Monday, 17 November 2014

ரஜினி அரசியல் பேட்டி பற்றிய ரசிகர், ரசிகைகளின் கருத்து !! ஒரு சிறப்பு பார்வை..

லிங்கா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த க்கும் ரஜினி, ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் மங்களூரு வந்திருந்தார். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசுடன் மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஜினியை வழக்கம் போல் பத்திரிக்கையாளர்கள் சுற்றி வளைத்து சரமாரி கேள்விகளை கேட்டனர்.

லிங்கா படம் பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து வழக்கமான ரஜினியிடம் கேட்கும் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, கடவுள் விரும்பினால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறினார். தொடர்ந்து விடாமல், உங்களின் விருப்பம் என்ன என்று கேட்டதற்கும், கடவுளின் விருப்பம் தான் என் விருப்பம் என கூறி விட்டு நகர்ந்தார், ரஜினி. 

லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் அமீர் ஆகியோர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினர்.விழாவில், ரஜினி பேசுகையில், ''அரசியலில் இறங்க நான் பயப்படவில்லை; ஆனால், கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்,'' என்றார்.அரசியலில் இறங்க ஆர்வமாக இருப்பது போல, ரஜினி பேசிய பேச்சு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினி ரசிகர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

கிட்டத்தட்ட, 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி இப்படித்தான், பேசி வருகிறார். மூப்பனார் த.மா.கா.,வை ஆரம்பித்து, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததும், அந்த கூட்டணிக்காக குரல் கொடுத்தார். 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்றார்.பின், பா.ஜ., பக்கம் சாய்ந்து தாமரைக்கு ஓட்டளிக்க கேட்டுக் கொண்டார். இப்படி அரசியல் பேசும் அவர், சில நேரங்களில், தண்ணீர் பிரச்னை உட்பட மக்கள் பிரச்னையிலும் ஆர்வம் செலுத்துவது போல பேச ஆரம்பிப்பார்.பாபா படம் தொடர்பாக, பா.ம.க.,வுடன் ஏற்பட்ட சர்ச்சையைக் கூட, படத்திற்கான இலவச விளம்பரமாக்கினார். லோக்சபா தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி, ரஜினி வீடு தேடிச் சென்றார். ஆனாலும், ரஜினியின் தந்திரம் அறிந்து, அவரை அரசியலுக்கு வரச் சொல்லி, மோடி வற்புறுத்தவில்லை.அதன்பின், லிங்கா படபிடிப்பு, மைசூருவில் நடந்தபோது, பா.ஜ., தலைவர் அமித் ஷா, ரஜினியிடம் தொலைபேசி மூலம் பேசியதாகவும், பா.ஜ.,வின் எடியூரப்பாவும், ஈஸ்வரப்பாவும் ரஜினியை சந்தித்து பேசியதாகவும் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், சமீபத்தில் தமிழகம் வந்த அமித் ஷா, சென்னையில் இருந்த ரஜினியை கண்டு கொள்ளவே இல்லை.ரஜினியை கட்சிக்கு அழைத்த, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும், திடுமென தன் நிலையை மாற்றி, 'ரஜினியை நம்பி தமிழக பா.ஜ., இல்லை' என்று, கூறி விட்டார்.ஜினி பல கேவலாமா விமர்சங்களை எல்லாம் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார், அதனை எல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார். துடைத்து போட்டு விட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவார்.

பெரும்பாலான ரஜினி ரசிகரால் மட சம்ப்ரானிகள், முட்டாள்கள் என்றாலும், ரஜினியின் கேரக்டர் என்றைக்குமே ஒரு GEM தான். 

உங்கள் ரசிகர்களாகிய  என் நண்பர்களின்  கருத்து...

எல்லோருடனும் நட்புடன் இருந்து, வித்தியாசமான அரசியல் செய்வதில் தேர்ந்தவராக இருக்கும் ரஜினி, ஒரு நாளும் அரசியலுக்கு வரமாட்டார்.ஆனால், தொடர்ந்து அரசியலுக்கு வரப்போவது போல பேசி, தன் படத்தை சிறப்பாக வியாபாரம் செய்வதில் கில்லாடி. அவரின், இப்போதைய பேச்சுக்களும் அப்படிப்பட்டதே. இனியும் அவர் அரசியலுக்கு வருவார். அவருடைய ரசிகனுக்கும் தெரியும். திரைப்படத்துக்குக்கூட முடிவு உண்டு. ஆனால், ரஜினியின் அரசியல் பேச்சுக்கு மட்டும், முடிவே கிடையாது.

நீங்க நடிகனாக இருந்து ஆற்றிய மக்கள் தொண்டே மிக மிக அலாதி...
பாட்சா படம் வந்த புதுசுல உங்களுக்கென மக்களிடம்ஒரு மரியாதை இருந்தது.அந்த நேரத்தில், மக்களிடம் இருந்த எதிர்பார்ப்பை,நீங்கள் உங்கள் படங்களுக்கு வியாபார உத்தியாக பயன் படுத்திவிட்டீர்கள்.

நீங்கள், ஒவ்வொரு படத்திலும் அரசியல் பஞ்ச் வைத்து உங்கள் ரசிகர்களை பஞ்சர் செய்கிறீர்கள் .பாபா படம் வரும்போது, ஒரு அரசியல் வாதியிடம் சிக்கி சின்னா பின்னம் ஆனீர்கள் .அப்பொழுது புரிந்திருக்கும் ... உங்களுக்கு என்ன மதிப்பு

மக்கள் மனதில் இருந்தது என்று.இப்போ கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்னு சொல்றிங்க...

கடவுளே அரசியலுக்கு வந்தால் கூட, இங்குள்ள அரசியல் சூழ்நிலையில் டெபொசிட் இழக்க நேரிடும்.காரணம்,கடவுள் போட்டியிடும் போது, எந்த மதம் சார்ந்த கடவுளோஅவர்கள் மட்டுமே ஓட்டு போடுவார்கள்.கடவுள் என்ன சாதி என்ற கேள்விவேறு இருக்கிறது .நீங்கள், உங்கள் கடவுளை இமயமலையில் போய் தேடுறிங்க

ஆனா, உண்மையில் ...உங்களுடைய கடவுள் யார் தெரியுமா ...
உங்களுக்கு படியளக்கும், உங்கள் ரசிகர்கள்தான் ...

ஏன் இப்படி அவர்களை ஏமாற்றுகிறீர்கள், மக்களை சுரண்டும் அரசியல்வாதிகளைவிட மிக மோசமாக இருக்கிறீர்கள்.நீங்கள் சினிமாவில் அளந்து விடுவது போல ...

ஒரு ஆஸ்பத்திரி ஒரு பல்கலைக்கழம் கட்டி ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவச படிப்பு கொடுங்க பிறகு அரசியலுக்கு வருவதை பற்றி யோசிக்கலாம்.

லிங்கா உங்க ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க போவதா சொல்றீங்க ...

காசு குடுத்து யாராவது விருந்துக்கு போவாங்களா .மொதல்ல, உங்க ரசிகர்களுக்கு இலவசமா டிக்கெட் குடுங்க  பார்ப்போம் ...

இதெல்லாம் விளம்பரத்துக்காக நீங்க பண்ற வேலைன்னு இன்னுமும் புரியாதவங்க இருக்கறதனாலதான் நீங்க கோடி கோடி பணம் சம்பாறிக்கறீங்க, நாங்க இன்னுமும் ஓட்டயாண்டியவே இருக்கறோம். ஆனா ஒன்னு, ஒவ்வொரு தடவையும் உங்க  படம் ரிலீசுக்கு முன்னாடி, ரஜினி அரசியலுக்கு வரணும்னு 2 பேர் சொல்றதும், அது ஆண்டவன் கைல இருக்குதுன்னு நீங்க  சொல்றதும் வழக்கமான ஒண்ணா போச்சு.

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் இப்படி எதையாவதுஅள்ளி விடுவது உங்கள் வழக்கமாக உள்ளது ..இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி ஏமாத்த போறீங்க ரஜினி அங்கிள்...?

இனி நீங்க அரசியலுக்கு வந்தா.. அந்த ஆண்டவனாலும் கூட உங்கள காப்பாத்த முடியாது... 

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு. அஜ்மல் கான்.


No comments:

Post a comment