Friday, 12 June 2015

நமது ஆளுமைத் தன்மையை எவ்வாறு வளர்ப்பது? ஒரு சிறப்பு பார்வை !!

 
நீங்கள் நல்ல ஆளுமையுள்ளவர்களாக மாற விரும்புகிறீர்களா? அதற்கு சில விசயங்களை அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.








மனிதர்களை விரும்புங்கள்..

எந்த மனிதரும் முழுமையாக நல்லவரோ அல்லது கெட்டவரோ இல்லை. எனவே நாம் அவரிடமுள்ள நல்லவைகளை எடுத்துக் கொண்டு அவரை நம்ப வேண்டும். இப்படிச் செய்வதால் அவரும் நம்மீதுஅதே மனோ நிலை கொள்வார், நம்மை மிகவும் மதிப்பவராகவும் மாறுவார்.

புன்னகை செய்யுங்கள்..
மென்மையான புன்னகையின் சக்தி வலிமையானது. யாரைச் சந்தித்தாலும் புன்னகை முகத்தோடு முகமன் கூறும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் புன்னகைத்தால் எதிரிலுள்ள மனிதரும் புன்னகை புரிந்தே தீருவார். ஒன்றிரண்டு பேரைத் தவிரை.

மனிதர்களின் பெயரை நினைவிலிருத்துங்கள்..
நாம் சந்திக்கும் மனிதர்களிடம் அவர்களின் பெயரைச் சொல்லி கூப்பிடும் பழக்கம் வேண்டும்.. நாம் அவரின் பெயர் சொல்வதால் அவரிடம் நாம் நெருக்கமானவர் என்கிற ஆளுமை அவருக்குத் தோன்றும்.










தன்னைப் பற்றிப் பேசுவதை கைவிடுங்கள்.. 
தன்னைப் பற்றிப் பேசுவதை விடுத்து எதிரிலிருப்பவரின் பேச்சை கேட்கும் பழக்கம் கொண்டால் எதிரிலிருப்பவர்க்கு நம்மை மிகவும் பிடிக்கும்.நல்ல கேட்பவராகுங்கள்.

எப்படிச் சொல்கிறோம் என்பதே முக்கியம்...
நாம் பேசும்போது, நம் பேச்சில் தவறு நேர்ந்தால் நாம் sorry என்போம். அதை உண்மையான வருத்தந் தோய்ந்த குரலில் நல்ல உடலசைவோடு சொன்னால் அது எதிரிலிருப்பவரை நிச்சயம் ஈர்க்கும். எனவே நம் உடலசைவுகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும், பணிவையும் நல்லமுறையில் பேணிக் காத்தல் மிக மிக அவசியம். 

மற்றவர்க்கு உதவுங்கள்...
ஒரு அலுவலகம் செல்லும் நேரத்தில் ஒரு விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் அலுவலகம் போக நேரமாகலாம், அதற்காக அவருக்கு உதவிடாமல் சென்றால் அது மனித நேயமாகுமா? சுயநலமற்ற உதவும் போகே ஆளுமைத் தன்மையை வளர்க்கும் அருமருந்து.

அழகாக தோற்றமளிங்கள்..
நமது முதல் அறிமுகம் எதிரிலுள்ளவரைக் கவர வேண்டும். இது மிக மிக முக்கியமானது.உடல் அழகு, ஆடை அழகு என்பதல்ல இதன் பொருள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் சூழ்நிலைக் கேற்றவாறு ஆடை அணியுங்கள். சுத்தமான சுகாதாரமான தோற்றமும், சீரான தலைமுடி அமைப்பும், நகங்களின் சுத்தமும், காலணிகளின் சுத்தமும் எப்போதுமே நமது ஆளுமையை உணர்த்தும்.

எதிரிலிருப்பவரைப் புகழத் தயங்காதீர்கள்..
புகழ்ச்சியை விரும்பாத மனிதரில்லை .எதிரிலிருப்பவரை மனதார உண்மையாய்ப் புகழ்ந்திடுங்கள். பொய்ம்மையாய், செயற்கையாய் இருத்தல்கூடாது.
தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment