Friday, January 2, 2015

ஸ்டெம் செல்ஸ் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு பார்வை...

நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிரினங்களிலும் உயிர் உள்ளது என்பதை நாம் மறுப்பதில்லை. உயிர் என்பது என்னஎன யோசிப்போமேயானால், விஞ்ஞானபூர்வமான பதில் உயிரணுக்களின் இயக்கம் என்பதுதான். எல்லா உயிரினங்களிலும் உயிர் அணுக்கள் உண்டு. ஆங்கிலத்தில் செல் (Cell) எனும் சொல் உயிரணுவைக் குறிக்கும். மனிதர்களின் உடலில் எலும்பு மஜ்ஜையில் (Bone Marrow)ல் தான் அதிகமாக ஸ்டெம் செல் எனும் அடிப்படை செல் காணப்படும். ஸ்டெம் செல்கள் இந்த நூற்றாண்டின் உன்னதமான கண்டுபிடிப்பு எனச் சொல்லலாம். ஏனெனில் தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்டு, மருந்து மாத்திரைகளை நம்பியே மருத்துவம் செய்துகொண்டு வரும் நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்களின் கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதம்தான். ஸ்டெம் செல்களால் தீர்க்க முடியாத புற்றுநோய், இருதயக் கோளாறு, பார்கின்சன்ஸ், அல்சமீர், சர்க்கரை வியாதி என பலவகையான நோய்களுக்கு அருமருந்தாக வந்துள்ளது. மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் இனி நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக மனிதனை வாழவைக்க இவ்வகை ஸ்டெம் செல்கள் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. 

ஸ்டெம் செல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்க்பப்படும் விதையணுக்கள், நமது உடலில் உள்ள எழும்பு மஜ்ஜையில்( போன் மேரோ) இருக்கின்றன. இந்த செல்களை, ரத்த சுத்திகரித்தல் முறையில் எடுத்து, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஸ்டெம் செல் தெரப்பி, தற்போது ஆங்கில மருத்துவத்தில் மாபெரும் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. குறிப்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சிறுநீரக நோயாளிகளுக்கு, அளிக்கப்படும் ‘ஸ்டெம் செல் தெரபி’ இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இருவரின் ஸ்டெம் செல்களைக் கொண்டு, அவருக்கான இதயம், நுரையூரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றால், மனிதர்கள் நோயிலிருந்து உயிர் பிழைக்கலாம்! உண்மையில் அது மருத்துவத்துறையின் பொற்காலமாக அமையப்போவது உறுதி.


ஸ்டெம் செல் சிகிச்சையின் வரலாறு...


முதன் முதலில் ருதால்ஃப் லுட்விக் கர்ல்விர்சோவ் (1821- 1912) என்பவர் ஒரு செல்லிலிருந்து புதிய செல் பிரிந்து வளரும் என்ற நவீன செல் கோட்பாட்டை வெளியிட்டார். இவரே நவீன செல் பற்றிய அறிவியலின் முன்னோடி. இவருடைய மாணவரான ஜூலியஸ் பிரடெரிச் கொஹெய்ம் புண்களில் பழுதுபட்ட செல்களின் மறுசீரமைப்பு புதிய செல்கள் ரத்த ஓட்டத்தின் மூலமாகவே எலும்பு மஜ்ஜை (Bone Marrow)யிலிருந்து புண்களை வந்தடைந்து வளருகின்றது என்பதனையும் கண்டறிந்தார். P.E  டொன்னால் தோமஸ் ஆராய்ச்சியில் எலும்பு மஜ்ஜை குறைபாடுள்ள நோயாளியின் ரத்த ஒட்டத்தில் மற்றொருவரிடம் எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை செல்களை செலுத்தி ஆராய்ந்தபோது புதிய எலும்பு மஜ்ஜை உருவாகியதுடன் புதிய ரத்த செல்களும் உருவானது.

ஸ்டெம் செல் என்றால் என்ன?


எமது உடலானது கோடிக்கணக்கான கலங்களால் ஆனாது. மனிதனது மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் அவ்வாறே. உதாரணமாக 200 வகையான சிறப்பான பணிகளை ஆற்றும் கலங்கள் மனித உடலில் உள்ளன. சருமக் கலங்கள், எலும்புக் கலங்கள், நரம்புக் கலங்கள், ஈரல் கலங்கள், நோயெதிர்புக் கலங்கள் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான சிறப்பியல்புகள் உள்ளன. அவ்வாறே தனித்தனியான விசேட பணிகளும் உள்ளன. நரம்புகக் கலங்கள் செய்திகளைக் கடத்துகின்றன. நோயெதிர்புக் கலங்கள் நோயைக் கொண்டு வரும் கிருமிகளை அழிக்கின்றன. அதேபோல சூலகத்தில் உள்ள கலங்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன.

ஸ்டெம் செல்கள் வேறொரு விதத்தில் விதந்து குறிப்பிட வேண்டிய கலங்கள் ஆகும். இவை நிரந்தரமாக தனியொரு பணிக்கானவை அல்ல. ஆனால் பல்வேறு வகைப்பட்ட கலங்களாக வேறுபாடடைந்து பெருகும் ஆற்றல் பெற்றவை. அதாவது இவை ஈரல் கலங்களாகவோ, எலும்புக் கலங்களாகவே அல்லது வேறெந்தக் கலங்களாகவும் மாற்றமுற்று பெருகக் கூடியவை. 


இன்றைய மருத்துவ உலகில் அதிகம் ஆராயப்படுகின்ற விசயம் ஸ்டெம் செல் ஆகும். இது உயிரினங்களில் உள்ள மிகநுண்ணிய மூலசெல்லாகும். இந்த ஸ்டெம் செல்ஸ் பல்கிப்பெருகும் குணமுடையது. அது உடலின் எந்த ஒரு முதிர்ந்த செல்லாகவும் மாறக்கூடியது. இதில் பலவகை உள்ளது. 

     1. எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) 
     2. அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (adult stem cells)
     3. கார்ட்பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cordblood stem cells) 


எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells)
மனித சினைமுட்டையுடன் Ovum விந்து Sperm இனைந்து கருவுற்று, மூன்றாவது நாள் ஒற்றைசெல் கரு Zycote நிலையிலிருந்து, நான்காவது நாள் Totipotent தன்மையுடன் உள்ள Morula என்ற பிரிக்கப்படாத (undifferentiated) 16 செல் என்ற நிலையை அடையும். இந்த நிலையில் இது மேலும் பல எம்பிரயோனிக் செல்களை உருவாக்க இயலும். பின்பு ஐந்தாம் நாள் Blastocyst என்ற 64 செல்லிருந்து 150 செல் வரையிலுள்ள நிலையை அடையும், அப்போது அது மூன்று பகுதிகளாக (differentiate) பிரியும், அதில் வெளிப்பகுதியான trophoblast தொப்புள்கொடியுடன் (umbilical cord) சேர்ந்த (Placenta) நஞ்சுக்கொடியாகவும், தலைப்பகுதி போன்ற Embryoblast மற்ற அனைத்துவகை செல்களை inner cell mass உள்ளடக்கியதாகவும் இருக்கும், உள்ளிருக்கும் Blastocoele என்ற காலி இடத்தில் கரு வளரும். இந்த வகை ஸ்டெம் செல்ஸ், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் மூலஆதாரம் blueprint போன்று இருப்பதால் இதனை பயன்படுத்தி அனைத்துவகை (pluripotent) செல்களையும் உருவாக்கலாம். இந்த எம்பிரயோனிக் செல் Blastocyst என்ற நிலையிலிருந்து Gastrula என்ற நிலையை அடையும். இது Ectoderm, Mesoderm, Endoderm மற்றும் Germ cell உள்ளடக்கியது. இது மேலும் 220 விதமான செல் தொகுதியாக பிரிந்து இறுதியில் முதிர்ந்த Adult செல்களாக மாறும். இனி இந்த எம்பிரயோ, நஞ்சுக்கொடியுடன் (Placenta) கர்ப்பப்பையில் ஒட்டிக்கொண்டு வளரத்தொடங்கும். இனி இந்த எம்பிரயோ 2 மாதம் வளர்ந்ததின் பிறகு பேடஸ் (Fetus) என்று கூறலாம்.

இந்த Morula/Blastocyst நிலையில் உள்ள எம்பிரயோவில் உள்ள எந்த ஒருசெல்லும் பல்கிப்பெருகி உடலில் உள்ள மற்ற செல் தொகுதியாக மாறக்கூடியது. ஆனால், இந்த எம்பிரயோனிக் ஸ்டெம் செல் பிரித்தெடுக்கப்படும்போது அந்த கரு அழிந்துவிடக்கூடியதாக இருப்பதால் இந்த வகையான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை தடுக்கப்படவேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.

அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (Adult Stem Cells)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான Multipotent செல்களாக மாறக்கூடியது. இது somatic stem cells என்றும் அழைக்கப்படும். தற்போது மனித தோல் மற்றும் முடியிலிருந்து கூட இந்த வகை ஸ்டெம் செல்லை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வகை ஸ்டெம் செல்லிலிருந்து ஆண், பெண் பாலிணத்திர்குறிய விந்து Sperm மற்றும் கருமுட்டை Ovum செல்களை (Germ cells) உருவாக்க இயலாது. இவ்வகை செல்லை சில மாற்றங்களை ஏற்படுத்தி எம்பிரயோனிக் ஸ்டெம் செல் போன்றதாக Induced Pluripotent Stem Cells (iPSCs) மாற்ற முடியும்.

கார்ட் பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cord blood stem cells)
Cord blood-derived embryonic-like stem cells (CBEs)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ், குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்திலிருந்து எடுக்கப்படுகின்ற ஸ்டெம் செல் ஆகும். தொப்புள்கொடி இரத்தத்தில் உள்ள CD34+, CD38- வகை செல்கள் பிரிக்கப்படாத (undifferentiated) செல்களாகும்.

இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான வியாதிகளுக்கு எலும்புமஞ்சை (bone marrow) மாற்று சிகிச்சையை போல பேருதவியாக இருக்கும். தற்போது உலகமெங்கிலும் இவ்வித சிகிச்சைக்கு உதவியாக இருக்க குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்தை எடுத்து அதற்கான தொப்புள்கொடி இரத்த வங்கியில் சேமித்து வைக்கிறார்கள். இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஏற்படும் வியாதியைக் குணப்படுத்தவும் அல்லது அவர்களின் பழுதுபட்ட உறுப்புகளின் குறைபாட்டை சரிசெய்யவும் பயன்படும்.

இந்த ஸ்டெம் செல் மருத்துவத்தில் Adult Stem cell மற்றும் Cord blood stem cell சிறந்ததாக இருந்தாலும் இவற்றைக்கொண்டு மனித உயிர்செல் Human Cloning உருவாக்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய வண்செயலாகும்.ஸ்டெம் செல்களிலிருந்து லட்டுத்தன்மை பற்றிய நுண் அறிவு..
Kyoto University  யில் பணியாற்றும் Mitinori Saitou தலைமையிலான ஜப்பானிய விஞ்ஞானிகளே இந்த புதிய சாதனையைச் செய்தவர்கள் ஆவர். மலட்டுத்தன்மை பற்றிய நுண் அறிவு, நெறிமுறைகளுடன் முரண்படாத தன்மை, இயற்கையுடன் இசைவான நவீன சிகிச்சை முறைகள் போன்ற விடயங்களில் ஆய்வாளர்களுக்கு புதிய எல்லைகளை இந்த ஆய்வு திறந்து விட்டிருக்கிறது. 

முட்டை எவ்வாறு உருவாகி வளர்கிறது என்பதன் சூட்சுமங்களைக் கண்டறிந்து குழந்தையில்லா பெண்களில் இதனைப் பயன்படுத்த முடியும். ஸ்டெம் செல்களிலிருந்து அவர்களுக்கான முட்டைகளை உருவாக்கலாம். அதிலிருந்து அவர்களது பாரம்பரிய அம்சங்களுடன், அவர்களது ஊனும் உடலும் போன்ற சொந்தக் குழந்தைகளை உருவாக்குவதற்கான வழிவகைகளை புதிய தொழில் நுட்பங்களுடன் செயற்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

சுண்டெலி கருத்தரிப்பு...

