Saturday, 14 March 2015

இந்தியர்களுக்கான வாட்ஸ் (அப் Whatsup Calling)காலிங் வசதி!! ஒரு தவகல்..

டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் வாட்ஸ் அப். இதைப்போன்ற சேவையை வழங்கும் kakao talk, viber அப்ளிகேஷன்களை விட whatsapp செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி மக்கள் இதனைப் பயன்டுத்தி வருகின்றனர்

வாட்ஸ் அப் செயலியின் அதிவேக வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதில் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளதாகவும் என தகவல் வெளிவந்தது.
வாய்ஸ் கால் செய்ய இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமாக இணையப்பயன்பாட்டுக்கு ஆகும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
டெக்ஸ்ட் மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல, இனி இந்த வாட்ஸ்அப் செயலிமூலம் குரல் அழைப்புகளை ஏற்படுத்தி, உலக நண்பர்களுடன் பேச முடியும்.
இந்த வசதி எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார்.
முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.

இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப் செயலியின் வாடிக்கையாளர்கள் இருமடங்கு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்தியாவில் 
“வாட்ஸ் அப்”

“வாட்ஸ் அப்” தனது அழைப்பு சேவையை ஓராண்டுக்கு இந்திய பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

whatsappcallஉலக அளவில் பிரபலமான குறுஞ்செய்தி சேவை அப்ளிகேஷனான “வாட்ஸ் அப்” நிறுவனம் ஒரு வழியாக வாய்ஸ் காலிங் சேவையையும் தொடங்கி விட்டது.

அதிகாரப்பூர்வமாக தன்னுடைய வாய்ஸ் காலிங் சேவையினை வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்த வாட்ஸ் அப் நிறுவனம்.


ஐபோனைத் தவிர்த்து அன்ட்ராய்ட், ப்ளாக்பெர்ரி, விண்டோஸ் போன்களில் இந்த சேவை கிடைக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது.

http://www.whatsapp.com/android/  இந்த லிங்கிற்கு சென்று வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட புதிய apk ஃபைலை டவுன்லோட் செய்து உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள்.  (இது இந்தியாவிற்கான சேவை என்பதால் கூகிள் பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் ஃபைல் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்க)  அப்டேட் செய்த பின் இதே சேவையைப் பெற்ற மற்றொரு வாட்ஸ்அப் ரசிகர் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் ரிங் பண்ண வேண்டும்.  அவ்வளவுதான்.  அந்த அழைப்பை நீங்கள் ஏற்றப்பின் உங்கள் வாட்ஸ் அப் காலிங் வேலை செய்யத் துவங்கி விடும்.

whatsappdailகால் முடிந்தவுடன் மீண்டும் ஒரு முறை வாட்ஸ் அப்பினை ஓப்பன் செய்தால் தற்போது ஒரு புதிய திரையினைப் பார்க்கலாம். அதில் call – chat – contacts  என்று மூன்று ஆப்ஷன்கள் வந்திருப்பதை பார்க்கலாம். பிறகு வாட்ஸ் அப் ரசிகர்களுக்கு உங்களால் போன் பண்ண முடியும்.


கவனிக்க – மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷனை நிறுவாதவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது.  இந்த அப்ளிகேஷனை நிறுவியவுடன் ஓராண்டுக்கு இந்த அழைப்பு இலவசம் என்ற செய்தி உங்களுக்கு கிடைக்கும்.

www.whatsappcalling.com என்ற முகவரி போலியானது என்பதையும் அங்கிருந்து வரும் லிங்கை ஏற்க தேவையில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.

வெளிநாட்டிலுள்ளவர்கள் தங்கள் இந்திய அலைப்பேசி எண்ணில் இதை ஆக்டிவ் செய்துக் கொள்ளலாம்.

வந்துருச்சு “வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங்” – இதிலாவது “மிஸ்ட் கால்” கொடுக்காம பேசுங்கப்பா!

Friday, 13 March 2015

இஸ்லாத்தில் தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ்செய்வது கூடுமா? ஒரு சிறப்பு பார்வை..

திக்ர் செய்வது என்பது ஓர் வணக்கமாகும். வணக்கங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் அழ்ழாஹ்வுக்கு மாத்திரமே உண்டு. அவனால் அறிவிக்கப்படும் சட்டங்களை மனிதகுலத்திற்கு ஒளிவு, மறைவின்றி எடுத்துரைப்பதுதான் நபிகளாரின் கடமையாகும். 
முஸ்லிம்களாகிய எம்மை திக்ர் செய்யுமாறு பணித்த அழ்ழாஹ் தஸ்பீஹ் மணியினால் அதனைச் செய்யுமாறு அல்குர்ஆனில் எங்குமே கூறவில்லை. திக்ர் செய்வதை ஆர்வமூட்டி அதை தன்வாழ்வில் அமுல்படுத்திய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்  தஸ்பீஹ் மணிகளைப் பயன்படுத்தி இறைவனை நினைவு கூர்ந்ததாக எவ்வித ஆதாரமும் ஹதீஸ் கிரந்தங்களில் காணக் கிடைக்கவில்லை.
இன்று மக்கள் பயன்படுத்தும் தஸ்பீஹ் மணி போன்ற சாதனங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் இருக்கவில்லை. ஆனாலும் பேரீத்தங் கொட்டைகளை வைத்தாவது திக்ர் செய்திருப்பார்களா? என ஹதீஸ் நூற்களில் தேடிப்பார்த்தால், எவ்விதச் சான்றையும் அதற்கும் காணவில்லை.
அழ்ழாஹ்வோ, அவனது தூதரோ சம்பந்தப்படாத எந்த வணக்கமும் அழ்ழாஹ்வின் பார்வையில் உண்மை வணக்கமாக அங்கீகரிக்கப்படமாட்டாது. இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்கின்ற போது தஸ்பீஹ் மணியினால் திக்ர் செய்யும் நடைமுறை மிக அண்மைக்காலத்தில்தான் முஸ்லிம் சமூகத்தினுள் புகுந்தது என்பதை அறிய முடிகின்றது.
இந்துக்களோடு இரண்டறக்கலந்து வாழ்ந்த இந்திய முஸ்லிம்களிடமிருந்துதான் இக்கலாசாரம் முஸ்லிம் களுக்குள் தோன்றியுள்ளது. இந்து முனிவர்களிடம் காணப்படும் ‘ஜெபமாலை’ யின் மறுவடிவமே ‘தஸ்பீஹ் மணி’ என்பது வெளிவராத உண்மையாகும்.
அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீத்களில் அறவே இடம் பெறாத இந்தக் காரியம் வழிகேடானதும் நரகிற்கு அழைத்துச் செல்வதுமாகும். இக்காரியத்தை எவ்வகையிலும் நாம் அங்கீகரிக்க முடியாது. தஸ்பீஹ் மணியைப் பயன்படுத்தி திக்ர் செய்வது வழிகேடானது என நாம் கூறுவதால் அழ்ழாஹ்வை திக்ர் செய்வதை மறுக்கின்றோம் என தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
திக்ர் செய்யுமாறு கூறிய நபிகளார் தன் வாழ்வில் பேரீத்தங் கொட்டைகளைக் கூட பயன்படுத்தாமல் விட்டுள்ளார்கள் என்பது பிற சாதனங்களைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இருந்துங்கூட தன் கைவிரல்களினாலேயே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திக்ர் செய்துள்ளார்கள் என்பதை எமக்கு துல்லியமாக விளக்குகின்றது.
மேற்படி கைவிரல்களால் திக்ர் செய்யும் நடைமுறையே நபிவழியில் ஆதாரபூர்வமானதாகும். நபிகளாரை நேசிக்கும் ஒருவர் கைவிரல்களினாலேயே திக்ர் செய்ய வேண்டுமேயன்றி தஸ்பீஹ் மணியையோ இன்ன பிற சாதனங்களையோ பயன்படுத்தக் கூடாது.
அபூஹுரைரா, இப்னு மஸ்ஊத், அபூபக்கர் (ரழி) போன்ற நபித் தோழர்கள் கற்களினாலும் பேரீத்தங் கொட்டைகளினாலும் திக்ர் செய்ததாக தப்லீக் ஜமாஅத் சகோதரர்களின் தஃலீம் தொகுப்பு எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. மேற்படி இத்தகவல் முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்டதும் பலவீனமான செய்தியுமாகும்.
ஆதாரமற்ற இவ்வாறான போலித்தகவல்கள் முஸ்லிம் களிடம் அதி வேகமாகப் பரவியிருப்பதனாலேயே தஸ்பீஹ் மணியினால் திக்ர் செய்யும் பிழையான, ஸுன்னாவுக்கு மாற்றமான கலாசாரம் தோன்றியது. மார்க்க விடயத்தில் போதிய தெளிவின்மையால் இந்துக் கலாசாரமான ‘ஜெபமாலை’ அழ்ழாஹ்வின் ஆலயங்களில் ஆணிகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் துர்ப்பாக்கியத்தைக் காணுகின்றோம்.
இந்நடைமுறை மாற்றப்பட வேண்டும். இறையச்சத்தை நினைவூட்டுகின்றது என்றும், நல்லவர்களின் அடையாளமெனவும் இந்த தஸ்பீஹ் மணி இன்று உலமாக்களால் போதிக்கப்படுவது மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். கைவிரல்களினால் நாம் திக்ர் செய்தால் கரங்கள் பேசும் அந்த மறுமை நாளில் நிச்சயம் அவைகள் எமக்கு சார்பாக சாட்சி சொல்லும் என்பதை நன்றாக சிந்தித்தால் தஸ்பீஹ் மணியை நாம்  கையில் எடுக்கமாட்டோம்.

தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம்என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக்காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.


நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம்பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபி (ஸல்)அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, "இதைக்கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?''
என்று கேட்டு விட்டு, "இதைக் கொண்டு நீ செய்யும்தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக்கற்றுக் கொடுக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். நான்சரி என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்"ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்'' என கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
நூல்: திர்மிதீ 3477


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சம் கொட்டைகளைக்கொண்டு தஸ்பீஹ் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள்எந்தத் தடையையும் செய்யவில்லை; மேலும்அவர்களின் மனைவி பேரீச்சம் கொட்டைகளைக்
கொண்டு தஹ்பீஹ் செய்ததை நபி (ஸல்) அவர்கள்அங்கீகரித்துள்ளதால் தற்போது நவீன காலத்தில் தஸ்பீஹ்மணி கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் தஸ்பீஹ்செய்யப்படுகிறது. எனவே இதைக் கூடாது என்று கூறமுடியாது என்று வாதிடுகின்றனர்.


இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! 

இந்தச்செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள்
இச்செய்தியின் இறுதியில், "இது அறியப்பட்டஅறிவிப்பாளர் வரிசையில் அமையவில்லை''என்று குறை கூறியுள்ளார்கள்.மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாஷிம்பின் ஸயீத் என்பவர் பலவீனமானவர். அதன்இரண்டாவது அறிவிப்பாளர் கினானா என்பவர் யாரெனஅறியப்படாதவர். எனவே இந்தச்செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்தச்செய்தியை வைத்துக் கொண்டு சட்டம் எடுக்கமுடியாது.இதைப் போன்று இன்னொரு செய்தியையும் தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம்சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள்தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம்கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன.அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்)இதை விட உனக்கு இலகுவான
அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்...
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491


இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!
இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரென அறிப்படாதவர். இவர்
நம்பகமானவரா? நினைவாற்றல் மிக்கவரா? என்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை ஹாபிழ் இப்னு ஹஜர் மற்றும் தஹபீ ஆகியோர் இவரை யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர்.எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் காட்ட முடியாது.


மேலும் தஸ்பீஹ் மணி என்பது மாற்று மதத்தவர்களின் வழிபாடுகளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும்.
அங்கு தான் சில கொட்டைகளை வைத்து பின்னப்பட்ட மாலைகளைப் பயன்படுத்தித் துதிப்பார்கள்.
எனவே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றுவது கூடாது."யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக
நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல்:
பஸ்ஸார்) மேலும் கைகளால் தஸ்பீஹ் செய்ய வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளும் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.


"உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்!அந்த விரல்களும் (மறுமையில்)விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யுஸைரா (ரலி), நூல்கள்: அஹ்மத்
25841, திர்மிதீ 3507


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி சிலஅறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.இரண்டாவது அறிவிப்பாளர் ஹுமைளா பின்த் யாஸிர்என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹானீ பின்உஸ்மான் என்பவரும் யாரென அறியப்படாதவர்கள்.இவ்விருவரையும் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை; இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென அறியப்படாதவரையும் நம்பகமானவர் பட்டியலில் இணைத்து விடுவார் என்பதால் அவரின்
கூற்று மதிப்பற்றது என்று விமர்சனம்செய்யப்படுகிறது.


இந்தச் செய்தி பலவீனமானதாக இருந்தாலும் நஸயீ என்ற நபிமொழித் தொகுப்பு நூலில் ஆதாரப்பூர்வமான செய்தி இடம் பெற்றுள்ளது.நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைகளால் தஹ்பீஹ்செய்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: நஸயீ 1331


இந்தச் செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர்அதா பின் யஸீத் என்பவர் மூளை குழம்பியவர் என்ற விமர்சனம், இந்த ஹதீஸில் எந்தப் பலவீனத்தையும்ஏற்படுத்தாது. ஏனெனில் அதா பின் யஸீத் என்பவரிடம்இந்தச் செய்தியில் செவியுற்ற ஹம்மாத் பின் ஸைத்என்பவர், இவர் மூளை குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர்கேட்டவர் என்று யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் குறிப்பிடும் செய்தி "தஹ்தீபுத் தஹ்தீப்' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைந்துள்ளதால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி விரல்களால் தஹ்பீஹ்செய்வதே நபிவழியாகும்.


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Sunday, 8 March 2015

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி–பங்குனி திருவிழா !! ஒரு சிறப்பு பார்வை..

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் மாசி–பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி மொத்தம் 36 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் போது இந்த பகுதியை சேர்ந்தவர்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி - பங்குனித்திருவிழா வெகுவிமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் நாள் காரைக்குடி மீனாட்சிபுரத்திற்கு 8 வயது சிறுமியாக அன்னை முத்துமாரியம்மன் வந்தாள். அன்னையின் மேனி முழுவதும் அம்மை படர்ந் திருந்து சில நாள்களில் பெரிய அம்மையாக உடலெல்லாம் முத்து முத்தாக முளைத் தது. படுத்த படுக்கையான நிலையில் சிறுமி வடிவில் இருந்த அன்னை தனது அருள் வாக்கினாலும், மகிமையாலும் மக்களுக்கு தான் முத்துமாரியம்மன் என்பதை புரிய வைத்து மறைந்தாள். அன்னைக்கு லலிதா முத்துமாரியம்மன் என்ற பெயரும் உண்டு.
இவ்வாறு மகிமைவாய்ந்த அம்மனுக்கு இக்கோயிலில் மாசிமாதம் இறுதியில் தொடங்கி பங்குனியில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நேர்த்திக்கடன் செலுத்தவிருக்கும் பக்தர்களும் காப்புக்கட்டிக்கொண்டு தங்களது விரதத்தைத் தொடங்கினர்.
அத்தனை சிறப்பு பெற்ற இந்த கோவிலின் இந்த ஆண்டுக்கான திருவிழா  மார்ச் 10-ந்தேதி அதிகாலை 4.14 மணிக்கு கணபதி பூஜையும், 5.45 மணிக்கு கொடியேற்றமும், 5.50 மணி முதல் 6.24 மணிக்குள் அம்மனுக்கு காப்புக் கட்டுதலும் நடைபெறுகிறது.
மார்ச் 17-ந்தேதி இரவு திருக்கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்து வருத லும், மார்ச் 18-ந்தேதி திருக்கோயில் காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்து வருதல் மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதலும் நடைபெறும். அன்று மாலை திருக்கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி ஊர்வலம் கோயிலிலிருந்து புறப்பட்டு பருப்பூரணியில் செலுத்துதல் நடைபெறும். இரவு காப்புப்பெருக்குதலும், மார்ச் 19-ந்தேதி இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதியுலாவும், மார்ச் 20-ந்தேதி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
மதுக்குடம்
நவதானியங்களையும் அரைத்துப் புளிக்க வைத்து அதை ஒரு குடத்தில் ஊற்றி ஊற வைப்பார்கள்தானியக் கரைசல் புளித்துப் பொங்கஅதில் ஊமத்தங்காய்களையும் அரைத்துப் போடுவார்கள்இதனால் குடத்தில் உள்ள தானியக் கரைசல் புளித்துப் பொங்கும்இப்படிப் பொங்கும் குடத்தை 'மதுக்குடம்என்கிறார்கள்.
முளைப்பாரி
ஒரு பானையில் மண் நிரப்பி அதில் தட்டாம் பயறுபாசிப்பயறு முதலியவற்றின் விதைகளை நெருக்கமாகத் தூவிஅதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் நாலைந்து நாட்களுக்கு வைத்துவிடுவார்கள்தினமும் பானையில் இருக்கும் மண்ணிற்கு நீர் ஊற்றி வருவார்கள்எனவேபயறுவகை விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்துவளர்ந்து நிற்கும்இப்பானையை நோன்பிருந்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்இதையே 'முளைப்பாரிஎன்கிறார்கள்.
கரகம்
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்கள்  அம்மனிடம் கரகம் எடுத்து வருவதாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகள்  கரகம் பிரார்த்தனையை நிறைவேற்றுவார். கரகத்தை நன்றாக அலங்காரம் செய்து பட்டுச்சேலை சுற்றி, பூ வைத்து,  இப்பானையை நோன்பிருந்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்இந்த பிரார்த்தனையை அதிகமாக செய்கிறாரக்ள். திருமணத்துக்காக இந்த பிரார்த்தனை செய்யப்படுவதால், இதை "குடை கல்யாணம்'' என்றும் அழைக்கிறார்கள்

பால்குட பெருவிழா

இதையடுத்து புதன் காலை  பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெரும் . முன்னதாக அதிகாலையில் இருந்தே காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். பக்தர்கள் நேர்த்திகடனாக கொண்டு சென்ற பால் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த ராட்சத அண்டாவில் நிரப்பப்படும்.
பின்னர் மின் மோட்டார் மூலம் அந்த பால் முழுவதும் கருவறையில் உள்ள முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். விழாவில் கைக்குழந்தைகள் முதல் முதியோர் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும்  பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் பால் காவடி, பறவைக்காவடி, அக்னி காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர் .சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கில் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தஉள்ளனர் .
மலைபோல் குவியும்  மாலைகள்
நகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ததால் அந்த பகுதி முழுவதும் பால் மணம் கமலும் . மேலும் பக்தர்கள் அம்மனுக்கு செலுத்ததும்  மாலைகள் கோவில் பகுதியில் மலை போல் குவியும்
 போக்குவரத்தில் மாற்றம்.
.36 நாள்கள் நடைபெறவிருக்கும் இத்திருவிழாவை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் மூலம் சுகாதார பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறைது. பாலதண்டாயுதம் செய்திருக்கிறார்.இந்த திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும்..
மேலுமபேருந்துகள் ஆலங்குடியார் வீதி, சத்தியன் திரையரங்கம், கீழத்தெரு, டி.டி. நகர் வழியாக நூறடிச்சாலை சென்று புதிய பஸ்நிலையத்தை அடையவேண்டும். கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணம் போக்குவரத்து நடைபெற போலீஸாருக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். திருவிழா நாள்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமூகத்தாரின் மண்டகப்படி நடைபெறும். இதில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.. 
அக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Saturday, 7 March 2015

Expats have right to keep their passports in Saudi Arabia!! சவூதி அரேபியாவில் வசிக்கும் உங்கள் பாஸ்போர்ட் இனி உங்கள் கையில்!

passports_1.jpgThe Labor Ministry has reiterated that it is the right of foreign workers to keep their passports and official documents.
“Anybody violating this rule will face serious penalties,” said Taysir Al-Mofraj, the ministry’s spokesman.
According to him, holding on to employees’ passports does not guarantee that the worker will not escape, as there are many cases in which runaway workers can register again with embassies without official documents.
In case an employee is absent during the first three months, the employer can replace that worker with another one via the recruitment office, he explained.
Sultan Al-Harbi, director of Labor Office in Jeddah, confirmed that any employer that takes passports away from his expat staff is in clear violation of the labor laws.
Speaking to Arab News, Al-Harbi stated that any expatriate worker can lodge a complaint with the labor office against his employer, “because labor laws protect the rights of expat workers.”

Articles 6 and 7 of the Domestic Workers Act stipulate that both parties are protected and neither is subject to sanctions by the Labor Office, Al-Mofraj said.
As per Article 13 of the act, employers must notify the nearest police department as well as the Labor Office when a worker absconds so as to ensure there are no lawsuits or complaints against the employer.

Source : Arab News..

.

இதன் சுருக்க தமிழாக்கம்!

சவுதி நட்புகளும் மகிழ்ச்சி செய்தி:
சவுதியில் உள்ள தமிழ் நட்புகளுக்கு மகிழ்ச்சி செய்தி. நாட்டில் இருந்து வேலைக்கு வரும் வெளிநாட்டினரின் கடவுச்சீட்டு( passport)யினை வேலைக்கு வரும் தொழிலாளிகளே கடவுச்சீட்டு( passport) கைவசம் வைத்திருக்க உரிமை உள்ளது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனை கம்பெனி உரிமையாளர்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வரும் வேலை பிரச்சினைகளுக்கு தீர்வு வரும் என்று நம்பலாம்.


நன்றி  : அரபி நியுஸ்..

பாரத இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் விமானி !!

பழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த ரொட்டிக் கடையில் வேலை செய்து வருபவர் அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இன்று இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் உள்ளார். இஸ்லாம் கூறும் ஹிஜாபின் ஊடாகவும் சாதனைகளை செய்ய முடியும் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டுள்ளார் ஃபாத்திமா! 

வறுமையான குடும்பத்தில் பிறந்த ஃபாத்திமா தான் பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே ஆர்வ மிகுதியால் விமானம் சம்பந்தப்பட்ட செய்திகளை எல்லாம் சேகரித்து வருவாராம். இவரது அறிவையும் ஆற்றலையும் உணர்ந்த பல நல்ல உள்ளங்கள் இவரது படிப்பு செலவை ஏற்றுக் கொண்டன.




 ஐந்து வருடம் சிறப்பாக படித்து இன்று ஒரு பெண் விமானியாக வலம் வருகிறார் ஃபாத்திமா. Andra Pradesh Aviation Academy மூலமாக தனியார் விமான ஓட்டிக்கான சான்றிதழை மார்ச் 2003 அன்று பெற்றுக் கொண்டார். 200 மணி நேரம் விமானியாக பறந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இவ்வளவு பெரிய படிப்பு படித்தும் தனது ஹிஜாபை இது வரை கழட்டவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். இஸ்லாமிய கல்வி வேலை வாய்ப்பில் பெண்கள் முன்னேறுவதற்கு முக்காடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். மேற்கொண்டு படிப்புக்காக இவருக்கு 30 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. கூலி தொழிலாளியான இவரது தந்தையால் முடியாது. எனவே அரசு உதிவியினை எதிர் நோக்கி காத்துள்ளார். இவருக்கு உதவி கிடைக்கவும், இன்னும் எந்த உயரத்தை எட்டினாலும் இதே போல் இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நடைபோடவும் நாமும் பிரார்த்திப்போம்.
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமயையும் ஃபாத்திமா பெறுகிறார்.

தகவல் உதவி
தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
06-03-2015

Thursday, 5 March 2015

புதிதாக குவைத் செல்ல மருத்துவ பரிசோதனை இனி மும்பையில் மட்டுமே !! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? !

தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக வேலை தேடி செல்லும் நம் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு தமிழகத்தில் சென்னை ,திருச்சி , மற்றும் திருவனந்தபுரம் என்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்ப்பதற்கு அனுமதி இருந்தது

குவைத்திற்கு வரும் மக்களை இந்த அரசு முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்து தான் அந்தந்த கம்பெனியில் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கும் 

சமீப காலமாக குவைத்திற்கு வரும் மக்களை பரிசோதனைக்கு அனுப்பும்போது தான் தமிழகத்தில் போலியான மருத்துவ சான்றுகள் பெற்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது 

இது தொடர்கதை ஆனதாலும் , தமிழகத்தில் பல்வேறு ஏஜண்டுகள் பண வெறி பிடித்து பல ஆயிரம் பெற்று போலி சான்றுகள் தருவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் வந்ததால் 

தமிழக மக்களும் எப்படியாவது வெளி நாடு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் பணத்தை கொடுப்பதாலும்
குவைத் அரசு மிகவும் சிரமத்திற்குள்ளானது 

ஆதலால் குவைத் அரசு இந்த மார்ச் மாதத்தில் இருந்து யாராகிலும் வேலைக்காக வருபவர்கள் மும்பை சென்று தான் மருத்துவ சான்றிதழ் எடுக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்தது 

இந்த சட்டம் போட்ட நோக்கம் நல்லதாக தெரிந்தாலும் ஒரு சில அயோக்கிய ஏஜண்டுகளால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்

ஒருவர் பரிசோதனைக்கு செல்ல மும்பை செல்ல வேண்டும் என்றால் சென்று வர 4நாட்கள் ஆகும் இரண்டு நாள் தங்க வேண்டியது வரும்.பெரும்பாலான தமிழக மக்களுக்கு மொழி பிரச்சினை இருக்கிறது ,யாரேனும் ஒருவர் உடன் செல்ல கூடிய சூழ்நிலை. என பல்வேறு பிரச்சனையை சந்திக்க வேண்டியது உள்ளது 

ஆதலால் தமிழக அரசு ! நம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் தமிழகத்திலேயே மருத்துவ பரிசோதனையை செய்ய அனுமதிக்கவும் ,

குவைத் அரசு போட்ட சட்டத்தை திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு மூலம் குவைத் நாட்டிற்கு வேண்டுகோள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளி நாடு வாழ் (குவைத் வரும்) தமிழர்கள் சார்பாக பணிவண்புடன் அரசிடம் கேட்டு கொள்கிறேன்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

ஹைதராபாத் நகரில் ஒப்பந்த திருமணம் பற்றிய சமூக விழிப்புணர்வுப்பார்வை..

ஹைதராபாத் நகரில் ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் ஏழைப் பெண்கள் குறிவைத்து ஏமாற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றெல்லாம் பழமொழிகள் உண்டு.மொத்தத்தில் இருமனங்களும் கலந்து ஒருமனமாகி திருமணம் செய்து கொள்கின்றனர். ஓர் ஆணும், பெண்ணும் உணர்வாலும் உடலாலும் ஒருங்கிணையும் அழகான பந்தம் "திருமணம்". இதனை ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் கேவலப்படுத்துகின்றனர் வெளிநாடுகளைச் சேர்ந்த சில பணக்கார கணவான்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம், லிவிங் டுகெதர் என இன்றைக்கு பல திருமணங்கள் இருக்க தற்போது "ஒப்பந்த திருமணம்" இந்திய மக்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

வெளிநாட்டு ஆண்கள்!
ஆந்திராவின் ஹைதராபாத்துக்கு மாணவர் விசாவில் படிக்க வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், அங்குள்ள அப்பாவி பாமர ஏழை முஸ்லீம் பெண்களை திருமணம் செய்து கொண்டு, சில வருட படிப்பு காலம் முடிந்து தாயகம் திரும்பும் போது அவர்களை விவாகரத்து செய்துவிட்டுச் சென்றுகின்றனர். இதனால் பாதிப்பிற்கு ஆளாவது என்னவோ ஏழை சிறுமிகள்தான்.
ஹைதராபாத் நகரில்!

 ஏழை பெண்களை, குடும்பங்களை குறி வைத்து நடத்தப்படும் ஒப்பந்தத் திருமணம் என்ற மோசடி தற்போது ஹைதராபாத்தில் மிகவும் வேகமாக பரவி வருவதாக போலீசார் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டினர் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு உள்ளூரைச் சேர்ந்த சில தரகர்கள் உதவி செய்து வருகின்றனர்.

உள்ளூர் புரோக்கர்கள் !
வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கும் வாலிபர்கள், இந்தியாவில் இருக்கும் வரை தங்களுக்கு என்று ஒரு துணையைத் தேடிக் கொள்கின்றனர். அதாவது இங்கு இருக்கும் வரை அந்தப் பெண் தங்களுக்கு போதும் என்கின்றனர். இதற்காக ஒப்பந்தத் திருமணத்துக்கு அவர்கள் தயாராக உள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காகவே பல புரோக்கர்கள் உள்ளனர்.


கைமாறும் பணம் !
அந்த புரோக்கர்கள், தங்களுக்கு தெரிந்த பெண்கள் மூலம் இளம் பெண்களுக்கு, குறிப்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வலை வீசுவார்கள். ஆனால் ஒப்பந்தத் திருமணம் என்பதை மறைத்து, திருமணம் செய்து விடுகின்றனர். இதற்காக புரோக்கர்கள் பெரும் தொகையை வசூலிக்கின்றனர். தங்களுக்கு உதவும் பெண்களுக்கு ஒரு பங்கை கொடுக்கின்றனர்.



மணப்பெண்ணுக்கு பணம்!
 அதைத் தவிர பெண்ணின் குடும்பத்துக்கு, திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு இளைஞர்கள் தனியாக பணம் கொடுக்கின்றனர். குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களையே இவர்களை குறிவைத்து செயல்படுகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.





திருமண உறவு !
மேலை நாடுகளை பொருத்தவரை திருமணம் உறவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை, பிடித்தால் சேர்ந்து வாழ்வதும் பிடிக்காவிட்டால் மற்றொரு நபரை தேடிச் செல்வதும் சர்வசாதரணமான விசயம் ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை திருமண உறவில் இந்த பழக்கவழக்கங்கள் இருந்தாலும், பெரும்பாலாக நடப்பதில்லை. ஆனால் தென்னிந்தியாவின் ஹைதராபாத்தில் தான் ஒப்பந்த திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன.


திருமணத்தில் வராது !
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் ஆடவர்கள், சில மாதங்களுக்கு இங்கு தங்குகின்றனர். அப்போது சுற்றுலா, மது என்று பொழுதை கழிக்கும் அவர்கள் இந்திய பெண்களை ஒப்பந்த முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர். கெட்டிமேளம் முழங்க தாலி கட்டினாலும் இந்த திருமணத்தில் திருமண பதிவு இடம்பெறாது.

கை கழுவும் ஆண்கள் திருமணம் !
முடிந்த கொஞ்சம் மாதத்திற்கு மட்டும், அந்த வெளிநாட்டு ஆடவர் தன் புது மனைவியோடு உல்லாசமாக ஊர் சுற்றி திரிவார்.பின்னர் நாட்கள் உருண்டோட, மாதங்கள் செல்ல மணமகன் வெளிநாடு செல்லும்போது மனைவியை கைகழுவி விடுகிறார். இறுதியில், அப்பெண்களுக்கு குறைவான பணமும், கொஞ்சம் நாட்கள் பணக்கார வாழ்க்கை மட்டுமே மிஞ்சுகிறது.


தெரிந்தே குழியில்!
 ஒப்பந்த திருமணத்தில் ஏழைப்பெண்கள் ஏமாறுகின்றனர் என்று சொன்னாலும், சில குடும்பங்கள் இந்த திருமணம் பற்றிய விசயங்கள் தெரிந்திருந்தும் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். அன்றாடம் பிழைப்பு நடத்த கஷ்டப்படும் குடும்ப சூழலில் வாழும் பெண்கள், கொஞ்ச நாளைக்காவது பணக்கார வாழ்க்கையும், குடும்பத்திற்கு பண உதவி கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் இந்த திருமணத்தை செய்து கொள்கின்றனர்.

ஏமாறும் பெண்கள் !
இதனை ஒருவகை விபச்சாரம் என்று கூட சொல்லலாம், ஒப்பந்த திருமணம் என்ற பெயரில், ஒப்பந்த விபச்சாரம் செய்கிறார்கள் என்று தான் குறிப்பிட வேண்டும். இவ்வாறு நடக்கும் அவலங்களை கண்டறிந்து, அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு ஏமாறும், ஏமாற்றப்படும் பெண்களுக்கு அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகும்.

தொகுப்பு  : மு. அஜ்மல் கான்.

Monday, 2 March 2015

தமிழர்களின் வாழ்க்கையில் பூக்குழி, முளைப்பாரி திருவிழா!! ஒரு சிறப்பு பார்வை..

சின்ன வயதில் திருவிழாக்கள் என்றாலே சந்தோஷம் சொல்லிமாளாது. எங்கள் பக்கம் பங்குனியில் ஆரம்பிக்கும் கோவில் திருவிழாக்கள் ஆடி மாதம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழ் மாதமான பங்குனி மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் பூக்குழி திருவிழா, முளைப்பாரி திருவிழா என்று விழாக்கள் களைகட்டத் துவங்கி விடுகின்றன. அதிலும் கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகின்ற திருவிழாக்களில் முளைப்பாரி திருவிழா முக்கியமான ஒன்று. உலகமயமாதல் சூழ்நிலையில் அனைத்துமே மாறி வருகிறது. அப்படி மாறாத தன்மையோடு இருப்பவைகள் கிராமங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களைச் சொல்லலாம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இத்திருவிழாக்களின் போது கிராமங்கள் தனி கலையோடு தான் காட்சி அளிக்கிறது. 

தமிழர்களின் வாழ்க்கையில் முதன்மையான நிகழ்ச்சிகளில் திருவிழாவும் ஒன்று. பொதுவாக கிராம காவல் தெய்வ வழிபாடுகள் என்பது நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு, ஆண்டு வழிபாடு என்ற வகைகளில் தான் கொண்டாடப்படுகிறது. நாள் வழிபாடு என்பது கிராம தெய்வங்கள் இருக்கும் இடத்தை கடக்கும் பொழுதோ, அல்லது கிராம மக்களில் தனிப்பட்டவர்களுக்கு ஒரு சிறு சங்கடங்கள் வரும் பொழுதோ அம்மனை வழிபடுவார்கள். இந்த வழிபாட்டில் கிராம மக்கள் எந்த செலவும் செய்வதில்லை.

சிறப்பு வழிபாடு என்பது வருடத்தில் முக்கிய தினங்கள் என்று சொல்லப்படுகின்ற பொங்கல் விழா, தமிழ் வருடப்பிறப்பு போன்ற நாட்களில் நடத்தப்படுகிறது. ஆண்டு வழிபாடு என்பது தான் கிராமப்புறங்களில் மிகவும் முக்கியமாக, முழு ஈடுபாட்டோடும் கொண்டாடப்படுகின்ற விழா. இந்த விழாக்களின் பொழுது தான் கிராம காவல் தெய்வங்களை நன்கு அலங்கரிக்கப்பட்டு 10 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா மாரியம்மன், எல்லைக்காத்தம்மன், எக்கலாதேவியம்மன், காளியம்மன், முண்டக்கன்னியம்மன், செங்கோணியம்மன், முத்துமாரியம்மன் போன்ற தெய்வங்களை மகிழ்விக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாள் விழாவில் ஆண்கள் காவல் தெய்வங்களை அலங்கரித்து அதனை கிராமம் முழுவதும், ஊர்வலம் எடுத்து வருதல், விழா ஏற்பாடுகளை செய்தல் போன்ற காரியங்களை கவனிப்பார்கள். ஆனால் பெண்களால் உருவாக்கப்பட்டு, புஜை செய்யப்பட்டு பெண்களால் அழிக்கப்படும் விழா முளைப்பாரி எடுத்தல் விழாவைச் சொல்லலாம்.

Mulaipaariபொதுவாக தெய்வங்களை பெண்களை ஒப்பிட்டுத் தான் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புற வாழ்க்கையில் பெண்களின் பங்கு மகத்தானது மட்டுமல்ல முக்கியமானது. அதனால் தான் பெண்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து காவல் தெய்வங்களுக்கு திருவிழா ஆரம்பமான முதல் நாள் அன்று ஒரு கூடையில் கரம்பை மண்ணைப் போட்டு அதில் 9 வகையான நவதானியங்களான அனைத்து பயறு வகைகள், கேப்பை, கம்பு, நெல் போன்ற தானியங்களைக் ஒன்றாக்கி அதில் போட்டு தண்ணீர் தெளித்து முளைப்பாரி பயிரை உருவாக்குவார்கள். இதில் என்ன விசேஷம் என்றால்  முளைப்பாரிகள் சூரிய வெயில் படாத ஓர் இருட்டு அறையில் தான் உருவாக்கப்படுகிறது. பொதுவாக தாவரங்கள் சூரிய ஒளி பட்டு தான் பச்சையத்தை பெற்று வளர்ச்சி அடையும். ஆனால் முளைப்பாரிகள்  சூரிய ஒளி படாமல் வளர்வது தான் அதிசயம். இதற்கு காரணம் தெய்வ செயல் என்று கிராமமக்கள் சொன்னாலும் முளைப்பாரிக்கு இடப்படுகின்ற நவதானியங்கள் மற்றும் கரம்பை மண் மற்றும் மாட்டுச் சானம் தான் காரணம் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதே போல இந்த முளைப்பாரிகள் உருவாக்கப்படும் அறைகளில் காற்று கூட செல்ல முடியாத அளவுக்கு அடர்த்தியாகவும், இருட்டாகவும் இருக்கும்.

இப்படி திருவிழா ஆரம்பித்த முதல் நாளில் இடப்படுகின்ற முளைப்பாரி பயிர் திருவிழாவின் 9ம் நாள் அன்று பெரிய அளவில் வளர்ந்து அற்புதமாக காட்சி அளிக்கும். 9ம் திருவிழாவின் பொழுது, உருவாக்கபபட்ட முளைப்பாரிகளை அதன் உரிமையாளர்களான பெண்கள் தங்களது தலையில் சுமந்து கிராம தெய்வங்களோடு ஊர்வலம் வருவார்கள். பின் அம்மனுக்கு புஜை செய்த பின் முளைப்பாரிகளை ஊரில் இருக்கும் குளத்தில் மொத்தமாக கொண்டு போய் போட்டுவிடுவார்கள். இது தான் முளைப்பாரி திருவிழாக்களின் வரையறை. இந்த வரையறை சில கிராமங்களுக்கு வேண்டுமானால் மாறுபடலாம். ஒரு சில கிராமங்களில் பூக்குளி நடைபெறும் பொழுது எடுத்துச் செல்வார்கள், சில கிராமங்களில் முளைப்பாரிக்கு என்று தனியாக விழா நடத்துவார்கள்.
Mulaipaari Vizhaமற்றபடி விழா கொண்டாடப்படும் முறைகள் எல்லாமே ஒன்றாகத் தான் இருக்கும் என்கிறார் வரலாற்று பேராசிரியரான புகழ் முளைப்பாரி திருவிழா கிராமப் பெண்களை கௌரவிக்கும் விழாவாக பெண்களால் தான் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. முளைப்பாரியை பெண்கள் எடுப்பது ஒரு வேண்டுதல் தான். தங்கள் வாழ்வும், தங்கள் விளை நிலங்களில் விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் முளைப்பாரி விழாவில் முளைப்பாரி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். பொதுவாக இந்த முளைப்பாரிகளை உருவாக்குவதற்கு என்றே கிராமங்களில் சில பெண்கள் இருப்பார்கள். அவர்களிடம் முதலில் பெயர்களையும் அதற்கு தேவையான பொருட்களையும் கொடுத்து விட வேண்டும். பின் அனைத்து வேலைகளையும் அந்தப் பெண் தான் பார்த்துக் கொள்வார். அந்த ஒரு பெண் மட்டும் தான்  முளைப்பாரி வளரும் இருட்டு  அறைக்குள் சென்று காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பது, சாம்பிராணி புகை போடுவது, முளைப்பாரி வளரும் 6ம் நாளில் அதற்கு சிக்கல் எடுப்பது போன்ற வேலைகளை சிரமம் பார்க்காமல் செய்வார். இதற்காக உருவாக்கப்படும் அறை சாமி அறை என்றும், அதில் யாரும் நுழையக் கூடாது என்று எழுதப்படாத சட்டமே இருக்கிறது. இந்த முளைப்பாரி வளர்த்தல் ஒற்றை இலக்கில் தான் வளர்ப்பார்கள். இரட்டை இலக்கில் வளர்க்க மாட்டார்கள். இந்த முளைப்பாரி பயிர்கள் நன்கு வளர வேண்டும் என்பதற்காக கும்மிப்பாட்டுப் பாடும் பழக்கம் இன்றும் அழியாமல் பாடப்பட்டு வருகிறது. மொத்தத்தில் ஆதி காலத்தில் இருந்து இன்று வரை மாற்றம் அடையாத, மாற்றப்படாத விழா எது என்றால் அது முளைப்பாரி திருவிழாவினை சொல்லலாம் என்கிறார் முளைப்பாரி பற்றி நன்கறிந்த முத்துமாரி.


திருவிழா அன்று கையிருப்பைப் பொருத்து நாடகம். கரகாட்டம், ஒயிலாட்டம், திரைப்படம் என எதாவது ஒன்று இரவு முழுவதும் நடத்தப்படும். கடந்த சில வருடங்களாக வாணவேடிக்கையும் உண்டு. எல்லாருமே உறவுகள்... மனசுக்குள் கோபதாபங்கள் இருந்தாலும் எல்லாம் மறந்து சந்தோஷமாக எல்லாரும் நின்று செவ்வாய் கொண்டாடுவது என்பதில் ஒரு அலாதி சுகம்தான்.

என்றோ நாங்கள் பற்றவைத்த நல்ல நெருப்பு இன்று ஜோதியாய் எங்கள் ஊரில் ஒளி வீசுகிறது. தொடர்ந்து ஒளிவீசும் என்ற நம்பிக்கையோடு நாங்கள்...

திருவிழாக்கள் என்ற தலைப்பில் சிலவற்றைப் பற்றி பகிர நினைத்து எங்க ஊர்த்திருவிழாவிலேயே நின்றுவிட்டது. மற்றொரு முறை திருவிழாக்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Sunday, 1 March 2015

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த யார் இந்த டாக்டர் ஜாகிர் நாயக் !!

யார்  இந்த டாக்டர் ஜாகிர் நாயக் ...
இஸ்லாத்தை மாற்றுமதத்தவருக்கு எடுத்துச் சொல்லும்போது அதன் சாதகமான கொள்கைகளை சிறப்பித்து சொல்லுவதால் மாத்திரம் மாற்று மதத்தவர்களில் ஏரானமானபேர் உண்மையான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில்இஸ்லாத்தைப் பற்றி அவர்களது உள்ளத்தில் இருக்கும் சில கேள்விகள் நம்மால் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே இருக்கின்றது. மாற்று மதத்தவர்கள் நம்முடைய வாதங்களை ஏற்றுக் கொள்ள முற்படும் அதே வேளையில் 'ஓ..! ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம்கள்தானே நீங்கள பெண்களை பர்தாவுக்குள் அடைத்து வைத்து - பெண்ணடிமைத் தனத்தை ஆதரிப்பவர்கள்தானே நீங்கள்'- 'அடிப்படைவாதக் கொள்கைகளை உடையவர்கள்தானே நீங்கள்' என்று நம்மைக் கேட்கக் கூடும்.

நான் மாற்றுமத சகோதரர்களை சந்திக்கும் போது இஸ்லாத்தில் அவர்கள் தவறாகக் கருதுவது என்ன என்று கேட்பேன். மிகக் குறைந்த அளவில் அவர்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்து வைத்திருக்கும் செய்திகளைக் கொண்டு - அது சரியோ - தவறோ - மேற்படி செய்தி எந்த வழியில் அல்லது எந்த விதத்தில் பெறப்பட்டிருந்தாலும் - இஸ்லாமிய மார்க்கத்தில் அவர்கள் தவறாகக் கருதுவது என்ன என்று கேட்பேன். அவ்வாறு நான் கேட்பது அவர்களை வெளிப்படையாக பேசத் தூண்டும். அவர்கள் சிலவேளைகளில் இஸ்லாத்தை விமரிசித்தாலும் மனோதிடத்துடன் அதனை நான் சகித்துக் கொள்வேன்.

இஸ்லாமிய மார்க்கம் பற்றி மாற்று மதத்தவருக்கு இருக்கும் மொத்தச் சந்தேகங்களையும் இருபது கேள்விகளில்; அடக்கிவிடலாம் என்பது கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் பணியில் நான் அனுபவரீதியாக உணர்ந்த உண்மை. இஸ்லாமிய மார்க்கத்தில் நீங்கள் காணும் தவறு என்ன? என்று மாற்று மதத்தவரை நீங்கள் எப்போது கேட்டாலும் அவர்கள் ஐந்து அல்லது ஆறு கேள்விகளை உங்களிடம் எடுத்து வைப்பார்கள். அவர்கள் கேட்ட அந்த ஐந்து அல்லது ஆறு கேள்விகளும் பொதுவாக உள்ள இந்த இருபது கேள்விகளுக்குள் அடங்கி விடும்.

நீங்கள் அளிக்கும் தர்க்க ரீதியான பதில்கள் பெரும்பான்மையோர் உண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்ய வழிவகுக்கும்.

இந்த பொதுவான இருபது கேள்விகளுக்கும் - அதற்கான காரண காரியங்களுடனும் தர்க்க ரீதியாகவும் பதிலளிப்பது சிறந்த வழிமுறையாகும். இஸ்லாமியர்கள், நான் இத்துடன் அளித்திருக்கும் பதில்களை நினைவில் வைத்துக்கொண்டால் - அல்லது மனப்பாடம் செய்து கொண்டால் மாற்று மதத்தவருக்கு பதிலளிப்பதில் இறைநாட்டத்தில் நிச்சயமாக நாம் வெற்றிபெறலாம். நாம் அவர்களுக்கு அளிக்கும் பதிலில் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய முழு உண்மைகளைப் தெரிந்து கொண்டு திருப்தியடையாமல் இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள் அவர்களின் உள்ளங்களிலிருந்து அகற்றப்படும் என்பது திண்ணம். ஒரு சில மாற்று மதத்தவர்கள் வேண்டுமெனில் உங்களது வாதத்திற்கு எதிர்வாதம் புரிய முன்வரலாம். அவர்களுக்கு மாத்திரம் இஸ்லாத்தை எடுத்து வைக்க நமக்கு மேலும் சில விபரங்கள் தேவைப்படும்.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த  டாக்டர் ஜாகிர் நாயக் ..
உலகமே உற்றி நோக்கி கொண்டிருக்கும் சர்வ சாம்ராஜியாமான சவுதி அரேபியாவால் சிறந்த மார்க்க பேச்சாளர் சிறந்த மார்க்க அறிஞர் சிறந்த மார்க்க தாவா அழைப்பாளர் என்பதால் சிறப்பு விருது சவுதி அரசால் வழங்க பட்டு வருகிறது.இவருடைய தாவா அழைப்பு பணியால் பல்வேறு மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவி உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கதுபல்வேறு நாடுகளில் இவர் மாணவர்கள் தாவா பணியில் ஈடுபட்டு கொண்டுரிக்கிரார்கள். சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய சேவை புரிந்தமைக்காக டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு சவூதி அரேபியாவின் உயரிய விருதான மன்னர் பைசல் விருதை அரசர் சல்மான் வழங்கி கௌரவித்தார்.24 கேரட் 200 கிராம் தங்க பதக்கம், 7 லட்சத்தி 50 ஆயிரம் சவூதி ரியால் (இந்திய மதிப்பில் ஒரு கோடி 20 லட்சம்) மற்றும் அரபியில் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இஸ்லாம் மட்டுமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம், இந்த உலகுக்கு அமைதி வேண்டுமென்றால் அது இஸ்லாத்தினால் மட்டுமே முடியும், இஸ்லாத்தினால் மட்டுமே அது சாத்தியம் ஆகும் என்று தெரிவித்தார்.மேலும் தாம் பெற்ற ரூ1.கோடி 20 லட்சம் ரூபாய் பணத்தை வக்பு சொத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : அ .தையுபா அஜ்மல்.

தமிழ்ச்சங்கம் வளர்த்த கொடைவள்ளல் பாண்டித்துரைத் தேவர் பற்றிய சிறப்பு பார்வை..

Image result for வள்ளல் பாண்டித்துரைத் தேவர்நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல்
பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில் 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, 2. பாண்டியன் புத்தகசாலை 3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன. 
சங்கம் தோன்றக் காரணங்கள்
முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிகும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர்.
சங்க நோக்கங்கள்
1. நான்காம் தமிழ்ச்சங்கம் பொழுது போக்குக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.
2. அரசின் பொருட்கொடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ எதிர்பார்த்து தொடங்கப்பட்டதும் அல்ல.
3. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், முச்சங்கம் கண்டு முன்பு தமிழ் மொழி பெற்றிருந்த உச்ச நிலைக்கு மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற நன்னோக்கோடும் உருவாக்கப்பட்ட சங்கமே நான்காம் தமிழ்ச்சங்கம்
தொடக்க நாளிலே உருவாக்கப்பட்ட சங்கத் தீர்மானங்கள்..
நான்காம் தமிழ்ச்சங்கத் தொடங்க விழாவிற்கு மன்னர் பாசுகர சேதுபதியவர்கள் தம் பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தார். சேதுநாட்டு அவைப்புலவர்களும் பாண்டித்துரை தேவர் தம் அவைப் புலவர்களும் குழுமினர். பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை விழாவிற்கு வந்திருந்தனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டது. சங்கத் தொடக்க நாளிலேயே கீழ்க்காணும் “9 தீர்மானங்கள்” நிறைவேற்றப்பட்டன.   
1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்.
2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
4. வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல்
5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்
இந்த ஒன்பது நோக்கங்களை நிறைவேற்றத்தக்க ஏழு அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கின.
1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை.
2. பாண்டியன் புத்தக சாலை.
3. நூலாராய்ச்சி சாலை.
4. கல்விக் கழகம்.
5. தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்)
6. செந்தமிழ் என்னும் திங்களிதழ்
7. தமிழ்த் தேர்வு என்பவைகளாம்.
சேது சகோதரர்களின் கொடைகள்..
ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களான மன்னர் பாண்டித்துரையாரும் மன்னர் பாசுகர சேதுபதியவர்களும் இளம்வயிதலேயே தந்தையர்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் தமிழ்த் தொண்டாற்றத் துணிந்தனர். இன்று நான் காணும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம் போன்ற அனைத்துமே அவர்கள் தந்தருளிய கொடைகளே. வேந்தர் பாசுகரசேதுபதி சங்கத் தொடக்க நாளிலே 10000 வெண்பொன் வழங்கி வாழ்த்தினர். பாண்டித்துரைத் தேவர் தாம் குடியிருந்த மாளிகையையே சங்கத்திற்குத் தியாகம் செய்த்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் என்ற குழந்தை எந்தவிதக் குறையின்றி வளரத் தேவைபடும் அனைத்து வசதிகளையும் தம் சொந்தச் செலவிலேயே பராமரித்தார். சங்கம் என்றுமே சுயமாக தங்குதடையின்றி நடைபெறுவதற்கு தக்க வகையில் சில நிலையான அறக்கட்டளை பாண்டிய மன்னர் பாசுகர் சேதுபதியவர்கள், கடைச் சங்க பாண்டிய மன்னம் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கி.பி. 250ல் மறைந்த தமிழ்ச் சங்கம், 1901இல் பொன்பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் உயிர்பெற்று எழுந்தது. நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, உயிர்கொடுத்து, உடல் வளர்த்து, கல்லூரி கண்டு, செந்தமிழ் என்னும் திங்களிதழ் பெற்று, தமிழ்மனம் வீச வீரநடை போடுகிறதென்றால் அது சேது சகோரதர்கள் வழங்கிய கொடைகளே.
இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம்..
அன்று, அதாவது 1910 இல், எவ்வளவு சிறப்பாக இந்த நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டதோ அதே சிறப்புடன் அதே நோக்கங்களை நிறைவேற்றி, வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இன்று சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நிறைவேற்றப்பட்ட முதல் அய்ந்தாம் தீர்மானங்கள் உடனே நிறைவேற்றப்பட்டு, செந்தமிழ்க் கல்லூரியாகவும், செந்தமிழ் திங்களிதழாகவும் மலர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருகின்றன. பல தமிழ் அறிஞர்களையும், தமிழ் முனைவர்களையும், தமிழ் இலக்கிய மேதைகளையும் உருவாக்கி மகிழ்கிறது நான்காம் தமிழ்ச் சங்கம்.
தமிழ்ச் சங்க நிர்வாகங்களை, தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு கண்காணித்து வருகிறது. ஆட்சிக் குழுவின் தலைவராக – முகவை மன்னர் மாட்சிமை தாங்கிய திரு, இராசா நா .குமரன் சேதுபதியவர்களும், துணைத் தலைவராக திருமதி. இராணி இலட்சுமி நாச்சியார் அவர்களும் மாண்புமிகு அய்யா திரு. இரா. அழகுமலை அவர்கள் செயலாளராகவும் மற்றும் ஒன்பது ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஆட்சிக் குழுவில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
செந்தமிழ்க் கல்லூரியின் நிர்வாகங்களை கல்லூரிக் குழு கண்காணிக்கிறது. கல்லூரிக் குழுவின் தலைவராக மாண்புமிகு டாக்டர் ந. சேதுராமன் அவர்களும், செயலாளராக மாண்புமிகு அய்யா திரு. இரா. குருசாமி அவர்களும் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. செந்தமிழ் திங்கள் இதழ் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.
பாண்டித்துரைத் தேவர்கள் உருவச்சிலை...
கொடைவள்ளல், சங்கம் கண்ட தமிழ்ச் செம்மல், மாண்புமிகு மன்னர் பாண்டித்துரைத் தேவரின் திரு உருவச் சிலை மீண்டும் அதே இடத்தில் 2007இல் சங்கம் நிறுவியது. சங்கத் தலைவர், துணைத்தலைவர், சங்கச் செயலர், சங்க ஆட்சிக்குழு, பொதுக்குழு, கல்லூரிக் குழு, கல்லூரிப் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் சிலை நிறுவப்பட்டதோடு மட்டுமல்லாமல், மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதைகளோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் குழு
நான்காம் தமிழ்ச் சங்கவெளியீடாகிய செந்தமிழ் என்னும் திங்கள் இதழ், 1902 முதல் இன்று வரை மிகச்சிறப்பாக தமிழ்த் தொண்டாற்றி வருகிறது. இவ்விதழை சிறப்புடன் வெளியட ஆசிரியர் குழு ஒன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இக்குழுவில் தமிழறிஞர்களும், பெரும்புலவர்களும், பேராசிரியப் பெருமகளும், முனைவர் பெருமக்களும், மொழி ஆய்வாளர்களும், தமிழார்வளர்களும் பங்கேற்று தொண்டாற்றுகிறார்கள். தமிழ் அறிஞர் முனைவர் திரு. தமிழண்ணல், பெரும்புலவர் திரு. இரா இளங்குமரன், நா. பாலுசாமி, ம. ரா. போ. குருமசாமி, அ.அ. மணவாளன், கதிர் மகாதேவன் மற்றும் தமிழார்வளர்கள் ஆலோசகர்களாகவும் அவைப் புலவர்களாகவும் வீற்றிருக்கின்றனர்.
நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் 1901 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் நூறு ஆண்டைக் கடந்து எட்டாம் ஆண்டில் நடைபயின்று கொண்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெறவேண்டிய நூற்றாண்டு விழா இவ்வாண்டு 2008ல் நடைபெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் சங்க ஆட்சிக்கு குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழா வெற்றிவாகை சூடட்டும். கொடை வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் புகழ் ஓங்கட்டும். நான்காம் தமிழ்ச் சங்கம் செழித்தோங்கி வளரட்டும். நாற்சங்கம் கண்ட செம்மொழி தமிழே நீ வாழ்க!
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.