Sunday, 25 February 2018

பாலமேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவன பாதாள அறையில் முதியவர்கள் பிணக்குவியல் !!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.  கடந்த பிப்ரவரி.20 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு வந்துகொண்டு இருந்த, செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான போலி ஆம்புலென்ஸ் வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி, ‘அய்யய்யோ என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கத்திக்கொண்டே சென்றதைப் பார்த்து, அந்த வழியாக இருசக்கர மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் பிரபு துணிச்சலாகச் செயல்பட்டு வாகனத்தை இடைமறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார்.

இதைக் கவனித்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தின் உள்ளே இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயற்சித்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். அங்கே, சுயநினைவில்லாத திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும், அவருக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டு, காய்கறி, அரிசி மூட்டைகள் எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கூறிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் செய்தி தொலைக்காட்சி  மற்றும்  ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது அதிகபட்சமாக வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர்.


ஆதரவற்றோர் இல்லத்தில் முதியோர்கள் தொடர்ச்சியாக மரணமடைந்து வருவதாக வந்த தகவலையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான 
செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. அந்த இல்லத்தில் வயதானவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படுகின்றனர். ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர்.

அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் துவங்கிய இந்த மையம், இப்போது வணிக நோக்கத்தில் செயல்படுகின்றது என்ற புகார்களின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையின் பேரில் சமூகநலம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று கள ஆய்வு செய்தனர்.

பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்மப் பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது.
ர்மமான முறையில் ஒருநாளைக்கு 2 அல்லது 3 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 50க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவர்களின் உடல்களையும் அவர்கள் புதைக்கவோ, எரிக்கவோ இல்லை. சுவற்றில் அவற்றை பதப்படுத்தி வைத்து அவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு விற்கின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 1590 உடல்கள் இங்கே உள்ள பாதாள பிண அறையில் போடப்பட்டு உள்ளதாக சம்பந்தப்பட்ட நிர்வாகி தாமஸ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இறந்தவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மரணத்திற்குப் பின்னர் அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்ககம் செய்யப்படாமல், பாதாள அறையில் பிணக்குவியல்களை வைத்து மூடுவதால், காற்று மாசு அடைந்து சுற்றுச் சூழல் பாதித்து நோய்கள் உருவாகக் காரணமாகி, சுகாதாரச் சீர்கேடு உருவாகின்றது. இறந்தவர்களின் உடல் உறுப்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து காவல்துறையினர் அந்த தொகுதி எம்.எல்.ஏ சுந்தரிடம் விசாரிக்கையில் அவர் தெரிவித்ததாவது, "எனக்கு இதுகுறித்து 3 வருடங்களுக்கு முன்னதாகவே தெரியும். இங்குள்ள சிலருக்கும், அந்த இல்லத்தில் ஏதோ நடக்கிறது என்று தெரியும். ஆனால் இதை வெளிக்கொண்டுவர நாங்கள் முயற்சி செய்தோம். ஆளும் கட்சியின் சில முட்டுக்கட்டைகளால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை" என தெரிவித்தார். 


ஒரு பக்கம் என்னடானா Mother theresa லெவெலுக்கு இவுரு சேவை செஞ்ச மாறி இருக்கு, இன்னொரு பக்கம் எதோ Nazis லெவெலுக்கு திட்டமிட்டு ஆயிரக்கணக்கான கொலை பண்ணிட்ட மாறி சொல்றாங்க..அரசு விசாரிச்சு உடனே உண்மையை கண்டுபுடிக்கணும்... ஆனா இத காரணமா வெச்சு எப்ப எத வெச்சு மத துவேஷத்த தமிழ்நாட்டுல தூண்டலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்குற RSS/BJP  சமூக வலைதலங்கள்ள ரொம்ப கூவிட்டு இருக்குதுங்க இந்த வாரம்...

வழக்கம் போல அறிவார்ந்த தமிழ் சமுகம் அவுனுங்கள துப்பிட்டு அடுத்து போவட்டும்.

மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய தொண்டை குறையுள்ளவர்கள் குறை கண்டு கொண்டேதான் இருப்பார்கள். இன்னொரு உலகத்தின் வசந்தங்களை நம்பியவனுக்கு இவ்வுலகம் ......ருக்கு சமம்...
மனிதனை சேவிப்பவர்களின் பணி தொடரட்டும்..

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ...
பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்”
நூல்:திர்மிதி


தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.
அரசு சரியான உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்.  மேலும் இந்த  வழக்கை,  தமிழக அரசு CBCID  கொண்டு சென்று , பாதாள அறையைத் திறந்து  சோதனை செய்ய வேண்டும்.அப்போதுதான் திட்டமிட்டு பரப்பப்படும் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தவறு எந்தப் பக்கம் இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.


 இதுவரை திரு .வை கோ அவர்கள் மட்டுமே  குரல்  எழுப்பியுள்ளார். மற்ற  அரசியல் தலைவர்கள்  கேள்வி  எழுப்பாதது  ஏன் ? கமலஹாசன்  உள்பட  அனைவரும்   தூங்குகிறீர்களா ?  ஊழலில்  பங்குள்ளதா ?
 மனிதம்  இறந்து  விட்டதா  ?
 விடை வேண்டும்  விரைவில் ...

 ஆக்கம்  மற்றும்  தொகுப்பு  :  மு. .அஜ்மல் கான்.

No comments:

Post a Comment