Sunday, 6 December 2015

சென்னை மழைவெள்ள நிவாரணப் பணிகள் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை...

இயற்கை பேரழிவினால் தமிழக மக்கள் சொல்லொணாத்துயரம் அடைந்தனர். பட்ட கஷ்டங்கள் ஒன்றா இரண்டா? பலர் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே ஜல சமாதி அடைந்துள்ளனர். முறையான எச்சரிக்கை ஏதுமின்றி ஏரிகள் திறந்துவிடப்பட்டன என்பதே இத்தகைய கொடுமைகளுக்கு காரணம்.எல்லாம் முடிந்துவிட்டன.தற்போது பற்பல தொண்டு நிறுவனங்கள் கருணை உள்ளம்கொண்டு பற்பல நிவாரணப்பொருட்களை மனமுவந்து கொடுத்து வருகின்றனர்.வெளி மாநிலங்களிலிருந்தும் குவிகின்றன. அவற்றை முறையாக பெற்று பொறுப்புள்ள அரசு அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? 

மக்கள் முதலில் அரசியல் வாதிகள் பின்பக்கம் கொடி பிடிப்பதை நிறுத்துங்கள். ஒவ்வொரு மனிதனின் அடையாளம் இப்பொது ஒரு கட்சி என்றாகி விட்டது. நடிகர்கள் வந்தால் அவர்கள் பின்னல் போவதும் கட்சி மாநாடு என்றால் கோடி பிடித்து போவதையும் அனைவருமே நிறுத்துங்கள். உங்கள் வாழ்கையின் நிமிடங்களை வீணாக்காதீர்கள். என் தலைவன் உன் தலைவன் என்ற பேச்சை ஒழியுங்கள். சென்னை ஒரு உதாரணமே.. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஆபத்து இருக்கிறது. அதில் முன்னால் ஆளுங்கட்சியினரின் பங்கும் இந்நாள் ஆளுங்கட்சியினரின் பங்கும் நிறையவே இருக்கிறது.  
கடந்த 100 ஆண்டுகளில் இப்படியோர் மழையை பார்த்ததில்லை என்று தெரிந்தும் அதை மறைத்தும் மறந்தும் போய் விட்டார்கள். 1990க்கு பிறகு நகரங்களின் வளர்ச்சி கட்டுக்கடங்காமல் உள்ளது. ரியல் எஸ்டேட் காரர்கள் செங்கல்பட்டையே சென்னை என்று கூறி விற்றபோதும் இன்று கூப்பாடு போடும் அத்தனை தொலைகாட்சிகளும் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை ஒளிபரப்பி காசு பார்த்த போதும் சமூக பொறுப்புணர்வு எங்கே போயிருந்தது? இவர்களின் விளம்பரங்களை பார்த்து எதை பேர் இடம் வாங்கி வீடு, கட்டடம் என்று கட்டியிருப்பார்கள்? இன்று ஆறு ஏரிகளில் ஆக்கிரமிப்பு என்று குற்றம் சாட்டுபவர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் போது ஏழை மக்களை துன்புறுத்துவதாக அப்போதும் குறை கூர்வார்கள் என்பதையும் இன்று வெளுத்து வாங்கும் வாசக நியாயாதிபதிகள் அப்போது ஏழை பங்காளர்களாக மாறி அதையும் குறை கூறுவார்கள் என்பதை மறுக்க முடியுமா?


 நகரங்களில் சாலை அமைக்கும்போது மேல்நாடுகளில் முன்பு போடப்பட்ட சாலையை துப்புரவாக அப்புற படுத்திய பிறகு அந்த இடத்தில புதிய சாலை அமைக்கிறார்கள். ஆனால் இங்கே பழைய சாலையின் மீது தாரையும் ஜல்லியையும் கொட்டி சாலையை உயர்த்தி அமைக்கிறார்கள். 25 ஆண்டுகளில் சாலை மட்டம் 3 முதல் 4 அடி அதற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. அதனால் 4 அடிக்கு கீழே செல்ல வேண்டிய வெள்ள நீர் மேடு படித்தியதால் சாலை மட்டத்தை விட கீழே சென்றுவிட்ட வீடுகளுக்குள் போகிறது. இந்த தவறு காலம் காலமாக நடந்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை மக்கள் தங்கள் வீட்டு அருகில் இருக்கும் கழிவு நீர் போக்கியில் கொட்டியதால் ஏற்பட்ட அடைப்புகளால் வெளியே கழிவு நீர் செல்வது சாதாரண காலத்திலேயே நாம் காண்பதுதான். நகரத்தில் குடியேறும் அனைவரும் நகருக்குள்ளேயே வீடு வேண்டும் என்று நினைக்கும்போது அந்த நகரம் எவ்வளவுதான் தாங்கும்? பெங்களூரை உதாரணம் காட்டுவார்கள். அது தக்காண பீட பூமி என்கிற மேடான பரப்பில் அமைத்த நகரம். இயல்பாகவே வெள்ளம் வடியும் வாட்டத்தில் அதன் அமைப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்த வரை கடற்கரை நகரம். அடையாறு, கூவம் என்று அனைத்து நதிகளும் ஏரிகளின் உபரி நீரும் கடலில் கலக்க கடலை நோக்கி வரும் வழியில் சென்னை இருக்கிறதே ஒரு நாளில் 30,50 செ.மீ. என்கிற அளவில் மழை பெய்தால் சென்னை மட்டுமல்ல எந்த ஊரானாலும் இந்த நிலைதான் ஏற்படும். மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம் போல அரசுக்கும் இது புதிய அனுபவம்தான். அரசிடம் குறைகள் இருக்கின்றன. ஆனால் நிவாரண பணிகளை சரியாகத்தான் செய்கிறது. பெரிய தலைகளின் ஆக்கிரமிப்பை பற்றி பேசும் நபர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். பெரிய மனிதர்கள் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்தால் சாதாரணமானவர்கள் அவர்களின் இடத்தை சுற்றியுள்ள சிறு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து, சாலையை ஆக்கிரமிப்பு செய்து தங்கள் பரப்பை விரிவாக்குவது நடக்கிறதா இல்லையா? 

நேர்மையின்மை என்பதும் பொதுநலம் இன்மையும் ஊறிப் போய்விட்டது. நம்மிடமிருந்துதானே நமது மக்கள் பிரதிநிதிகள் உருவாகிறார்கள் தங்கள் பகுதியில் அக்கம்பக்கத்தை முடிந்தவரை ஆக்கிரமிப்பு செய்ததால் எத்தனை ஆயிரம் வழக்குகள் உள்ளன என்று நீதிமன்றங்களில் போய்ப் பாருங்கள் தெரு குழாய்களில் தண்ணீர் போய் கொண்டு இருந்தால் அதை அடைக்க போவதில்லை. மாறாக இந்த அரசு என்ன செய்கிறது இந்த தண்ணீர் குழாயை கூட அடைக்காதா என்று கேட்பதுதான் நமது வழக்கம். தன் வீட்டை சுற்றி ஓடும் சாக்கடையில் உள்ள சிறு தடங்கலை அடைப்பை எடுக்க மாட்டார்கள். அதை எடுக்க மாநகராட்சி நகராட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடி கூடி பேசுவார்கள். அந்த சிறு அடைப்பு போக போக பெரிதாகி சாலையில் ஓடும். நமது ஊடகங்கள் கேமெரா, மைக்குடன் வந்து விடுவார்கள். மக்களும் டிவியில் முகம் தெரியும் ஆவலில் அந்தந்த ஊடகங்கள் சொல்லிக் கொடுக்கிற மாதிரி அந்த துன்பத்தை சிரிப்புடன் சொல்லிக் கொண்டு இருக்க பின்னணியில் ஒரு கூட்டம் சிரிப்புடன் அந்த துன்பத்தை காண்பதை அடிக்கடி காணலாம். இப்போது கூட ஊடக காரர்கள் சென்னை மழையை விற்று வியாபாரம் பார்த்த நேரத்தில்.... சமூக அக்கறை இருந்து இருந்தால் அங்கே போன மைக், கேமரா காரர்கள் பாதிக்க பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை உணவு என்று எதையேனும் கொண்டு சென்று கொடுத்து இருக்கலாம். ஆனால் அது அவர்களின் நோக்கம் அல்ல. மாற்றானின் துன்பத்தை விற்று காசாக்குவதுதன் அவர்களின் நோக்கம். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்த ஊடகங்கள் இதுவரை என்ன நிதியை கொடுத்தார்கள்? கொடுத்தவனை விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். என்ன உதவி செய்தார்கள். மருந்து கொடுத்தார்களா? உணவு கொடுத்தார்களா? போர்வை கொடுத்தார்களா? ஆனால் போட்டோ எடுத்தார்கள். பேட்டி எடுத்தார்கள். சொல்லலாம். சொல்லிக்கொண்டே போகலாம். தன் முகத்தில் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவரை காட்டி சிரிக்கும் இனம் எங்கும் இருக்குபோது இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

