தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட முதல் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றது ராயபுரம்.மேலும் தெற்காசியாவில் அமைக்கப்பட்ட 2- ஆவது ரயில் பாதை என்ற பெருமையும் ராயபுரம் ரயில் நிலையத்துக்கு உண்டு. இந்த ரயில் நிலையத்தின் பிரதானக் கட்டடம் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் உள்ளது.இதுபோன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ராயபுரம் ரயில் நிலையத்தை புதிய ரயில்வே முனையமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் ரயில்வே அமைச்சகத்துக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி கூறியது:ரயில்வே முனையம் அமைப்பதில் ரயில்வே துறைக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனால் முனையம் தொடங்குவதற்கு முன்பாக அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படும்.அதற்கு தேவையான நிலத்தைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான இடத்திலிருந்து 35 மீட்டர் அகலத்தில் 7 ஏக்கர் நிலமும், அதன் எதிர்புறமுள்ள தனியார் நிலமும் தேவைப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சிக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிகழாண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடம் கிடைத்தவுடன் பணிகளைத் தொடங்க உள்ளோம். இப்போது முதல் கட்டமாக கடற்கரை முதல் அத்திப்பட்டு வரை 18 கிலோ மீட்டர் தூரத்துக்கான ரயில் பாதை அதன் வழியில் உள்ள ரயில் நிலையங்கள், நடைமேடைகளை ரூ.200 கோடியில் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அத்துடன் ராயபுரத்தில் உள்ள பாலம் ஒன்றும் இடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ராயபுரம் ரயில் நிலையத்தில் உள்ள பாரம்பரிய ரயில் நிலையக் கட்டடத்தை இடிக்காமல், அந்தக் கட்டடத்தின் இரண்டுபுறமும் நடைமேடைகள் அமைக்கப்படவுள்ளன.எனவே இந்த மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் 3 அல்லது 4 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு, ராயபுரம் முனையம் செயல்பாட்டுக்கு வரும்.
ஆனால் அவர்கள் திட்டமிட்டு வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், 1849ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தி கிரேட் இந்தியா பெனின்சுலா கம்பெனி’ இந்தியாவி ன் முதல் இருப்புப் பாதையை அமைத்துவிட்டது. 21 மைல் நீளத்தி ற்கு அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையில் பம்பாயின் போரி பந்தரி ல் (Bori Bunder) இருந்துதானே வரை, இந்தியாவின் முதல் ரயில் 1853, ஏப்ரல் 16ந் தேதி இயக்கப்பட் டது.
இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமை க்கும் பணியை மெட்ராஸ் ரயில் வே கம்பெனி தொடங்கி யது. அத ற்காக அது தேர்ந்தெடுத்த இடம் தான் ராயபுரம். கிழக்கிந்திய கம் பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் விறுவிறுப்பாக மேற் கொள்ளப்பட்டு, விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
* இந்தியாவில் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்த படியாக அதிக இடவசதி இருக்கும் ஒரே ரயில் நிலையம் ராயபுரம்தான்.
* இந்த ரயில் நிலையம் கடந்த 2005ஆம் ஆண்டு புனரமைக்கப் பட்டது.
* சென்ட்ரல், எழும்பூரைத் தொடர்ந்து ராயபுரத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தற் போது வலுத்து வருகின்றன.
இந்த ரயில் நிலையத்தை ரயில்வே முனையமாக மாற்ற வேண்டும் என வடசென்னை பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கடந்த ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில்வே முனையமாக மாற்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ராயபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, ரயில் முனையமாக மாற்றுவது குறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.சென்னை ராயபுரம் ரயில் நிலையம் மூன்றாவது ரயில் முனையமாக மேம்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
நன்றி – தினத்தந்தி
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment