Wednesday, 23 December 2015

அலங்காரமாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்ற ஹிஜாபின் நோக்கம் !! ஒரு சமூக பார்வை..

இன்றைய நவீன யுகத்தில் ஹபாயா , மற்றும் ஹிஜாபின் நோக்கம் அலங்காரமாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றது , இது மேற்கத்தியவர்களின் சதி , சூழ்ச்சி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . இஸ்லாம் பெண்கள் வெளியில் செல்லும் பொழுது தமது அழகுகளையும் , அலங்காரங்களையும் மறைக்குமாறு கட்டளையிடும் அதே வேளையில் எமது பெண்கள் இவற்றில் பொடுபோக்காகவும் , அலட்சியமாகவும் நடந்துகொள்கின்றனர் .

face cover என்பது என்னவென்று எமது சகோதரிகள் சரியஹா பூரிந்து கொள்ளவில்லை கரணம் இஸ்லாம் விளங்கதுதான். பெற்றோர்கள்  சொல்வதக்கும் ,கணவன் சொல்வதக்கும் மூடுரான்கேள  ஒழிய சரியான விளக்கம் இல்லை.ஒரு சின்ன உண்மை சம்பவம் எமது முஸ்லிம் 2 சகோதரிகள் M O H ல face cover open பணிகொண்டு இருந்தார்கள் அந்தநேரம் அதில் work பண்ணும் பெரும்பாண்மை சகோதரர்கள் நடமாடும் பொதுகூட பேஸ் கவர்  திறந்து  வைத்துள்ளனர் , ஆனால் எனது கணவர்   (medical rep)போயி டாக்டர் இருக்கிறாரா என்று கேட்டதுதான் தாமதம் இருவரும் உடன் மறைத்து  கொண்டார்கள் . அதனால் முஸ்லிம்கள் பார்க்க கூடாது என்று மட்டும்தான் விளங்கியுள்ளார்கள்.
ஹபாயா(Face Cover) பிரச்சினையில் நாம் யதார்தத்தைப் புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் பேசிக்கொண்டு இறுக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.முழுக்க உடம்பை மறைப்பது என்பது நம் நாட்டைப் பொறுத்த மட்டில் எதிரணியினர் கூறும் காரணங்கள் சரி என்றே தோன்றுகிறது. அடுத்தவன் சொல்லி நாம் கேட்பதா என்றில்லாமல் இது விடயமாக நல்லதோர் முடிவெடுப்போம் சமுதாயத்திற்கு நல்லது நடக்கும் என்றால் விட்டுக் கொடுப்பதில் தப்பில்லை. ஹபாயா அணிவது பெண்களின் அழகை பிறர் ரசிப்பதை,விமர்சிப்பதை தவிர்ப்பதற்காக,இன்று நடப்பதென்ன ? ஹபாயா என்ற போர்வைக்குள் கவர்ச்சி தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது . எதை மறைக்க வேண்டுமோ அவை எல்லாம் தெரியுமளவுக்கு மிக மிக இறுக்கமாக அணிந்து கொண்டு கடைத் தெருக்களில் போவதை வருவதை அவதானிக்க முடிகிறது. நாளுக்கு நாள் வித விதமாக நவ நாகரிக உடைகளையும் மிஞ்சுமளவுக்கு ஹபாயா விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு வருகிறது. வேதனை என்னவென்றால் தந்தை கணவன் சகோதரன் என நெருங்கிய உறவுகள் கூட இந்த அவலத்தை கவனியாது அவர்களும் சேர்ந்து நடை பயிலுவதுதான்.


இன்று ஹபாயாக்கள் விதம் விதமாக தயாரிப்பாகி சந்தையில் , கடைகளில் விற்பனையாகின்றன .. பார்ப்பவர்களின் பார்வைகளை சுண்டி இழுக்கும் வண்ணம் அமைந்திருப்பது தான் மன வருத்தம் தருகின்றது .

இறுக்கமான , ஒட்டிய ஹபாயாக்கள் ...
 இவற்றை அணிவதும் ஒன்றுதான் ஆடையின்றி நிர்வாணமாக ,பிறந்த மேனியுடன் வெளியில் செல்வதும் ஒன்று தான் , ஏனெனில் இவற்றை அணிவதால் பெண்ணின் ஒவ்வொரு அவயவங்களும் பார்ப்பவர்களுக்கு அவற்றின் அளவுகளோடு படம் பிடித்து காட்டுகின்றன. இதனால் இப்பெண்கள் மற்றவர்களை விபச்சாரத்திற்கு ஆளாக்குகின்றனர் . 
இரு புறங்களிலும் வெட்டிய  டிசைன்ஸ்  ... 
ஹபாயா என்பது முழுக்க மறைக்க உள்ள ஒரு இஸ்லாம் ஏவிய ஆடை முறை ஆனால் இன்று அந் நோக்கம் திசை மாறி இருப்பதை எல்லோராலும் அவதானிக்க முடிகின்றது , வெட்டப் பட்டிருக்கும் பகுதிகளில் அவளது அழகு, கால்கள் தென்பட்டு ஏனையோரை பாவத்திற்கு உள்ளாக்குகின்றாள்.

ஹபாயா முழுவதும் மின்னும் டிசைன்ஸ்  ... , 
பெண்ணில் பால் பார்வைகளை பறிக்கும் அலங்காரங்கள் . ஹபாயா இன்று அலங்காரங்கள் , டிசைன்ஸ் நிறைந்ததாக காட்சியளிப்பது , இஸ்லாம் விதித்துள்ள சட்ட விதி முறைக்கு முரனானது . இவற்றை தைப்பவர்கள் , ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் , கடைகளில் விற்பனை செய்பவர்கள் , அதனை தம் மனைவிக்கு , பிள்ளைகளுக்கு , சகோதரிகளுக்கு வாங்கிக் கொடுப்பவர்கள் , அத்தோடு இவற்றை அணிந்து வெற்கமின்றி வெளியில் உலாவும் பெண்கள் அனைவருக்கும் இப்பாவம் வந்து சேரும் அதாவது விபச்சாரத்திற்கு உடந்தையாக ,உதவியாக இருந்த குற்றம் நிச்சயமாக அனைவரையும் வந்து சேரும் எனவே அனைவரும் இவ்விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் வல்லவன் அல்லாஹ் எமது பெண்களை இவ்வாறான இழிவான செயலில் இருந்து பாதுகாப்பானாக .

 அக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment