நாடு எங்கே போகிறது.... மிகவும் பயமாக இருக்கிறது.
ஆன்மீகம் என்பது
1.தன்னை அறிதல்.
2.தன்னை போலவே பிற உயிர்களும் என்று உணர்தல்.
3.மற்ற உயிர்களுக்கு உதவுதல்.
இதை விட்டு விட்டு காட்டு மிராண்டிகள் போல......
தயவுசெய்து அரசியலையும் ஆன்மீகத்தையும் கலக்காதீர்கள்.
தனித்தனியாக இருப்பது நல்லது...
இரண்டும் சேர்ந்தால் அது விசமாக மாறி விடும்.
முஸ்லிம்கள் வேண்டுமென்றே இந்தியாவில் மட்டும் தான் ஹிஜாப் அணிகிறார்களா.? இல்லை. உலகம் முழுவதும் அணிகிறார்கள்.
முஸ்லிம்கள் பள்ளி கூடத்தில் மட்டும் தான் ஹிஜாப் அணிகிறார்களா.?இல்லை. அதையும் தாண்டி வேலை பார்க்கும் நிறுவனம், சந்தைக்கு போகும் போது, வீட்டே விட்டு வெளியே வந்தாலே அணிகிறார்கள்.
பெண்கள் தங்கள் உடல் அழகை மறைத்துக் கொள்ள ஒழுக்கம் பேணுவதற்காக அணியப்படுவது தான் ஹிஜாப் அது மத அடையாளமே அல்ல. ஒரு ஒழுக்கம் சார்ந்த ஆடை முறை ஆனால் காவி வர்ணத்தில் இதுபோல ஏதாவது ஒரு கருத்து இருக்கிறதா? மத அடையாளம் அல்லாத ஒரு கருத்து சொல்ல முடியுமா?
ஹிஜாப் முஸ்லிம்கள் பின்பற்றும் ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம். அவர்கள் 1400 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள். இதுவரை எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் நீங்கள் அணிகின்ற காவி துண்டு எல்லா நாட்டிலும் அணிவதும் கிடையாது, எல்லா நேரத்திலும் அணிவதும் கிடையாது, அதை நம்பிக்கை அடிப்படையில் போடுவதும் கிடையாது.
இது முழுக்க முழுக்க கலவரம் ஏற்படுத்த போடப்படும் ஒரு விதை. எனவே இந்து சமூகம் இந்தியா வழங்கியுள்ள அனைத்து மத நம்பிக்கையை பாதுகாக்கும் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் விதமாக இந்து என்ற பெயரில் வரும் கோமாளிகளை ஓரங்கட்டி, ஹிஜாப்பிற்கு வலுவாக நிற்க வேண்டிய காலம். இந்த நாடு எல்லோரும் அமைதியாக இருந்தால் மட்டுமே, அமைதி என்பது சாத்தியம். ஒருவரை துன்புறுத்தி அடக்கி ஆள நினைத்தால் அங்கு அமைதி குலைந்து விடும். எனவே இந்து பொதுமக்கள் வெளிப்படையாக முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பிற்கு ஆதரவு அளிக்க வேண்டிய நேரம் இது.
ஹிஜாப்ஏன்?
மனித சமுதாயத்தின் விளைநிலங்களே பெண்கள். சமுதாயம் ஆரோக்கியமாக அமைய வேண்டுமானால் நல்லொழுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே மக்களுக்கு கற்பிக்கப்பட்டு நடைமுறையோடு பயிற்றுவிக்கப்பட வேண்டும். நன்மை, தீமை, நியாயம், அநியாயம், சக மனிதர்களோடு கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற பலவும் அங்கு கற்பிக்கப்பட்டால்தான் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள். இங்கு தந்தையை விட தாயின் தாக்கமே மிக அதிகம் என்பதை நாம் அறிவோம். இப்பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதில் இருந்து அவள் திசைதிருப்பப்பட்டால் அங்கு நடைபெறும் விபரீதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. மேலும் சமூகத்தில் ஆண் பெண் இரு பாலாரும் கல்வி, தொழில், வணிகம் போன்ற விடயங்களில் அன்றாடம் கலந்துறவாடுவது என்பது தவிர்க்க முடியாததாகும். அப்போது அவர்களுக்கு இடையே அமைந்த பரஸ்பர கவர்ச்சி அவர்களின் செயல்பாட்டில் இருந்து திசை திருப்பாமல் இருப்பது முக்கியமாகும். இவைபோன்ற பல விடயங்களையும் கருத்திற்கொண்டே ஹிஜாப் என்ற ஆடை ஒழுக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.
ஹிஜாப் என்றால் என்ன? எதற்கு?
தாய்மை என்ற உலகிலேயே உயர்ந்த விலைமதிக்கமுடியாத பதவியை அவளுக்கு வழங்குவதற்காகவும் அப்பதவியை அவள் செவ்வனே நிறைவேற்றுவதற்காகவும் அதன்மூலம் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை சமைத்திடவும் அடித்தளமிடுவதே ஹிஜாப்!
இளைய சமுதாயத்தை மதத்தின் பெயரால் சீரழிப்பது எந்த விதத்தில் நியாயம்?
படிப்பு அறிவு அற்றகாலத்தில் மக்கள் செய்த அதே தவறை இளைய தலைமுறைக்கு இந்த சமுக விரோதிகள் கற்றுக் கொடுக்கிறார்கள் இதன் சூட்சமத்தை தன் சுயபுத்தியைக் கொண்டும் படிப்பு அறிவைக்கொண்டும் நன்கு அறியவேண்டும்.
அரசியல் சூழ்ச்சியில் சிக்கி தவிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை தான் கேள்விக்குறியாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை சட்ட சிந்தியுங்கள் மக்களே!!
விரைவில் தமிழகத்தில் பரவினாலும் பரவ வாய்ப்புண்டு ஏனென்றால் சாதிவெறி முன்பைவிட இப்போது அறிய அதிகரித்துக்கொண்டே வருகிறது 2000 காலகட்டத்தில் இருந்ததைவிட 2022 காலகட்டம் சாதிவெறி மிக்கதாக இருக்கிறது அதனால் கர்நாடகத்தில் நடந்த சம்பவம் தமிழகத்தில் நடக்க வாய்ப்புகள் உண்டு.
நம் காலத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்துவிட்டோம். வருங்காலத்தில் அந்த ஒற்றுமை விரைவில் சீர்குலைக்கப்பட்டுவிடும் என்ற ஒரு அச்சம் வருகிறது. தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்பதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஒரு சிறந்த தாய் தந்தையிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும் தன் பிள்ளை வெளியே செல்லும்போதோ அல்லது பாடசாலைக்கு சொல்லும் போது எப்படிப்பட்ட உடைகளை அணிந்தால் அந்தப் பிள்ளைக்கு பாதுகாப்பு என்று?
அரசியல் செய்வதற்கு எவ்வளவு விசயம் உள்ளது ஆனால் இந்த கூட்டம் ஆடையிலும் மதத்திலும் அரசியல் செய்கிறது என்ன ஆடை அணிந்து கொள்வது என்ற ஊறிமை அவர்களுக்கு உண்டு ஹிஜாப் எவ்வளவு காலமாக பின்பற்றி வரும் மரபு என்பதை அறிந்து கொள்ளுங்கள்
மனிதம் காப்போம்.
மனிதம் வளர்ப்போம்.
ஒற்றுமையே பலம்ஜெய்ஹிந்த்.
ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment