Sunday, 7 June 2015

சுவர்க்கத்தில் முஸா அலைஹிஸலாம் அவா்களின் நண்பர் ஒரு கசாப்பு கடைக்காரர் !!

ஒரு முறை இறைத்தூதர்முஸா அலைஹிஸலாம்அவா்கள்  , “சுவர்க்கத்தில்என்னுடைய தோழா் யார்?”
என்று அல்லாஹ்விடத்தில கேட்டார்கள். அப்போதுஇன்ன இடத்திலே ஓருவியாபாரம் செய்யக்கூடியமனிதா் இருக்கிறார் அவா்தான்சுவர்க்கதிலே உங்களுடையதோழர் அவரைச் சென்றுப்பாருங்கள்என்று அல்லாஹ்கூறினான்.

இறைத்தூதர் முஸாஅலைஹிஸலாம் அவர்கள்சென்று அந்த மனிதரை
பார்த்தார்கள். ஆனால் தனக்குஇருக்கும் அளவுக்கு அவா்பெரிய அமல் (வணக்கவழிபாடுகள்) செய்வதாகஇறைத்தூதர் முஸாஅலைஹிஸலாம் அவர்களுக்குதெரியவில்லை. அவரிடம்,

நான் ஓரு நாள்உங்களிடத்திலே தங்கலாமா?”என்று இறைத்தூதர் முஸாஅலைஹிஸலாம் அவர்கள்கேட்டா்கள். அவரும் சரிஎன்றார்.பிறகு வியாபாரத்தைமுடித்துவிட்டு இருவரும்அந்த மனிதருடைய வீட்டுக்குசென்றார்கள். அங்கே அந்தவியாபாரிக்கு தன்னுடைய
எந்த சுயத்தேவையும் செய்யமுடியாத வயது முதிர்ந்ததாய் ஒருவர் இருந்தார்கள்.

குழந்தையைப் போலதொட்டிலில் படுக்கவைக்கபட்டு இருந்தார்கள்.அந்த வியாபாரி வீட்டின்உள்ளே நுழைந்தும் தன்தாய்க்கு உணவு தயாரித்துக்கொடுத்துவிட்டுதொட்டிலை ஆட்டி தூங்க
வைத்துக் கொண்டிருந்தார்.அப்போது அந்த தாயினுடையவாய் ஏதோ முணுமுணுத்துகொண்டிருந்தை இறைத்தூதர்முஸா அலைஹிஸலாம்அவர்கள் பார்த்தார்கள். அந்த தாய்என்ன சொல்கிறார் என்பதைஅருகில் சென்றுசெவியேற்றார்கள்.

அப்போது அந்த அன்பு தாய், “யாஅல்லாஹ்!! நான் முதிந்ததள்ளாமையில் இருக்கிறேன்.என் பிள்ளை எனக்கு இவ்வளவுபணிவிடை செய்துகொண்டிருக்கிறான்ஆகையால் என் பிள்ளையைசுவர்க்கத்திலே உன்னுடையேதூதர் முஸா அலைஹிஸலாம்அவர்களுக்கு தோழனாகஆக்குவாயாக!!” என்றுமனமுருக துஆ செய்துக்கொண்டிருந்தார்கள்.


அப்போது இறைத்தூதர் முஸாஅலைஹிஸலாம் அவர்கள்புரிந்து கொண்டார்கள்.இதனால்தான் அல்லா ஹ் இவரைசுவர்க்கத்திலே எனக்குதோழராக ஆக்குகிறான் என்றுஅல்ஹம்துலில்லாஹ் பார்த்தீர்களா ஒருதாயினுடைய உள்ளம்பொருந்திய பிராத்தனையை.
நம் அனைவரையும்பெற்றோரை மதித்துவாழக்கூடிய மக்களாகஅல்லாஹ் ஆக்கிஅருள்வானாக!! ஆமீன்!!

தொகுப்பு : அ . தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment