இந்தியா ஒரு பெரிய நாடு. எனவே ஒரே மாதிரியான நேரம் தேவைப்படுகிறது. இல்லையெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நேரம் இருக்கும். இதனால் அதிகப்படியான குழப்பங்கள் ஏற்படும். இந்த குழப்பத்தைத் தீர்க்க அலகாபாத் வழியாகச் செல்லும் தீர்க்க கோடு (82.30 டிகிரி) இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
இந்திய சீர்தர நேரம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைந்த உலக சீர்தர நேரத்தின் +5.30 மணி நேர வித்தியாசத்தை அடிப்படையாக வைத்து 82.5 டிகிரி தீர்க்க ரேகை அதாவது நெட்டாங்கு (Longititude) புள்ளியினை இந்திய சீர்தர நேரத்துக்கான புள்ளியாக கொண்டு இந்திய நாட்டின் நேரத்தை கணக்கிடப்படுகிறது.
இந்திய சீர்தர நேரம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைந்த உலக சீர்தர நேரத்தின் +5.30 மணி நேர வித்தியாசத்தை அடிப்படையாக வைத்து 82.5 டிகிரி தீர்க்க ரேகை அதாவது நெட்டாங்கு (Longititude) புள்ளியினை இந்திய சீர்தர நேரத்துக்கான புள்ளியாக கொண்டு இந்திய நாட்டின் நேரத்தை கணக்கிடப்படுகிறது.
முதலில் GMT( GREENWICH MEEN TIME) பற்றித் தெரிந்து கொள்ளலாம். வலது பக்கத்திலுள்ள போட்டோவானது 'Meridian Line' ல் எடுக்கப்பட்டது ( Thanks : "National Maritime Museum') இங்கிலாந்திலுள்ள கிரீன்விச் என்ற இடத்தை GMT யாகக் கணக்கிட 1884 ல் INTERNATIONAL MERIDIAN CONFERENCE ல் தீர்மானிக்கப்பட்டது. MERIDAIAN (LATIN WORD : MERI - MIDDLE, DIEM - DAY) என்பது ஒரு கற்பனைக் கோடு. தீர்க்ககோட்டினை (LONGITUDE) PRIME MERIDIAN ( '0' டிகிரி LONGITUDE) எனவும் அழைக்கலாம். எனவேதான் முற்பகலை AM (ANTE MERIDIAN) எனவும் , பிற்பகலை PM (POST MERIDIAN) எனவும் அழைக்கப்படுகிறது. வடதுருவத்திலிருந்து தென்துருவம் நோக்கிச் செல்லும். '0' டிகிரி தீர்க்க கோடு கிரீன்விச்சிலுள்ள 'OLD ROYAL ASTRONOMICAL OBSERVATORY' வழியாகச் செல்கிறது. எனவே இது உலகநேரமாகக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. கிரீன்விச்சில் 'TRANSIT CIRCLE' என்ற தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்தவர் 'Sir George Biddell Airy" ஆவார்.
கிடைமட்டமாகச் செல்லும் கோடுகள் அட்சக்கோடுகள் எனவும், செங்குத்தாகச் செல்லும் கோடுகள் தீர்க்க கோடுகள் எனவும் அழைக்கப்படும். தீர்க்க கோடுகள் மொத்தம் 360 உள்ளன. ஒரு தீர்க்ககோட்டிற்கும் மற்றொரு தீர்க்ககோட்டிற்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் 4 நிமிடங்கள்.(360 * 4 =1440) ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடங்கள் (1440/60 = 24 Hrs).
இந்தியாவில் WESTERNMOST POINT குஜராத் (68 டிகிரியில் அமைந்துள்ளது), EASTERNMOST POINT அருணாச்சலப் பிரதேசம் ( 97 டிகிரியில் அமைந்துள்ளது). இரண்டுக்கும் இடைப்பட்ட இடம் (68 + 97=165 / 2 =82.5) உத்திரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத் ஆகும்.
இது 82.5 டிகிரி தீர்க்ககோட்டில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தீர்க்ககோட்டிற்குமுள்ள நேர வித்தியாசம் 4 நிமிடங்கள். எனவே 82.5 * 4 = 330/60= 5.5 மணி நேரம் இந்தியத் திட்ட நேரமாகக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியாவானது கிரீன்விச் நேரத்தில் 5.5 மணி நேரம் கூடுதல் வித்தியாசமுள்ளதால் இதனுடன் '+' சேர்க்கப்படுகின்றது. எனவே இந்தியத்திட்ட நேரம் +5.30 ஆகும்.
No comments:
Post a Comment