கமல் ஹாசன் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு திரை உலகில் சகாப்தம் படைத்த நல்ல மனிதர் மேலும் திரையில் நம்மையெல்லாம் பலவித நடிப்புகளின் மூலம் திறன் பட செயல்பட்டு நமக்கு சந்தோசம், நல்ல தகவல் மேலும் நல்ல மோகம், தாகம் போன்ற பலவற்றை நடிப்பின் மூலம் வழங்கியவர் நீடுடி வாழ்க நடிப்புடன் என்றென்றும் மத சார்பற்ற நடிகனாக தமிழகத்தில் நேர்மையாளர்களாக இருப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம்.. இங்கு வெற்றி பெற திருடர்களாய் இருக்க வேண்டும்.. ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும்.. சாதி, மத பிரச்னைகளை தூண்டி விடுபவர்களாக இருக்க வேண்டும். குண்டர்களை கட்சி தொண்டர்களாக வைத்து இருக்க வேண்டும்.போலி மதவாதிகளாக இருக்க வேண்டும். டாஸ்மாக்கை எதிர்ப்பது போல் சீன் காமித்து விட்டு பின்னால் சாராய ஆலை நடத்த வேண்டும்.மொத்தத்தில் உண்மைக்கு புறம்பான எல்லாவிதமான காரியத்திலும் ஈடுபட வேண்டும்.. அது கமலால் பண்ண முடியாது.அதனால் அவரால் ஒரு காலத்திலும் அரசியலில் வெற்றிபெற முடியாது.
ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வருகிறார் என்றால் வரட்டும். அவர் எம் ஜி ஆரை போலத்தான் இருக்கவேண்டும் என்றோ அல்லது அவரை போன்று வெற்றி பெற்று கொண்டே இருக்கவேண்டும் என்றோ நிர்பந்தமில்லை
எம்ஜிஆருக்கு ஏழைகளுக்கு உதவும் எண்ணம் என்ற நீண்ட நெடுங்காலமாக இருந்து இருக்கிறது. அது எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. சரியான நேரத்தில் அவர் இருந்த நிலையில் நன்றாக அவர் பயன் படுத்திக் கொண்டார்.
அவரை விரும்பிய கோடானுகோடி மக்கள் அவரை ஏற்றனர். அது எப்படி எல்லாருக்கும் பொருந்தும் ? இன்று கமல் அரசியலில் நுழைந்து வெற்றிபெறாத பலரின் பட்டியலில் சேர்ந்து இருக்கிறார் அவ்வளவுதான் அவரது கட்சியை அவர் நடத்துவது அவரது கட்சியினர் அவரை தொடர்வது என்பது அவரவர் விருப்பம் அவரை அரசியலை விட்டு வெளியே போகசொல்வதற்கு நாம் யார்?
அரசியலும் குறிப்பாக தமிழ்நாட்டு இன்றைய அரசியலும். கமல்ஹாசன் நடிகர், அரசியலில் திடீர் நுழைவு, தனிப்பட்ட வாழ்விலும் ஒன்றும் முன்னுதாரணமாக ஒன்றுமில்லை. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய ஆர்வமென்று கூறி அரசியலில் நுழைந்தார். ஆனால் இந்த தமிழ்நாட்டு அரசியல் சாக்கடை காவிரி, கங்கை ஆறுகளாலும் சுத்தப்படாது. மக்களுக்கு மனமாற்றம் ஏற்ப்பட்டு இந்த அவல நிலையை அவர்களாகவே மாற்றினால் மட்டுமே நல்லவர்கள் அரசியலில் ஈடுபட முடியும்.
அவர் இன்னும் கொஞ்சம் நாள் அதாவது அவரது உடலும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் வரைஅவரது கட்சியினர் விரும்பினால் அரசியலில் இருக்கட்டுமே அவர் பற்றி கவலைப்பட நாம் யார்?
எந்த சினிமா பின்புலமும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, டான்சர், துணை நடிகன், வில்லன் பிறகு கதாநாயகன் ஆகி, தொடர்ந்து பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர் என்று பன்முக திறமையால் இந்திய சினிமாவின் ஐகான் என்று சொல்லப்படும் அளவுக்கு உச்சம் தொட்டு, அதன்பின் அரசியலில் இறங்கி கேவலப்படணும்னு இருக்கு. சீனியர் சிட்டிசன் என்ற கேட்டகிரியில் 69 வயதில் நிம்மதியாக இருக்க முடியலைன்னா ஏதாவது மக்களுக்கு சமூகத்துக்கு நல்லது செய்யணும்னா காடு மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அதைவிட்டு கட்சி ஆரம்பித்து எம்ஜிஆர் ஆகலாம்னு இறங்குனா இதுதான் கதி. எம்.ஜி.ஆர். மாதிரி அரசியலில் வெற்றிக்கொடி நாட்ட முயன்ற சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், கருணாஸ் போன்றவர்கள், மூக்கறுபட்டு முகவரி இழந்து போனதை யாரும் மறக்க முடியாது.இவரு நண்பர் சிரஞ்சீவியை பார்த்தாவது அவர் உணர்ந்திருக்கணும்
அரசியலோ, சினிமாவோ, நோக்கம் பணம் சம்பாதிப்பதே. சினிமாவுல நடிக்கறதுக்கு அட்வான்ஸ் கொடுக்க தயாரிப்பாளர் இருப்பார். அரசியலில் இவரே ஆல் இன் ஆல். முதலீடு போடாத முதலாளி. இந்தாள நம்பி யராவது நன்கொடை குடுப்பாங்களா. வெல்லப் பிள்ளையாரையே கிள்ளி அவருக்கே நைவேத்தியம் செய்யும் டெக்னிக் இங்க வொர்க் அவுட் ஆகாது.
மக்கள் நலத்திட்டங்களை தன்னால் இயன்ற அளவு செய்யலாம் அரசியல் கட்சிகளோடு சேராமல் தனி அறக்கட்டளைகள் ஏற்படுத்தி சட்டப்படியான பாதுகாப்போடு நல்ல செயல்களை செய்யலாம் நல்ல கலைகனுக்கு அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .
No comments:
Post a Comment