காதிமை என்பது இந்து மதத்தின் பெண் கடவுள். நேபாள நாட்டில் பாரா மாவட்டம், பரியார்புர் கிராமத்தில் காதிமய் என்ற அம்மன் கோவில் உள்ளது. நடு ஆசியா பகுதிகளிலிருந்து கங்கை ஆற்றுச் சமவெளிகளில் குடியேறிய மிலேச்சர்கள் (BARBARIAN) எனப்படும் இனத்தவரின் ரிக் வேத காலத்து இறைவழிபாடான தொன்றுதொட்டு கொண்டாடப்படும் இந்த விழா இந்த கோவில் விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் நேபாள பக்தர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவார்கள். விழாவில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மற்றும் பறவைகளை பலி கொடுப்பது வழக்கம்.கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற விழாவில் கலந்து கொள்ள கிட்டத்தட்ட 750,000 பேர் இந்தியாவில் இருந்து இந்த வந்திருந்தார்கள்.
அதன்படி கடந்த 2 நாட்களாக அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலி கொடுக்கப்பட்டன. அதோடு ஆயிரக்கணக்கான ஆடுகள், பன்றிகள், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன. இந்த பலிக்கு இந்திய பகுதியில் இருந்தும் எருமைகள், ஆடுகள் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக இருந்தது.
இவ்வாறு விலங்குகளை பலி கொடுப்பதால், தங்களுக்கு நல்ல வசதியாக வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். எருமை மாடுகளை பலி கொடுப்பதற்காக 400 பேர் பணியில் இருந்தனர். எருமை மாடுகள் தவிர ஆயிரக்கணக்கான ஆடுகளும், பன்றி மற்றும் கோழிகளும் இந்த விழாவில் பலி கொடுக்கப்பட்டன. விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் இதில் தலையிட்டு, தடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பராம்பரியமாக இந்த விழா நடத்தப்பட்டு வருவதாகவும், அதனால் நிறுத்த முடியாது என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளனர்.
ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தடை விதித்தது. இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தான் உலகிலேயே மிகப்பெரிய பலி கொடுக்கும் விழா என்று கருதப்படுகிறது. விழா அமைப்பாளர்கள் இது பாரம்பரியமாகவும், முன்னோர்கள் வழக்கப்படியும் நடைபெறுகிறது. இந்த பலி அம்மனை சாந்தப்படுத்துவதாக நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மிருகவதை தடுப்பு சங்கத்தினர் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விழாவுக்கு பீகாரில் இருந்து சென்ற ஒரு பெண் நெரிசலில் சிக்கியும், ஒரு வயது குழந்தை ஒன்று குளிர் தாங்காமலும் இறந்தனர்.
இந்த வழிபாடுகளின் போது பல்லாயிரக்கணக்கான எறுமைகள் பலியிடப்படுவது வழமையாகும். அதே போன்று இந்த வருடமும் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட எறுமை மாடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழிபாட்டின்போது சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மிருகங்கள் பலிகொடுக்கப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.உலகின் ஒரே இந்து மதவாத நாடு நேபாளம் என்பதும் அங்குதான் இவ்வளவு பெரிய அளவில் உயிர்க் கொலை நிகழ்வதும் இந்த விழாவின் இன்னொரு சிறப்பு!
தொகுப்பு : மு.அஜ்மல் கான் .
No comments:
Post a Comment