Friday 5 June 2015

வெளிநாட்டு வேலை தேடிச் செல்வோருக்கு சிங்கப்பூர் இனி சிக்கல் தான் !

வெளிநாட்டு வேலை தேடிச் செல்வோருக்கு சொர்க்கமாக திகழ்ந்த சிங்கப்பூரில், இனி அந்நியருக்கு வேலை கிடைப்பது சுலபமாக இருக்காது. இது சம்பந்தமான அரசின் கொள்கைகளை தளர்த்த அந்நாட்டு அரசு மறுத்துள்ளதே இதற்கு காரணம்.
சிங்கப்பூருக்கு ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி செல்கின்றனர். கைநிறைய சம்பளம், வசதி, பாதுகாப்பு ஆகிய காரணங்களால் சிங்கப்பூருக்கு பணிக்கு செல்ல பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வௌிநாட்டவருக்கான வேலை வாய்ப்பு குறித்து அந்நாட்டு அரசு புதிய கொள்கையை அறிவித்தது. இதன் மூலம், வௌிநாடுகளில் இருந்து வேலைக்கு செல்வோருக்கான வாய்ப்பு குறைக்கப்பட்டது.
இது குறித்து அந்நாட்டு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் லிம் ஸ்வி சே கூறுகையில், 'வேலைக்காக சிங்கப்பூருக்கு வரும் வௌிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், ஒரு கால கட்டத்தில், வேலை வாய்ப்பில் சிங்கப்பூர் பிரஜைகள் தங்களை சிறுபான்மையினராக கருதும் சூழ்நிலை உருவாகும்,' என்றார்.
அமைச்சர் அறிவுரை:
உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க வௌிநாட்டு பணியாளர்கள் தேவை என பல தொழில் நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசி உள்ள அமைச்சர் லிம் ஸ்வி சே, 'வௌிநாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக, உள்நாட்டு யூனி்யன்கள் மூலம் மனித வளத்தை பெற்றும், அரசின் உதவிகளை பெற்றும் தொழில் நடத்த வேண்டும்,' என்று கூறி உள்ளார்.
தமிழர்களுக்கு பாதிப்பு:
சிங்கப்பூர் அரசு வேலைவாய்ப்பு கொள்கைகளை தளர்த்த மறுத்துள்ளதன் மூலம், பல வௌிநாட்டினருக்கு அங்கு பணிபுரியும் வாய்ப்பு பறிபோய் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், பல ஆண்டுகளாக சிங்கப்பூருக்கு சென்று வேலை பார்ப்பது வழக்கமாக உள்ளது. கொள்கைகளை தளர்த்த முடியாது என்ற அரசின் அறிவிப்பால், தமிழர்கள் அங்கு பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment