Saturday, 5 December 2015

சென்னையைச் சுற்றிலும் வெள்ளம் ஏற்படக் காரணம் என்ன? ஒரு சிறப்பு சமூக விழிப்புணர்வு பார்வை ..

சென்னை புறநகர்ப் பகுதியில் சாலைப் பாலங்களை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்.
வளசரவாக்கம் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளத்தைக் கடந்துசெல்லும் மக்கள்.
கடந்த சில நாட்களாக சென்னனயில் பெய்த கடும் மழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால்  சென்னை நகரத்தின் பெரும் பகுதி இன்னமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றது.
இலட்சக்கணக்கான மக்களை அநாதரவாக்கியுள்ள வெள்ளம், இன்னமும் வடியாத நிலையில், நேற்று முற்பகல் சற்று மழை ஓய்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன்.
இந்நிலையில் மீண்டும் நள்ளிரவில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது.
சென்னை மாநகருக்குள் புகுந்த வெள்ளநீர், சென்னையைச் சுற்றிலும் சுமார் 80 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வெளியேறிய நீர் என்பதை அதிகாரிகள் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கி வரும் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரி, ஆறுகள்தான். இவற்றிலிருந்துதான் நீர் செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் ஏரிகளுக்குச் செல்கிறது. 
 கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. 
 அப்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்த உபரி நீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூர், மணிமங்கலம், பீர்க்கன்கரணை, இரும்புலியூர், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய ஏரிகளில் இருந்தும், பீர்க்கன்கரணை, சதானந்தபுரம், மேற்கு தாம்பரம், புலிக்கொரடு ஆகிய வனப்பகுதிகளில் இருந்து தேக்கி வைக்கப்படாமல் வெளியேறிய காட்டாற்று வெள்ளமும் தாம்பரம்,பெருங்களத்தூர் ஆகிய ப சென்னை புறநகர்ப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
 இறுதியாக தாம்பரம் பாப்பான் கால்வாய் வழியாக அடையாற்றில் திறந்து விடப்பட்டபோது,செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் காரணமாக தாம்பரம் பகுதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் அடையாற்றில் செல்வதில் தடையை ஏற்படுத்தியது.

 இதனால் தாம்பரம் புறநகர் பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அப்போது சென்னை மாநகருக்குள் அடையாறு வழியாக வெளியேற்றப்பட்ட வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அண்மையில் பெய்த மழை காரணமாக சென்னையைச் சுற்றிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளம், ஏற்கனவே பெய்த மழையால் நிரம்பி வெளியேறிய மழை வெள்ளம் குடியிருப்புகளில் புகுந்தது.
 எனவே சென்னை மாநகருக்குள் புகுந்த வெள்ளநீர், சென்னையைச் சுற்றிலும் சுமார் 80 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏரி,குளங்களில் இருந்து வெளியேறிய நீர் என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ளவேண்டும். இதை மனதில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


சென்னையில் இன்று காலை முதல் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தது. வானிலை ஆய்வு மையமும், சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது என்றும், விழுப்புரம், கடலூர், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்தது. இந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டிவருகிறது.இதனால்  இடம்பெயர்ந்த மக்களும் உயரமான கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களும் அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.
உணவு, குடிநீர், மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூக வலைத்தளங்கள்  பெரும் பங்காற்றி வருகின்றன.
இதில் ஏராளமான தனிநபர்கள், அமைப்புக்கள், கட்சிகள் எனப் பலரும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர்.வெள்ளப் பேரிடரால் சென்னையை விட்டு சிலநாட்கள் வேறுஊருக்குச் சென்று பாதுகாப்பாக இருந்துவிட்டு வரலாம் .

சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பினரும் பணம் உதவி மற்றும் பொருள் உதவி செய்கின்றனர். பாரத பிரதமர் 1940கோடி‬ ரூபாய் மத்திய அரசின் கீழ் கொடுத்துள்ளார்.எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் திரு ‪‎சகாயம்‬ IAS அவர்களின் தலைமையில் குழு அமைத்து நிவாரண பணிகளை செய்ய உத்தரவு வழங்க வேண்டும் ,அப்போது தான் அனைத்து மக்களுக்கும் நிவாரணம் சென்று அடையும் .இது எனது தனிப்பட்ட கருத்து .இதை முடிந்த வரை பகிருங்கள்.தமிழ்நாடு முழுவதும் விரைவில் சென்று அடையும் 


எனவே அரசாங்கம் செய்ய வேண்டியவை, 

1. மெட்ரோ ரயிலுக்காக வாங்கிய துளையிடும் கருவியை கொண்டு, அண்டர் கிரௌண்ட் ஏரிகளை உருவாக்க வேண்டும்..அதாவது, ஒரு ஏறி செல்லும் பாதையில், ஒரு நகரம் இருந்தால், அதன் அடியில் நீர் ஓடுமாறு செய்தல்..

2.அண்டர் கிரௌண்ட் கழிவுநீர் வடிகள் திட்டத்தை உள்ள நகரங்களில், கழிவறை நம்பர்களுக்கு ஏற்ப்ப ஒரு வரி விதித்து, வாரா வாரம், லாரியில் அவற்றை எடுத்து செல்ல வேண்டும். 

3. இனிமேல் ஊழியர்கள் அதிகம் தேவை படும் நிறுவனங்களை சென்னையில் அனுமதிக்க கூடாது..

4. ப்ரொபஷனல் டேக்சை சம்பளத்திற்கு அடிபடியில் பெர்செண்டேஜாக பிடிக்க வேண்டும்.

5. ஒவ்வொரு ஊழியரும் தங்கள் வோட்டர் ஐ டி கார்டை நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்..அந்த அந்த தொகுதியை சேராத ஊழியருக்கு ஒரு செஸ் விதிக்க வேண்டும்..இது இந்தியா முழுக்க கொண்டு வர வேண்டும்..அது வரை, தமிழகம் செராதவருக்கு இது விதிக்க பட வேண்டும்..

6. மக்கள் தொகையை பரவல் ஆக்கவேண்டும்.. 

7. 600 அல்லது 700 சதுர அடிக்கு மேல் ஒருவருக்கு தனி வீடு கட்ட நிலம் கொடுக்க கூடாது..அப்போது தான், இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லோரும் வீடு பெறுவார் அது போக, காடுகள், நதிகள், மலைகள், விலங்கின வாழிவிடங்கள் தொழிற்பேட்டைகள் அமைக்க முடியும்..

8. புருஷர்த்கங்களை லக்ஷ்யமாய் கொண்டு வாழ வேண்டும்..இறைவனை நோக்கிய பயணமும், இயற்கையோடு ஒன்றுதலும் ஒரே பாதையில் இருக்கும் இரண்டு லக்ஷ்யங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

9. நீதி மன்றங்கள் அமைப்பது போல் ஒவ்வொரு மதத்திற்கும், ஒரு பரிஷத்தை உருவாக்க வேண்டும்..மத ரீதியாக ஒருவர் தவறு செய்தால் பிராது கொடுக்க அதை பயன் படுத்தி கொள்ளலாம்..இதன் மூலம், ஒருவர் பாவம் செய்தால் அதை தடுத்து, அது யாரையும் பாதிக்கா வண்ணம் செய்து விடலாம்..

10. உள்நாட்டில் இருக்கு கருப்பு பணத்தை ஒழிதல், வெறும் முதலீட்டிற்காக வாங்க படும் நிலதிர்ர்க்கு அதிக சொத்து வரி, கேஷ் நம்பரை ஆதாரமாக கொண்ட கேஷ் அக்கௌண்டிங் போன்றவற்றை கொண்டு வரவேண்டும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment