Monday 19 February 2018

தஷ்வந்த்துக்கு மரண தண்டனை ஒரு பாடம்!!

Image result for justiceகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மவுலிவாக்கத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினியை, அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற ஐடி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து, மிகக் கொடூரமாக எரித்துக் கொலைசெய்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை வைத்து தஷ்வந்தைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஹாசினியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சிறுமி கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்திக் கொலைசெய்து பின்பு தாம்பரம் அருகே உடலை எரித்ததாகவும் தஷ்வந்த் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரைப் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 6 மாதம் கழித்து குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போக்சோ சட்டம் 6,7,8 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்துள்ளார்.

மேலும், ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றம் நிறுபனம் ஆகி உள்ளது. 30 சாட்சிகள், 45 ஆவனங்கள், சி.சி.டி.வி. உள்ளிடட 19 சான்றுகள் அடிப்படையில் குற்றங்கள் நிரூபணம் ஆகி உள்ளன. இந்நிலையில் சிறுமி ஹாசினி, கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்தைக் காவல் துறையினர் டிசம்பர் 13ஆம் தேதி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பு ஆஜர்படுத்தினர்.

ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் 2017 டிசம்பரில் தனது சித்தி சரளாவைக் கொலைசெய்து தப்பிவிட்டார். பின்பு மும்பையில் பதுங்கியிருந்த அவரைத் தனிப்படை போலீசார் பிடித்தனர்.அப்போது, தன் மீதான கொலை வழக்குகளில் விரைந்து செயல்பட வேண்டும் என்று தஷ்வந்த் கோரிக்கை விடுத்தார்.இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் விவேகானந்தன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அரசுத் தரப்பு சாட்சியங்களின் விசாரணை முடிவடைந்ததாக அரசு சிறப்பு வழக்கறிஞர் சீதாலட்சுமி தெரிவித்தார்.இருதரப்பு விசாரணையும் முடிவு பெற்றதால் ஹாசினி கொலை வழக்கில் பிப்ரவரி 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் காலை 11.35 மணிக்கு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். ஹாசினியின் தந்தை பாபுவும் நீதிமன்றத்துக்கு வந்தடைந்தார். வழக்கில் தொடர்பில்லாதவர்களும், பத்திரிகையாளர்களும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.. நீதிமன்றத்துக்குள் தஷ்வந்த் அழைத்துச்செல்லப்பட்டதும் நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டன.அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய தீர்ப்பு என்பதால்  செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று ஹாசினி தரப்பு வழக்கறிஞர் ராஜா மஹேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார். தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஹாசினி தந்தை பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.இதையடுத்து நீதிபதி வேல்முருகன், தீர்ப்பை சரியாக 3 மணிக்கு வாசித்தார். தஷ்வந்த் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி. குற்றவாளி தஷ்வந்த் மீதான 302, 363, 366, 354(பி) 21 பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து மாலை 4.40 மணியளவில் தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். மேலும் தஷ்வந்திற்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார் நீதிபதி வேல்முருகன்.



என்னுரை :

இவன் மட்டுமல்ல, இவனுக்கு கடைசிவரை உதவிய வக்கீல்கள் மற்றும் உறவுக்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய வரலாற்றில் இந்த தூக்கு நடு ரோட்டில் போட்டு தொங்க விடணும். அப்பத்தான் மத்தவன் தப்பு செய்ய பயப்படுவான் அல்லது சிங்கப்பூர் மாதிரி ரெண்டு பிரம்படி (ரோத்தா) கொடுத்து, அது குணமானவுடன் மரண தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். தயவு செய்து மேல் முறையீடு, ஜனாதிபதி கருணை மனு என வருடக் கணக்கில் தண்ட சோறு போட்டு தூங்க வைக்காமல் சீக்கிரம் இவனை தூக்கில் ஏற்றி விட வேண்டும், அதை உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். இனி குழந்தைகள் நிம்மதியாக வாழ இவனைப் போன்றவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது.
தொகுப்பு  : மு.அஜ்மல்  கான்.

No comments:

Post a Comment