இந்த வெள்ளப் பேரிடர் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் வந்ததென்று சொல்வதை விட, ஆட்சியாளர்களின் கவனக் குறைவாலும் அலட்சியப் போக்கினாலும் வந்ததென்று சொல்வதுதான் சரியாகயிருக்கும். நடந்தது தொடர்ந்தார்ப் போன்ற சாதாரண கணமழை கடற் சீற்றமோ அல்லது பூகம்பமோயில்லை.பெய்த மழைநீர் சரியாக வெளியேறக் கூடிய கட்டமைப்பு வசதிகளில்லை. இவையெல்லாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் செய்தத் தவறுகள்தானே. 

தமிழகத்தில் உள்ள கிராம நிலங்களை அப்போது கிராம மணியகாரர், ஊராட்சி மன்றத் தலைவர், கணக்குப்பிள்ளைகள் கவனித்து வந்தார்கள். ஊர் பொதுமக்கள் நீர் நிலைகள், பொது இடங்களை யாரும் ஆக்கிரமைப்பு செய்யாமல் பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக நீர்வரத்து கால்வாய், வடிகால் கால்வாய், ஏரி, குளங்களை மழைக் காலத்திற்கு முன்பாகவே தாங்களாகவே வீட்டிற்கு ஒருவர் என வந்து தூர் வாரி ஆழப்படுத்துவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அட்சிக் காலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர், அவர்கள் ஊரில் இருக்கமாட்டார்கள். ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாமலேயே வெளியூர் காரர்களுக்கு அரசு நிலத்தை சொற்ப இலஞ்சப் பணத்திற்காக சொந்த பந்தங்களுக்கு பட்டா செய்து கொடுத்துவிடுவார்கள். அவர்கள் அநத் ஊரில் இருப்பது ஒரு வருடத்திற்கும் குறைவாகன காலமே. அடுத்து வேறு ஒருவர் பணிக்கு வருவார். அவர் மீதி உள்ள இடங்களையும் நீர் பிடிப்பு பகுதிகளையும் இதேபோல் பணம் பெற்றுக் கொண்டு ஆக்கிரமைப்பு செய்ய அனுமதித்துவிடுவார். இதை ஊரில் உள்ளவர்கள் யாரும் கேட்க முடியாது. ஏனெனில் அவர்கள் பொய்யான பட்டா வைத்திருப்பார்கள். எனவே வருவாய்த்துறை, நில அளவைத்துறையினர் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். அவர்களுக்கு தெரியாமல் யாரும் ஆக்கிரமைப்பு செய்ய முடியாது. அதேபோல் கோடைக்காலங்களில் ஏரி, குளங்கள் வறண்டு இருக்கும், விவசாயிகள் அந்த வண்டல் மண்ணை எடுத்து தங்கள் நிலங்களில் எருவாகப் பயன்படுத்துவார்கள். ஏரியும் தூர் வாரியதைப்போல இருக்கும். ஆனால் அரசின் தற்போதைய சட்டங்களால் ஒருபிடி மண்ணைக்கூட ஏரியில் ஒரு விவசாயி தொடமுடியாது. தொட்டால் ரூ.30,000/- அபராதம், அதற்கு சமமான இலஞ்சம் கொடுக்க வேண்டும். இதுதான் தற்போதைய ஆட்சி. ஏரிகளை தூர்வார டெண்டர் விடுவதால் அதில் 40% வேலை மட்டுமே நடைபெறுகிறது. மீதித் தொகை எங்கு செல்கிறது என்பது அனைவரும் அறிந்தது. உண்மையில் பணிகள் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் கிராம அளவில் ஒரு குழு அமைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சென்னை மக்கள் இந்த சூழ்நிலையில் வாடுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் தான். ஆனால் இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறி கொண்டிருப்பது அறியாமை என்பது என் கருத்துஇந்த வெள்ள பேரபாயம் ஒரு கடுமையான எச்சரிக்கையை தந்திருக்கிறது. இனி மேலும் இந்த எச்சரிக்கையை அதிகாரிகள் மட்டுமின்றி, அரசியல் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த வாதம் வரும்.இதில் ஒரு நல்ல படிப்பினை என்னவென்றால் பணக்காரனுக்கு ஏழை சோறிடுகிறான். அணைத்து மக்களும் ஜாதி , மதம்,இனம் மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டிருகின்றனர். அண்டை மாநில மக்களும் உதவிசெய்து கொண்டிருகின்றனர். இதுதான் உண்மையான தேசிய ஒருமைப்பாடு. 

பணம் படைத்த மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!!
என்னதான் பணம் இருந்தாலும் இதுபோல் ஒரு இக்கட்டான சமயத்தில் எதுவும் உங்களுக்கு உதவாது.உண்மையான அன்புடன் ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்றுமே நிலைக்கும். ஆகவே இந்த நிலை மாறியவுடன் நீங்கள் சேர்த்து வைத்து இருக்கும் பணத்தை எதாவது ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவுங்கள். வாழ்க இந்தியா. வளர்க மானுடம். முக்கியமாக பொதுமக்கள் மிகவும் சீரியஸாக எடுத்துகொள்ள வேண்டும். வெறுமனே அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினைக்கு குறைகளை சொல்லாமல் பொதுமக்கள் தங்கள் கடமையை உணரவேண்டும். யாரையும் குறை சொல்லாதிர்கள். குறை சொல்ல நேரம் இதுவல்ல. துணிச்சலாக கடமையாற்றும் இந்த மனிதர்களை பாராட்டி வணங்கத்தான் வேண்டும். பாராட்டுக்கள், வணக்கங்கள்,


இனிமேலாவது தமிழக மக்கள் சிந்திப்பார்களா?இனிமேலும் யாரையும் நம்பி எந்த பயனும் இல்லை. நாம் முதலில் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும்.இயற்கை தந்த விழிப்புணர்வு பாடம். இனியாவது விழித்துக் கொள்வோம். இன்று தனி மனித நேயமே மக்களை காப்பாற்ற வேண்டிய சூழல். மனித நேயத்தையும் மறந்து மக்கள் சக்தியை மதிக்காத சற்றும் லாயக்கற்ற அரசியல் வாதிகளை மாக்களாக வெறுத்து ஒதுக்க வேண்டிய தருணம்...இந்த தவறுதலுக்கு நாமும் தான் பொறுப்பேற்க வேண்டும்,,, ஏனென்றால் நம்மிடமும் ஒற்றுமை இல்லையே, தவறை எப்போதும் சுட்டி காட்ட நினைப்பதில்லை,, அது ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர் கட்சியாக இருந்தாலும்,,, பொது பிரச்சினைகளை தன பிரச்சினையாக நினைக்கும் வரை எந்த ஒரு பிரச்னைகும் தீர்வு கிடைக்காது..

நமது மக்களின் ஞாபக மறதி இவர்களுக்கு சாதகமாகி விட்டது. இன்னும் 2-3 மாதங்களில் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு 500க்கும் 1000க்கும் வாக்கை விற்று விடுவார்கள். தொகுதிக்கொரு எம். எல். ஏ இருக்கிறார். அந்தந்த தொகுதியில் இதுபோன்று இடர்பாடுகள் ஏற்படும்போது அவர்கள் மக்களோடு அங்கு இருந்திருக்க வேண்டும். வார்டுக்கு வார்டு கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வார்டுக்கு சென்றிருக்க வேண்டும். நகர் மன்றத்தலைவர் உத்தரவுகளை விரைவாக செயல்படுத்தியிருக்க வேண்டும். அரசு பேரிடர் உதவியான தீயணைப்புத் துறையினர் மாநில முழுவதிலுமிருந்து விரைந்து வந்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகக் குழுவினர், போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு, மக்களுக்கு உணவு மற்றும் உறைவிட மாற்றுப் பணிகளை துரிதப்படுத்தியிருக்க வேண்டும்.

எங்கே இவர்கள் ?
 நகர் மன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள், எம் எல் ஏ க்கள், மந்திரிகள் அதிகாரிகள் இப்படி அனைவருமே இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில், உடனடியாக, மிக துரிதமாக களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அதிரடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மாநில முதலமைச்சர் விரைந்து ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், மழை கடுமையாகப் பெய்தது, ஏரிகளுக்கு செல்லவேண்டிய மழைநீர், வீடுகளுக்குள்ளும் சாலைகளிலும், பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் ஓலம் வெளியில் கேட்கக்கூட முடியாத அளவிற்கு, மழைவெள்ளம் மக்களை வதைத்து எடுத்தது. ரமணன் எப்போதும் போலவே வானிலை அறிக்கையை வாசித்துக்கொண்டிருந்தார். அதில் துளியும் துல்லியமில்லாமல் இருந்தது, வெட்ட வெளிச்ச்சமாகிக் கொண்டிருந்தது. சென்னைக்குள்ளேயே அஷ்ட சாஸ்திர வித்தைகளையும் கற்றுத் தேர்ந்த, ஆயிரம் வருடங்களுக்கு பின் நடக்கப் போவதையும், நாளை அரசியலில் இவர் ஜெயிப்பார், அவருக்கு கட்டம் சரியில்லை, நாளைய சூப்பர் ஸ்டார் இவர்தான், அவருக்கு நான்தான் ஜாதகம் கணித்துச் சொன்னேன், இவர் வெல்வார், அவர் தோற்பார் என்று ஜோதிடம் சொல்லியே பிழைப்பை ஓட்டி, பெரும் தனங்களை, தங்களின் வசப்படுத்திக்கொண்டிருந்த அற்புத ஜோதிட சிகாமணிகளும், சென்னையின் மழைவெள்ளத்தில் சிக்கி செய்வதறியாது திகைத்துப் போனார்கள். விஞ்ஞானத்தை மட்டுமே முழுமையாகக் கொண்டு பகுத்தறிவு பேசும் கறுப்புச் சட்டைகள் இதைப்பற்றி ஏதும் பேசமுடியாமல் சுருண்டுவிட்டார்கள். செய்தித்தாளில் அறிக்கைகளை விட்டும், கேள்வி பதில் என்றும் எழுதிய ரொம்பப் பழுத்த அரசியல்வாதிகளும், மதுவிலக்கு எங்களின் முதல் கையெழுத்து என்று முழக்கம் செய்தவர்களும், புஜம் துடிக்க, தோள் உயர்த்தி வீர வசனம் பேசியவர்களும், நாளைக்கு என்னோடு கூட்டணி வைத்தால்தான் அரசு அமையும் என்று காத்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களும், தங்களது கட்சி உறுப்பினர்களைக் கொண்டு, மக்களைக் காப்பாற்றும் பணியில் இறக்கிவிட ஆணையிடவில்லை. மேலிருந்து விழும் பெண்ணொருத்தியை சட்டை வீசிக் காப்பாற்றிய நடிகர் முதற்கொண்டு, ஒரு குத்தாட்டத்திற்கு நாற்பது லட்சம் வாங்கிய நடிகைகளும், அதனை அவர்களுக்கு கொடுத்தாவது ஒரு ராத்திரி பார்த்துவிடக்காத்திருந்த சில்லறை வெடிகளும் கூட, உதவி செய்ய மனமின்றி வீடுகளுக்குள் முடங்கிப் போய் படுத்திவிட்டார்கள். பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் வந்துவிடத் துடித்து, கச்சாடாவே தனது அரசியல் போக்கு என்று உளறிக்கொட்டிய அரசியல் வியாதிகளும், அவரது புஷ்புஷ்க்களும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. இதனை பயன்படுத்தி சில எதிர்கட்சி ஊடகங்கள், தங்களின் கட்சித்தலைமையின் ஆணைக்கிணங்க, மழை வெள்ளத்தை வைத்து செவ்வனே அரசியல் செய்துகொண்டிருந்தனர். இங்கு இப்படித் தவிக்கிறார்கள், அங்கு அப்படி வெள்ளமாய் இருக்கிறது என்று மக்கள் எல்லோருமே, ஆளும் அரசை குற்றம் சுமத்தும்படியாகவே பேட்டிகளை அமைத்துக் கொண்டார்கள். அரசுத்துறையின் பேரிடர் பணிக்குழு விரைவாக வரவில்லை. அரசியல் கட்சித்தலைவர்களில் சிலர் மழைநீரில் இறங்கி பமாத்து செய்துவிட்டுப் போயினர். எந்தக் கட்சியினரும் துரிதமாக களத்தில் இறங்கவில்லை. இவர்களுக்குப் பெயர் மக்கள் பிரதிநிதிகளாம். இப்படி, அதிகார வர்க்கங்கள், ஆளும் கட்சியினர், எதிக்கட்சியினர், நடிகர்கள், வியாபாரிகள், மக்களை சுரண்டிப் பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்கள் என அனைவருமே இந்த மழை வெள்ளத்தின் போது மக்களெல்லாம் பரிதவித்து நின்றதை, குளிரூட்டும் அறைகளில் அமர்ந்தபடியே, சப்பாத்தியும், வேர்க்கடலையும், சாயாவும், ப்ரூவும், கோலாவும், பாயாவும், பீரும், பப்சும், பீசாவும், பர்கரும், சுடச்சுட சிக்கன் பிரியாணியும், கிரேவியும் சாப்பிட்டபடியே தொலைகாட்சி வழியாக, மழை வெள்ளக் காட்சிகளையும், அதனை அடுத்தபடத்தில் எப்படிக் கோர்க்கலாம் என்றும் யதார்த்த சினிமா மனத்தோடு, திரைக்களைஞர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில், தன் கையே தனக்குதவி என்று, எங்கு காணினும் மக்களே மக்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர். வெகு ஜனங்களால் வேறென்ன செய்ய முடியும்? சாதாரண மக்கள், மேற்கண்ட எக்ஸ்பெர்ட்களிடம் சிக்கி, எப்போதும் ஏமாந்து நிற்கும் சோணகிரிகள் தானே?.நமக்கு சேவை செய்யத்தான் அவர்கள்!!

மாறாக அவர்களுக்கு நாம் அடிமையாய் இருக்கிறோம். நமது உரிமையை நாமே மீட்டெடுப்போம்.அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் வானத்திலிருந்து இறங்கிவந்த வானவர்களல்ல, நாம் கொடுக்கும் வரியை சம்பளமாக வாங்கிக்கொண்டு நமக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களே.... அவர்களுக்கு,மக்கள்மேல் எப்போதும் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.. அப்போதுதான்,நல்லாட்சி நடைபெறும்.........( ஒரு விதத்தில், பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போட்ட நமக்கு, இப்படி அமைச்சர்களை மறித்து, கேள்விகேட்க தகுதியே இல்லை என்பது வேறு விஷயம் )...... ஒட்டு நமது உரிமை ...அதை விலை பேசாதீர்...மேலும் ஓட்டிற்காக கொடுக்கப்படும் லஞ்சம் "இலவசம்" அதையும் புறக்கணிப்போம் . அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் எதிர்பார்க்காமல் சிந்தித்து ஒட்டு போட வேண்டும் .சமூகததின் மீது அக்கறை கொண்ட, எத்தனையோ பேர் இன்றைக்கும் தன்னால் முடிந்த உதவி செய்துகொண்டுதான் இருகிறர்கள்... விளம்பரத்திற்காக அல்ல... அதை நாம் உணர்ந்து அவர்களுக்கு முதலில் வாய்ப்பு தருவோம்... காசுக்கு விலை போகாமல் நமது ஓட்டை நல்லவர்களுக்காக பயன்படுத்துவோம்...நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் இயற்கை சீற்றம் ஓடோடி வருவார்கள் - பணம் வாங்கி ஒட்டு போடும் முறையை கைவிடுங்கள் இலவசம் வேண்டாம். மக்கள் நலன்காக்க போராடும் நல்லவர்கள் நாட்டுக்கு தேவை /பாடுபடும் செயல்வீரர்களை தேர்வு செய்து  நல்லவர்களுக்கு உங்களுடைய வாக்கை செலுத்துங்கள்.புரட்சி வெடிக்கட்டும், புது பாதை பிறக்கட்டும்... 2016 மக்களுக்கு நல்ல வருடமாக ஆரம்பமாகும் இறைவனை வேண்டுவோம்..

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment