கறுப்பு பணத்தை ஒழிக்கிறோம்... ஐம்பதே நாட்களில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு விடிவுகாலம் என நவம்பர் 8ம் தேதி இரவு முதல் சொல்லத்தொடங்கினார்கள். அன்று முதல் ஓலங்கல் மட்டுமே ஒலிக்கிறது. மங்கல இசைகளை காணவில்லை. அப்போதே சொன்னோம் இது நிர்வாகத்தின் கையாலகதனத்தை காட்டும் வேலை என்று... இல்லை பண மழை கொட்டும்.. கறுப்பு பணம் வரும்.. விலைவாசி குறையும் என ஆருடம் சொன்னார்கள் தொலைக்காட்சி சமூக ஆர்வல ஜோதிடர்கள்.
இப்போதும் அதன் கோர நாக்குகள் நம்மை தீண்டிக்கொண்டே இருக்கிறது... பெட்ரோல், எரிவாயு உணவுபொருட்கள் விலையேற்றம் என ? அப்படியெனில் பண மதிப்பிழப்பில் என்ன நடந்தது... ? ஒன்றுமே நடக்கவில்லை... முட்டாள்களின் செயலால் மக்கள் தங்கள் சேமிப்பை இழந்துள்ளார்கள். வங்கிகளின் வாரக்கடன் குவிந்திருக்கிறது.வங்கி வந்த பணம் எல்லாமே செல்லாது. அதை கணக்கு வைத்து திரும்ப கொடுக்க வேண்டும். கொடுக்க முடியவில்லை.
ஸ்வைப்கார்டு பயன்படுத்துங்கள் என்ற மத்தியரசின் புரோக்கர் வேலையை மக்கள் ஏற்கவில்லை. அது தன் சேமிப்பை புடுங்குமென அறிந்துவிட்டார்கள். இது மத்தியரசின் மோடியின் தோல்வி. வாராக்கடன், நிதி ஆதாரங்கள் இழப்பு என வங்கிகள் தள்ளாடுகிறது. இன்னும் சொல்லப்போனால் வங்கிகளின் பண வரவு பல்வேறு விதங்களில் முடங்கி இருக்கிறது. மிகச்சாதரணமாக உற்று நோக்கலாம்... எல்லா தொழில் துறைகளும் முடங்கியிருக்கிறது. ரியல் எஸ்டேட் முதல் விவசாயம் வரை. விளைவு வங்கிகள் மக்களிடம் புடுங்க தொடங்கிவிட்டது.
எடுத்தால் பணம், கார்டில் பொருள் வாங்கினால் பணம், இவ்வளவு இருக்க வேண்டும்.... இதற்கு மேல் இருக்க கூடாது... இவ்வளவு எடுத்தால் இவ்வளவு கட்டு... என மக்களிடமே புடுங்கி தன் ஆதாரத்தை காப்பாற்றவேண்டிய நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுவிட்டது. ஐயாயிரம் ரூ. மினிமம் என்பது எவ்வளவு பெரிய வன்முறை தெரியுமா? ஒரு வீட்டின் வாடகை அது... நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் பலசரக்கு பில்தொகை அது... ஒரு கூட்டுகுடும்பத்தின் வயாதானவர்களின் மருத்துவ செலவு அது...
மல்லையாக்களிடம் ரைட் ஆஃப் செய்த வெட்ககெட்ட வங்கிகள்... மாதச்சம்பள்காரனிடம் பொருளாதாரத்தை ஆஃப் செய்கிறார்கள்... ஆள்வோர் துணையுடன்.சுவச்சா இந்தியாவில் எளியவர்களின் பணம் சுத்தமாக காலியாக்கப்படுகிறது.
வளர்ச்சி என்று வாய் நீளம் காட்டிய இந்தியனே ? இப்ப சொல் இது உனக்கு சம்மதம் தானா ???
