Thursday, January 22, 2015

என் தமிழுக்கு எப்போதுமே அழிவில்லை !!

உலகில் எல்லா மொழிகளிலுமே  தொன்மையான மொழி எது என்று கேட்டால் அது தமிழாகத்தான் இருக்க வேண்டும்.அவ்வாறு காலத்தால் தொன்மையான மொழி தமிழ் மொழி , இதற்கு ஒரு சான்றும் உண்டு.அதாவது "கல் தோன்றி  மண்  தோன்றா காலத்தில் முன் தோன்றிய  மூத்த தமிழ் " என்று புலவன் படியுள்ளான். அப்படிப்பட்ட தொன்மை பொருந்திய தமிழின் பெருமையை  கூறுவதை இட்டு நான் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். மற்றும் எங்களின் தமிழ்  மொழிகளுக்கு வரி வடிவமும் ஒலி வடிவமும் இருப்பது அனைவரும் அறிந்த  ஒன்றே.தமிழை நாங்கள் முத்ததமிழ், அமுதம், சங்கத்தமிழ், செந்தமிழ்,கன்னித்தமிழ்  என்று எல்லாம் பலவாறு  அழைக்கலாம். 
"தமிழுக்கு அமுது என்று பெயர் அந்த தமிழ்  எங்கள் உயிருக்கு  நேர்" என்று கவிஞர்  பாரதிதாசன் பாடியுள்ளார்.அமுதம் என்றாலே அது ஒரு கிடைக்காத ஒன்று .அந்த அமுதத்தை எடுக்க தான் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்த ஒரு கதை இருக்கின்றதுறார் என்றால் தமிழின் பெருமையை உணந்து கொள்ளுங்களேன். 

 அவர் அந்த தமிழை அப்படியே மட்டும் குறிப்பிடவில்லை அதை  எங்களுடைய உயிருக்கு சமன் என்றும் குறிப்பிடுகிறார்.அதாவது உடம்பு அழியுமே ஒழிய என்றைக்குமே உயிருக்கு அழிவில்லை என்று அந்த புலவன் அன்றைக்கு சொன்னது இன்றைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அந்த தமிழுக்கு." நான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது  எங்கும் காணோம் "   என்று பாரதியார்  குறிப்பிடுகின்றார்.அதாவது பாரதியார் எட்டு  திக்கும்  சென்றவர். அவர் பல  மொழிகளை கற்று அதிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர்.அப்படி  எல்லா மொழிகளும் கற்ருனந்த பாரதியார்  கூட கூறுகின்றார் இனிமையான பொழி தமிழ்  மொழி போல ஒரு மொழியும் இல்லை என்று,என்ன என்றால் எளிமையான மொழி தமிழ் மொழி.அப்படி பட்ட தமிழ்  மொழி இன்று கவலைப்படும் அளவுக்கு  மாறி வருகின்றதுதான்  சோகம்.

அப்படி பட்ட தமிழ் மொழியை ஒவ்வொரு தமிழனும் கற்க வேண்டியதன் அவசியம்  தான் என்ன ??????,,,எண்  சாண் உடம்புக்கு  தலையே பிரதானம் என்கிற மாதிரித்தான்  ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் பிரதானமாக இருக்கின்றது.பண்டைய காலத்தை எடுத்து நோக்கினால் ஒவ்வொரு தமிழ் மன்னனும்  தம்மோடு போர் தொடுத்து வந்த எதிரிகளை புறமுதுகிட்டு ஓட செய்த பெருமை அவர்களையே சாரும்.அப்படிப்பட்ட தமிழை தான்  நாங்கள்  வீரத்தமிழ் அச்சமிள்ளாத்தமிழ் என்று எல்லாம் கூறுகின்றோம்.
அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டட் மாதிரி 30 மடங்கு பெரிதான பரமிடுகளை 4500 ஆண்டுகட்கு முன்பு கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை..
உலகத்தின் மாபெரும் வல்லரசை 2800 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கிய ரோமாபுரி மன்னர்கள் வளர்த்த இலத்தின் மொழி, இன்று யாருடைய தாய்மொழியும் இல்லை..
மகான் புத்தர் தம் புரட்சிகரமான கருத்துகளை 2600 ஆண்டுகட்கு முன் பரப்பிய பாலி மொழி, அறவே அழிந்துவிட்டது..
உலகை என் காலடியில் பணிய வைப்பேன் என்ற எழுச்சியோடு படை நடத்திச் சென்று ஆசியாவின் முக்கிய பகுதிகளை வென்ற மகா அலெக்சாந்தர் 2300 ஆண்டுகட்கு முன்பு பேசிய கிரேக்க மொழி, இன்று திரிந்து விட்டது..
வரலாற்றின் போ்கையே மாற்றி அமைத்த அன்பரசர் ஏசுநாதர் 2000 ஆண்டுகட்கு முன்பு தம் கருத்துகளை போதித்த அரமிக் மொழி (ஹுப்ரூ மொழியின் கிளை மொழி) இன்று வழக்கிழ்து விட்டது..
ஆனால், இந்தப் பழம்பெரும் மொழிகள் வாழ்ந்து சிறந்த காலத்தில் தானும் வளமாக வாழ்ந்து, இன்று தன் பழைய தோழமை மொழிகள் அனைத்தும் மாண்டு போன போதும், நீண்ட மனித வரலாற்றின் பார்வையாளனாக, இன்றும் இளமையோடு வாழும் ஓரே மொழி நம் தமிழ் மொழி மட்டுமே..

இன்று புலம் பெயர்ந்த நாடுகளை பார்ப்போமேயாயின் அங்குள்ள தமிழர்கள் தமிழர்களோட கதைக்கிறத்துக்கும் கூட தமிழ் மொழியை பயன்படுத்தாதது தான் கொடுமை.   ஏன் என்றால் ,அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது ,காரணம் தமிழ் மொழி தேவையில்லாத ஒரு மொழியாகவும், அதை படித்தால் தங்களுக்கு என்ன லாபம் என்றும் கேக்கும் சூழ்நிலை இன்று புலம்பெயந்த நாடுகளில்  தலை விரித்து ஆடுகின்றன. அப்படி தமிழ் மொழி வியாபார மொழியாக போய்  விட்டது தான் கரணம் . இப்படிப்பட்ட  தமிழ் மக்கள் உண்மையான தமிழ் தாய்க்கு தான் பிறந்தார்கள?
ஆனால், இந்த வளம் கொழிக்கும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள்.., தமிழ் மொழியை பேச தயங்குவது ஏன்??
என் தமிழுக்கு எப்போதுமே அழிவில்லை.....
தமிழில் பேச தயங்குவதால் தமிழுக்கு எந்த இழப்பும் இல்லை...!!

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment