மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதுபற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில், வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமையல் எரிவாயு உருளைக்கான நேரடி மானியத் திட்டத்தில் சேருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து, சென்னையிலுள்ள இந்திய எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது:
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக அரசின் மானியத் தொகை செலுத்தப்படும். மாறாக, வாடிக்கையாளர்கள் எரிவாயு உருளை வாங்கும் போது, ழுழுத் தொகையை வழங்க வேண்டும்.
அதன் பின்னர், எரிவாயு உருளை வாங்கிய 3 நாள்களுக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும்.
ஐந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வருடத்துக்கு 34 எண்ணிக்கை என்று மானிய விலையில் வழங்கப்படும் என்றும், தர்மேந்திரப் பிரதான் மேலும் கூறியுள்ளார்.
விண்ணப்பம் செய்யும் முறை:
மத்திய அரசின் நேரடி சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் சேருவதற்கு, எரிவாயு இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ அந்த வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை,
வங்கிக் கணக்கு ஆகியவற்றை வைத்து இருக்கும் நுகர்வோர்கள் சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் முகவரிடம் சென்று படிவம் 1, படிவம் 2 ஆகியவற்றைபெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு படிவம் 1-ஐ வங்கியில் கொடுக்க வேண்டும். படிவம் 2-ஐ முகவரிடம் வழங்க வேண்டும்.
ஆதார் அட்டை இல்லாத நுகர்வோர்கள், வங்கிக் கணக்குப் புத்தக நகலை கொண்டு முகவரிடம் படிவம் 3, படிவம் 4-ஐ பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் படிவம் 3-ல் எரிவாயு நிறுவனம் அனுப்பும் 17 இலக்கு கொண்ட எண்களை பூர்த்தி செய்து வங்கியிலும், படிவம் 4-ஐ முகவரிடமும் கொடுக்க வேண்டும்.
வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
புகார் தெரிவிக்கலாம்...
நுகர்வோர்கள் நேரடி மானியம் பெறுவதற்கான படிவத்தை முகவர்கள் மூலம் பெறலாம். இதற்கான தகுந்த உத்தரவுகளை எண்ணெய் நிறுவனங்கள் பிறப்பித்துள்ளன. படிவங்களை நுகர்வோர்களுக்கு வழங்க யாராவது பணம் கேட்டால், அதுகுறித்து வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம்.
கடைசி தேதி..
மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் சேருவதற்கு மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு : மு .அஜ்மல் கான்.
No comments:
Post a Comment