Friday, 21 August 2020

இஸ்லாம் கூறும் மனிதர்களுடனான நற்பண்புகள்!!!

ஸ்லாம் கூறும் நற்பண்புகளுள் சக மனிதர்களுடனான உறவு மிகவும் முக்கியமானதாகும். சக மனிதர்கள் நம் உறவினர்களாக இருக்கலாம் அல்து அண்டை வீட்டினராக இருக்கலாம், அல்லது நம்முடன் பணி புரிபவர்களாக இருக்கலாம். இன்னும் நம்முடன் பயணம் செய்பவர்களாகவோ, அல்லது வழிப்போக்கர்களாகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை, மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றதும், ‘உங்களில் நற்குணமுடையவரே’ என்று அருளினார்கள்.
‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதுவும் கிடையாது’ என்றும் பெருமான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பிறருக்கு உதவி செய்வது மட்டுமல்ல, இன்முகத்துடன் இருப்பது, அடுத்தவர்களை வார்த்தைகளால் புண்படுத்தாமல் இருப்பது, கோபம் வரும் பொழுது அதை அடக்குதல் என்று நற்குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
‘நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
‘ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு, அறிவுரை வழங்கும் பொழுது, உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ், உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடு, உனக்குத் தர மறுத்தவருக்கு நீ கொடு, இவையே நற்குணங்களாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘இன்னும் இரவெல்லாம் நின்று வணங்குபவர்களுக்கும், பகலெல்லாம் நோன்பு வைத்து வருபவர்களுக்கும் கொடுக்கப்படும் அந்தஸ்து இப்படிப்பட்ட அழகிய நற்குணங்களைப் பெற்றவர்களுக்கும் கொடுக்கப்படும்’ என்றும் மொழிந்துள்ளார்கள்.
‘எந்தக் காரணமாக இருந்தாலும் மற்றவர்களுடனான நம் உறவைத் துண்டித்துக் கொள்ளக்கூடாது’ என்பதை இறைவன் மட்டுமல்லாது, நபி (ஸல்) அவர்களும் விரும்புகிறார்கள்.
இன்று எத்தனையோ பேர் பெரிதாக எந்தக் காரணமும் இன்றி உறவுகளைத் துண்டித்து வாழ்கிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் கொண்ட பிணக்கு காரணமாக, அவர்களைப் பிரிந்து வாழ்வது மிகவும் வருத்தம் தரும் விஷயமாகும். இன்னும் உடன்பிறப்புகளிடம் சண்டை போட்டு எதிர் எதிரே சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள் போன்று பொது இடங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நடந்து கொள்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் குறைந்த பட்சம் ‘ஸலாம்’ கூட சொல்வதில்லை. ‘தான்’ என்னும் அகங்காரம் மக்களைப் பாடாய்ப் படுத்துவதே இதற்குக் காரணம்.
நபி (ஸல்) அவர்கள் ‘மக்களே ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள், உணவளியுங்கள், உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள், இரவில் மக்கள் உறங்கும்பொழுது நீங்கள் எழுந்து தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்’ என்று உபதேசம் செய்துள்ளார்கள்.
உறவினர்களுள் வறுமையில் வாடுபவர்களைக் கண்டால் எங்கே நம்மிடம் பண உதவி கேட்டு விடுவார்களோ என்று எண்ணி ஒதுங்கிச் செல்லும் மனப்பான்மை மிகவும் மோசமானது. விருந்து, உபசாரங்களில் கூட வறிய நிலையில் உள்ள உறவினர்களைத் தவிர்த்து, செல்வ நிலையில் உள்ள உறவினர்கள் அழைக்கப்படும் வழக்கத்தைக் காண்கிறோம்.
நற்குணம் உடையவர்களே, சக மனிதர்களை பாரபட்சமின்றி நடத்துவர். செல்வச்செழிப்புடன் வாழ்பவர்கள் வறுமையில் வாடும் உறவினர்களுக்கு, தொழில் கற்றுக் கொடுத்து, தொழில் தொடங்குவதற்கு உதவி செய்தால் அவர்களும் வாழ்க்கையில் உயர்ந்து தங்களைப் போன்றவர்களுக்கும் உதவும் நிலை ஏற்படும்.
நம்முடன் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரிபவர்களுடன், அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் அடிக்கடி வாதம் செய்வது அல்லது தர்க்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அது போலவே மற்றவர்கள் பேசும் பொழுது ஆர்வத்துடன் கவனிப்பதுடன், அவர்கள் சொல்வது சரியாக இருந்தால் ஆமோதிக்கவும் வேண்டும். ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் வாதம் செய்வதால் நம்முடன் பேசுவதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள். நம்முடன் பேசுவதையே குறைத்தும் கொள்ளலாம்.
அவ்வாறு இல்லாமல், பிற மனிதர்களுடனான நட்பை நாம் மேம்படுத்திக் கொள்வதால், நம்மை நாடி வரும் மனிதர்களின் முகத்தில் மலர்ச்சியும், நிம்மதியும் தெரியும். கேலிப்பேச்சுகளும், ஏளனப் பார்வையும் சக மனிதர்களை நம்மை விட்டும் விலக்கி விடும்.
நம்முடைய அருகாமை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும் விதத்தில் நம்முடைய நடைமுறைகளை மாற்றுதல், அவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மைகளை அள்ளித் தரும். சக மனிதர்களிடம் நம்முடைய இனிமையான வார்த்தைகள் நரகத்தை விட்டும் நம்மைப் பாதுகாக்கும். இன்னும் நல்ல வார்த்தைகள் தர்மம் செய்வதற்கு சமம்.
‘அண்டை வீட்டினர் பசியோடு இருக்கும் பொழுது யார் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறாரோ அவர் இறை நம்பிக்கை உடையவராக இருக்க மாட்டார் என்றும், அண்டை வீட்டினரை நிம்மதியற்று இருக்கச் செய்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதுபோலவே உங்களுடன் பயணம் செய்பவர்களுடன் அன்புடன் உரையாடுங்கள், உணவினை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடன் பணி புரிபவர்கள் ஏதாவது நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துங்கள்.
இப்படிப்பட்ட பண்புகள் சக மனிதர்களை உங்களின் பக்கம் ஈர்க்கும். அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு பெறுவதால் உங்களின் மீதும் அவர்கள் அன்பு கொள்வார்கள். இதனால் மற்ற மக்களுடனான சகோதரத்துவமும், உறவும் பலப்படும். இன்ஷா அல்லாஹ் இவற்றை நாம் வாழ்க்கையில் கடைபிடிக்கும்பொழுது நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியாக அமையும்.

Thursday, 20 August 2020

இந்தியாவில் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்படவேண்டும்? ஒரு சமூக பார்வை ..

சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை என்பது ஒரு முன்மொழியப்பட்ட கூட்டாட்சி திட்டம் இயற்கை சூழலை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டும் அரசாங்க அறிக்கையாகும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு(EIA2020) அறிகை விதிகள் 2020-ல், “சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள புதிய திட்டங்கள், பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் – கட்டுமானப் பணிகள் இவற்றை எவ்வித தடையுமின்றி தொடரலாம் என்றும், 70 மீட்டர் வரையிலும் சாலைகளை அகலப்படுத்துதல், விரிவாக்கத் திட்டங்கள், நீராதாரக் கட்டமைப்புகள், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்ற 14 வகையான பணிகளுக்கும், குறிப்பாக, “சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பவை என்று கருதப்படக்கூடிய திட்டங்களுக்கும்” கூட இனி சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை முன் வைக்கத் தேவை இல்லை. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி தேவை இல்லை என்றும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மற்றும் கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்கள் பற்றியும் விரிவாக்கப் பணிகளுக்கும் சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது



மலைகளையும், மரங்களையும், நதிகளையம், நிலத்தையும், ஐம்பெரும் பூதங்களையும் இறைவனின் அருட்கொடை என்று தெய்வங்களாய்ப் போற்றிக் கொண்டாடும் நமது நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டதில் வியப்படைவதற்கொன்றுமில்லை. ஆயினும் முரண்நகை(Irony) என்னவென்றால் இயற்கையின் அங்கமான சுற்றுச் சூழலை சிறிதும் அக்கரையின்றி பாழ்படுத்துவதிலும் நமக்கிணை யாருமில்லை - நச்சுத்தன்மைகளுள்ள கழிவுகளை நீரிலும், நிலத்திலும், காற்றிலும் தெரிந்தே மாசுபடுத்தித் “தீர்த்தமாடும்” புண்ணியாத்மாக்கள்! மத்தியிலும், மாநிலங்களிலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள்(மா.க.வா) இருந்தபோதிலும், மாசைக் கட்டுப் படுத்துகிறார்களோ, “ஊழலை மேம்படுத்தும் வாரியங்களாக” உருமாற்றம் அடைந்திருப்பது என்பதை மறுக்க இயலாது.

முதலீடு செய்த தனியார் நிறுவனங்கள் செயல் திட்டங்களை குறித்த காலத்தில் முடிப்பதற்காக சீரிய முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும். அரசுகளிடமிருந்து - License Raj 1947 - இன்று வரை, பலவகையான, உரிமங்கள்(License), ஒப்புதல்கள் (Approvals) விரைவாகப் பெறுவதற்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் “ஆதரவு” இன்றியமையாதது.  மா.க.வா “ஆதரவைப்” பெற்று, “கழிவு நீர் சுத்தீகரிப்பு நிலையங்கள்” (effluent treatment plant etp) உள்கட்டமைப்பில் நிறுவப்படவேண்டும் என நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதல்கள் வழங்கப்படும். வழக்கிலிருந்து பிணையில்(Bail) வெளிவந்து வெற்றிவிழா கொண்டாடும் அரசியல்வாதிகள் போல, “கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை” எல்லோரும் மறந்துவிடுவார்கள்…கழிவுகள் மண்ணிலும், ஆற்றிலும், ஆகாயத்திலும் கலந்து நிலமும், நீரும், காற்றும் பாழ்!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA-Environmental Impact Assessment) என்றால் என்ன?


இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சூழலியல் அனுமதி வாங்க வேண்டும் என்றால் அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஒரு ரசாயன நிறுவனம் கட்டப்படவிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த தொழிற்சாலை அமையவுள்ள இடம், பரப்பளவு, அதிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவு மற்றும் கழிவின் தன்மை, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அருகாமையில் வசிக்கும் மக்களின் உடல்நிலையில் அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள், மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இவற்றோடு சூழலியல் பாதிப்புகளைக் களைய சூழலியல் மேலாண்மைத் திட்டம் (EMP-Environmental Management Plan), பாதிப்புகளை குறைக்க தணிப்பு நடவடிக்கைகள் (Mitigation Measures), போன்றவற்றை விரிவான ஆய்வு செய்து பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு சார்பில் அமைக்கபெற்ற நிபுணர் குழு அதை ஆய்வு செய்து சுற்றுசூழலுக்கு ஆபத்து இல்லாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாத பட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.

சூழலியல் அனுமதி பெற தற்பொழுது இருக்கும் EIA 2006 Notification இல் உள்ள நடைமுறைகள் பின்வருமாறு:

Infographic : சூழல் அறிவோம்

தற்பொழுது இருக்கும் 2006 EIA வழிகாட்டுதலின்படி படி தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் A பிரிவு மற்றும் B பிரிவு என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கபட்டிருக்கின்றன.

A – பிரிவுத் திட்டங்கள்: அணுமின் நிலையங்கள், பெட்ரோல் சுத்திகரிப்பு & பெட்ரோகெமிகல் நிறுவனங்கள், இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள், எரிவாயு குழாய் பதிப்பு, பெரிய அளவிலான சுரங்கப் பணிகள், நிலத்தடி எண்ணை-எரிவாயு-நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த, அதேநேரத்தில் சூழலுக்கு அதிகம் கேடு விளைவிக்கக்கூடியத் திட்டங்கள் A பிரிவுத் திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

B – பிரிவுத் திட்டங்கள்: 50 ஹெக்டேர்ருக்குக் குறைவான சுரங்கப் பணிகள், 500MW திறனுக்கு உட்பட்ட அனல் மின்நிலையங்கள், சக்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், 500 ஹெக்டேர்கள் பரப்பளவிற்குள் இருக்கும் தொழில் மண்டலங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் முதலிய திட்டங்கள் B பிரிவுத் திட்டங்கள் என வரையறை செய்யபட்டிருக்கின்றன.

இவற்றில் A பிரிவுத் திட்டங்களுக்கு மத்திய நிபுணர் குழுவும் (EAC – Environmental Appraisal Committee) B பிரிவுத் திட்டங்களுக்கு மாநில நிபுணர் குழுவும் (SEAC-State Environmental Impact Assessment Committee) மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும்.

A, B எந்தப் பிரிவாக இருந்தாலும்சரி அனைத்துத் திட்டங்களுக்கும் சூழலியல் தாக்க மதிப்பீடும் (EIA) மற்றும் பொதுமக்கள் கருத்துக்கேட்பும் 2006 EIA வில் அவசியமாக இருக்கின்றன.

2. EIA 2020 புதிய வரைவில் திட்ட வகைப்பாட்டில் (Project Category) செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்ன?

தற்போது அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வரைவில் திட்டங்கள் A, B1, B2 என மூன்று பிரிவுத் திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன் படி,
A பிரிவுத் திட்டங்களை, மத்திய நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும், இதற்கு EIA ஆய்வறிக்கை மற்றும் மக்கள் கருத்துகேட்பு அவசியம்.
B1 பிரிவுத் திட்டங்களுக்கு சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு அவசியம். ஆனால் மாநில நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும்.
B2 பிரிவுத் திட்டங்களை மாநில நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும். ஆனால் இதற்கு EIA ஆய்வறிக்கையோ, பொதுமக்கள் கருத்துக் கேட்போ தேவையில்லை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது (பத்தி6).

பொதுமக்கள் கருத்துக்கேட்பும் சூழல் தாக்க அறிக்கையும் அவசியமில்லை:

முந்தைய சட்டத்தில் சூழலியல் தாக்க மதிப்பீடும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் அவசியமாக இருந்த 25 சிவப்பு மற்றும் ஆரஞ்சு வகை நிறுவனகளை தற்பொழுது B2 பிரிவுக்கு மாற்றியிருப்பதன் மூலம் அவைகளைத் தொடங்குவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்போ, சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்ய வேண்டியதில்லை என்கிறது இந்த புதிய வரைவு.

இந்த புதிய வரையறையின் படி B2 பிரிவில் குறிப்பிடபட்டிருக்கும் கனிமசுரங்க பணிகள் (5 ஹெக்டேர்கள் வரை), 100KM வரையிலான சாலை விரிவாக்க பணிகள், உள்நாட்டு நீர் வழிகள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல் (Modernization), அனைத்துக் கட்டுமானம் மற்றும் நகரியத் திட்டங்கள் (Township projects), அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சிமெண்ட் ஆலைகள், 25MW அளவிலான புனல் மின்சாரத் திட்டங்கள், தொழிற்பேட்டைகளில் (Industrial Estates) இயங்கும் தோல்த் தொழிற்சாலைகள் மற்றும் முக்கியமாக நீருக்கடியிலும் பூமிக்கடியிலும் இருக்கும் எரிவாயு-நிலக்கரி-எண்ணை வளங்கள்-நிலக்கரி படிம மீதேன் எடுத்தல் (off shore and onshore oil & gas including Coal bed methane and shale gas exploration) ஆகிய திட்டங்களுக்கு EIA வும் கருத்துகேட்பும் அவசியமில்லை (அட்டவணை பக்கம் 123).

தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் கடலூரில் இருந்து ராமநாதபுரம் வரை காவிரி படுகையில் நிலத்தடியிலும் நீருக்கடியிலும் இவர்கள் போடப் போகும் ஆயிரக்கணக்கான ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கான அனுமதியைப் பெற பொது மக்கள் கருத்துக்கேட்போ, சூழலியல் தாக்க மதிப்பீடோ தேவையில்லை. கடந்த ஜனவரி மாதம் இவர்கள் கொண்டுவந்த சட்ட திருத்தமும் தற்பொழுது கொண்டுவந்திருக்கும் EIA2020 வரைவும் இதையேதான் சொல்கிறது.

விலக்ககளிக்கப்பட்ட ஆபத்தான திட்டங்கள்:

நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பனை சுத்திகரிக்கும் தொழிற்சாலையையும் (development production and transportation of gas including shale gas and Coal bed methane), எண்ணை வளங்களை சுத்திகரிக்கும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையையும்விட (Petroleum refining industries) அதை நிலத்தடியில் இருந்து எடுக்கும் (exploration) நீரியல் விரிசல் (Fracking) முறையே மிகவும் ஆபத்தானது. எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணை வளங்களைச் சுத்திகரிக்கும் நிறுவனங்களைத் துவங்க சூழலியல் தாக்க மதிப்பீடும், பொதுமக்கள் கருத்துக் கேட்ப்பும் அவசியம் என்று சொல்லி A பிரிவில் வைத்துவிட்டு, மிகவும் ஆபத்தான பூமிக்கடியில் இருந்து எரிவாயு-நிலக்கரி-எண்ணை வளங்கள்-நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதற்கு EIA & மக்கள் கருத்துகேட்பு தேவை இல்லை என்று B2 பிரிவில் சேர்த்திருப்பது முரண்பாட்டின் உச்சம்.

ஜனநாயக உரிமை மறுப்பு:



மக்கள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் EIA 2020 சட்டத்தின் அடிப்படையில் சட்டப்படி(!) திட்டத்தை அமல்படுத்தும் முழு அதிகாரத்தை அரசு பெறுகிறது. இத்திட்டங்களுக்கு சூழலியல் அனுமதி கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி தனி நபரோ அல்லது அமைப்புகளோ இயக்கங்களோ நீதி மன்றம் செல்லமுடியாதபடி புதிய வரைவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக தேச நலன், பாதுகாப்புச் சார்ந்த திட்டங்கள் (projects concerning national defense and security or involving other strategic considerations) மற்றும் கடலில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தவோ, பொதுமக்கள் கருத்துக் கேட்போத் தேவையில்லை என்றும் சொல்கிறது புதிய வரைவு. இந்த வரையறையின் கீழ், கடல்வளத்தை அழிக்கும் சாகர்மாலா திட்டமும், நாட்டின் லட்சிய திட்டமாக பா.ஜ.க அரசால் கருதப்படும் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் வரும் எட்டு வழி சாலை திட்டமும், தமிழகத்தை இராணுவ கேந்திரமாக்கும் திட்டமும், ஏன் நம் மலை வளத்தை நாசமாக்கத் துடிக்கும் நியூட்ரினோத் திட்டமும் கூட இதன் அடிப்படையில் மக்கள் கருத்துக்கேட்பு இல்லாமல் நடைமுறைப் படுத்தப்பட்ட வாய்ப்பிருக்கிறது.

இதே போன்று இந்திய எல்லைப் பகுதிகளில் இருந்து 100km வான் தூரம் (aerial distance) வரையிலான நிலப்பகுதிகளில் வர இருக்கும் தேசிய நெடுஞ்சாலை, குழாய் பதிப்புத் திட்டங்களுக்கு கருத்துக் கேட்புத் தேவையில்லை என்று புதிய EIA வரைவில் பத்தி 14.2 இல் குறிப்பிட்டிருப்பது, குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் இயற்கை வளங்ளையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாக அச்சுறுத்தும் ஒன்றாகப் பார்க்கவேண்டியிருக்கிறது.

அதே போல் பெரிய அளவிலான சூரிய ஆற்றலில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பூங்கா திட்டங்களுக்கு EIA வில் இருந்தும் மக்கள் கருத்துக்கேட்பில் இருந்து விலக்களித்திருக்கிறது புதிய வரைவு (பத்தி 26.14). புதுப்பிக்கத்தக்க மின்சாரமாக இருப்பினும் மையப்படுத்தப்படாத மின்சக்தியே வேண்டுமென்று சூழலியலாளர்கள் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற பெரியளவிலான சூரிய மின்சார திட்டங்களுக்கு அதிகப்படியான விவசாய நிலங்களே கையகப்படுத்தப்படும். ராமநாதபுரத்தில் அதானி துவங்க இருக்கும் 4500கோடி ரூபாய் சூரிய ஆற்றல் மின்சார உற்பத்தி திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் போராடி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான தொழிற்சாலைகளுக்கு வரவேற்பு:


EIA Image courtesy: Mongabay

பூச்சிக் கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலைகளை A பிரிவில் இருந்து B1 பிரிவுக்கு மாற்றியதன் மூலம் சூழலியல் பாதுகாப்பு முக்கியத்துவம் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு பேரிடர் நடந்த யூனியன் கார்பைடு நிறுவனம் ஒரு பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனம் என்பதனை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.

ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள் கூடுதல் விரிவாக்கம் செய்யவோ அல்லது தங்களது உற்பத்தி முறையினை நவீனபடுத்துவதாக இருந்தாலோ அந்த மாறுதல் மொத்த உற்பத்தியில் 50% க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த விரிவாக்த்திற்கான சூழலியல் அனுமதி பெற மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்று புதிய வரைவின் பத்தி 16.1 சொல்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏற்கனவே மக்களையும் சூழலையும் பாதித்துக் கொண்டிருக்கும் Sterlite ஆலை விரிவாக்கம் செய்து கூடுதலாக உற்பத்தி செய்வதாக இருந்தால் அதற்கு மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமலே விரிவாக்கத்திற்கான அனுமதி வழங்கப்படும்.

Draft EIA 2020 இருக்கும் மற்ற முக்கிய பிரச்சனைகள்:
நீர்த்துப் போகும் பொதுமக்கள் கருத்துகேட்பு நடைமுறை:
ஒரு திட்டத்தின் மீது மக்கள் கருத்துச் சொல்லும் கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவதற்கான கால அவகாசம் 45 நாட்களில் இருந்து 40 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. (Appendix-1 பத்தி 1)

மக்களின் கருத்துகளை கேட்டறிய உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் போனால் திட்டத்தினால் பாதிக்கபடப்போகும் மக்கள் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், தங்கள் சந்தேகங்களைக் கேட்கவும், பரிந்துரைகளை முன்வைக்கவும், பிரச்சனைகளைச் சொல்லவும் அவகாசம் கொடுக்காமலேயே கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டால் அதன் நோக்கமே முழுமையடையாது. அரசு முன்னெடுக்கும் கனிமச் சுரங்கங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வனங்களை அழிக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்தப்போகும் இடங்களில் வசிக்கும் மக்கள் (குறிப்பாகப் பழங்குடியினர்) தகவல் மற்றும் தொலைத் தொடர்பில் பின்தங்கி இருக்கும் நிலையில், கருத்துக்கேட்பின் கால அவகாசத்தைப் குறைப்பதென்பது இந்தியாவின் விளிம்புநிலை மக்களின் ஜனநாயக உரிமையை முற்றிலும் மறுப்பதற்குச் சம்மாகும்.
வலுவிழக்கும் கண்காணிப்பு நடைமுறைகள் :

EIA வை பொருத்தவரை சூழலியல் அனுமதிக்கு பிறகான கண்காணிப்பு நெறிமுறைகள் சூழலியல் பாதுகாப்பில் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு நிறுவனம் தான் சூழலியல் அனுமதி பெறும் பொழுது தனது சூழலியல் மேலாண்மைத் திட்த்தில் குறிப்பிட்டவாறு நடந்துகொள்கிறதா என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தாங்கள் எந்த சூழலியல் சீர்கேடும் செய்யவில்லை என்பதை அறிக்கையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

இப்படி 6 மாதங்களுக்கொருமுறை சூழலியல் இணக்க (Compliance) அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்ததை தற்பொழுது இந்த புதிய EIA2020வரைவின் மூலம் 1 வருடத்திற்கு ஒருமுறை என்று நீட்டித்துள்ளார்கள் (பத்தி 20.4). இதனால் ஒரு நிறுவனம் ஒரு வருடத்திற்கு தொடர்ந்து சூழல் சீர்கெட்டில் ஈடுபட்டாலும் அதிகாரிகளின் பார்வைக்கு அது வருடம் முடியும் வரை வராமல் போவதற்கான வாய்ப்புள்ளது. இங்கே கனிமச் சுரங்கம் போன்ற ஒரு செயல்பாட்டில் ஒரு வருடத்திற்கு விதிகளைப் பின்பற்றாமல் தொடர்ந்து இயங்கிவந்தால் அது திரும்பச் சரி செய்யமுடியாத சூழலியல் சீர்கேட்டிற்கு வழிவகுத்துவிடும் என்பதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது.
சூழலியல் அனுமதி உரிமத்தின் கால அவகாசத்தை கூட்டுதல்:

சுற்றுச்சூழல் அனுமதி (EC) வாங்கிய பின்னர் திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் புதிய வரைவில் நீட்டிக்கப்பட்டுள்ளது (பத்தி 19.1.I). உதாரணமாக, சுரங்க பணிகளின் கட்டுமானம் மற்றும் ஆரம்பக் கட்ட பணிகளுக்கான 30 வருட கால அவகாசத்தை 50 வருடங்களாக உயர்த்தியிருக்கிறார்கள். அதே போன்று ஆற்றுப்படுகை மற்றும் அணுவுலைத் திட்டங்களை நடைமுறை படுத்த 5 வருடங்களாக இருக்கும் தற்போதைய கால அளவை 15 வருடங்களாக உயர்த்தியிருக்கிறார்கள். தற்பொழுது இருக்கும் சூழலியல் தன்மையை வைத்து கொடுக்கப்படும் சூழலியல் அனுமதி 15 வருடங்களுக்கு பின்பும் அப்படியே பொருந்தும் என்பது எவ்வளவு தவறானது? இது நிச்சயம் சூழலியலில் சரி செய்ய முடியாத பாதிப்பினை ஏற்படுத்தும்.
சூழலியல் தாக்க மதிப்பீட்டின் தரத்தை குறைத்தல்:
A பிரிவுத் திட்டங்களுக்கான சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யும் பொழுது 10கிமீ சுற்றளவில் ஆய்வுகள் செய்யவும், B பிரிவுத் திட்டங்களுக்கு 5கிமீ சுற்றளவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் புதிய வரைவு பரிந்துரைக்கிறது. சூழலியல் தாக்கம் என்பது ஒவ்வொரு திட்டத்தின் அளவு, கழிவின் தன்மை, திட்டம் செயலபடுத்தும் பகுதியின் சூழலியல் முக்கியத்துவம் ஆகியற்றைப் பொறுத்து மாறுபடும் என்பதால் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரே வரையறையினை வைப்பது சரியாகாது. உதாரணமாக எண்ணூர் அனல் மின்நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக சூழலியல் தாக்க மதிப்பீடு செய்கிறார்கள் என்று எடுத்து கொள்ளுங்கள். உண்மையில் அனல் மின் நிலையத்தின் நுண் துகள்களினால் (Particulate matter) ஏற்படும் பாதிப்புகள் 25கிமீ தாண்டியும் உணரப்படும் என்பதால், 10கிமீக்கு மட்டும் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் திட்டத்தை நடைமுறை படுத்துவது முற்றிலும் தவறாகிவிடும்.
சூழலியல் தாக்க மதிப்பீடு ஆய்விற்கான அடிப்படைத் தகவல்களை (Base line data) சேகரிக்கும்போது வெறும் ஒரு பருவத்திற்கான (season) தகவல்கள் போதுமானது என்கிறது புதிய வரைவு. ஆனால் உண்மையில் கோடை காலம், குளிர் காலம், பருவமழை காலம் என அனைத்துப் பருவங்களிலும் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கும்போதுதான் திட்டத்தினால் ஏற்பட இருக்கும் சூழலியல் தாக்கத்தினை முழுமையாக கணிக்க முடியும்.
முந்தையச் சட்டத்தின் படி நிபுணர் குழுவானது திட்டம் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது என்பதனை ஆராய்ந்து பரிசீலித்து உறுதி செய்வார்கள். சில சமயம் B பிரிவில் வரையறை செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் கூட தேர்வு செய்யப்படும் இடம், அதன் சூழலியல் தாக்கம் ஆகியவை கருத்தில் கொண்டு A பிரிவிற்கு மாற்றப்படும். ஆனால் தற்பொழுது திட்டத்தின் பிரிவுகளைப் பரிசீலித்து உறுதிபடுத்தும் நடைமுறை நீக்கப்பட்டு அனைத்துத் திட்டங்களும் முன்கூட்டியே வரையறை செய்யப்பட்டுவிடுகிறது. இந்த மேம்போக்கான சூழலியல் பார்வை நிச்சயம் சூழலியல் சீர்கேட்டிற்கே வழிவகுக்கும்.
தொழிற்பேட்டைகளுக்குள் அமைந்திருக்கும் MSME (சிறு மற்றும் குறும் தொழில்கள்) அளவுகோலிற்குள் வரும் தொழிற்சாலைகளை B2 பிரிவு எனப் புதிய EIA2020 வரைவு குறிப்பிடுவதின் மூலம் அந்தத் தொழிற்சாலைகளுக்கு சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டாம் என்கிறது. உண்மையில் MSME (Medium-Small-Micro-Enterprises) என்பது அந்தத் தொழிலின் முதலீட்டை மையமாக வைத்து வரையறை செய்யப்படுவது. முதலீடு குறைவாக இருப்பதனால் அந்த நிறுவனம் குறைவாக கழிவுகளை வெளிப்படுத்தும் என்பது கிடையாது. உதாரணத்திற்கு MSME வரையறைக்குள் வரும் சாயப்பட்டறைகள் நீர் நிலைக்கு அருகமையில் அமைக்கபெற்றால் அது மோசமான சூழலியல் சீர்கேடு நடக்கக் காரணமாகிவிடும்.
புகார் விதிமுறைகள் :

EIA2020 வரைவில் தொழிற்சாலையின் சூழலியல் விதிமீறல்களை யார் யார் புகார் அளிக்கலாம் என்று விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வந்த எந்த EIA சட்ட நடைமுறையிலும் இப்படி இல்லை.
திட்டத்தை செயல்படுத்தக்கூடியவர்கள்,
ஏதாவது அரசு துறையினர்
ஆய்வுகுழுவோ மதிப்பீட்டு குழுவோ ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது .
ஏதாவது ஒரு ஒழுங்குமுறை விண்ணப்பத்தை செயலாக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் சமயத்தில் தெரியவந்தால்.

இவர்கள் எல்லாம் இது குறித்து சொல்லலாம் என்று EIA 2020 வரைவின் பத்தி 22.1ல் “DEALING OF VIOLATION CASES” என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது , இதற்கு மற்ற சாமானியர்கள் புகார் அளிக்க முடியாது என்பது தான் அர்த்தம்.
தொழிற்சாலைகளின் விதிமீறல்களை தெரியப்படுத்துதல்:

திருடன் கையிலே சாவியை கொடுத்தது போல, தொழிற்சாலைகளில் நடந்த சீர்கேடுகளை சம்பந்தப்பட்ட நிறுவனமே மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் தெரியப் படுத்தினால் அபராதம் குறைப்பு செய்யப்படுவதாக புதிய EIA வரைவு சொல்கிறது (பத்தி 22.7). இதனால் விதிமீறல்களை தொழிற்சாலைகள் தெரிவிக்கும் பொழுது அதனை குறைத்துக் கணக்குக் காட்டித் தப்பித்துக்கொள்ளவே இது வழிவகுக்கும். அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு மட்டுமே இதற்கான தீர்வாக அமையும்.
திட்டத்தின் சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான பிரத்யேக வழிமுறைகளை வகுத்தல் (SCOPING) :

தற்பொழுதுள்ள 2006 EIA விதிமுரைகளின் படி சூழலியல் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் பொழுது , குறிப்பிட்ட திட்டத்திற்காக TOR-Terms Of Reference என்று சொல்லப்படக்கூடிய பிரத்தியேக ஆய்வு வரைமுறைகளை வழங்குவார்கள். இது ஒவ்வொரு திட்டத்தையும் தொழிற்சாலையையும் பொறுத்து மாறுபடும். அனால் புதிய EIA2020 வரைவிலோ அப்படி பிரத்தியேகமாக TOR விதிமுறைகளை வழங்காமல் மொத்தமாக அந்தப் பிரிவின் கீழ் வரும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சேர்த்து ஒரே முன்கூட்டியே வரையறை செய்யப்பட்ட TOR அறிக்கையை வெளியிடும். உதாரணமாக விண்ணப்பித்திருப்பது ஒரு இரசாயன ஆலை என்றால் மொத்தமாக எல்லா இரசாயன ஆலைகளுக்குமான TOR ஐ பயன்படுத்தி சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். இது சூழலியல் தாக்க மதிப்பீடு முறையை மேலும் வலுவிழக்கச் செய்யும்.
திட்ட செயல்பாட்டிற்கு பிந்தைய சூழலியல் அனுமதி (Post Facto Clearance):

முன்பெல்லாம் சூழலியல் அனுமதி பெற்ற பிறகு தான் ஒரு திட்டத்தையோ தொழிற்சாலையையோ துவக்க முடியும். ஆனால் தற்போதைய வரைவு ஒரு தொழிற்சாலை அதற்கான சூழலியல் அனுமதி பெறுவதற்காக காத்திருக்காமால் தொழிற்சாலையை துவங்கிவிட்டு அதற்கான அபராதத்தையும் கட்டிவிட்டு பின்னர் சூழலியல் அனுமதியை பெறும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதேப் போன்று முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை நீண்ட நாட்கள் காக்க வைக்கக்கூடாதென்பதற்காக சூழலியல் அனுமதி வழங்குவதற்கான கால அவகாசம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இவை EIA சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

இப்படியாகத் தொழில் நிறுவனங்கள் இலாபமீட்டவும், எளிமையாக தொழில் செய்வதற்காகவும் முதலாளிகளின் காத்திருப்பு காலத்தை குறைக்கவும் சூழலியல் பாதுகாப்பிலும் நாட்டின் நீடித்த வளர்ச்சி கொள்கையிலும் சமரசம் செய்யும் இந்த EIA2020 வரைவு நிச்சயம் இந்த நாட்டின் இயற்கை வளத்திற்கும் மக்களின் நலத்திற்கும் பேராபத்து.

பிரச்சனைகளை வரும்முன்னர் நம்முடைய அரசுகள் செயல்பட்டதற்கான தரவுகள் இல்லை, 1984ஆம் ஆண்டு போபால் விபத்திற்கு பிறகுதான் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்” 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 2004ஆம் ஆண்டில் சுனாமியால் ஏற்பட்ட அழிவிற்கு பிறகு “பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டது. கொரோனா போன்ற தொற்றுகள் அதிகமாவதற்கு காரணம், காலநிலை மாற்றமும், காடுகள் அழிக்கப்படுவதும்தான் என உலகம் முழுவதிலும் வல்லுநர்கள் தெரிவித்த பிறகு உலக நாடுகள் தங்களுடைய சூழல் சட்டங்களையும், விதிகளையும் மேலும் கடுமையாக்கி வருகின்றன. ஆனால் இந்தியா தான் “தொழில்களை இலகுவாக நடத்தவேண்டும்” என்பதற்காக ஏற்கனவே நீர்த்துபோய் உள்ள சட்டங்களை மேலும் நீர்த்துப்போக செய்ய EIA2020 போன்ற அறிவிக்கைகளை வெளியிடுகின்றன.

இனி உங்கள் நிலத்தில் யாராவது ஒரு ஒர்க்ஷாப் அல்லது டாஸ்மாக் கடை திறக்க நினைத்தால் உங்கள் அனுமதியை அவர்கள் பெற வேண்டிய அவசியம் இல்லை. அவங்க பாட்டுக்கு கடையைப் போட்டு விட்டு உங்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையைத் தருவ ர்களாம்..நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டு காலி.பண்ணிகிட்டு போகத் தான் வேண்டும். என்பது தான் புதிய EIA வில் மிகப்பெரிய பலவீனமான ஷரத்து.. எப்பொழுது மக்கள் விழிப்படையப்போகிறார்கள்?

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Thursday, 6 August 2020

உலக வரலாற்றில் மக்காவில் புனித ஹஜ் கடமைநடைபெறாத பத்து சந்தர்ப்பங்கள் !!



மக்காவில் புனித ஹஜ் கடமைநடைபெறாத பத்து சந்தர்ப்பங்கள் :

1. ஹிஜ்ரி 251 / கி.பி 865 : அல் சஃபாக் என்று அழைக்கப்படும் இஸ்மாயில் பின் யூசுப் அல்-அலவி மற்றும் அவரது படைகள் அப்பாஸிய கலிபாவுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை வழி நடத்தியதுடன், மக்காவிற்கு அருகிலுள்ள அராபத் மலையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை படுகொலை செய்தனர், இதனால் அந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்பட்டது.
2. ஹிஜ்ரி 317 / கி.பி 930: ஹஜ் பருவ கால சடங்குகளை அபு தாஹிர் கராமிதானி தலைமையிலான அணியினர் இணை வைப்பு சடங்காக கருதினர். இதன் காரணமாக கராமிதா (Karmathian, Qarmatī, (இஸ்மாயிலிய ஷியா பிரிவினர்) என்ற பிரிவு ஹஜ் காலத்தில் மக்கா மீது கொடூரமான தாக்குதலை நடத்தினர். வரலாற்று விவரங்களின்படி 30,000 ஹஜ் யாத்ரீகர்கள் இதில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் 3,000 பேரின் உடல்களை ஸம் ஸம் புனித கிணற்றில் போட்டு மூடி அதை முற்றிலுமாக அவர்கள் அழித்தனர். அது போல கஃபாவிலிருந்த கருப்புக் கல்லைத் ( ஹஜ்றுல் அஸ்வத் கல்)திருடிச் சென்று, சவுதியின் கிழக்கில் உள்ள ஹஜ்ர் (நவீன கால கதிஃப்) என்று அழைக்கப்படும் தங்கள் பிரதேசத்தில் 22 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தனர். இந்த கொடிய நிகழ்விற்கு நிகழ்வுக்குப் பிறகு 10 ஆண்டுகளாக ஹஜ் நடத்தப்படவில்லை.
3. ஹிஜ்ரி 357 / கி.பி 968 : மக்காவில் “அல்-மஷிரி” எனப்படும் ஒரு நோய் பரவல் காரணமாக அந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்பட்டது. இந்த நோய் காரணமாக யாத்ரீகர்கள் பலர் இறந்து போனார்கள். அவர்களின் ஒட்டகங்கள் தாகத்தினால் வழியில் இறந்தன.
4.ஹிஜ்ரி 390 மற்றும் 419/ கி.பி 1000 & 1028 : அதிக பொருட் செலவு மற்றும்பணவீக்கம் காரணமாக ஹஜ் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. அதே காரணத்திற்காக ஹிஜ்ரி 419 இல் கிழக்கிலிருந்தும், எகிப்திலிருந்தும்யாரும்ஹஜ்செய்ய வரவில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
5. ஹிஜ்ரி 492 / கி.பி 1099 : இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சி மற்றும் போர்கள் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பினால் பாதுகாப்பு இல்லாமையினால் இந்த ஆண்டும் ஹஜ் நடைபெறவில்லை. இது ஜெருசலேம் சிலுவைப்போராட்டக் காரர்களின் கைகளுக்கு வீழ்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
6. ஹிஜ்ரி 654 / கி.பி 1256: ஹிஜாஸ் மாகாணம் (மக்கா மதீனா உட்பட்ட பிரதேசம்) தவிர வேறு எந்த நாட்டவர்களும் நான்கு ஆண்டுகளாக ஹஜ் செய்ய வரவில்லை.
7. ஹிஜ்ரி 1213 / கி.பி 1799: போக்குவரத்து வழிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் பிரெஞ்சு புரட்சியின் போது ஹஜ் பயணங்கள் நிறுத்தப்பட்டன.
8. ஹிஜ்ரி1246 / கி.பி1831: இந்தியாவில் இருந்து வந்த ஒரு வகை பிளேக் பரவலினால், முக்கால்வாசி ஹஜ் யாத்ரீகர்கள் இறந்து போயினர் . அதன்காரணமாக அந்த ஆண்டும் ஹஜ் தடைபடுத்தப்பட்டது
9. ஹிஜ்ரி 1252 - 1310/கி.பி 1837 -1892 : இந்த ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் தொற்றுநோய்கள் பரவியிருந்தன. 1871 இல் அது மதீனாவையும் தாக்கியது. இந்த காலரா தொற்று ஹஜ் காலத்தில் பரவிய தனால் அரபாவில் பெருமளவில் மரணங்கள் நிகழ்ந்தன அவை மினாவில் அதிகரித்த எண்ணிக்கையை அடைந்தன. இதன் காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையினரே ஹஜ் கடமையில் ஈடுபட்டனர்.
10. ஹிஜ்ரி 1441 / கி.பி 2020 : கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) ஹஜ் நிகழ்வு சர்வதேச யாத்ரீகர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Thursday, 30 July 2020

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு மட்டும் ஏன் மத்தியரசை கடுமையாக எதிர்க்கிறது?

 வரைவு தேசிய கல்வி கொள்கை -2019 ...



இந்தியாவின் எல்லா மாநிலங்களும் அமைதியாக இருக்க தமிழ்நாடு மட்டும் ஏன் மத்திரசை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறது?


அதுக்கு இரண்டு காரணம்,
1) ஒன்னு இங்கிருக்கும் Inclusive Growth
2) இரண்டு மத்தியரசின் கொள்கைகள் எவ்வகையிலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தொடர்பில்லாமல் இருப்பது
சமீபத்திய உதாரணம் புதிய கல்வி கொள்கை,
மத்திய அரசு நடத்திய உயர்கல்வி நிலையங்களுக்கான கணக்கெடுப்பு - AISHE 2018-19 அறிக்கை கீழே இருக்கு.
இதன் படி. . .
தமிழகத்தில் உயர்கல்வி ஆசிரியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 இலட்சம்!
வேற எந்த மாநிலமும் அந்த எண்ணிக்கைக்கு பக்கத்துல கூட இல்ல!!
நம்மை விட 3 மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசத்தில் 1.4 இலட்சம்,
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மகாராஷ்டிராவில் 1.6 இலட்சம்
போலி போட்டோஷாப்புகள் மூலம் வளர்ந்த மாநிலமாக காட்டப்படும் குஜராத்தில் வெறும் 57 ஆயிரம்!
~~~
இப்போ நான் சொன்ன Inclusive Growth என்பதற்கு வருவோம்.
மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் பெண்கள் மட்டும். . .
தமிழ்நாடு - 48%
மகாராஷ்டிரா - 40%
உ.பி - 32%
குஜராத் - 40%
மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் OBC/SC/ST வகுப்பினர் மட்டும். . .
தமிழ்நாடு - 82%
உ.பி - 36%
மகாராஷ்டிரா - 35%
குஜராத் - 29%
இந்தியளவிலான மொத்த எண்ணிக்கை ஒப்பீட்டில். . .
OBC
தமிழ்நாடு - 30%
மகாராஷ்டிரா - 7.8%
உ.பி - 8.5%
குஜராத் - 2.3%
SC
தமிழ்நாடு - 17%
மகாராஷ்டிரா - 14%
உ.பி - 9%
குஜராத் - 2.6%
ST
தமிழ்நாடு - 1.3%
மகாராஷ்டிரா - 7%
உ.பி - 0.9%
குஜராத் - 7%
தமிழ்நாட்டின் ST Reservation என்பதே 1% தான் என்பதை கவனத்தில் கொண்டால், Open Competition மூலம் நாம் ST நுழைவை சாத்தியப்படுத்தியிருப்பது புரியும்.
சீரான வளர்ச்சி, பரவலான வளர்ச்சி என்பதெல்லாம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் மட்டும் சாத்தியமாகியிருக்கு என்பதை இந்த பட்டியலே சொல்லுதா?
இதர தென்மாநிலங்களோ, ஏன் நீண்டகாலம் கம்யூனிஸ்ட்கள் வசமிருந்த மேற்கு வங்கத்திலோ கூட இப்படியான சீரான, பரவலான வளர்ச்சி சாத்தியமாகவில்லை என்பதை இந்த பட்டியல் உங்களுக்கு உணர்த்தும்.
அப்போ, நமக்கான கல்விக் கொள்கையை வகுக்க இந்தியாவில் யாருக்கேனும் தகுதி இருக்கிறதா?
அதிலும் குறிப்பாக குஜராத் கூட்டத்துக்கோ, அதன் வழி நிற்கும் மத்தியரசுக்கோ தகுதி இருக்கிறதா என்று நீங்களே முடிவு செய்துக்கோங்க.
மத்த மாநிலங்கள் எல்லாம் காலம் காலமா தன்னிடம் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை தராம, தட்டு தடுமாறி தத்தி தவழ்ந்து படித்து மேல ஏற முயற்சிப்பவனிடமும் Merit, தகுதி, திறமை என்று எகத்தாளம் பேசி, தன்னிலை உணராமல் அவன் தங்களுக்கு அடிமையாகவே இருக்கனும் என்று இந்துத்துவாவை திணித்து,
வளர்ச்சி என்பதை ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனா நம்ம தமிழ்நாடு அப்படியில்லை என்பதை தான் மத்தியரசின் புள்ளியியல் விவரங்கள் நமக்கு சொல்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. . .இதில் அரசு & தனியார் துறை ஆசிரியர்கள் மொத்த பேரும் கணக்கில் எடுக்கப்பட்டிருக்காங்க. அதனால Reservation மூலம் மட்டுமே எல்லாரும் மேல வந்துட்டாங்கன்னு யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. காரணம் தனியார் கல்லூரிகளில் Reservation மூலம் யாரும் வேலைக்கு சேர்ந்துவிட முடியாது.

பள்ளியில் படிக்கும் போதே தொழிற்கல்வி கற்பிப்பது நல்லதுதானே என்று கேட்பவர்கள் உண்டு. இரண்டு விஷயங்களைக் கோர்த்துப் பார்த்தால் இதன் விபரீதம் புரியும்- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்துவிட்டார்கள். பொதுவாகவே எட்டாவது படிக்கும் போதே ‘தையல் பழகிட்ட இல்ல...திருப்பூர் போனா நல்ல சம்பளம் வரும்’ என்ற பேச்சு வரும். ஃபெயில் ஆனால் உறுதியாக நிறுத்திவிடுவார்கள். எலெக்ட்ரீசியன், ப்ளம்பர் என்று அரையும் குறையுமாகத் தெரிந்து கொண்டு ‘இதுவரைக்கும் படிச்சது போதும்’ என்று படிப்பைக் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதன் பாதிப்பு கிராமங்களிலும், எளிய மக்களிடமும்தான் அதிகமாக இருக்கும். மாணவிகள் நிலைமை இன்னமும் பரிதாபமாக இருக்கும். அடுத்த இருபதாண்டுகளில் டிகிரி கூட முடிக்காதவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எழுதி வைத்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் தேசிய மொழி(National Language) எது எனக் கேட்டால் பலர் இந்தி(Hindi) என்று பதில் கூறுகின்றனர்.வட இந்தியாவைச் சேர்ந்தவர் ஹிந்திதான் தேசிய மொழி என்கின்றனர்.ஆனால் உண்மையில் ஹிந்தி தேசிய மொழி அல்ல.
இந்தியாவின் அரசு ஏற்பு பெற்ற 22 மொழிகளில் இந்தியும் ஒன்று.வட மாநிலங்களில் அதிகமாக பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது.அவ்வளவுதானே தவிர இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.
அரசியல் அமைப்பு பிரிவு 343(1) இன் கீழ் இந்தி மொழியானது மத்திய அரசின் மொழிகளுள் ஒன்றாகும்.
இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்,பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்கவில்லை.
அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.தேசிய அளவில் இந்தி அலுவல் மொழியாகவும்,ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாகவும் உள்ளன.
அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கான அலுவல் மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் தமிழ்மொழி, கேரளாவில் மலையாளம்,கர்நாடகாவில் கன்னடம்,ஆந்திராவில் தெலுங்கு,குஜராத் மாநிலத்தில் குஜராத்தி என அந்தந்த மாநில மொழிகளே அலுவலக மொழியாக உள்ளன.
இப்ப நான் சொல்வது இந்தி அரசு பள்ளியில் இல்லை,தனியார் பள்ளிகள் மண்டி போடுகின்றனர்,அரசு பள்ளி மாணவன் வடநாடு போக மாட்டான் போனா தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசி வெற்றியுடன் திரும்புவான்
இப்ப யாருக்கு இந்தி வேணுமோ அவங்க படிக்கட்டும் நமக்கு என்ன எரியுது....
ஆனா கட்டாயம படி னா எரியும் ஏன்னா எம் அரசு பள்ளி மாணவன் சென்னை தாண்ட மாட்டான்.அவனுக்கு தேவையும் பேசுவது குறைவுஇப்ப ஒன்னு ஒன்னு
இந்தி வேணுமா வேணாமானு படிக்கும் மாணவன் முடிவு பண்ணட்டும்
கணினி வந்தப்பவும் இப்படி தான் கூவிட்டு அலைஞ்சம் இப்ப வீட்ல படுத்துட்டு அலுவலக வேலை செய்யல ....
அட போங்கப்பவேணுமா வேண்டாமாங்கறது மாணவனின் தேவையை பொருத்தது உங்க கருத்து அதுல ஏத்தாதிங்க ...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது இப்படித்தான்!

எந்த தேர்வு வைத்தாலும் முதல் மதிப்பெண் வாங்கும் ஒரு மாணவனுக்கு, கடைசி மதிப்பெண் பெறும் மாணவன் கல்வி கற்பது எப்படி என்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லக்கூடாது, சொல்ல முடியாது என்பதை அனைவரும் உணர்ந்தால் சரி.

புதிய கல்வி கொள்கை எங்களுக்கு தேவையில்லை!!! மத்திய அரசே ???
நீங்கள் கடைபிடித்துவரும் கல்வி கொள்கையின் நோக்கத்தை தமிழகம் எஏற்கனவே அடைந்துவிட்டது. அதை பின்பற்றி 50% தை அடைவைத விட்டு சந்தனத்தை ஏன சாக்கடையாடு கலக்க விரும்புகிறீர்கள் என்றால்...
எதோ தமிழகம் மிகவும் சட்டம் ஒழுங்கு கெட்டுகிடக்கும் மாநிலம்,
அதுவும் கல்வி கூடத்திலே இப்படி நடக்கிறதே என கேட்ப்பது அறிவில்லாத வாதம் வடக்கே, பல மாநிலத்தைச் சார்ந்த வர்கள் வந்து பயிலும் தமிழ்நாட்டில் , யாரோ ஒருவர் கத்தி எடுக்கிறார் என்பதெல்லாம் தமிழ் நாடு பாடத்திட்டம்.அல்ல .'' கத்தியைத் தீட்டாதே , உன் புத்தியைத் தீட்டு '' என்பது தான் இங்கு பாடம் . பாடம் புகட்டுவோர்க்கே பாடம் புகட்டுவது தான் நாட்டின் சாபக்கேடு .
புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?? எதிர்க்கிறதா???? இந்தியாவில் எந்தெந்த மாநிலங்கள் எதிர்க்கின்றன???
ஆதரிக்கின்றன???? கேரளா ஆந்திரா கர்நாடகா, மஹாராஷ்ட்ரா
ஆதரிக்கிறதா??? எதிர்க்கிறதா???
காத்திருந்து பார்போம் !!!!

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Sunday, 26 July 2020

Electrical Cable Insulation Resistance (IR) Test conducting Safety Requirements !!

  

In EPC, industrial, and power projects, IR Testing is a mandatory and critical step during Preservation, pre-commissioning, maintenance, and troubleshooting of electrical systems.


Whether you're dealing with power cables, motors, generators, transformers, switchgear, busbars, or control circuits, verifying insulation integrity is essential to ensure system safety, prevent equipment failure, and avoid hazardous incidents.


⚙️ What is IR Testing?

It involves applying a high DC voltage between a conductor and ground (or between conductors) using a megohmmeter (commonly called a Megger) to measure the resistance of the insulation. The reading—expressed in Megaohms (MΩ)—gives a direct indication of the insulation condition.

High resistance = good insulation.

Low resistance = potential moisture, contamination, or insulation degradation.


📌 Where & When is IR Testing Performed?

🔹During factory acceptance tests (FAT) and site acceptance tests (SAT)

🔹As part of pre-commissioning or commissioning checks

🔹During routine preventive maintenance

🔹After major shutdowns, repairs, or modifications

🔹Before energizing long-idle or stored equipment


🎯 Typical Test Voltage & Acceptance Criteria:

🔹For systems up to 500V: test at 500V DC, IR ≥ 1 MΩ

🔹1.1kV to 11kV equipment: test at 2500V DC, IR ≥ 5 MΩ

🔹Above 11kV: test at 5000V DC, IR ≥ 10 MΩ

🔹Motors (as per IEEE 43): Minimum IR = (Rated kV + 1) × 1 MΩ

🔹Control and instrument cables: IR ≥ 2 MΩ with 500V DC


🧪 IR Testing Procedure – Key Steps:

1. Ensure isolation from the power source. Lock-out/tag-out (LOTO) as required.

2. Discharge any stored energy from capacitive equipment.

3. Connect Megger leads appropriately—phase to ground, phase to phase, or winding to ground

4. Select the correct test voltage based on the equipment rating

5. Apply voltage for at least 60 seconds; 10 minutes if calculating Polarization Index

6. Record and analyze the IR values

7. Safely discharge the circuit after testing to avoid electric shock from residual charge


📈 How to Interpret the Results?

🔹IR > 100 MΩ: Excellent insulation (typical for new equipment)

🔹IR between 5–100 MΩ: Acceptable, depending on system and environment

🔹IR < 1 MΩ: Warning sign

🔹Use Polarization Index or Dielectric Absorption Ratio for more insight into insulation aging and absorption behavior

⚠️ Safety & Precautions

🔹Ensure power is fully isolated and discharged

🔹Avoid testing circuits with sensitive electronics

🔹Discharge capacitance safely after the test

🔹Use lockout-tagout (LOTO) and PPE strictly

🔹Record all test results with proper traceability

Thursday, 16 July 2020

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் எவ்வாறு குளிர்ச்சியடைகிறது?


குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் எவ்வாறு குளிர்ச்சியடைகிறது?

இதற்கான துல்லியமான விடையை அறிய வெப்பவியக்கவியலின் (thermodynamics) அடிப்படைகளை அறிதல் தேவை. (அதைப் பின்னால் விளக்குகிறேன்!)

எளிதாகச் சொல்வதென்றால் ‘வெப்பம்’ என்பது ஒருவகை ஆற்றல். ‘குளிர்’ என்பது வெப்பம் குறைந்த நிலை.

குளிரூட்டியின் உள்ளிருந்து வெப்பம் வெளியேற்றப்படுகிறது, இதனால் அதன் உள்ளே குளிர்ச்சி உண்டாகிறது. அதனுள் இருக்கும் பொருள்களும் குளிர்வடைகின்றன (வெப்பத்தை இழக்கின்றன!).

இப்போது வெப்பவியக்கவியலுக்கு வருவோம்,

வெப்பம் ஒருவகை ஆற்றல் என்றோம், ஆற்றல் அழிவின்மை விதி (conservation of energy) என்ற கோட்பாட்டைக் கேள்விபட்டிருப்பீர்கள்.

ஒரு அமைப்பின் ஒட்டுமொத்த ஆற்றல் மாறாமல் இருக்கும், அதன் இடைப்பட்ட நிலைகளில் ஒருவகை ஆற்றல் மற்றொருவகை ஆற்றலாக மாறலாம், ஆனால் ஒட்டுமொத்த அளவு மாறாது - இதுதான் ஆற்றல் அழிவின்மை விதி.

ஆனால், நடைமுறையில் இது மட்டும் செயலில் இல்லை என்பதை நாம் எளிதில் உணரலாம்.

எடுத்துக்காட்டாய், ஒரு கோப்பை சூடான தேநீரை மேசை மேல் வைத்திருந்தால் அது குளிரடையுமே தவிர மேலும் வெப்பமாவதில்லை.

அதாவது, தேநீரிலிருந்து வெப்ப ஆற்றல் சுற்றுச்சூழலுக்குச் செல்கிறதே தவிர, சுற்றுச்சூழலிலிருந்து வெப்ப ஆற்றல் தேநீருக்குள் நுழைவதில்லை.

(அவ்வாறு நுழைந்தாலும் ஆற்றல அழிவின்மை விதிக்கு எந்த பங்கமும் உண்டாகாது, ஆனால் அது நிகழ்வதில்லை!)

எனவே, ஆற்றல் அழிவின்மையைத் தாண்டி ஆற்றல் (குறிப்பாய் வெப்ப ஆற்றல்) பாயக்கூடிய திசைக்கும் ஒரு விதி இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

இதைத்தான் வெப்பவியக்கவியலின் இரண்டாவது விதி என்பர் (துல்லியமான விதியைச் சொல்லி உங்களைக் குழப்ப வேண்டா என்று எண்ணுகிறேன்! கருத்து மேலே சொன்னதுதான்! ஆற்றல் அழிவின்மைதான் வெப்பவியக்கவியலின் முதல் விதி! மூன்றாவது விதியும் ஒன்று உளது!)

ஆக, (குளிரூட்டு போன்ற) ஒரு பெட்டியை வைத்து, அதனுள் சூடான பொருளை வைத்தால் அது தன் சூட்டை இழந்து சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கே வரும். ஆனால், அதனால் அதற்கு மேல் குளிரடைய முடியாது. (நம்மூரில் சராசரி சுற்றுச்சூழல் வெப்பநிலை சுமார் 25 முதல் 30 பாகை செல்சியசு. இதனை ‘அறை வெப்பநிலை’ (room temperature) என்போம்.)

சுற்றுச்சூழலைவிட ஒரு பொருளைக் குளிரூட்ட வேண்டுமென்றால் நாம் ‘வேலை’ செய்ய வேண்டும் (இயக்க ஆற்றலை பயன்படுத்த வேண்டும்!)

ஒரு குளிரூட்டியில் நான்கு அடிப்படை கருவிகள் / அமைப்புகள் இருக்கும்.
அழுத்தி (Compressor)
ஒடுக்கி (Condenser)
விரிவாக்கி (Expander)
ஆவியாக்கி (Evaporator)

இவற்றின் ஊடாக ஒரு குளிர்பதனப் பொருள் (refrigerant) சுழற்சி முறையில் பாயும்.


குளிர்பதனப் பொருளின் கொதிநிலை (boiling point) மிகக் குறைந்ததாக இருக்கும் (0 பாகை செல்சியசிற்கும் குறைவு!)

அது ‘அழுத்தி’யினுள் செலுத்தப்பட்டு உயரழுத்தத்துடன் வெளிப்படும், உயரழுத்த ஆவியான அதை ’ஒடுக்கி’யினூடகச் செலுத்துகையில் அது திரவமாக மாறும்.

இந்நிலையில் அது ஒரு பகுதி வெப்பத்தை வெளியேற்றிவிடும் (ஒடுக்கியிலிருந்து வெப்பம் சுற்றுச்சூழலுக்கு வெளியேறும்)

பின்னர், உயரழுத்த திரவமான அதனை ’விரிவாக்கி’யினூடாகச் செலுத்துகையில் அது விரிவடையும், அவ்வாறு விரிவடைகையில் அதன் அழுத்தம் குறையும்,

அழுத்தம் குறைந்த அத்திரவம்

’ஆவியாக்கி’யில் செல்கையில் வெப்பமேற்று வாயுவாகும்.

ஆவியாக்கி குளிரூட்டிப் பெட்டியினுள் இருக்கும் (பொதுவாக இது உறைவறையின் (freezer) பெட்டியாக அமைக்கப்பட்டிருக்கும்!)

இங்குதான், குளிர்பதனப் பொருள் குளிரூட்டி அறையின் வெப்பத்தை ஏற்று ஆவியாகிறது.

ஆக, இந்தச் சுழற்சியில் குளிர்பதனப் பொருள் ஆவியக்கி மூலம் குளிரூட்டிக்குள் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, ஒடுக்கியின் மூலம் அதனை சுற்றுச்சூழலில் வெளியேற்றுகிறது.

இச்சுழற்சி தொடர்ந்து நிகழ நிகழ குளிரூட்டியினுள் இருக்கும் வெப்பம் மெல்ல குறைந்து கொண்டே வரும். (ஆனால் இதற்கு ஒரு எல்லை இருக்கிறது, ஒரு கட்டத்தில் குளிரூட்டியின் உட்பக்க வெப்பம் குளிர்பதனப் பொருளின் ஆவியாதல் வெப்பத்தைக் காட்டிலும் அதிகமாக குறைவாக இருக்கும், அப்போது குளிர்பதனப் பொருளால் மேற்கொண்டு வெப்பத்தை உறிஞ்ச இயலாத நிலை ஏற்படும், அதற்குக் கீழ் நம்மால் குளிரூட்ட இயலாது!)


இப்படத்தில் குளிரூட்டு உறுப்புகள் குளிரூட்டுப் பெட்டியில் (பொதுவாக) எங்கே அமைந்திருக்கும் என்று தோராயமாகக் காட்டியுள்ளேன்.

அழுத்தி என்பது கீழே இருக்கும். இதனோடு ஒரு விசைப்பொறி (motor) இணைக்கப்பட்டிருக்கும். குளிரூட்டி இயங்குகையில் நமக்குக் கேட்கும் ஒலி இதிலிருந்துதான் வருகிறது.

விரிவாக்கி என்பது ஒரு தனி கருவி அல்ல, அது ஒரு மிக நுண்ணிய புழை கொண்ட குழாய் அவ்வளவே, அந்த நுண்டுளை வழியாக வாயு வெளியேறுகையில் அழுத்தம் குறையும்.

ஒடுக்கி பெட்டியின் பின்புறம் இருக்கும். இதிலிருந்து வெப்பம் வெளியேறும். (எனவேதான், ஒரு குளிரூட்டியை ஒரு மூடிய அறைக்குள் திறந்த நிலையில் வைத்து இயக்கினால் அறை குளிராகாது மேலும் வெப்பமேறும்!)

இதே அடிப்படையில்தான் காற்பதனி/ குளிர்பதனியும் (Airconditioner, A/c) இயங்குகிறது. அதிலும் இதே உறுப்புகள் இருக்கும்.

ஆவியாக்கி அறைக்குள் இருக்கும். மற்ற பாகங்கள் தனிப்படுத்தப்பட்டு அறைக்கு வெளியே இருக்கும்.

அறைக்குள் இருக்கும் காற்று ஆவியாக்கியில் பட்டு குளிராகும். (ஆவியாக்கிக்குள் வரும் குளிர்பதனப் பொருள் அறைக்காற்றின் வெப்பத்தை ஏற்றுக்கொண்டு, ஒடுக்கி மூலம் அறைக்கு வெளியேவிடும்.)

இதில் கவனிக்க வேண்டியது, அறைக்காற்றின் வெப்பம் மட்டுமே வெளியேற்றப்படுகிறது, அறைக் காற்றே அல்ல! (அதாவது, குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் இருக்கும் காற்றே மீண்டும் மீண்டும் அவ்வறைக்குள் செலுத்தப்படும். உயிர்வளியின் அளவு குறையாமல் இருக்க வெளிக்காற்றைச் சற்று கலக்கும் படி அமைத்திருப்பர். மேலும், சரியான காற்றுச் சுழற்சிகளையும் அறையில் ஏற்படுத்தியிருத்தல் தேவை!)

வெப்பச் சுழற்சி மட்டுமின்ற மின், காந்தம் என்று வேறு பல முறைகளிலும் குளிரூட்டலாம். அறிவியல் சோதனைகளில் தேவைப்படும் மிக தாழ் வெப்பநிலைகளை உருவாக்க காந்தப் புல மாற்றங்களால் ஏற்படும் குளிர்வு கைக்கொள்ளப்படுகிறது.

Friday, 10 July 2020

கல்வியின் மூலம்தான் மாற்றம் சாத்தியம் என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் !!!


CBSE, students


பொதுமுடக்கத்தால் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள கால விரையத்தை சரி செய்ய 2020 -21 க்கான CBSE வாரியத்தில் 9 - 12 ஆம் வகுப்புப் பாடங்கள் 30 சதவீதம் குறைப்பு என்ற பெயரில் இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையான கருத்துக்களை பாடத்திட்டத்திலிருந்து துணிச்சலாக நீக்கியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு.அரசமைப்பு சட்டத்தை முழுமையாக மாற்றுவதற்கு முன்னர் அதன் உயிரோட்டமுள்ள உறுப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் முயற்சியின் அடுத்தகட்ட நகர்வுதான் இது.
9 ஆம் வகுப்பு பாடத்தில் ஜனநாயக உரிமைகள் என்ற பாடம் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.
10 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து ஜனநாயகம்,பன்முகத்தன்மை,பாலினம்,சமயம், சாதி, இயக்கங்கள், போராட்டங்கள், மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான சவால்கள் ஆகிய அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
11 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய அத்தியாயங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
12 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான வெளியுறவு கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி,திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டங்களில் இருந்து இவற்றை நீக்குவதின் மூலம் இந்தியா என்ற மகத்தான பன்முக தேசத்தை கட்டமைக்கும் சித்தாந்தத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு முறைப்படி கடத்தும் முயற்சிக்கு தடை போட்டுள்ளனர்.
எவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டாலும் இழப்புகள் ஏற்பட்டாலும் இலக்கை நோக்கிய பயணத்திலிருந்து ஒரு நூல் அளவு கூட விலக மாட்டார்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் இந்த நாட்டில் முஸ்லிம்களின் குடியுரிமை, கலாச்சாரத் தனித்தன்மை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகிய அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.
முஸ்லிம்கள் என்ன திட்டத்தை நாம் வைத்திருக்கிறோம்.அதை நம்மில் எத்தனை பேருக்கு பயிற்றுவித்திருக்கின்றோம். இந்த நாட்டில் நமது பிள்ளைகளை எத்தகைய சூழலில் விட்டுச் செல்லப் போகின்றோம். தனியொரு முஸ்லிமாக உங்களின் சமூக இலக்கு எது?ஒரு சமூகமாக நமக்கான இலக்கு எது? இந்த நாட்டில் நமது பிள்ளைகளுக்கான இலக்கு என்று அவர்களுக்கு எதை கற்பிக்கின்றோம் ?
இன்றைய நமது வாழ்வாதார நெருக்கடிகள் இன்ஷா அல்லாஹ் நாளை மாறிவிடலாம் ஆனால் பெருகிவரும் கல்வி சமூக அரசியல் சிக்கல்களுக்கு தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தாமல் போனோம் என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

The Central Board of Secondary (CBSE) has reduced up to 30 per cent of the syllabus for the 2020-21 academic session for classes 9 to 12. The idea is to reduce the course load for studens in the wake of the global crisis.

According to the updated curriculum, the chapters deleted from the Class 10 syllabus are those dealing with democracy and diversity, gender, religion and caste, popular struggles and movement and challenges to democracy.

For Class 11, the deleted portions include the chapters on federalism, citizenship, nationalism, secularism and growth of local governments in India.

Similarly, Class 12 students will not be required to study the chapters on India's relations with its neighbours -- Pakistan, Myanmar, Bangladesh, Sri Lanka and Nepal, the changing nature of India's economic development, social movements in India and demonetisation, among others.


Source : https://www.business-standard.com/article/education/cbse-syllabus-reduced-list-of-chapters-deleted-in-history-political-science-know-complete-revised-cbse-syllabus-for-class-9-10-11-12-120070800661_1.html?fbclid=IwAR2wDN_Jhr1OaQWvFnwLjHQTUG33jqWnb3sgdmNgv466kHnlFr9f_Z2dA1s

Friday, 3 July 2020

இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பூசி COVAXIN !!

இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பூசி covaxin -ஐக் கண்டு பிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். திருத்தணியைச் சேர்ந்த ஒரு விவசாயி மகன்.ஜிகா வைரஸ்ஸுக்கு எதிரான விலை குறைந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்தவரும் இவரே!கொரோனாவை எதிர்த்த போராட்டத்தில், உலகமெங்கும் அதற்கான மருந்து, தடுப்பூசி என பலரும் பலமுனைகளில் தீர்வு காண முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாதைச் சேர்ந்த ‘பாரத் பயோடெக்’ 'COVAXIN' என்ற முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளனர். இதுவே இந்தியாவில் உருவாக்கப்படும் முதல் கொரோனா தடுப்பூசி ஆகும்.
அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்று அங்கேயே தங்கிவிட இருந்தவரை, தாய் நாடு திரும்பி வரச் செய்தது அவரது அம்மாவின் அன்பு!
அவரது பெயர் டாக்டர் கிருஷ்ணா எல்லா.
பாரத் பயோடெக் என்ற ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ‘Covaxin' தடுப்பூசி தயாரிப்பின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக அடைந்து, இரண்டாவது கட்டமான மனிதப் பரிசோதனைக்குத் தயார் நிலையில் இருப்பதாக அண்மையில் அறிவித்தது. அதன்படி, தேசிய மருந்தக ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.
“இது இந்தியாவில் முற்றிலும் தயாரான முதல் உள்நாட்டுத் தடுப்பூசி. இதுவே அரசின் தற்போதைய தலையாயப் பணியாக உள்ளது.மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இதைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்,” என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசி மருந்தின் மனிதப் பரிசோதனை இம்மாதம் ஜுலை 7 தொடங்கி, அதில் திருப்திகரமான முடிவுகள் வந்த பின்னரே, இதற்கு உரிய அனுமதி வழங்கப்படும்.
“மனிதப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டால், வரும் ஆகஸ்ட் 15, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்படும். பாரத் பயோடெக் இந்தத் தேதியை மனதில் கொண்டு வேகமாக செயல்பட்டு வருகிறது. எனினும் மனிதப் பரிசோதனையில் ஈடுபடும் அனைவரின் ஒத்துழைப்பைப் பொறுத்தே இதன் முடிவுகள் அமையும்,” என ஐசிஎம்ஆர் இயக்குனர் தடுப்பூசியை அனுப்பிவைத்த மருத்துவமனைகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்கு உட் படுத்தப்படும் இந்தியாவின் 12 மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்கள்... விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், காட்டங்கொளத்தூர் (தமிழ்நாடு), ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவா!