Thursday, December 4, 2014

முடக்குவாதம் (கீழ்வாதம்) பற்றிய சிறப்பு மருத்துவ பார்வை..


இந்த பதிவை  திருவண்ணமலையில் இருக்கும்  என் தோழி  திருமதி  தவமணி பாபு  அவர்களுக்காக தொகுத்து  பதிவிடுகிறேன் .      

கால் மூட்டு பாதிப்பு எனில் நடப்பது சிரமம், முதுகு தண்டுவடம் எனில் கழுத்து, இடுப்பு வலி, கால் இழுத்து நடக்கும் நிலை ஏற்படும். 100க் கும் மேற்பட்ட முடக்குவாதம் உண்டு.ஆமவாதம் என்ற கொடிய முடக்குவாத நோயானது கி.பி.700 ஆம் நூற்றாண்டுகளில் மாதவகரா என்ற ஆயூர்வேத ஆச்சார்யாரால் முதன்முதலில் விளக்கப்பட்டது. எண்டோ ஜெனியஸ் டாக்ஸிக் சப்ஸ்மர்ஸஸ் ஆமம் என்ற காரணி இரத்த ஓட்டத்தில் கலந்து, எலும்பு மூட்டுக்களில் சேர்ந்து, மூட்டுக்களை முடக்கி விடுவதுடன் இதயத்தினையும் பாதிக்கின்றது என்று கூறினார். பிற்காலத்தில் மருத்துவர்கள் RA வினால் பாதிப்படைந்த நோயாளிகளின் இரத்த மாதிரிகளை சோதனை செய்யும் பொழுது பிரத்யேகமான ஒரு காரணி அதிக அளவில் இருப்பதைகண்டறிந்தனர். அதுவே பின்பு ருமடாய்ட் பேக்டர் (RF) என்று அழைக்கப்பட்டது.

முடக்குவாதம் ஆமவாதம் என்று ஆயூர்வேத மருத்துவத்தில் அழைக்கப்படுகின்றது. RA என்று சுருக்கமாக கூறப்படும் ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் AUTO IMMUNE DISORDER வகையைச் சேர்ந்தது. சைனா மற்றும் ஆப்பிhpக்காவில் பரவலாகக் காணப்பட்டாலும் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்கள் என சமீபகால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முடக்குவாதம் என்ற சொல்லிற்கேற்றார் போல் 40 சதவிகித நோயாளிகள் மூன்று வருடத்திற்குள் முடங்கி விடுகிறார்கள். மேலும் அவர்களின் வாழ்நாள் 8 முதல் 15 வருடங்கள் வரை குறைந்து விடுவதாகவும்இ இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

 இந்தியர்களில் HLA – DR1 ஜீன் அமைப்பு மற்றும் முறையற்ற உணவு முறைகள் RA ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளன. கிருமி தொற்றினால் (INFECTION) RA வரும் என்று நம்பப்பட்டாலும் இன்றுவரை காரணமான எவ்வித கிருமியும் கண்டுபிடிக்கப்படவில்லை. உடற்பயிற்சியின்மை, கொழுப்பு மிகுந்த உணவினை உட்கொண்டவுடன் உடற்பயிற்சி செய்தல், செரியாமை, ஒன்றுக்கொன்று எதிரிடையான உணவுகளை சாப்பிடுதல் குறிப்பாக தயிருடன் மீனை சேர்த்து உண்ணுதல், இயற்கை உபாதைகளை அடக்குதல், இரவில் உறங்காமல் பகலில் உறங்குதல், மன அழுத்தம் போன்றவை ஆமவாதத்தினை உருவாக்கும் முக்கிய காரணங்கள் ஆகும்.


சமீபகாலமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட மீன், பெங்களூர் வாழைப்பழம், கோழி இறைச்சி சாப்பிடுவது, ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பது, கல்லீரல், சிறுநீரகத்தில் குறை ஏற்படுவது, ரத்தசோகை, சோரியாசிஸ், சிக்குன்குனியா, மலேரியா, டைபாய்டு நோய் தொற்றால் முடக்குவாதம் வருகிறது.காலையில் மூட்டு வீக்கத்துடன் கூடிய வலி, ரத்தத்தில் ணிஷிஸி  அளவு அதிகரிப்பது, காய்ச்சல் ஆகியவை ஆரம்ப அறிகுறி. குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்பு தேய்மானத்தால் பெரும்பாலானவர்களுக்கு இந்த மூட்டுவலி வந்துவிடுகிறது. சிலருக்கு வலியைத் தாங்கக்கூடிய சக்தி இருக்கும். ஒரு சிலருக்கு உயிர்போகிற வலி இருக்கும்.. மூட்டுவலியால் இவர்கள் அவதிப்படும்போது காண சகிக்காது.இதற்கு காரணம் மூட்டுகளில் தங்கும் கொழுப்பு, புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ் போன்ற படிகங்கள்தான்.

ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் கை, கால், விரல்கள், மூட்டுகளில் வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கி அசைக்க முடியாதபடி செய்து நமது இயக்கத்தை தடை செய்வதால் முடக்குவாதம் என அழைக்கப்படுகிறது.

காலையில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். வலியுடன் மூட்டுகளில் இளஞ்சூடு இருக்கும். சிலருக்கு சோரியாசிஸ் நோயுடன் சேர்த்தும் முடக்குவாத பிரச்னை ஏற்படலாம்.
இதற்கு "சோரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ்' என்று பெயர்.


சிலருக்கு யூரிக் ஆசிட் அளவு அதிகமாவதால் மூட்டுக்களில் வலி ஏற்படலாம். இது "கௌட் ஆர்த்தரைட்டிஸ்' என அழைக்கப்படுகிறது. சிக்குன் குனியா போன்ற காய்ச்சலுக்குப் பின் சிலருக்கு மூட்டு வலி உண்டாகலாம். மூட்டு நோய் காரணமாக கை, கால் விரல்கள் வீங்கி வளைந்து போகலாம். சில நேரங்களில் ஊனமாக நேரலாம். இந்த நிலையிலும் கை, கால்கள் வளைந்து விடும். உடல் திசுக்குளுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை உடலே அதிகப்படுத்துவதும் ("ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்') முடக்குவாத நோய்க்குக் காரணமாகும்.

மருத்துவரைப் பார்த்து, வைத்தியங்கள் செய்து கொண்டு வந்தால் அன்றைக்கு அல்லது ஓரிரு நாட்கள் வலி குறைந்ததுபோல இருக்கும். மருத்துவர்கள் இவர்களுக்கு கொடுப்பது வலி நிவாரணிகளைத்தான். இந்த வலி நிவாரணி மாத்திரைகள் என்ன செய்யும் தெரியுமா? வலியை மறத்துப்போகச் செய்யும். அதாவது வலி உணர்வை மட்டுமே போக்கும்..மாத்திரைகள் அனைத்தும் வலியைக் கட்டுப்படுத்தக்கூடியவை மட்டுமே.. அப்போதைக்கு குறைப்பது போலிருக்கும். ஆனால் அவை நிரந்தரமல்ல.. தொடர்ந்து மூட்டுவலியைக் கட்டுக்குள் கொண்டு வர தினமும் இந்த வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு வரும் பக்கவிளைவுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம். இரத்தத்தில் மாத்திரையின் சாரம் குறையும்போது மீண்டும் பல்லவிதான்.. மூட்டுவலி.. மூட்டுவலி.. மேலும் மூட்டுவலி.. 

நோயினைக் கண்டறிதல்:

 • MORNING STIFFNESS -11/2   மணி நேரத்திற்கு மேல் நீடித்திருத்தல்.
 • மூன்று அல்லது மேற்பட்ட மூட்டுகளின் பாதிப்பு.
 • இடது மற்றும் வலது பக்க மூட்டுக்கள் ஒரே நேரத்தில் பாதிப்படைதல். (SYMETRICAL ARTHRITIS) 
 • மூட்டுகளில் முடிச்சுகள் (RHEUMATOID NODULES) ஆகிய அறிகுறிகள் 6 வாரங்களுக்கு மேல் நீடித்திருக்குமானால் RA முடக்குவாதம் என்னும் கருத்தில் கொள்ளலாம். RF - ருமடாய்ட்  ஃபேக்டர், ESR, X-RAY, USG, MRI, டாப்ளர் USG மற்றும் ஆர்த்ரோ கிராம் போன்ற பரிசோதனைகளின் மூலம் முடக்குவாதத்தினை (RA) உறுதிப் படுத்தலாம்.
 • கால் விரல்களின் மூட்டுகள் பாதிப்படைதல், புகை பிடித்தல், RF மற்றும் ANTI – CCP  பரிசோதனை பாஸிடிவ் போன்ற காரணிகள் நோயின் தீவிரத்தை உணர்த்துவதுடன் குணமடைதலையும் கடினமாக்கி விடுகின்றன.


அறிகுறிகள்:

 • முழங்கால் மூட்டுகள் (KNEE JOINTS), கோள் மூட்டுகள் (SHOULDER JOINTS), மணிக்கட்டுகள் (WRIST JOINTS), கணுக்கால் மூட்டுகள் (ANKLE JOINTS), ஆகியவற்றில் வலியும், வீக்கமும் ஏற்படும்.
 • வலியானது தேள்கடியினைப் போல மிகுந்த வேதனை தரக் கூடியதாக இருக்கும்.
 • வலியானது நிலையில்லாமல் மூட்டிற்கு மூட்டு மாறிக் கொண்டிருக்கும். (SHIFTING PAIN) கூடவே காய்ச்சலும் சேர்ந்து கொள்ளும்.
 • கால் மூட்டுக்களின் இறுக்கத்தினால் அதிகாலையில் தரையில் கால் ஊன்றி நடப்பதில் சிரமம் ஏற்படும். (MORNING STIFFNESS).
 • மேலும் பசியின்மை, எடை குறைதல், மயக்கம், எலும்புகள் நலிவடைதல், இரத்த சோகை, ஈசினோபிளியா, இதய தசைகளில் வேக்காடு பெரிபிரல் நியூரோபதி, எலும்பு மூட்டுகளில் முடிச்சுகள், வக்ர தன்மை போன்றவைகள் நீண்ட காலமாக நீடித்திருக்கும் RA வினால் ஏற்படும்.

சிகிச்சை முறைகள்:

DMRD – DISEASE MODIFIED ANTI RHEUMATIC DRUGS மற்றும் ANTI – TNF சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிகிச்சையின் முன்னேற்றத்தினை பொருத்து ப்ரட்னி சோலன் 7.5  Mg – 10  Mg அல்லது மிதைல் பிரட்னி சோலன் 80  Mg – 120 Mg நாள் ஒன்றுக்கு ஒருமுறை மூன்று மாதங்கள் கொடுக்க வேண்டும். NSAID மருந்துகள் வலியினைப் போக்குவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 

DMARD சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது FBC, LFT பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ளப்படுகிறது. சைனோவெக்டமி, ஆர்த்ரோ ப்ளாஸ்டி, ஆஸ்டியோ டோமி போன்ற அறுவை சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆயுர்வேத சிகிச்சை முறைகள்:

 • ‘லங்கனம் பரம ஒளஷதம்” ஆமவாத சிகிச்சையில் லங்கனம் (FASTING) மிகச் சிறந்த மருத்துவ முறையாக செயல்படுகின்றது.
 • ஏரண்டதைலம் (Castor Oil) ஒரு ஸ்பூனுடன் சுக்கு கஷாயம் சேர்த்து உட்கொள்ள ஆமவாதம் தணியும்.
 • தச மூலாரிஷ்டத்துடன் சிம்ஹநாத குக்குலு  250Mg சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவிற்குப் பின் சாப்பிட ஆமவாதம் குறையும்.
 • ராஸ்னா குக்குலு (RG) 500Mg, குக்குலு ராஸ்னாதி கஷாயத்துடன் சாப்பிட வீக்கத்துடன் கூடிய ஆமவாதம் தணியும்.
 • இதயத்தில் உண்டாகும் பாதிப்பினைப் போக்க பலாரிஷ்டம், பார்த்தாரிஷ்டம் போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம்.
 • சிறிய ராஸ்னாதி, வல்ய ராஸ்னா, கஷாயம், வைச்வாரை சூரணம், அஷ்ட சூரணம், திரிபலா குக்குலு, கைசோர குக்குலு, யேகராஜ குக்குலு போன்ற மருந்துகளை நோயின் தன்மையைப் பொருத்து எடுத்துக் கொள்ள ஆமவாதம் தணியும்.
 • பஞ்ச கர்ம சிகிச்சைகளில் பொடிகிழி, இலைகிழி, வாலுகாஸ்வேதனம், அப்யங்கம் மற்றும் பிழிச்சல், விரேசனம் போன்றவைகளைப் பயன்படுத்தலாம். தைலங்கள் ஆமவாதத்தினை அதிகமாக்கும் என்றாலும், சைந்தவாதி தைலம், லசுன தைலம், கொட்டம் சுக்காதி தைலம் ஆகியவை ஆமவாதத்தினைக் குறைப்பவை.

இத்தகைய துன்பம் தரும் மூட்டு வலியை நீக்க அருமையான இயற்கை முறை, இயற்கை மூலிகை உள்ளது. 

முடக்கத்தான் கீரை: கிராம்ப்புறங்களில் இக்கீரை அதிகமாக காணப்படும். வயல்வெளிகள், ஏரிக்கரைகள், கிணற்றடியில் என நீர்வளம் மிக்க எங்கும் இது காணப்படும்.  அதாவது மூட்டுவலிகளை, உடல் வலிகளை முடக்கம் செய்துவிடும் குணம் உள்ளதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயரிட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். 
இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம் நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக்கொண்டால் மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் இந்தக் கீரை தடுப்பதால் இதற்க மூடக்கு அற்றான் என்ற காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்போழுது அழைக்கப்படுகிறது. 

இந்தக்கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம் துவையலும் செய்யலாம் பச்சைக்கீரை சிறிதுகசக்கும் ஆனால் சமைத்துப்பின் அவ்வளவாகத் தெரியாது.


பயன்படுத்தும் முறை:

முடக்கத்தான் கீரையில் அனைத்துப் பகுதிகளையும் பயன்படுத்தலாம். முடக்கத்தான் கீரை, முடக்கத்தான் தண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். இதை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக்கொண்டு, இதனுடன் தேவையான இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சிறிய வெங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விட்டு வதக்கவும்.  வதங்கிய பிறகு அதில் இரண்டு குவளை நீர் விட்டு நன்றாக வேக வையுங்கள். நன்றாக கீரை வெந்த பிறகு கீரையின் சத்துகள் அனைத்தும் நீரில் இறங்கியிருக்கும். இப்போது அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்டிய சாறை சிறிது சிறிதாக பருகலாம்.

முதலில் சாறை கொஞ்சமாக  எடுத்து பயன்படுத்தவேண்டும். ஒரு சிலருக்கு சேராமல் பேதியாகும். ஆனால் பேதியால் உடலுக்கு எந்த விட கெடுதியும் ஏற்படாது. இரண்டொரு நாளில் முடக்கத்தான் சாறு உங்கள் உடலுக்கு ஒத்துப்போய்விடும். பிறகு தினம்தோறும் இவ்வாறு சாறெடுத்து பருகலாம்.

வயதானர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து வயதினருடைய மூட்டுவலிகளை முடக்கத்தான் கீரை போக்கிவிடும். மூட்டு வலிகள் மட்டுமல்ல.. உடல், முதுகு தண்டுவடம், கை, கால் வலிகள் போன்ற அனைத்துவலிகளை முடக்கத்தான் போக்கிவிடும்.

முடக்கத்தான் கீரை தோசை...

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து அத்துடன் இரண்டு கைப்பிடி கிரையையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தோசை போல் சுட்டு சாப்பிடலாம் இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

இரண்டு கைப்பிடி கீரையை மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து சாதாரண தோசைமாவுடன் கலந்து தோசை சுட்டால் கசப்பு சிறிதும் தெரியாது. நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட் கள் முடக்கத்தான் கீரை தோசை சாப் பிடுவார்கள். நாமும் அதைக் கடைப் பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.பயன்படுத்திப் பார்த்துவிட்டு நீங்களே சொல்வீங்க...

பத்திய முறைகள்:

 • நீங்கும் வரை வெஜிடபுள் சூப் அருந்த வேண்டும்.
 • சுக்கு அல்லது திரிகடு (சுக்கு. மிளகு, திப்பிலி) சிறிது சேர்த்து காய்ச்சிய தணணீரை மட்டுமே அருந்த வேண்டும்.
 • லசுன ஷீரபாகம் எடுத்துக் கொள்ளலாம்.
 •  1 பங்கு பூண்டு 8 பங்கு பசும்பால் 32 பங்கு தண்ணீர் சேர்த்து பாலின் அளவு வரை வற்ற வைத்து, வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
 • பார்லி, மூக்கரட்டைக் கீரை, இஞ்சி, கோதுமை போன்றவைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • பால், பால் பொருட்கள், தயிர், வாழை, கொய்யா, வெள்ளரி, குளிர்பானங்கள், ஏர்கண்டிஷன் ஆகிய வற்றைத் தவிர்க்க வேண்டும்.எவ்வளவுதான் பரம்பரையின் தாக்கம் இருந்தாலும் நல்ல சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி, தேவையான அளவு உறக்கம், மன அழுத்தமின்மை போன்றவை இருந்தால் RA என்ன எவ்வளவு பெரிய, கொடிய வியாதியாய் இருந்தாலும் நம்மைத் தாக்க இயலாது!நலமுடன் வாழ்வோம்!‘முடக்குவாதம் நோய்க்கு மூலிகை மருத்துவத்தின் மூலம் நிரந்தர தீர்வு

 சிகிச்சையின் சிறப்பம்சம் 10 நாள் நிலையில் இருந்தாலும் பாதிக்கும் மேலாக குண மாவதை காண முடியும். முடக்கு வாதத்துக்கு வெள்ளருகு, சுக்கு, மயூரசிகை, மஞ்சள், பிரண்டை, சித்தரத்தை போன்ற மூலிகையையும் பயன்படுத்தி நிவாரணம் அளிக்கிறார்கள். வீக்க முருக்கு மூலிகை பூச்சு, 24 மணி நேரத்தில் வீக்கத்தை கரைக்கும் என்கின்றனர். 

 மேலும் விவரங்களுக்கு .. 

Dr க.திருத்தணிகாசலம் 
ரத்னா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்,
 750/629, பெரியார் நெடுஞ்சாலை, 
என்எஸ்கே நகர், அரும்பாக்கம், 
சென்னை -106 .
 044-2622 3828 / 99628 12345 .


Dr.A.சதீஷ்குமார் B.A.M.S
ஆலோசனை மருத்துவர், 
அஷ்டாங்க ஆயுர்வேதிக் கிளினிக், திருச்சி. 
Cell:9894674424


ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment