Monday 13 January 2014

தமிழர் பண்பாட்டின் அடையாளம் பொங்கல் திருநாள்! ஒரு சிறப்பு பார்வை..

உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல்.

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒருதனிப்பெரும் விழாதமிழர் திருநாளாக தமிழ்நாடுஇலங்கை,மலேசியாசிங்கப்பூர்ஐரோப்பிய நாடுகள்
வட அமெரிக்காதென்ஆபிரிக்காமொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து 
நாடுகளிலும்கொண்டாடப்படுகிறதுஇவ்விழா சமயங்கள் கடந்து அனேகதமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக 
கொண்ண்டாடப்படுகிறது.

முதல் நாள் போகிப் பண்டிகை:
       தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறதுபோகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும்அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
        இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டுபோகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
     போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

இரண்டாம் நாள் தைப்பொங்கல்:

தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்றுமூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றிதை முதல்தேதியை தமிழ்ப் புத்தாண்டாக 
கடைபிடிப்பது என்று தமிழக அரசுமுடிவெடுத்துஅதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது."பொங்கல் பண்டிகைஎன்பது அறுவடைத் திருநாளாகக்கொண்டாடப்படுகிறதுஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும்இயற்கைக்கும்விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும்நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

      தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
       பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

பொங்கல் என்பதற்கு "பொங்கி வழிதல்", "பொங்குதல்என்பதுபொருள்அதாவது புதிய பானையில்புத்தரிசியிட்டுஅரிசியில்இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால்தை பிறந்துள்ளபுத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும்வளமும் அந்தப் பால் போன்றுபொங்கி சிறக்கும்மகிழ்ச்சியும்திளைப்பும் ஒருசேரப் பல்கிப்பெருகுவதோடுகழனியெல்லாம் பெருகிஅறுவடை மென்மேலும்அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கியதத்துவமும்தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.
பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்துஅறுவடைக்குத்தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்துவீட்டில் படைத்து வணங்குவதும் வாடிக்கையாக உள்ளதுதவிர,காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும்,
பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்துவழிபடுகிறார்கள்.

அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில்பயிர்விளைச்சலுக்கு உதவிய மழை
சூரியன்கால்நடைகள் மற்றும்விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து 
அவர்களுக்குவேண்டியதைச் செய்யும் நாளே தைப் பொங்கல் திருநாள் எனலாம்.

பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு,அதன்மீது அடுப்புக் 
கட்டியை வைத்து அவற்றில் புதிய பானைகளில்வெண்பொங்கலும்சர்க்கரை 
பொங்கலும் தனித்தனியே செய்து,சூரியனுக்குப் படைத்து வழிபடுகிறோம்.

இயற்கை வளத்தால்மும்மாரி மழை பொழிந்தால் மட்டுமேவிவசாயம் பெருகும்காடு
கழனி நனையும்சூரிய வெளிச்சம்பட்டால்தான் பயிர் வளர்ச்சியடைந்து சாகுபடி 
சிறக்கும்.விளைந்த பயிரை அறுவடை செய்து தானியமாக்குவதற்குதொழிலாளர்கள் 
உதவுகிறார்கள்.  பயிர் நடுவதற்கு ஏதுவாகஉழவுக்கும்அறுவடைக்குப் பின் போரடிப்பதற்கும்விளைந்ததானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டு செல்வதற்கும்கால்நடைகள் பெரிதும் உதவுகின்றனஎனவே தான் விவசாயத்தொழிலாளர்களை வீடுகளுக்கு அழைத்து
சூரியனுக்குப் படைத்தபொங்கல் உள்ளிட்டவற்றை அளித்து வயிறாரச் சாப்பிடச்செய்வதுடன்அவர்களுக்குத் தேவையான வேட்டி, துண்டுசேலைஉள்ளிட்ட துணிகளையும் 
வழங்கி கவுரவிக்கிறோம்.

புத்தாடைகள் துணி மணிகளுடன் சிறிய தொகை ஒன்றை பொங்கல்படியாகஅளிக்கும் வழக்கமும் உள்ளதுதமிழகத்தின் தென் மாவட்டங்களில்விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் உள்ளகுழந்தைகளுக்கும்வயதில் சிறியவர்களுக்கும் பெரியவர்கள்பொங்கல்
படி அளிப்பார்கள்.பொங்கல்படி வாங்குவதற்கென்றே உறவினர்கள் வீடுகளுக்குச்செல்லும் வழக்கமும் இருந்துள்ளது.
பொங்கல்படி எனும் சிறிய தொகையை விடவும்பொங்கள்திருநாளில் உறவினர்கள் ஒருவரையொருவர் சந்தித்துபேசிக்கொள்வதுடன் நீண்ட காலம் பார்க்காமல் இருப்பவர்களும் சந்திக்கஏதுவாகிறதுஇதனால் உறவினர்களுக்கு இடையேயான உறவும்வலுப்படும்.

"
உழவுக்கும்தொழிலுக்கும் வந்தனை செய்வோம்என்பதற்கேற்பஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும் எருதுகள் உள்ளிட்டகால்நடைகளுக்கு பொங்கல் வைத்து படைத்துஅவற்றுக்கும்அளித்துநாமும் உண்டு மகிழ்கிறோம்இதற்காகவே மாட்டுப்பொங்கல் என தனியாக ஒரு நாளில் கொண்டாடி மகிழ்கிறோம்.


தமிழர் திருநாளாம் பொங்கலை இன்றளவும் கொண்டாடுவதில்இருந்தே பண்டைய காலத்தில்வாழ்ந்த தமிழக மக்களின்தொன்மைச் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறதுதற்காலஇளைய சமுதாயத்தினருக்கும்பல்கிப் பெருகிவிட்ட பெருநகரவாழ்மக்களுக்கும் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தைபறைசாற்றுவதாகவும் தைப் பொங்கல் விளங்குகிறது என்பதைமறுப்பதற்கில்லை.
"பழையன கழிதலும்புதியன புகுதலும்என்பதற்கேற்ப,குயவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடிய வகையில்வீடுகளில்உள்ள பழைய மட்பாண்டங்களை (பானைகள்
குடிநீருக்காகபயன்படுத்தும் குவளைகள்பொங்கலுக்கு முன்தினம்போட்டுடைத்து 
விட்டுதைத்திங்கள் முதல் நாளில் இருந்து புதியபானைகளில் சமைக்கும் வழக்கமும் 
தொன்றுதொட்டு இருந்துவந்துள்ளது என்பதை அறிகிறோம்இதனால்மட்பாண்டங்களைச்செய்து பிழைப்பு நடத்துவோருக்கு வருவாய் கிடைப்பதுடன்,வீடுகளிலும் புதிய 
பானைகளுடன் கூடிய நிலை உருவாகி,மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தரும்பொதுவாகவேமண்பானைகளில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு தனியான சுவையுண்டு என்பதை அவற்றை சாப்பிட்டு ரசித்தவர்கள் அறியமுடியும்.


இது தவிரஅதுவரை நிலவியபழைய விரும்பத்தகாத சம்பவங்கள் -சங்கடங்கள் எல்லாம் தொலைந்துபுதிய ஆண்டில் - தைத்திங்கள்முதற்கொண்டு அனைத்தும் புதியவையாக - நல்லவையாகநிகழட்டும்முந்தைய ஆண்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்வரும் புத்தாண்டில் நிகழாமல்பொங்கிவரும் பால் போன்று,சர்க்கரைப் பொங்கலின் இனிப்பான சுவையைப் போன்றுஇருக்கட்டும் என்பதே பாரம்பரிய தத்துவமாகக் கருதப்படுகிறது.

தற்போதைய தகவல்-தொழில்நுட்ப காலத்தைப் போலல்லாமல்,தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத 
அந்நாட்களில்பரம்பரைபரம்பரையாக ஒரு சில குடும்பங்களுக்கே தெரிந்த தங்களின்
பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினருக்குபயிற்றுவித்துவழிவழியாக அந்தக் கலைகள் சென்று சேரும்விழாவாகவும் பொங்கல் விழா இருந்து வந்துள்ளதை 
அறிகிறோம்.தவில்சிலம்பாட்டம்மயிலாட்டம்ஒயிலாட்டம்தப்பாட்டம்,நாதசுரம்
 இன்னிசைவாய்ப்பாட்டுவீணை உள்ளிட்ட தந்திஇசைக்கருவிகளை இசைத்தல்
சிலேடையுடன் கூடியபேச்சுக்கலைநகைச்சுவை நிகழ்ச்சி என ஒவ்வொருகுடும்பத்திற்கும்அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரியபாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்காகவும் 
இப்பண்டிகையைகாலங்காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இதனால் பிரத்யேக கலைகள் ஒரு தலைமுறையுடன் முடிந்துவிடாமல் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் சென்று சேர்ந்துள்ளது.

பொங்கல் திருநாளில் வீட்டில் உள்ள வயதான முதியவர்கள் -
அதாவது தாத்தா-பாட்டி தொடங்கி கைக்குழந்தைகள் வரை ஒரேஊரில் - ஒரே இடத்தில் கூடி பரஸ்பரம் அன்பையும்பாசத்தையும்பரிமாறிக் கொண்டுபொங்கலைக் கொண்டாடுவதை இன்றளவும்காண முடிகிறதுஆனால்
இன்று கூட்டுக் குடும்பங்களின்எண்ணிக்கை குறைந்துமைக்ரோ குடும்பங்கள் (கணவன் -மனைவி ஒரு குழந்தை அல்லது இரண்டுபெருகிவிட்டநிலையில்,  இன்றைய சந்ததியினருக்கு பொங்கல் பண்டிகையைஏதாவது தென் மாவட்டங்களில்
 உள்ள கிராமங்களுக்கு அழைத்துச்சென்று காண்பித்தால் மட்டுமே அந்தப் பண்டிகையின் அருஞ்சிறப்புதெரிய வரும்.அதிலும்அறுவடை உள்ளிட்ட விவசாயத் தொழில்களுக்கு
அறுவடை எந்திரங்கள்நெற்கதிரில் இருந்து நெல்லைபிரித்தெடுக்கும் எந்திரங்கள் என 
அனைத்தும் எந்திரகதியாகிவிட்டனமாடுகள் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி 
இன்றுடிராக்டர்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது எனலாம்.

அதிவேகமாக வளரும் காலத்திற்கு ஏற்ப விவசாய நிலங்களும்,காடு-கழனிகளும் மருகிக் கொண்டிருக்கின்றனதமிழகத்தில் சிறுநகரங்கள் தொடங்கி
பெருநகரங்கள் வரை தொழிற்சாலைகளுக்கும்,வீட்டு மனைகளுக்கும்அடுக்குமாடி
 குடியிருப்புகளுக்கும்கொடுத்தது போக எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களையாவதுபாதுகாப்போம் என்ற உறுதிமொழியை இந்த தைப் புத்தாண்டில்ஏற்போமாக.
கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்நம்மிடம் உள்ள விவசாயநிலங்களை 
விவசாயத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக விற்கமாட்டோம் என்ற உறுதியையும் 
ஏற்பதுடன்முந்தைய பசுமையானபொங்கல் நினைவுகளையும்மூதாதையர்களையும் 
மனதில்எண்ணி பொங்கலைக் கொண்டாடுவோமாக....

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்

    மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
      உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

       உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல்:
      காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
       இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

பொங்கட்டும் பொங்கல்தமிழர்களின் உள்ளத்தைப் போல்!

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment