எந்த ஆடம்பர விழாக்களும் இல்லை. 'தலைவர் வாழ்க' 'அம்மா வாழ்க' என்ற கோஷம் இல்லை. திறப்பு விழாவுக்கு மந்திரி வருகிறார் என்று ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து தடை செய்யப்படவில்லை. சத்தமின்றி ஒரு சாதனை எந்த ஆரவாரமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விரிவாக்க வேலைகளும் தொடர்கிறது.
அதி வேக விரைவு ரயில் தம்மாமுக்கும் ரியாத்துக்கும் இடையே இன்னும் 60 நாளில் ஓடத் துவங்கும். தம்மாம் அப்துல் அஜீஸ் துறைமுகத்தில் அதி வேக ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது இந்த ரயில். இதன் வேகம் மணிக்கு 180 கிலோ மீட்டராக பிறகு அதிகரிக்கப்படும்.
தற்போது ரியாத் முழுக்க மெட்ரோ பணி மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த வேலையும் முடிந்தால் ரியாத்தில் அதிக நேரம் சிக்னலில் காத்திருக்கும் அவலம் குறையலாம். இந்த பணியும் எந்த ஆரவாரமும் இல்லாமல் மிக துரிதமாக நடந்து வருகிறது.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அந்நாட்டை நடத்திச் செல்லும் தலைவர் பொறுப்பானவராக இருக்க வேண்டும் என்பதற்கு சவுதி ஆட்சியாளர்கள் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார் என்ற காரணத்துக்காகவே கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை கிடப்பில் போட்டது, கோடிகளில் செலவு செய்த சட்டசபையை ஒன்றுமில்லாமல் ஆக்கியது, மெட்ரோ ரயில் பணியை முடக்கி அதனை மோனோ ரயிலாக மாற்றி ஜவ்வாக இன்று வரை இழுத்துக் கொண்டிருப்பது என்று வரிசையாக அடுக்கலாம்.. எத்தனை கோடிகள் இதனால் அரசு பணம் வீணானது என்பதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை. சவுதியைப் போன்ற ஆட்சியாளர்கள் நம் தமிழகத்துக்கும் நம் இந்தியாவுக்கும் கிடைக்க மாட்டார்களா என்று மனம் ஏங்குகிறது.
தகவல் உதவி
சவுதி கெஜட்
30-11-2014
No comments:
Post a Comment