எத்தனை சதுரங்க வேட்டை படம் எடுத்தாலும் மக்கள் திருந்த மாட்டார்களா? இந்தியாவில் 6 லட்சம் படித்த முட்டாள்கள் உள்ளனரா??? உங்களுக்கு தெரிந்த இது போன்று உங்களிடம் பேசிய நண்பர்களை tag செய்யவும்.
சமூக வலைதளங்களில் ஒருவரது கருத்தை வரவேற்றோ அல்லது அதற்கு ஆதரவாகவோ `லைக்’ போடுவது வழக்கம். இத்தகைய லைக் விஷயத்தை அடிப்படையாக வைத்து நூதன முறையில் மோசடி செய்து பணத்தையும் கொள்ளை யடித்த விவரம் தற்போது வெளி வந்துள்ளது. ஆன்லைனில் நூதன மோசடி செய்யப்பட்டுள்ளதை உத்தரப் பிரதேச போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அபிளேஸ் இன்ஃபோ சொல் யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இத்தகைய மோசடியை செய்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். இந்த மோசடியில் 6 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர். இவர்கள் இழந்த தொகை ரூ.3,700 கோடியாகும். இது தொடர்பாக 26 வயதான பிடெக் பட்டதாரி அனுபவ் மிட்டல் அவரது கூட்டாளி களான எம்பிஏ பட்டதாரி தர் பிரசாத் (40) மற்றும் மகேஷ் தயாள் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015-ம் ஆண்டில் வர்த்தக பிரமிடை இம்மூவரும் உருவாக்கி யுள்ளனர் என்று சிறப்பு புலனாய்வு பிரிவின் மூத்த கண்காணிப்பாளர் அமித் பதக் தெரிவித்துள்ளார். இதன்படி வீட்டிலிருந்தபடியே முதலீட்டாளர்கள் பணம் சம்பாதிக் கலாம் என்ற உறுதி அளிக்கப்பட் டுள்ளது.
நான்கு விதமான சந்தா தொகை அதாவது ரூ.5,750, ரூ.11,500, ரூ.28,750 மற்றும் ரூ.57,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தா செலுத்தியவர்களுக்கு பயன்பாட்டு அடையாள அட்டை, சங்கேத எண் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குலுக்கல் அடிப் படையில் இணையதள இணைப்பு கள் அளிக்கப்படும். இந்த இணைப் புகளுக்கு சென்று போடப்படும் `லைக்’ எண்ணிக்கை ஒவ்வொன் றுக்கும் ரூ.5 வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக பதக் கூறினார். ஆனால் அந்த இணை யத்துக்கு சென்றால் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மோசடியாக ஒரு சர்வர் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக வர்த்தகம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் உருவாக்கிய சர்வரிலிருந்து 25, 50, 75 மற்றும் 125 இணையதள முகவரி கள் அனுப்பப்படும். வாடிக்கை யாளர்கள் செலுத்திய சந்தாவின் அடிப்படையில் அவர்களுக்கு இணையதள முகவரிகள் அனுப்பப் படும்.
அதிக சந்தாதாரர்களை சேர்த் தால் அவர்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது `பூஸ்டர்’ திட்டம் என்று அழைக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை வரை 6.5 லட் சம் பேர் இதில் சந்தாதாரர்களாக உள்ளதாக பாதக் தெரிவித்தார்.
நிறுவனர்கள் குறிப்பிட்டபடி தங்கள் வங்கிக் கணக்கில் பணம் வராததைக் கண்டு பலர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். சூரஜ்பூர் காவல் நிலையத்தில் கடந்த 31-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1 லட்சம் முதலீட்டாளர்கள் இணைய தளம் மூலமாக புகார் செய்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுப்பப் பட்டது. மிட்டல் தனது மாத சம்பள மாக ரூ.5 லட்சம் எடுத்துள்ளார். தருக்கு ரூ.1 லட்சம் மாத சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர் கள் அளித்த தொகை மட்டுமே இவர்களது வருமானமாகும் என்றும் காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
நன்றி :இளையதலைமுறை
No comments:
Post a Comment