Wednesday 3 June 2015

சீன மக்கள் நடத்தும் நாய்க்கறி திருவிழா!! ஒரு தவகல்..



சீனாவில் பிரபலமானவற்றில் நாய் கறியும் ஒன்று. சீனாவின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் நாய் கறியை விரும்பி சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். கடந்த சில வருடங்களாக சீனாவின் யுலின் என்ற நகரில் நாய் கறியை சமையல் செய்து உண்பதை ஆண்டு தோறும் ஜூன் மாதம் ஒரு திருவிழாவாகவே நடத்துகின்றனர். இந்த நாய்க்கறி திருவிழாவை ஒரு வாரத்துக்கு கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு திருவிழாவுக்காக 15 ஆயிரம் நாய்களை கறிக்காக கொன்றுள்ளனர். 

சீனாவின் Guangxi என்ற மாகாணத்தில் Yulin என்ற சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

விநோத பழக்க வழக்கங்களை கொண்ட இந்த மக்கள் தங்களை ஆவிகள் கொடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ள கடந்த 2010ம் ஆண்டிலிருந்து ‘நாய் கறி திருவிழா’ என்ற ஒரு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

எதிர்வரும் ஜூன் 21ம் திகதி தொடங்க உள்ள இந்த திருவிழாவின்போது, அந்த மாகாணம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்களை பிடித்து வந்து பூஜை செய்வார்கள்.

பின்னர், ஒவ்வொரு நாயையும் கும்பல் கும்பலாக கொன்று நெருப்பில் சுட்டு எரித்து துண்டுகளாகவும் முழு நாய்களாகவும் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வைக்கின்றனர்.

இந்த பகுதியில் வாழும் Yulin சமுதாய மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் அன்று நாய் கறி விருந்து அமோகமாக நடைபெறும். இந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 15 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவார்கள்.


நாய் கறி பல மருத்துவ பலன்களை கொண்டது என தெற்கு சீன மக்கள் உறுதியாக நம்புகின்றனர். நாய்களைக் கொல்வது கொடூரச் செயல் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளப்பி இருந்தாலும், இந்த மக்கள் நாய்க்கறி சாப்பிடுவதை நிறுத்தவில்லை. நாய்க்கறி சாப்பிடுவதை தடை செய்ய சட்டம் இயற்ற‌ அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


கடந்த 2008 ஒலிம்பிக் போட்டியின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்ததால் அப்போது குறிப்பிட்ட உணவகங்களின் மெனுவில் இருந்து நாய்க்கறி நீக்கப்பட்டு இருந்தது. இந்த நாய்க்கறி திருவிழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் நாய்கள் திருடு போவதும் வழக்கம்தானாம்.






தெற்கு சீன மக்கள் நடத்தும் இந்த நாய்க்கறி திருவிழவுக்கும், நாய்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரியும் ஏராளமானோர் பேரணி நடத்தினர். அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசும் எவ்வளவோ முயற்சி செய்து இந்த மக்களை நாய்க்கறி சாப்பிடுவதில் இருந்து மீட்க முடியவில்லை. இது சுகாதாரமான உணவு அல்ல என்ற பிரசாரம் ஒருபக்கம் நடந்தாலும், அதைச் சாப்பிடும் யாரும் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நாய்க்கறியைப் போல பூனைக் கறி சாப்பிடும் ஒரு கூட்டமும் சீனாவில் அலைந்து கொண்டிருக்கிறது.

தெற்கு சீன நகரங்களில் நாய்க் கறிக்கடை என்றே ஏராளமாக இருக்கின்றன. இங்கே ஆட்டை உரித்து தொங்க விட்டுருப்பது போல , அங்கே நாய்களை உரித்துத் தொங்க விட்டிருக்கின்றனர். எந்த வகை நாய்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. அதேபோல தோல் உரிக்கப்பட்ட நாய் உடல்களை இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்வதையும் இங்கு சகஜமாக பார்க்க முடியும்.  


சீனர்களின் இந்த காட்டுமிராண்டி தனமான செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும், Yang Xiaoyun(65) என்ற சமூக ஆர்வலர் இந்த திருவிழாவில் கொல்லப்படும் நாய்களை மீட்க பல வழிகளில் போராடி வருகிறார்.

இந்த திருவிழா தொடங்குவதற்கு சில தின்ங்களுக்கு முன்னர் தனது Tianjin நகரத்திலிருந்து 1.652 மைல்கள் பயணித்து Yulin நகரத்திற்கு சென்று, நாய்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அவற்றை விலை பேசி வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.

தற்போது வரை சுமார் 15,178 பவுண்டுகள் செலவழித்து சுமார் 360 நாய்கள் மற்றும் பல பூனைகளை காப்பாற்றி தனது இடத்தில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் நாய் கறி திருவிழா உற்சாகமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பகுதிக்கு பல வகை நாய்களை அதிக எண்ணிக்கையில் கும்பல் கும்பலாக வாகனங்களில் அடைத்து கொண்டு வருவதால் ‘ராபிஸ்’ எனப்படும் நோய் அதிக அளவில் பரவி வருவது அந்த சமுதாய மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை.

சீனாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு உணவாக சமைக்கப்படுவதுடன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ராபிஸ் நோய் தாக்கி சுமார் 338 பேர் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் நடக்கும் இந்தக் கொடுஞ்செயலுக்கு உலகம் முழுவதுமே பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்தியாவில் பாலிவுட் நடிகர்கள் அனுஷ்கா ஷர்மா, சோனாக்ஷி சின்ஹா, அலியா பட் சீன நாய்க்கறி திருவிழாவுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர்.

 நன்றி : சான் லீ , சீனா.
தொகுப்பு : மு.அஜ்மல் கான். 

No comments:

Post a Comment