஸ்சுக்குள்ளே இடம் இருந்தாலும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தால் இப்படி தான் போக நேரிடும்...அதுவும் ஸ்டைல் - லா ஒவ்வொரு stop ங்கிலும் இறங்கி ஏறுவது...பஸ் move ஆகி ஒன்றரை கிலோமீட்டர் போகும் வரை அதன் பின்னாலேயே ஓடி பின்னர் ஏறுவது....பஸ்ஸில் வரும் figure களுக்காக பல வகையில் scene போடுவது, சாகசங்கள் செய்வது ....எல்லோரும் ஒரே பஸ்ஸில் வந்தால் கூத்தடிக்க வசதியாக இருக்கும் என்று, இருக்கும் பஸ்சை எல்லாம் வவிடுவது....ஒரே நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்புவது.. இப்படி பல ஒழுங்கீன செயல்கள் குறையும் வரை இப்படி தான் நடக்கும்.

பஸ்சுக்குள்ளே இடம் இருந்தாலும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தால் இப்படி தான் போக நேரிடும்...அதுவும் ஸ்டைல் - லா ஒவ்வொரு stop ங்கிலும் இறங்கி ஏறுவது...பஸ் move ஆகி ஒன்றரை கிலோமீட்டர் போகும் வரை அதன் பின்னாலேயே ஓடி பின்னர் ஏறுவது....பஸ்ஸில் வரும் figure களுக்காக பல வகையில் scene போடுவது, சாகசங்கள் செய்வது ....எல்லோரும் ஒரே பஸ்ஸில் வந்தால் கூத்தடிக்க வசதியாக இருக்கும் என்று, இருக்கும் பஸ்சை எல்லாம் வவிடுவது....ஒரே நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்புவது.. இப்படி பல ஒழுங்கீன செயல்கள் குறையும் வரை இப்படி தான் நடக்கும்.


அளவுக்கு அதிகமாக பயணிகளை பேருந்துகளில் ஏற்றுவதும் , PEAK HOUR -சில் அதிகப்படியான பேருந்துகளை இயக்காததுமே இது போன்ற விபத்துகளுக்கு காரணம். அரசு விழித்துக்கொள்ளுமா இனிமேலாவது ?


இளைஞர்கள் இப்படி வீம்புக்கு, வீராப்பு காட்டி, வீர மரணம் அடைவது வாடிக்கையாகி விட்டது. தடுத்து நிறுத்துவது யார் என்ற கேள்வி எழுகிறது. கேள்விக்குறியாகிறது வருங்காலாத்தின் இளைஞர்கள் வாழ்க்கை



எங்கே செல்லும் இந்த பயணம்...: : படியில் பயணம் நொடியில் மரணம் என விழிப்புணர்வு வாசகங்கள் எத்தனை வைத்தாலும் இவர்களுக்கு புரிவது எங்கே? இளையான்குடியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் குழந்தைகளையும், பெண்களையும் பஸ்சின் மேல் பகுதியில் ஏற்றிக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளதாலும் அனைத்துப் பள்ளிகளும் ஒரே நேரத்தில் முடிவடைவதாலும் மாணவர்கள் கூட்டமாக வந்து பஸ்களில் ஏறுகின்றனர்.


  பெரும்பாலான பஸ்களில் மாணவர்கள் புத்தக சுமைகளுடன் படிக்கட்டில் தொங்கிச் செல்கின்றனர். பஸ்ஸþக்குள் இடம் இருந்தாலும், மாணவர்கள் படிக்கட்டை விட்டு உள்ளே வருவதில்லை என நடத்துநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 நடத்துநர்கள் எத்தனை முறைதான் சொன்னாலும் படிக்கட்டு பயணிகள் கேட்பதில்லை, நெருக்கடியைச் சமாளித்து வாகனம் ஓட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் ஓட்டுநர்கள்.

மாணவர்களின் கவனமின்மை ,நமது குறுகிய (ஆக்ரமிப்பால்) சாலை ,பேருந்து நடத்துனாரின் மனிதாபமின்மை இப்படி பல காரணங்கள் விபத்துக்கு .இனியும் இது போல் நிகழாமல் இருக்க மக்களும் அரசும் விழிப்போடு இருப்பது அவசியம்.
மாணவர்களுக்கு அதிகமான கவுன்சிலிங் பள்ளிகளில் இதைப் பற்றி கொடுக்க வேண்டும்.. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இப்படிப்பட்ட பயணத்தின் ஆபத்தை குறித்து, இன்னும் அதிகமான விழிப்புணர்வுவை அரசாங்கமும், கல்வித்துறைகளும் ஏற்ப்படுத்தி தர வேண்டும்.

பஸ்களுக்கு ஹைட்ராலிக் பிரஷர் கதவுகள் வேண்டும். ஓட்டுனர் அருகில் சின்ன திரை கொண்ட ஸ்க்ரீன் இருக்க வேண்டும். அதில் பின் கதவு, முன் கதவு நன்கு தெரிய வேண்டும். இந்த வசதிகள் இருந்தால் விபத்தை 100 ௦௦% தவிர்க்கலாம்.

மாணவர்கள் பஸ் ஏறும்போது அவர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்துத் துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை.
ஆக்கம் : மு.அஜ்மல் கான்.



புளூடூத் பற்றி நமக்கு தெரிந்ததும், தெரியாததும்!!! ஒரு பார்வை..




நாம் நிறைய விஷயங்களை பற்றி அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது நாம் பலருக்கும் தெரியாது. புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும். 

தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் !

புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.

உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !
கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது!! 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

"வால்மார்ட்" இந்தியாவுக்குள் நுழையரூ.125 கோடி!!


File:Walmart exterior.jpg

சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடிற்கு மத்திய அரசு ஓப்புதல் வழங்கியதை தொடர்ந்து டில்லியில் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதிக்க உள்ளன. இதில் வால்மார்ட், டெஸ்கோ என்ற இருநிறுவனங்களும் முதன்முறையாக தனது வர்த்தகத்தினை துவக்க உள்ளது. பெரும் எதிர்ப்பிற்கிடையே சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு எதிராக பார்லிமென்ட் லோக்சபா, ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து விவசாய உற்பத்தி மற்றும் வணிக குழுவில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் டில்லியில் பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ ஆகியன தனது வர்த்தகத்தினை திறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 சில்லறை வர்த்தக ஜாம்பவானான வால் மார்ட் இந்திய சந்தைக்குள் நுழைய அமெரிக்காவில் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.125 கோடி செலவு செய்துள்ளது. 
சில்லறை வர்த்தகத்தில் ஜாம்பவானாக இருக்கும் வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழையத் தேவையான நடவடிக்கைகளை கடந்த 2008ம் ஆண்டு முதலே எடுத்துள்ளது. அதற்காக 2008ம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்காவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ரூ.125 கோடி செலவு செய்துள்ளது.
இவர்கள் அமெரிக்க அரசு மூலம் இந்திய அரசை நெருக்கி சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வைத்துள்ளனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த விவாதம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவிட்டுள்ளது வால்மார்ட்.
அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் உதவியை நாடலாம். மேலும் இது தொடர்பாக அவர்களுக்கு செலவும் செய்யலாம். ஆனால் அந்த செலவு கணக்கை ஒவ்வொரு காலாண்டிலும் அரசிடம் சமர்பிக்க வேண்டும். அதன்படி வால்மார்ட் சமர்பித்த காலாண்டு கணக்கில் தான் இந்த தகவல்கள் உள்ளன.
இந்தியா உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காரியம் சாதிக்க இந்த ஆண்டில் மட்டும் வால்மாப்ட் ரூ.18 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


Sunday, 9 December 2012

கியாரண்ட்டி Vs வாரண்ட்டி !! ஒரு பார்வை...


கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள். 

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?

தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.
தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

அனைத்து காப்பீடு வசதிகளுடன் நிம்மதியான வாழ்க்கை!! ஒரு பார்வை...


இன்றைய அவசர உலகில் காப்பீடு என்கிற இன்ஷூரன்ஸ்ஆயுள்மற்றும் பொருட்களுக்கு மிக அவசியமானதாக மாறி இருக்கிறது


இந்த காப்பீடு என்பது சிறிய தொகை மூலம் நம்மைநம்மைசார்ந்திருக்கும் குடும்பத்தினரை பாதுகாப்பதாக இருக்கிறது.

ஒரு குடும்பத்துக்கு ஆயுள் காப்பீடுமருத்துவ காப்பீடுவிபத்துக்காப்பீடுவாகனக் காப்பீடுகடன்வசதிரொக்கம் மற்றும், கடன் அட்டை காப்பீடு போன்றவை அவசியமானதாக இருக்கிறது.

இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

ஆயுள் காப்பீடு..!
முதலில் ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்வது மிக அவசியம்.

இதை ஆங்கிலத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ் என்பார்கள்.

இதில் எண்டோவ்மென்ட்யூலிப்டேர்ம் பிளான் என பல திட்டங்கள்இருக்கின்றன.



காப்பீடுநோக்கத்தோடு வடிமைக்கப்பட்டிருப்பது  டேர்ம் பிளான்இதில் மற்ற வகை ஆயுள் காப்பீடு பாலிசிகளோடு ஒப்பிடும் போதுகுறைவான பிரீமியத்தில் அதிக ஆயுள் கவரேஜ் கிடைக்கும்இந்தபாலிசியில் பாலிசிக் காரணத்தில் உயிருக்கு ஏதாவது அசம்பாவிதம்ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும்பாலிசி முதிர்வில் எதுவும்கிடைக்காது.

30 வயதுள்ள ஒருவருக்கு 30 ஆண்டு கால ஆயுள் காப்பீடு பாலிசிக்காக தினசரி ரூ.30 செலவு செய்தால் 50 லட்ச ரூபாய்க்குகாப்பீடு வசதி கிடைக்கும்.
அதாவது மாதம் 900 ரூபாய் பிரீமியம்.

மருத்துவ காப்பீடு..!

வியாதி அல்லது திடீர் விபத்தினால் எதிர்பாராமல் அதிக மருத்துவச் செலவு ஏற்பட்டு விடுகிறதுதனியார் மருத்துவமனையில் மூன்று தினம் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என்றால் குறைந்தது  ஒரு லட்ச ரூபாய் தேவைப்படும்.இதை சமாளிக்க மருத்துவ காப்பீடு அவசியமாகும்.

இதை ஆங்கிலத்தில் மெடிக்கிளைம் அல்லது ஹெல்த் இன்ஷூரன்ஸ்பாலிசி என்பார்கள்.

35 வயதுள்ள ஒருவர் தினசரி ரூ.10 செலவு செய்தால் 3 லட்சரூபாய் கவரேஜ் கொண்ட மருத்துவ காப்பீடு வசதி பெறலாம்.அதாவது மாதம் 300 ரூபாய் பிரீமியம் கட்டினால் இந்த வசதிகிடைக்கும்.

வீடு காப்பீடு..!

கன மழைவெள்ளம், தீ விபத்து, பூகம்பம், கலவரங்கள் உள்ளிட்டகாரணங்கள் நம் வீட்டுக்கு சேதம்மற்றும் பாதிப்பு ஏற்படலாம். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால்சமாளிக்க வீட்டு உரிமையாளர்பாலிசி கை கொடுக்கும்.

இதனை ஆங்கிலத்தில் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி அல்லது ஹோம்இன்ஷூரன்ஸ் என்கிறார்கள்.

தினசரி  12 ரூபாய் செலவில் வீட்டுக்கு 30 லட்ச ரூபாய்க்கும், வீட்டிலுள்ள பொருள்களுக்காக 3 லட்ச ரூபாய்க்கும் காப்பீடு வசதி கிடைக்கும்ஆண்டுக்கு 360 ரூபாய் பிரீமியம் செலுத்துவது மூலம்இந்த வசதியை பெற முடியும்.

வாகன காப்பீடு..!

பைக் மற்றும் கார்களை காப்பீடு செய்வது கட்டாயமானது.வாகனங்கள்  அடிக்கடி திருடு போகின்றன. மேலும், விபத்தில் சேதம் மற்றும் பாதிப்பு அடைகின்றன.
இந்த காப்பீட்டை பெற தினசரி ரூ.30 அல்லது மாதத்துக்கு ரூ. 900பிரீமியம் கட்டுங்கள்.

கடன் காப்பீடு..!

இன்றேக்கு பலர் வங்கிக் கடன் வாங்கிதான் வீடு வாங்குகிறார்கள்.அது போன்ற நேரத்தில் வீட்டுக் கடன் காப்பீடு பாலிசி ஒன்றை எடுப்பது கட்டாயம்இந்த பாலிசியை ஆங்கிலத்தில் ஹோம் லோன்இன்ஷூரன்ஸ் என்பார்கள்.

ஒருவர் 20 ஆண்டுகளில் திரும்பக் கட்ட கூடிய விதமாக 50 லட்சரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.இந்த கடன் தொகைக்கு ஒரே பிரீமியமாக (ஒற்றை பிரீமியம்) 1.75 லட்ச ரூபாய் செலுத்தினால் அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கு இந்தக்கடன் தொகைக்கு காப்பீடு கிடைக்கும்அதாவது, நாள் ஒன்றுக்கு 24ரூபாய்தான் பிரீமியம்.

வீட்டுக் கடன் வாங்கியவர், இந்தக் காப்பீடு பாலிசி எடுத்திருந்தால், திடீரென அவருக்கு இறப்பு ஏற்பட்டால் கடன் தொகை முழுவதையும் காப்பீடு நிறுவனமே செலுத்திவிடும்.

ரொக்க, கடன் அட்டை காப்பீடு
இன்றைக்கு வங்கிக்கு செல்வது என்பது அரிதாகி வருகிறதுகாரணம்,ரொக்க அட்டை என்கிற டெபிட் கார்ட்கடன் அட்டை என்கிற கிரெடிட்கார்டு ஆகும்.

தினசரி 4 ரூபாய் பிரீமியம் கட்டுவது மூலம் ரொக்க, கடன் அட்டைகள் திருடு போனால் அல்லது அவை தவறாகபயன்படுத்தப்பட்டால் காப்பீடு வசதியை பெற முடியும் 

கார்ட் தொலைந்து விட்டது அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து வங்கிக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன் ஏழு தினங்களில் ஏற்படும் இழப்புக்கு 50,000 ரூபாய் வரையிலும், தகவல் தெரிவித்த பின்னர் ஏற்படும் இழப்பிற்கு 15 லட்ச ரூபாய் வரையிலும் காப்பீடு வசதிகிடைக்கும்.

தினம் ரூ.100 போதும் ...

தினசரி 100 ரூபாய் அல்லது மாதம் 3,000 ரூபாய் மூலம் ஓரளவுக்குநல்ல வசதியாக குடும்பத்தை இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மூலம்பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதுவே ஓரளவுக்கு வசதியுள்ள குடும்பம் என்றால் மாதம் 1,000முதல் 1,500 ரூபாய் பிரீமியத்தில் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.