2012ல் சிலிண்டர் விலை₹399 ஆனால் இப்ப விலை ₹842
ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம்
ஏடிஎம்-களில் 1 முறைக்கு மேல் Balance Enquiry செக் செய்தால் ரூ.9.20 கட்டணம்
ஏடிஎம்-களில் "CARDLESS" Deposit/Withdrawal செய்தால் ரூ.25 கட்டணம்
Nil Balance Account உள்ளவா்களுக்கு PassBook வேண்டுமென்றால் ரூ.500 கட்டணம்
இந்த நொட்டை எல்லாம் பத்தாது என்று ..இப்ப
இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்
பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும்,
நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும்,
புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும்,
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும்.
குறைந்த பட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் *எஸ்பிஐ* அறிவித்துள்ளது.
இது என்ன வங்கியா ? அவுத்துப் போட்ட லுங்கியாடா ... கேனப்பய ஊருக்குள்ளே கிறுக்குப் பயலுக்கு நாட்டமை காெடுத்தா இப்படித்தான் இருக்கும்....
1.முதலில் சொன்னார்கள் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் 15லட்சம் வரவு வைக்கப்படும் என்று.
2.அந்த பணத்தை போடுவதற்கு வசதியாக எல்லோருக்கும் ஒரு வங்கி கணக்கு வேண்டும் என்றார்கள்.
2.அந்த பணத்தை போடுவதற்கு வசதியாக எல்லோருக்கும் ஒரு வங்கி கணக்கு வேண்டும் என்றார்கள்.
3.1000,500 ரூபாய்களை ஒழித்து இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டால் புதிய இந்தியா பிறக்கும் என்றார்கள்.
கடைசியில் ஒரு இந்தியாவும் பிறக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்தார்கள்
உங்களிடம் ரூபாய் 5000 தா, 3000 தா என்று கேட்டால் கொடுப்பீர்களா? கொடுக்க மாட்டீர்கள்(தேச பக்தர்கள் கொடுப்பார்கள்?)
பெரு நகரங்களில் உள்ளவர்கள் 5000-மும், நகரங்களில் உள்ளவர்கள் 3000 மும், கிராமங்களில் உள்ளவர்கள் 1000-மும் நிரந்தர வைப்புத்தொகையாக வங்கி கணக்கில் வைத்தால்
இந்த பணத்தை நாம் பயன்படுத்த முடியாது.
120கோடி மக்களில் 25கோடி மக்கள் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் சராசரியாக ஒரு கணக்கில் 2000-ம் என்று வைத்தாலும் 50000, 00, 00, 000 கோடி ரூபாய் மக்கள் பயன்படுத்த முடியாத பணமாக மாற்றப்படும்.
இவர் கறுப்புப் பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்பார் என்று நினைத்தால் மக்களின் சேமிப்பு பணத்தை மீட்டு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கப் போகிறார் ?
மத்திய அரசின் அட்டகாசமும், மோசம் போகும் தமிழகமும்... !
மீனவர் படுகொலையை கண்டு கொள்ளாமல் ஊர் சுற்றும் மத்திய அமைச்சர்கள் ..!!
பாகிஸ்தானை காரணம் காட்டி மேலே உள்ள காஷ்மீரை மையமாக கொண்டு அரசியல் லாபத்திற்காக நாடகமாடுகிறது மத்திய அரசு ..!!
நலத்திட்டங்கள் என்ற போர்வையில் கார்பரேட் முதலாளிகள் போடும் எலும்புத்துண்டிற்கு கீழே தமிழகத்தை மையமாக வைத்து இந்திய வளங்களை சுரண்டி போலி தேச பக்த வேஷம் போடுகிறது அதே மத்திய அரசு..!!
தமிழனே விழித்துக்கொள் தமிழ் நாட்டை மட்டுமல்ல இந்திய நாட்டையே இந்த தீய சக்திகளிடம் இருந்து உன் வீரத்தால் காத்திடு ...!!
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment