ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்றுஎகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சேர்த்து 224 பேருடன் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு பயணிகள் விமானம் சென்றுள்ளது.
- விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ரேடார் உடனான துண்டிப்பை இழந்தது. பின் சினாய் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்தது 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானதுதெரிய வந்தது.
- சினாய் வளைகுடா பகுதியில் மீட்புக் குழுக்கள் விமான சிதிலங்களை கண்டுள்ளன.
- பல ஆம்புலன்ஸுகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளன.
- செங்கடல் கடற்கரை சுற்றுலா நகரான ஷரம் எல் ஷெய்க்கில் இருந்து அந்த விமானம் செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்குக்கு பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது.
- இந்த விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள். விமானத்தில் 7 விமான பணியாளர்கள் உள்பட 217 பயணிகள் இருந்து பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஆவர்.
- ரஷ்ய விமான நிறுவனமான கொகலிமாவியா நிறுவனத்துக்கு சொந்தமானதே இந்த ஏ 321 ரக விமானம்.
- பயணிகளின் உறவினர்களுக்கு உதவுவதற்காக செயிண்ட் பீற்றர்ஸ்பேர்க்கில் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment