Tuesday, 1 February 2022

வெளிநாட்டில் இலவசமாக மருத்துவம் எங்கே படிக்க முடியும் ?


தமிழகத்தை விட சிறந்த பாடத்திட்டம், உலகத் தர கல்வி நிறுவனம், இந்திய உதவியாளர்களுடன் கூடிய ஹாஸ்டல் வசதி, படிப்பை முடித்ததும் வேலைவாய்ப்புக்கு உதவி என்றெல்லாம் கலர் கலராக பேசுவார்கள். 20 லட்ச ரூபாய்க்குள் படிப்பை முடித்து விடலாம் என்பார்கள். இப்படி வகைவகையாகப் பேசுபவர்கள் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி மட்டும் பேசுவதேயில்லை. ஒன்று, நீங்கள் 
மேற்கண்ட எந்த நாட்டில் மருத்துவம் படித்தாலும் அந்த நாட்டில் மருத்துவராக வேலை செய்ய முடியாது. 

அங்கு படிப்பை முடித்துவிட்டு ஒரு நாள் கூட அந்த நாட்டில் இருக்கவும் முடியாது. இந்தியாவுக்குத்தான் திரும்பியாக வேண்டும். இந்தியா வந்து இங்கேயும் நேரடியாக மருத்துவராக பணி செய்ய முடியாது. இங்கு, இந்தியமருத்துவக் கவுன்சில் நடத்தும் FMGE (Foreign Medical Graduates Examination) என்ற தகுதித்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு எளிதல்ல.

மருத்துவப் படிப்பு என்பது பிற படிப்புகளைப் போன்றதல்ல. பிறர் உயிர்காக்கும் படிப்பு. ஏகப்பட்ட பொறுப்புகளை உள்ளடக்கியது. நோய்களைப் பொறுத்தவரை, தட்பவெப்பங்களைப் பொறுத்து பகுதிக்குப் பகுதி மாறும். ஒரு நாட்டில் டெங்கு கொள்ளை நோயாக இருக்கும். ஐரோப்பாவில் இருக்கும் ஒரு நாடு அப்படியான ஒரு நோயை அறிந்தே இருக்காது. அறிவியலோ, கணிதமோ உலகெங்கும் ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனால், மருத்துவம் அப்படியல்ல. செயிண்ட் லூசியாவின் பாடத்திட்டத்தில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருகிற ஒரு மாணவன், இங்குள்ள தட்பவெப்பத்துக்கும், வாழ்க்கை முறைக்கும். சூழ்நிலைக்கும் ஏற்றவாறு சிகிச்சையளிப்பது என்பது சிக்கலானாது. பல கல்லூரிகளில் போதிய லேப் வசதி கூட இருப்பதில்லை. முக்கியமாக, மேற்கண்ட நாடுகளில் ஆங்கிலம் முதல் மொழியாக இல்லாததால், பெரும்பாலும் ஆசிரியர்களே உள்ளூர் மொழி அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால், மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்வதே சிரமம்.

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் சொல்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய மருத்துவக் கவுன்சில் 2002 ஆம் ஆண்டு முதல் FMGE தகுதித்தேர்வை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இத்தேர்வு வெளிநாட்டில் மருத்துவம் படிப்பை முடிக்கும் மாணவர்களின் நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டது.


" FMGE தேர்வு, வருடத்துக்கு இரண்டு முறை நடக்கும். மொத்தம் 300 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்படும். காலையில் 150 மதிப்பெண்கள், மாலையில் 150 மதிப்பெண்கள். இரண்டு பிரிவாக தேர்வு நடக்கும். மொத்தம் 300 மதிப்பெண்கள். 5 மணி நேரம் தரப்படும். இந்தத் தேர்வை மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவும், தேசிய தேர்வு வாரியமும் சேர்ந்து நடத்துகின்றன. கேள்விகள் சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் இருக்கும். கேள்வித்தாளை வெளியில் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மறுமதிப்பீடு செய்ய முடியாது. அண்மையில் நடந்த நீட் தேர்வில் கடைபிடித்ததை விடவும் பல மடங்கு கடுமையான நடைமுறைகள் இந்தத் தேர்வில் கடைபிடிக்கப்படும். சென்னை, திருச்சி, கோவையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் உடனடியாக பிராக்டிஸ் செய்ய முடியாது. ஒரு பல்கலைக்கழகம் அல்லது மருத்துவமனையில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் சிகிச்சை அளிக்கமுடியும்..."

2012-13ல் 13,953 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினார்கள். அதில் 28.3 சதவிகித மாணவர்களால்தான் தேர்ச்சி பெற முடிந்தது. 2013-14ல் 6395 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 16.7 சதவிகிதம் பேர் தான். 2014-15-ல் தேர்வு எழுதியவர்கள் 12,494 பேர். அதில் தேறியவர்கள் 13.1 சதவிகிதம் பேர். 2015-16 ஜூன் மாதம் நடந்த தேர்வை 5863 பேர் எழுதினார்கள். அதில் தேறியவர்கள் 10.4 சதவிகிதம் பேர். ஒரு மாணவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம். வெளிநாட்டில் 5 ஆண்டுகாலம் தட்பவெப்பம் தாங்கி, மொழிச் சிக்கல் கடந்து மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வரும் பெரும்பாலான மாணவர்கள், FMGE தேர்வு எழுதுவதிலேயே தங்கள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள். கரூரில் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாமல் சிகிச்சையளித்த ஒருவர் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

”இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் தமிழகத்தில் இருந்து அண்மைக் காலமாகஆண்டுக்குஇருபதாயிரத்துக்கும்மேற்பட்டோர் வெளிநாடு களுக்கு மருத்துவம் படிக்கப் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்
இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் சைனாவுக்குத்தான் செல்கிறார்கள். பொருள்களைப் போலவே அங்கே ஏராளமான தரமற்ற கல்வி நிறுவனங்கள் உண்டு. கமிஷன் அதிகம் கிடைப்பதால், இங்குள்ள முகவர்கள் அது மாதிரி கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைத்து விடுகிறார்கள். சைனாவில் படித்த மாணவர்கள் தான் FMGE தேர்வில் பெருமளவு பின்தங்குகிறார்கள். 2012 முதல் 2014 வரை 11825 மாணவர்கள் சைனாவில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் வெறும் 18.9 சதவிகிதம் பேர்தான் FMGE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்று படிப்பை முடித்துத் திரும்பும் அப்பாவி மாணவர்கள் FMGE தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் எதிர்காலம் புரியாமல் தவிக்கிறார்கள்.

எங்கள் பிள்ளை வெளிநாட்டில் படிக்கிறது என்று சொல்வது பெற்றோருக்குப் பெருமைதான். ஆனால், எங்கே படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் பெற்றோருக்கு விழிப்பு உணர்வு இருக்க வேண்டும். அரசும் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்.


நல்ல மதிப்பெண்கள் +2வில் பெற்று, நீட் சனியனைத் தாண்டி வந்து, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் அது ஏறக்குறைய இலவசம் போலத்தான். மிகக் குறைந்த கல்விக் கட்டணமே செலுத்த வேண்டியிருக்கும்.


இதனால் தான் இதர .மாநில மாணவர்கள் திரும்ப,திரும்ப,NEET தேர்வு எழுதுகிறார்கள்.

நம் மாணவர் ஒரு முறை NEeT தேர்வு எழுதி வெற்றி பெற வில்லை என்றால் china. ,போகலாமா,. ரஷ்யா போகலாமா என் பிளான் செய்கின்றனர்.

மாணவ செல்வங்களே,திரும்பவும். நீட் .எழுதுங்கள். வெற்றி பெற்று தமிழக அரசு மருத்துவ கல்லூரிகலில் படியுங்கள்.

No comments:

Post a Comment