Mitinori Saitou  தலைமையிலான குழுவினர் சுண்டெலியிலிருந்து கலங்களை எடுத்து அவற்றை மரபியல் ரீதியாக மீள் நிரலாக்கம் (Reprogramme) செய்ததன் மூலம், அதனை முட்டையின் முன்னோடிக் கலங்களாக (egg precursor cells) மாற்றினர். பெண் சுண்டெலியின் பொருத்தமான உடற்கலங்களுடன் அவற்றைக் கலப்பதன் மூலம் மாற்றியமைக்கபட்ட சூலகங்களை உருவாக்கினர். சுண்டெலியின் உடலிற்குள் இவற்றை உட்செலுத்தியபோது காலகதியில் இவை முட்டைகளாகப் பரிமணித்தன. இவ்வாறு கிடைத்த முட்டைகளை பிரித்தெடுத்து செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க  (invitro fertilisation IVF) வைத்தனர். டெஸ்ட் ரியூப் முறை என்போமே, அது போலக் கருத்தரிப்பு நிகழ்த்தப்பட்டது.

இதன் மூலம் பெற்றெடுத்த சுண்டெலிக் குஞ்சுகள் நல் ரோக்கியமானவை.
இவ்வாறு ஸ்டெம் செல்சிலிருந்து முட்டையை உருவாக்கும் முயற்சி இப்பொழுதுதான் புத்தம் புதிதாகச் செய்யப்பட்டது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் ஏற்கனவே 2003ம் ஆண்டளவில் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் (University of Pennsylvania) செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அது குட்டியைப் பெற வைக்கும் அளவிற்கு செல்லவில்லை.

இப்பொழுது செய்யப்பட்ட செயன்முறையின் வளர்ச்சியானது பாலூட்டிகளில் மட்டுமின்றி மனிதர்களிலும் பெண்களின் கரு ஆற்றலை உடலுக்கு வெளியே வளர்த்து உள்ளே வைக்கும் பொறிமுறைக்கு வலுவான அடித்தளமாக அமைகிறது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இந்த ஆராச்சிய்க்கு சைட்டு குழவினர் இரண்டு வகையான ஸ்டெம் செல்ஸ்களைப் (மூலக் கலங்கள்) பயன்படுத்தினர்.   1. முதலாவது கருவுரு அல்லது முளையம் என்று சொல்லப்படுவதிலிருந்து பெறப்பட்ட ஆதி ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) ஆகும். இவை உடலின் எந்தப் பகுதியின் கலங்களாகவும் மாற்றமடையக் கூடியவையாகும்.
  2. தூண்டுதலால் பெறப்பட்ட பன்முறை ஆற்றலுள்ள ஸ்டெம் செல்ஸ்induced pluripotent stem cellsஆகும். உதாரணமாக சருமத்திலிருந்து பெறப்பட்ட கலத்தை மறுநிரலாக்கம் செய்து முளையஸ்டெம் செல்களின் நிலைக்கு மாற்றிப் பெறப்படுவை.

குருதிப் புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை 1968 ஆம் ஆண்டு முதலில் செய்யப்பட்டது. இதற்கும் அடிப்படை ஸ்டெம் செல்களே. நீரிழிவு, இருதய நோய்களில் இதைப் பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. பக்டிரியா பங்கஸ் மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் ஏற்கனவே ஸ்டெம் செல் பயன்படுகிறது

ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணு..


 கியோட்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவானது ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணுவை ஒரு வருடத்திற்கு முன்னரே உருவாக்கியுள்ளார்கள். அதனை இயற்கையாக எலியிலிருந்து பெறப்பட்ட முட்டையுடன் செயற்கை முறையில் கருக்கட்டச் செய்து, எலிகளை உருவாக்கியுள்ளனர்.

ஒப்பீட்டளவில் ஸ்டெம் செல்லிருந்து விந்து (Sperm) உருவாக்கல் சுலபமானது. ஏனெனில் விந்தணுவானது எளிமையான கலங்கள் ஆகும். ஆனால் முட்டையினது கலம் (egg) மிகவும் சிக்கலானவை. எனவேதான் இப்புதிய செயன்முறையானது அசாதாரணமான வெற்றியாகக் கருதப்படுகிறது.


பெறுபேறுகளின் விகிதாசாரம் குறைந்தளவே இருந்தபோதும் ஸ்டெம் செல்லிருந்து பெறப்பட்ட முட்டையிலிருந்து ஆரோக்கியமான சுண்டெலிகளை உருவாக்கிய விகிதாசாரம் விகிதம் குறைவாக இருந்தது. சாதாரண முட்டையிலிருந்து 17.9% விகிதம் உருவாக்க முடிந்தபோது ஸ்டெம் செல் முட்டையிலிருந்து 3.9% சதவிகிதமே உருவாக்க முடிந்தது. ஆனாலும் இதை ஒரு பின்னடைவாகக் கருத முடியாது

குழந்தைப் பேறற்ற பெண்களில் முட்டைகளை உருவாக்கக் கூடிய இம்முயற்சி மிக வரவேற்கத்தக்கது. அறிவியல் பாய்ச்சலுடன் கூடிய மிக முன்னேற்றகரமான தொழில் நுட்ப வளர்ச்சி இதுவாகும். இந்தச் செயல்முறை விகிதாசார ரீதியில் பெரு வெற்றியல்ல என்ற போதும், குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறந்து வளர்ந்தன என்பதும், அவை வளர்ந்த பின்னர் மலட்டுத்தன்மையின்றி கருவளம் கொண்டவையாக இருந்தன என்பதும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஆகும். 

புதிய எல்லைகள் வகுக்கப்படும்...

நீண்ட காலம் எடுப்பதும் அர்ப்பணிப்புடன் கூடியதுமான இச்செயன்முறை, புத்தறிவியல் ரீதியில் ஒரு முக்கியமான மைற்கல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் இவை மேலும் முன்னேற்றம் அடைந்து மனிதர்களில் களஆய்வு ரீதியாகச் செய்யப்படுவதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் முட்டைகளை உருவாக்க முடிவதானது மலட்டுத்தன்மைக்கான காரணங்களைப் புரிந்து கொள்ளவும் புதிய சிகிச்சைமுறைகளை அறிமுகப்படுத்தவும் உதவும். அதற்கு மேலாக முட்டையின் வளர்ச்சி, அவை முதிர்ச்சியடையும் விதம், ஏன் அவை சிலரில் தவறாக உருவாகின்றன, அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி போன்ற விடயங்களில் ஆழமான நுண்ணறிவு பெற உதவும். இது மலட்டுத்தன்மைக்கான சிகிச்சையில் பாரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்

எய்ட்ஸை குணமாக்கிய ஸ்டெம் செல்ஸ் புதிய சாதனை...


தற்போது எய்ட்ஸ் யால்பாதிக்கப்பட்டஇரண்டு அமெரிக்கர்கள், ஸ்டெம்செல் சிகிச்சைக்குப் பின்னர்பூரண குணமடைந்துள்ளனர்.இதனால், எய்ட்ஸ் நோய்சிகிச்சையில் புதிய சகாப்தம்தொடங்கியுள்ளது. இது என்னபுதுக்கதை என்கிறீர்களா?
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்உள்ள ‘திமோத்தி ஹெண்ட்ரிச்’மருத்துவமனையில் இந்தநோயாளிகள் இருவருக்கும்,எலும்பு மஜ்ஜையில்இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம்செல்கள் செலுத்தப்பட்டன.இதைத்தொடர்ந்து,அவர்களுக்கு இருந்து வந்த ஹெச்.ஐ.வி. கிருமிகள் ரத்தத்தில் இருந்தும், தசைகளில் ருந்தும் முழுமையாக அகன்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹெச்.ஐ.வி. தொற்றில் இருந்து விடுதலைப்
பெற, ஸ்டெம் செல் சிகிச்சை புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த
இரு நோயாளிகளுக்கும் மீண்டும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என,மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?

தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. இதுதவிர தொப்புள் கொடியில் உள்ள திசுக்களிலும் சக்தி வாய்ந்த மெசன்கைமல் (mesenchymal) எனப்படும் செல்கள் உள்ளன. இவையே ஸ்டெம் செல்கள் எனப்படும் மூல செல்கள். இந்த மூல செல்களில் இருந்துதான், நம் உடல் உருவாகியுள்ளது. உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் உருவாக அடிப்படையானது இந்த மூல செல்கள். தொப்புள் கொடி ரத்த திசுக்களில் உள்ள சக்திவாய்ந்த செல்களைப் பாதுகாத்து வைத்தால், பின்னாளில், உறுப்புகள் நோய்வாய்ப்படும்போது இவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.
இந்தியா முழுவதும் 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் உள்ளார்கள் (ஆண்டுதோறும் புதிதாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்). 

தொப்புள் கொடி ஸ்டெம் செல்லிருந்து  தலஸ்சீமியா நோய்க்கு தீர்வு 
ரத்த சிவப்பணுக்கள் பாதிப்பால் ஏற்படுவது தலஸ்சீமியா. இந்த 2 பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு ஸ்டெம் செல் சிகிச்சை மட்டுமே.ஆனால், தற்போது ஸ்டெம் செல்லை இறக்குமதி செய்து, சிகிச்சை செய்துகொள்ள 25 லட்ச ரூபாய் ஆகிறது. இதனால், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், சிகிச்சை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்த ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு ஒரு முற்போக்கான நடவடிக்கையை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வரும் ரத்த வங்கியான ஜீவன் வங்கிக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.

தொப்புள் கொடி ஸ்டெம் செல் ரத்த வங்கி..
தொப்புள்கொடி ரத்த வங்கி மூலம் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்கள் பாதுகாக்கும் மூலம், உங்கள் குழந்தை துரதிருஷ்டவசமான நிகழ்வுகள் போது உங்கள் குழந்தை உதவ முடியும் என்று செய்தபின் பொருந்தும் செல்கள் உத்தரவாதமான மூல வேண்டும் உறுதி வேண்டும்.
ஒரு தொப்புள் கொடியைப் பெற்று, அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுத்து 24 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்போதைக்கு எங்களிடம் 750 ஸ்டெம் செல்கள்தான் பாதுகாக்க பொருளாதார வசதி உள்ளது. தமிழக அரசின் இந்த நிதி உதவியினால் 2015 ஜூன் மாதத்திற்குள் 15,500 ஸ்டெம் செல்கள் சேமிக்க திட்டமிட்டு உள்ளோம். சேமிக்கப்படும் ஸ்டெம் செல்லில் 75 சதவிகிதத்தை அரசு பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு, ஜீவன் ரத்த வங்கி அளிக்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் மற்றும் தலஸ்சீமியா நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்கள் இலவசமாக வழங்கப்படும். மீதி 25 சதவிகிதம் நோயாளியின் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப 5 முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் என்கிற கட்டண அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம், ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும்" என்கிறார் இதுகுறித்து, ‘புதிய தலைமுறை’யிடம் பேசிய ஜீவன் ரத்த வங்கியின் தலைவர் டாக்டர் பி.சீனிவாசன்.

ஸ்டெம் செல் கிசிச்சை இலவசமாக மக்களுக்குக் கிடைக்க, ஒரு மாநில அரசு நிதியுதவி செய்வது இந்தியாவில் இதுதான் முதல்முறை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள், இதுபோல நிதியுதவி செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல்.

ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் வேஸ்ட் என்று தூக்கிப் போடும் தொப்புள் கொடியை எங்களிடம் கொடுத்தால், இன்னொரு உயிரைக் காப்பாற்ற அதிலுள்ள ஸ்டெம் செல்கள் பயன்படலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கர்ப்பம் தரித்த 28-ஆவது வாரத்தில் எங்களை தொடர்புகொண்டு பதிவு செய்தால் போதும். மற்ற நடைமுறைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்கிறார், டாக்டர். சீனிவாசன்.

விவரங்களுக்கு 
044 - 28351200, 044 - 28150300

வருங்காலத்தில் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு செல்வத்தை சேமிக்கின்றோமோ இல்லையோ, தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்து, நம் குழந்தைகளுக்கு ஏதேனும் வியாதிகள் ஏற்பட்டால், தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல் மூலம் சரிசெய்யலாம்.
இதுதான் தொப்புள் கொடி உறவோ!!!. 

ஆக்கம் மற்றும் தொகுப்பு ;அ.தையுபா அஜ்மல்.

1 comment:

  1. எலும்பு மஜ்ஜை (Bone marrow) என்பது எலும்புகளின் உட்பகுதியில் காணப்படும் மென்மையான இழையமாகும்

    ReplyDelete