இக்கீரை வளமான பூமியில் மட்டுமே நன்றாக விளையும் இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றது வெள்ளைக் கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணியில் மஞ்சள் பூ பூக்கும். மஞ்சள் கரிசலாங்கண்ணியின் கசப்புத்தன்மை குறைவு, வெள்ளையில் கசப்புத்தன்மை அதிகம்
மஞ்சள் கரிசலாங்கண்ணியைத்தான் மிகவும் விசேஷமானது. இரண்டையும் சமைத்துச் சாப்பிடலாம். இதுதான் சமையலுக்கு ஏற்றது. நாட்டு வைத்தியத்தில் பெரும் பயனைத் தருவது இக்கீரை மஞ்சள் காமாலையைப் போக்குவதில் பெரும் பங்காற்றுகிறது. கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.
தொண்டையில் ஏற்படும் நோய்கள், காமாலை, குஷ்டம், ரத்த சோகை , வயிறு ஊதிப்போதல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது.கல்லீரலைப் பலப்படுத்தக்கூடிய குணத்தால் மஞ்சள் காமாலை சோகை போன்ற நோய்களுக்கு கரிசலாங்கண்ணி பயன்படுத்தப்படுகிறது.
100 கிராம் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துக்கள்:
100 கிராம் மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துக்கள்:
தொந்தி கரைய -:
இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.
முடிவளர -:
எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.
இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.
தலைப்பொடுகு நீங்க:
கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும்.
நாள்பட்ட புண் ஆற :
மூச்சிரைப்பு:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் சாப்பிட்டால் , கப நோய்கள், ஆஸ்துமாவால் ஏற்படு;ம் மூச்சிரைப்ப போன்றவை குணமாகும்.
பல் சம்பந்தமான நோய்கள் நீங்க:
பல் வியாதிகளால் கஷ்டப்படுகிறவர்கள் காலை வேளையில் கரிசலாங்கண்ணி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் குணமாகும் வாய் துர்நாற்றம் போகும்
இருமல் விலக:
1. இலையின் சாறு 150 மி.லி. நல்லெண்ணெய் 150 மி.லி இந்த இரண்டையும் கலந்து கடாயில் (வாணலியில்) ஊற்றி அடுப்பில் வைத்துச் சிறுதீயாக எரித்து பக்குவத்துடன் எடுத்து வடித்து 2 கிராம் அளவில் காலை, மாலை இருவேளை பருகிவர, நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் இருமல் நீங்கும்.
2. கரிசலங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊறவைதது உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.
புற்றுநோய்கள்:
கரிசலங்கண்ணிக் கீரைச் சாறு (30 மி.லி) பருப்புக் கீரைச் சாறு ()30 மிலி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.
கண் பார்வை தெளிவடைய, உடற்சூடு தணிய:
கரிசலாங்கண்ணியை இடித்து 250 மி.லி சாறெடுத்து, அதனோடு 250 மி.லி நல்லெண்ணெயை சாறோடு கலந்து சுத்தமான வாணலியில் ஊற்றி, அளவாக நெருப்பை மூட்டி, சாறுவற்றி, எண்ணெய் பதமாக மாறியதும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவேண்டும். சற்றுநேரம் கழித்து ஆறியதும் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனை தினமும் தேவையான அளவு எடுத்து தலையில் தடவிவரவேண்டும்.
அப்படி தடவிவந்தால் உடற்சூடும் தணியும், கண்பார்வை தெளிவாகும். முடி என்றும் நரைக்காமல் இருக்கும். முடி அடர்ந்து கருகருவென வளரும். சித்த மருந்துக்கடையில் கரிசலாங்கண்ணி தைலம் கிடைக்கும்.
குடல் சுத்தமாக:
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றும்: குடலிலுள்ள கிருமிகள் சாகும். குடல் சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.
இளநரை மறைய:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் நெல்லிமுள்ளி, சீரகம் இரண்டையும் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமுத் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இளநரை மறையும்.
வாய்ப்புண்:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் (30 மி.லி) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், டான்சில், சைனஸ் போன்றவை குணமாகும்.
புத்தி தெளிவடைய:
ஏவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறவில்லை என்று கஷ்டப்படுபவர்கள் , மறதிக்காரர்களும், வாரத்திற்கு மூன்று நாட்கள்வீதம் இரண்டு மாதங்கள் நெய், பாசிப்பருப்புடன் கலந்து பொரியல் செய்கு, இக்கீரையை சாப்பிட்டுவந்தால் புத்தி தெளிவடையும் மறதி போகும்
காதுவலி தீர:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் சில துளிகளை காதில்விட, காதுவலி தீரும், நல்ல தூக்கமும் வரும்.
பித்தப்பைக் கற்கள்:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறை (30 மி;லி.) 48 நாள்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பைக் கற்கள் கரையும்.
ரத்த சோகை:
கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், ரத்த சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
மலச்சிக்கல்:
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.
தலை வலி:
கரிலாங்கண்ணிக் கீரையை மிளகு, சோம்பு சேர்த்துக் கஷாணமாக்கிச் சாப்பிட்டால் அனைத்துவிதமான தலை வலியும் தீரும்.
மது அருந்துபவர்களுக்கு:
மது உடலுக்கு,உயிருக்குக் கேடு என்று தெரிந்தும் பலர் தினமும் தங்களின் அரிய உடலை நாசமாக்கிக் கொள்கிறார்கள். மதுவை தினமும் அருந்துவதால் ஈரல் கெட்டு உயிர்போகும் குடியில் கெட்டுப்போகும் ஈரலை சரிசெய்கிறது கரிசலாங்கண்ணி எனவே குடியை நிறுத்தியவர்கள் தினமும் காலையில் இக்கீலையைச் சமைத்து சாப்பிட்டு வந்தாலோ, சாறுபிழிந்து பருகி வந்தாலோ, கெட்டுப்போன ஈரல் நல்ல நிலைமைக்கு மாறும்.
சிறுநீரில் ரத்தமா:
பலருக்கு சிறுநீரில ரத்தம் வரும். ஆப்போது வலி ஏகமாய் இருக்கும். சிலருக்கு மயக்கம் கூட வரும். இப்படிப்பட்டவர்கள், கீரையிலிருந்து சாறெடுத்து, தினம் இருவேளைகள், 100 மி.லி. முதல் 150 மி.லி வரை பருகிவர இந்த நோய் குணமாகும்.
பற்களில் மஞ்சள் நிறமா?
சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறமாக, பார்க்க அழகற்று இருக்கும். இப்படிப்பட்டவர்கள், கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்கவும், பல் துலக்கிய பின், கிரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்பளர் தண்ணீர் அருந்திவரவும். நாளடைவில் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள்கறை மறைந்தே போய்விடும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் தீரும் நோய்கள்:
காய்ச்சல், யானைக்கால, விஷக்கடி, காதுவலி, ஜலதோஷம், கண்பார்வை மங்கல், மார்புவலி, மஞ்சள் காமாலை, தொழுநோய், மயக்கம், பித்த சுரம், பித்த எரிச்சல், மலச்சிக்கல், சளி, இரத்தசோகை, தலைப்பொடுகு, இளநரை, பசியின்மை, வீக்கம், கட்டி, அதிக இரத்தப்போக்கு, மூலம், அதிக வயிற்றுப்போக்கு, வாய்துர்நாற்றம், புண்கள், வாதம், கல்லீரல் வீக்கம், பல்வலி, மாலைக்கண், புத்திக்குறைவு போன்றவை நீங்கும்.
இது மட்டுமின்றி உடம்பிலுள்ள கசடுகளை வெளியேற்றம் இரத்தத்தை சுத்தமாக்கும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.உடலை எந்நோயம் அண்டாமல் பாதுகாக்கும் அற்புதமான இக்கீரையை இனிமேல் விடாதீர்கள்.
இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.
தொகுப்பு அ .தையுபா அஜ்மல்.

- நீர்ச்சத்து - 81.1 கிராம்
- புரதம் - 4.4 கிராம்
- கொழுப்பு - 0.8 கிராம்
- தாது உப்புகள் - 4.5 கிராம்
- சர்க்கரைச்சத்து - 9.2 கிராம்
- சுண்ணாம்புச் சத்து - 30.63 மி.கி
- பாஸ்பரஸ் - 46.2 மி.கி
- இரும்பு - 8.9 மி.கி
- கலோரித்திறன் - 62 கலோரி
100 கிராம் மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துக்கள்:
- நீர்ச்சத்து - 93.7 கிராம்
- புரதம் - 1.1 கிராம்
- கொழுப்பு - 0.2 கிராம்
- தாது உப்புகள் - 1.4 கிராம்
- நார்ச்சத்து - 0.4 கிராம்
- சர்க்கரைச்சத்து - 3.2 கிராம்
- சுண்ணாம்புச் சத்து - 39 மி.கி
- பாஸ்பரஸ் - 10 மி.கி
- இரும்பு - 3.9 மி.கி
- கலோரித்திறன் - 19 கலோரி
தொந்தி கரைய -:
இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.
முடிவளர -:
எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.
இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.
தலைப்பொடுகு நீங்க:
கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும்.
நாள்பட்ட புண் ஆற :
- கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.
- நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.
- கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும்.
- இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும்.
- கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும்.
- கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.
- தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, குஷ்டம், வீக்கம் ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.
- உடம்பின் உள்ளுறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் தேவை. கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இல்லையென்றே கூறலாம்.
மூச்சிரைப்பு:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் சாப்பிட்டால் , கப நோய்கள், ஆஸ்துமாவால் ஏற்படு;ம் மூச்சிரைப்ப போன்றவை குணமாகும்.
பல் சம்பந்தமான நோய்கள் நீங்க:
பல் வியாதிகளால் கஷ்டப்படுகிறவர்கள் காலை வேளையில் கரிசலாங்கண்ணி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் குணமாகும் வாய் துர்நாற்றம் போகும்
இருமல் விலக:
1. இலையின் சாறு 150 மி.லி. நல்லெண்ணெய் 150 மி.லி இந்த இரண்டையும் கலந்து கடாயில் (வாணலியில்) ஊற்றி அடுப்பில் வைத்துச் சிறுதீயாக எரித்து பக்குவத்துடன் எடுத்து வடித்து 2 கிராம் அளவில் காலை, மாலை இருவேளை பருகிவர, நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் இருமல் நீங்கும்.
2. கரிசலங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊறவைதது உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.
புற்றுநோய்கள்:
கரிசலங்கண்ணிக் கீரைச் சாறு (30 மி.லி) பருப்புக் கீரைச் சாறு ()30 மிலி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.
கண் பார்வை தெளிவடைய, உடற்சூடு தணிய:
கரிசலாங்கண்ணியை இடித்து 250 மி.லி சாறெடுத்து, அதனோடு 250 மி.லி நல்லெண்ணெயை சாறோடு கலந்து சுத்தமான வாணலியில் ஊற்றி, அளவாக நெருப்பை மூட்டி, சாறுவற்றி, எண்ணெய் பதமாக மாறியதும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவேண்டும். சற்றுநேரம் கழித்து ஆறியதும் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனை தினமும் தேவையான அளவு எடுத்து தலையில் தடவிவரவேண்டும்.
அப்படி தடவிவந்தால் உடற்சூடும் தணியும், கண்பார்வை தெளிவாகும். முடி என்றும் நரைக்காமல் இருக்கும். முடி அடர்ந்து கருகருவென வளரும். சித்த மருந்துக்கடையில் கரிசலாங்கண்ணி தைலம் கிடைக்கும்.
குடல் சுத்தமாக:
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றும்: குடலிலுள்ள கிருமிகள் சாகும். குடல் சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.
இளநரை மறைய:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் நெல்லிமுள்ளி, சீரகம் இரண்டையும் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமுத் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இளநரை மறையும்.
வாய்ப்புண்:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் (30 மி.லி) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், டான்சில், சைனஸ் போன்றவை குணமாகும்.
புத்தி தெளிவடைய:
ஏவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறவில்லை என்று கஷ்டப்படுபவர்கள் , மறதிக்காரர்களும், வாரத்திற்கு மூன்று நாட்கள்வீதம் இரண்டு மாதங்கள் நெய், பாசிப்பருப்புடன் கலந்து பொரியல் செய்கு, இக்கீரையை சாப்பிட்டுவந்தால் புத்தி தெளிவடையும் மறதி போகும்
காதுவலி தீர:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் சில துளிகளை காதில்விட, காதுவலி தீரும், நல்ல தூக்கமும் வரும்.
பித்தப்பைக் கற்கள்:
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறை (30 மி;லி.) 48 நாள்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பைக் கற்கள் கரையும்.
ரத்த சோகை:
கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், ரத்த சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
மலச்சிக்கல்:
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.
தலை வலி:
கரிலாங்கண்ணிக் கீரையை மிளகு, சோம்பு சேர்த்துக் கஷாணமாக்கிச் சாப்பிட்டால் அனைத்துவிதமான தலை வலியும் தீரும்.
மது அருந்துபவர்களுக்கு:
மது உடலுக்கு,உயிருக்குக் கேடு என்று தெரிந்தும் பலர் தினமும் தங்களின் அரிய உடலை நாசமாக்கிக் கொள்கிறார்கள். மதுவை தினமும் அருந்துவதால் ஈரல் கெட்டு உயிர்போகும் குடியில் கெட்டுப்போகும் ஈரலை சரிசெய்கிறது கரிசலாங்கண்ணி எனவே குடியை நிறுத்தியவர்கள் தினமும் காலையில் இக்கீலையைச் சமைத்து சாப்பிட்டு வந்தாலோ, சாறுபிழிந்து பருகி வந்தாலோ, கெட்டுப்போன ஈரல் நல்ல நிலைமைக்கு மாறும்.
சிறுநீரில் ரத்தமா:
பலருக்கு சிறுநீரில ரத்தம் வரும். ஆப்போது வலி ஏகமாய் இருக்கும். சிலருக்கு மயக்கம் கூட வரும். இப்படிப்பட்டவர்கள், கீரையிலிருந்து சாறெடுத்து, தினம் இருவேளைகள், 100 மி.லி. முதல் 150 மி.லி வரை பருகிவர இந்த நோய் குணமாகும்.
பற்களில் மஞ்சள் நிறமா?
சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறமாக, பார்க்க அழகற்று இருக்கும். இப்படிப்பட்டவர்கள், கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்கவும், பல் துலக்கிய பின், கிரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்பளர் தண்ணீர் அருந்திவரவும். நாளடைவில் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள்கறை மறைந்தே போய்விடும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் தீரும் நோய்கள்:
காய்ச்சல், யானைக்கால, விஷக்கடி, காதுவலி, ஜலதோஷம், கண்பார்வை மங்கல், மார்புவலி, மஞ்சள் காமாலை, தொழுநோய், மயக்கம், பித்த சுரம், பித்த எரிச்சல், மலச்சிக்கல், சளி, இரத்தசோகை, தலைப்பொடுகு, இளநரை, பசியின்மை, வீக்கம், கட்டி, அதிக இரத்தப்போக்கு, மூலம், அதிக வயிற்றுப்போக்கு, வாய்துர்நாற்றம், புண்கள், வாதம், கல்லீரல் வீக்கம், பல்வலி, மாலைக்கண், புத்திக்குறைவு போன்றவை நீங்கும்.
இது மட்டுமின்றி உடம்பிலுள்ள கசடுகளை வெளியேற்றம் இரத்தத்தை சுத்தமாக்கும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.உடலை எந்நோயம் அண்டாமல் பாதுகாக்கும் அற்புதமான இக்கீரையை இனிமேல் விடாதீர்கள்.
இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.
தொகுப்பு அ .தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment