Friday, 31 March 2017

விவசாயிகள் கவனத்திற்கு.

Image may contain: outdoor and natureவான் பொய்ப்பினும், தான் பொய்யா காவேரி என புகழப்படும் காவிரி தமிழகத்தின் ஒரே ஜீவ நதியாகும். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு பாசனம் அளிக்கக்கூடியது காவிரி. ஆனால் கர்நாடக அரசின் குறுக்கீட்டால் நீர் வரத்து கேள்விக்குறியாகி வருகின்றது. நீர் வரத்தில் நிரந்தர அளவு கணிக்க இயலாமல் போனதால் ஒவ்வொரு ஆண்டும் அணை திறக்கும் நாளை நீர் இருப்பு, எதிர் பார்க்கும் நீர் வரத்து, பயிர் சாகுபடி பரப்பு, நீர் தேவை அறிந்து நீர் வளங்கள் திட்டத்தை தயாரிக்கவேண்டியுள்ளது.
இப்பணியை வேளாண்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவுற்ற வேளாண் பட்டதாரிகளின் கூட்டமைப்பான தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் பேரவையின் தஞ்சை மாவட்ட கிளை செய்துவருகின்றது. இப்பேரவையின் பரிந்துரையை ஏற்று சென்ற ஆண்டில் ஜூன் 6ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அணையின் நீர் இருப்பு, எதிர்பார்க்கப்படும் நீர் வரத்து, நீர் தேவைகளை கவனிக்கும்போது செப்டம்பர் மாதம் முடிய குறைந்தது 160 ஆயிரம் மில்லியன் கனெடி நீர் திறந்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே இருபோக சாகுபடிக்கு ஜூன் 15க்குள் அணையை திறக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே. இந்நிலையில் ஜூன் 15 முதல் ஜூலை 25 முடிய உள்ள காலத்தில் அணை திறக்கப்பட்டால் நன்மையை விட தீமையே அதிகம் விளையும் என்பதால் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் மேட்டூர் அணையை திறந்து ஒரு போக சாகுபடிக்கு உதவலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அணை திறக்கும் மற்றும் மூடும் நாளை முன்கூட்டியே அறிவித்தால் விவசாயிகள் முன் ஏற்பாடு செய்து சாகுபடி செய்திட வசதி செய்திடவும் நீர் வீனாவதை தடுத்திடவும் முடியும். மேலும் அணை மூடும் நாள் அறிவித்து அதற்கு மேல் நீர் திறந்துவிடப்படமாட்டாது என்பதையும் அக்காலத்திற்குள் சாகுபடியை முடித்திடவும் விவசாயிகளுக்கு அறிவித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் மழை ஈரத்தை பயன்படுத்தி எள், மற்றும் பயறுவகைப்பயிர்களை பயிரிடவும் கோடை உழவு செய்திடவும், மண் வளத்தை மேம்படுத்திட பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்திடவும், கடைமடைப்பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்திட வயல்களை தயாரித்திடவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட விவசாயிகள் 1987 ஆம் ஆண்டு நவம்பர் 9ந்தேதி மேட்டூர் அணை திறந்து இருபதே நாள் தண்ணீர் விடப்பட்ட காலத்தில் கூட ஒரு மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்தவர்கள் என்பதை மனதில் நிறுத்தி இந்த ஆண்டு விவசாயப்பணியை தைரியத்துடன் துவக்கிட வேண்டுகிறோம்.

வறட்சியை சமாளிக்கவும், விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் அரசு மூலம் ஆண்டுதோறும் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு நூறு சதவீதமும் , 12.5 ஏக்கர் நிலம் வைத்துள்ள பெரிய விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 75 சதவீதமும் மானியமும் வழங்கப்படுகிறது.

1. முதலில் வெளியே போராடுபவர்கள் எல்லோரும் வீட்டுக்குள் வாங்க.
2. உங்கவீட்டுக்குள்ள இருக்கிற எந்த விளை பொருளையும் வெளியே அனுப்பாதீங்க.
3. தமிழ்நாடு முழுவதும் எந்த இடத்துக்கும் எந்த விவசாயியும் எந்த காய், கறிகளையும் அனுப்பாதீங்க.
4.தமிழ்நாடு முழுவதும் எந்த இடத்துக்கும் காய்கறி முதல் கருவேப்பிலை வரை எதுவுமே கிடைக்கவில்லை என்ற தகவல் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப வேண்டும்.
5. விவசாயிகளாகிய நீங்கள் உங்க வீட்டுக்குள்ளே உங்க சேர்மேல கால்மேல கால்போட்டு உட்காருங்க.
6. இத்தனை நாட்கள் டெல்லியில் வாடுகிறீர்கள். யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.
7. நான் மேலே சொன்னபடி செய்து பாருங்கள்.
மொத்த இந்தியாவும் உங்களை திரும்பி பார்க்கும்.
ஆட்சியாளர்கள் உங்க வீட்டு வாசற்படியில் உங்களுக்காக காத்திருப்பது உறுதி.
இளைஞர்களாகிய நாங்கள் உங்களுக்காக மாநில எல்லையில் காவல் காக்கிறோம்.
எதற்காக....
வெளி மாநிலத்திலிருந்து எந்த விவசாய விளைபொருளும் உள்ளே வராமல் தடுக்கிறோம்.
நீங்கள் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை. மற்றவர்கள் அடுத்தவேலை சோற்றுக்காக உங்களிடம் வரவேண்டும்.
மாட்டுக்காக போராடிய இளைஞர்கள் உழவனுக்கு போராட வரமாட்டோமா என்ன. 
மாற்றி யோசிப்போம்.
 விரைவில் களம் காண்போம்.

No comments:

Post a Comment