Monday, 20 January 2014

கர்ப்ப காலத்தில் கணவன்,மனைவி புரிதலில் ஏற்படும் சிக்கல்கள்!!! ஒரு சிறப்பு பார்வை ...



கருவுற்ற காலம் முதலே பல பெண்கள் 
தங்கள் குழந்தையுடன் ஒரு பந்தத்தை
 உருவாக்க தொடங்கி விடுவார்கள். 
தாய்மை என்ற உணர்வை கொஞ்சம் 
கொஞ்சமாக விரும்பத் தொடங்கி 
விடுவார்கள். ஆனால் ஆண்கள் 
விஷயத்தில் அப்படி நடப்பதில்லை. 
ஆண்களுக்கு தந்தை என்ற பந்தம் 
குழந்தை பிறந்த உடனேயே தான்
 மேலோங்கும். அதனால் தன்
 மனைவிக்கு விரைவிலேயே ஏற்படும் 
இந்த மாறுதல்களை பற்றி அவர்களுக்கு புரிவதில்லை.
 இதனால் கர்ப்ப காலத்தில் அவர்கள் உறவுக்கு இடையே பல பிரச்சனைகள் உண்டாகும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களில் 20 சதவீத பேர்கள் உறவு 
ரீதியான இவ்வகை பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 
பெற்றோர் என்ற பொறுப்பு சவாலாக இருந்தாலும் கூட அது 
சந்தோஷம் நிறைந்ததாகும். கர்ப்ப காலத்தில் கணவன் 
மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை நன்கு புரிந்து 
கொண்டால் பல பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 
உங்கள் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்க தெரிந்தால் 
உங்கள் கர்ப்ப காலத்தை மிகவும் சந்தோஷத்துடன் களிக்கலாம். குழந்தையை பெற்றெடுக்கும் வரை அது கருவிலேயே வளர்ந்து 
கொண்டு வரும். குழந்தை கருவில் வளர வளர, அது உயிர் 
வாழ்வதற்கு கர்ப்பிணிகளின் உடலில் தொடர்ச்சியான 
மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் 
உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் உணர்ச்சி ரீதியாகவும் 
அமையும். கர்ப்ப காலத்தில் கணவன் மனைவிக்கு இடையே 
ஏற்படும் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாக
 அதனை மிகவும் கவனத்துடன், உணர்ச்சி ரீதியான ஆதரவோடு
 கையாள வேண்டும். கர்ப்ப காலத்தில் அப்படி என்ன தான் 
பிரச்சனை ஏற்படும் என்று தானே கேட்கிறீர்கள், இதோ படித்து 
தெரிந்து கொள்ளுங்கள்.


போதிய ஆதரவின்மை மற்றும் புரிதலின்மை..

கர்ப்ப காலத்தில், கணவன் மனைவிக்கு 
இடையே ஏற்படும் பிரச்னைக்கு முக்கிய காரணமாக 
இருப்பது, இக்காலத்தில் உண்டாகும் மன அழுத்தமும் 
பதற்றமும் தான். உங்கள் மனைவி மன அழுத்தத்தால்
 பாதிக்கப்பட்டால் அதனை புரிந்து கொண்டு அவர்களுக்கு
 பக்க பலமாக இருங்கள்.


உரையாடல் குறைந்து போவது..
தம்பதியர்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல், போதிய
 அளவில் உரையாடாமல் போவதால், கர்ப்ப காலத்தில் 
அவர்களுக்குள்ளான உறவு பாதிக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில், மனைவிக்கு மன அழுத்தம் ஏற்படும் வேளையில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்க பொதுவாக கணவன்மார்கள் 
அவர்களிடம் பேசுவதை குறைக்கிறார்கள். இதனால், தான் ஒதுக்கப்படுவதாக மனைவிமார்கள் எண்ணத் தொடங்குவார்கள்

உணர்ச்சி ரீதியான தொந்தரவுகள்...
ஒரு கணவனுக்கு இவ்வகை சூழ்நிலைகளை சமாளிப்பது பெரிய சவாலாகவே இருக்கும். ஆனால் மனைவியின் உணர்ச்சி
 கலவைகளை மனதில் வைத்து கொண்டு, இவ்வேளையில் 
அவர்களை நன்கு புரிந்து கொண்டு அவர்களை மரியாதையாக
 நடத்த வேண்டும். மன ரீதியான மாற்றங்கள் இயல்பான ஒன்றே. 
அதுவும் கருவுற்ற முதல் மூன்று மாதத்தில் ஹார்மோன் அளவு 
அதிகமாக இருப்பதால், இவ்வகை மாற்றங்கள்
 அடிக்கடி நடைபெறும்.

நலிந்த குடும்ப பிணைப்பு..
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, 
பதற்றம், மன அழுத்தம் மற்றும் உபாதை போன்றவைகளோடு
 தான் பல உறவு பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. சரியான
 குடும்ப பிணைப்பு இல்லையென்றால் இப்பிரச்சனை இன்னும்
 பெரிதாக விஸ்வரூபம் எடுத்து விடும்.

உடல் ரீதியான மாற்றங்கள்..
உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சோர்வு போன்ற உடல்
 மற்றும் மன ரீதியான மாற்றங்களை கர்ப்பிணி பெண்கள் சந்திக்க
 நேரிடும். இதனால் அவர்கள் உடலுறவில் ஈடுபதுவது வெகுவாக பாதிக்கப்படும். இதனால் அவர்கள் கணவன்மார்களுக்கு ஈர்க்கும்
வண்ணம் இருப்பதில்லை.

தவறான புரிதல்.. 
கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் உறவு ரீதியான பிரச்சனைகள் 
எல்லாம் இப்போது சர்வ சாதரணமாக ஏற்படுகிறது. இதனால்
 பல உறவுகள் விவாகரத்தில் வந்து நிற்கிறது. அதனால் சின்ன
 கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட அதனை பேசி தீர்த்துக் 
கொள்ளுங்கள்.

மன அழுத்தம் 
மன ரீதியான மாற்றங்களுக்கும் மன 
அழுத்தத்திற்கும் உண்டான வேறுபாடுகளை
 முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
மன அழுத்தம் என்பது பெரிய பிரச்சனை.
சில நேரம் அது தற்கொலைக்கு கூட தூண்டும். 
கர்ப்பமான பெண்களில் 10 சதவீத பேர்கள் 
தீவிரமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 
அதனை முறையான ஆலோசனை மூலம் 
நிவர்த்தி செய்யலாம்.


வாக்குவாதங்கள்... 
சின்ன சின்ன விஷயங்களால் கூட கர்ப்பிணி பெண்களுக்கு
 மன அழுத்தம் ஏற்படுவதுண்டு. அது தீவிரமாகவும் மாறலாம்.
 அதனால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து
 மனைவியின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுங்கள். 
அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை
அவர்களுக்கு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


உங்கள் மனைவியை ஆதரிப்பது எப்படி? 
கர்ப்ப காலத்தில் உங்கள் மனைவிக்கு நீங்கள் எந்தளவுக்கு 
ஆதரவாக இருந்து அவர்களிடம் உரையாடுகிறீர்களோ 
அவ்வளவு வேகத்தில் உங்களுக்கு இடையே ஏற்படும்
 பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கலாம். கணவன், மனைவி
 அவர்களின் பிணைப்பை வலுவாக்க கர்ப்பத்தை ஒரு
 காரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக கர்ப்பத்தால்
 பிரிந்து விட கூடாது. சொல்லப்போனால் திருமண 
வாழ்க்கையில் கர்ப்பம் என்பது ஆனந்தத்தையே 
உண்டாக்க வேண்டும். 

வாழ்த்துக்கள் !!!

 தொகுப்பு : .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment