Friday, 30 March 2018

1G, 2G, 3G,4G என்றால் என்ன?


Image result for 1g2g3g4g technologyஇன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.

1G network 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced mobil phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும் sms போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.

2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும்cdma (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.

2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.

3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors):

  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)


4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV


1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.


2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:
((([ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]

2.கட்டமைப்பு (Network)

2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, webborsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம்Voice vip ip என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).

3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)

4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!

தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...
ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி-லக்கிலுக்.

Thursday, 29 March 2018

AC யின் சரியான பயன்பாடு பற்றிய மிகவும் பயனுள்ள தகவல் !!



AC யின் சரியான பயன்பாடு சூடான கோடை தொடங்கியுள்ளது.நாம் தொடர்ந்து ஏர் கண்டிஷனர்கள் பயன்படுத்துகிறோம்.
அதில் சரியான முறையை பின்பற்றுவோம். 
Image may contain: phone

பெரும்பாலான மக்கள் 20-22 டிகிரிகளில் தங்கள் ஏசியை இயக்கும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் குளிர்ச்சியாக இருக்கும்போது, ​​அவர்கள் போர்வையால் போர்த்தி கொள்கின்றனர்.
இது இரட்டை இழப்புக்கு வழிவகுக்கிறது. எப்படி ???

நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்று உங்களுக்குத் தெரியுமா? 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை எளிதில் சமாளிக்க முடியும்.இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.
அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது, ​​உடல் தும்மல், நடுக்கம், ஏற்படுகிறது.

நீங்கள் 19-20-21 டிகிரிகளில் ஏசியை இயக்கும்போது, ​​அறை வெப்பநிலையானது சாதாரண உடல் வெப்பநிலையைவிட மிகக் குறைவாகவும், உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் பாதிக்கவும் உடலில் உள்ள சிறுநீர்ப்பை எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. கீல்வாதம் போன்ற நீண்ட கால தீமைகள் பல ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் ஏசி இருக்கும் போது எந்த வியர்வையும் வெளிப்படுவது இல்லை. அதனால் உடலின் நச்சுகள் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன், தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படலாம்.

இது போன்ற குறைந்த வெப்பநிலையில் நீங்கள் ஏசி இயக்கும்போது, ​​அது 5 நட்சத்திரதரத்துடன் இருந்தாலும்கூட, தொடர்ந்து முழு சக்தியிலும் இயங்குகிறது, அதிகமான மின்சாரம் உறிஞ்சப்படுகிறது,

ஏசி இயக்க சிறந்த வழி என்ன ??
25 டிகிரிக்கு வெப்பநிலை அமைக்கவும்.
25+ டிகிரிகளில் ஏசி இயக்கவும்.
மெதுவான வேகத்தில் விசிறியை வைப்பது சிறந்தது.

இதனால் குறைவான மின்சாரம் செலவாவதுடன், உங்கள் உடல் வெப்பநிலையும் கட்டுப்பாட்டில் இருக்கும். மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.

இதில் மற்றொரு சாதகமாக, AC குறைந்த மின்சாரம் சாப்பிடுவதால், மூளையின் மீது இரத்த அழுத்தம் குறையும் மற்றும் சேமிப்புடன் இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.எப்படி ??

26 டிகிரியில் ஏறத்தாழ 10 லட்சம் வீடுகள் ஏசி பயன்படுத்துவதன் மூலம் இரவில் ஏசி ஒன்றுக்கு சுமார் 5 யூனிட்களை நீங்கள் சேமிக்கலாம். எனில், நாளொன்றுக்கு 5 மில்லியன் யூனிட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.

பிராந்திய அளவில் இந்த சேமிப்பு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான அலகுகள் இருக்கலாம்.

தயவு செய்து மேலே குறிப்பிட்டபடி, உங்கள் AC ஐ கீழே 25 டிகிரிகளுக்கு கீழ் இயக்க வேண்டாம். உங்கள் உடலையும் சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தஞ்சை தாவூத் ஷா !!

ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.

தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலுக்கு அருகில் கீழ்மாந்தூரில் 1885 மார்ச் 29-ல் பப்பு ராவுத்தரின் மகனாக தாவூத் ஷா பிறந்தார். இவரது பள்ளித் தோழர் கணித மேதை ராமானுஜம். ராமானுஜத்துக்குத் தமிழ் வராது. தாவூத் ஷாவுக்குக் கணிதத்தின் மேல் ஒவ்வாமை. இருவரின் நட்பு பரஸ்பரக் குறைகளை நிவர்த்திசெய்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்தபோது உ.வே.சாமிநாதய்யர் இவரின் ஆசிரியராக இருந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது. பதவி உயர்வுக்கான தேர்வு எழுதி சப் கலெக்டரானார். அன்றைய நாளில் இந்தப் பதவிக்கு வந்த முதல் இஸ்லாமியர் தாவூத் ஷாதான். மத அறிஞர்கள் கல்வியை உலகக் கல்வி மற்றும் மார்க்கக் கல்வி என்று இரண்டாகப் பிரித்து மார்க்கக் கல்வியை மட்டுமே முன்னிலைப்படுத்தியதையும் முஸ்லிம் பெண் கல்வி கற்க இருந்த தடையையும் தாவூத் ஷா எதிர்த்தார். அவருக்கு எதிராக பத்வா என்னும் மதத் தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டன.

தாவூத் ஷா பதவியைத் தூக்கி எறிந்தவுடன், தமது சொந்த ஊரான நாச்சியார் கோயிலுக்கு வந்தார். இந்திய விடுதலைப் போரில் குதித்தார். அரசியல் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார். கிராமங்கள் தோறும் சென்று தீவிரமான பரப்புரை செய்தார். மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டினார். பட்டி தொட்டியெல்லாம் சென்று மகாத்மா காந்தியடிகளின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்தார். கதர்த் துணிகளைக் கை வண்டியில் ஏற்றிக் கொண்டு தானே வண்டியை இழுத்துச் சென்று தெருத் தெருவாக விற்பனை செய்தார்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். சென்னை மாநகரத் தந்தையாக (ஆல்டர்மேன்) தாவூத் ஷா நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக "தேசகேசவன்" என்ற வார இதழை நடத்தினார். இடி முழக்கம் போன்ற இவரது சொல்லாற்றலும், இளைஞர்கள் நெஞ்சத்தில் வெடி முழக்கம் ஏற்படுத்திய இவரது எழுத்தாற்றலும், நொடிப் பொழுதும் ஓய்வு அறியாத உழைப்பும், “தமிழ்நாட்டின் ஜின்னா“ என்ற சிறப்புப் பட்டத்தை தாவூத் ஷாவுக்கு பெற்றுத் தந்தது.

இசுலாமிய மக்களிடையே சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு, தாவூத ஷாவினுடைய எழுத்தும், பேச்சும் அமைந்திருந்தன.“தென்னாட்டு முசுலிம்களிடம் காணப்படும் மூடக்கொள்கைகளை எல்லாம் களைந்து, அவர்களுடைய மார்க்க ஞர்னத்தையும் கல்வியறிவையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் 1921 முதல் ”தத்துவ இஸ்லாம்” என்னும் மாத இதழைதொடங்கி , தமது பிரச்சாரத்துக்காக லண்டனிலிருந்து கொண்டு வந்தார் தாவூத் ஷா.. பின்பு லண்டனிலிருந்து அதை நடத்தினார். அதற்கும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. பின்னர் இந்த இதழின் பெயரை ‘தாருல் இஸ்லாம்’ என்று மாற்றினார். இதற்கு ‘இஸ்லாமிய வீடு’ என்று அர்த்தம்.


காங்கிரஸில் இருந்த தாவூத் ஷா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தஞ்சையின் வீதிகளில் கதர் விற்றார். 1940-ல் அதிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்தார். ஜின்னா தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை மொழிபெயர்த்து வழங்கினார். 

நாச்சியார்கோயிலில் 1941ல் “அறிவானந்த சபை“ என்ற பெயரில் நூலகமும், உடற் பயிற்சி நிலையமும் ஏற்படுத்தினார். அச்சபையின் தலைவராக இருந்து சிறப்பாகச் செயலபட்டார். பின்னர், அந்தச் சபையை ”முசுலிம் சங்கம்” என்று மாற்றினார். !

ஆங்கிலம், அரபு மொழி யில் இருந்தும் தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்தார். புகழ்பெற்ற அரபு காவியமான ‘ஆயிரத்தோர் இரவுக’ளின் சில தொகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்று அது பற்றி உரையாடும் திறனைப் பெற்றார்.இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார்.


பெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார்ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படங்கள் மத விரோதமான ஒன்று (இன்றளவும் அது நீடிக்கிறது) எனக் கருதப்பட்ட காலத் தில் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருந்தார் தாவூத் ஷா. எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த காட்சிப் பதிவுகளுக்கு இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்டனர்.


முசுலிம பெண்களை வீட்டில் பூட்டி வைக்காமல் படிக்க வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த காலத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பஷீர் அகமது, பெண்களுக்காக சென்னை தேனாம்பேட்டையில் எஸ்.ஐ.இ.டி கல்லூரியை ஆரம்பித்தபோது, பழமைவாதச் சிந்தனை கொண்ட முசுலிம் உலமாக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முசுலிம் பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக் கூடாது என்றும், கல்லூரி ஆரம்பிப்பது இசுலாம் மார்க்கத்திற்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல் எழுப்பினர். அப்போது, நீதிபதி பசீர் அகமதுவுக்குப் பெரும் துணையாக இருந்து, கல்லூரி திறந்திட முழு ஆதரவு அளித்தவர் தாவூத் ஷா. தமிழ் இஸ்லாமிய சமூகத் தில் முக்கிய சீர்திருத்த ஆளுமையாக மிளிர்ந்த தாவூத் ஷா, தனது 84-வது வயதில் 1969 பிப்ரவரி 24-ல் மரணமடைந்தார். தாவூத் ஷா பற்றிய நூல்களை மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கும் தேவைப்படும் ஒரு இஸ்லாமிய ஆளுமை தாவூத் ஷா!



நன்றி : எச். பீர்முஹம்மது, அ.மா.சாமி, பி.தயாளன், ஜனசக்தி பத்திரிகை.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.



Thursday, 15 March 2018

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
Image result for கிரைய பத்திரம்3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

Wednesday, 7 March 2018

ரெஸ்டாரன்ட் உரிமம் பெற புது கட்டுப்பாடு ஏன் ? ஒரு தவகல்..




ரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற வேண்டுமானால், உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
* உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரெஸ்டாரன்ட்களில் பிரதான இடத்தில் அறிவிப்பு பலகை இடம்பெற வேண்டும்.
* ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் நுகர்வோர் கையில் கிடைக்கும்போது, குறைந்தது 45 நாட்களுக்கு வைத்து பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். காலாவதி நெருங்கும் நிலையிலுள்ள பொருட்களை சப்ளை செய்யக்கூடாது.
* பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும்.

புதுடெல்லி: ரெஸ்டாரன்ட், உணவகங்கள் உரிமம் பெற உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுபோல், ஆன்லைனில் உணவு பொருட்கள் விற்பதிலும் கெடுபிடிகள் உள்ளன. உணவு பொருட்களின் தரம், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விஷயங்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) கண்காணிக்கிறது. ரெஸ்டாரன்ட், ஓட்டல்கள், துரித உணவுகள், பேக்கேஜ் உணவுகள் போன்றவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்த அமைப்பு விதித்துள்ளது.

இந்நிலையில், ரெஸ்டாரன்ட்கள், உணவகங்களில் உணவுகளின் தரத்தை உறுதி செய்ய புதிய திட்டம் வகுத்துள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய மேலும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. உணவகங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய அம்சமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் திடீர் சோதனைகள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில், நிரந்தரமாக ரெஸ்டாரன்ட்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, உணவகங்கள், ரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற, உணவு பாதுகாப்பு அதிகாரியை கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். இதற்கேற்ப புதிய விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றாத ரெஸ்டாரன்ட்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. இதுபோல் மாநில அரசு அல்லது மத்திய அரசிடம் இருந்து உரிமம் பெற விண்ணப்பம் செய்வதற்கு ரெஸ்டாரன்ட்கள் புளூபிரின்ட் அல்லது லே அவுட், அங்கு நிறுவப்படும் இயந்திரங்கள் பட்டியல் கூட்டுறவு விதிகளின்படி பெறப்பட்ட சான்று நகல், தடையில்லா சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க தேவையில்லை. திருத்தம் செய்யப்பட்டும் விதிகளின்படி, உணவக வளாகத்தில் பிரதானமான இடத்தில் உணவு பாதுகாப்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

ரெஸ்டாரன்ட்களில், எப்எஸ்எஸ்ஏஐ-யிடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி, தொழில்நுட்ப ஊழியர் ஒருவரையாவது கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். கேட்டரிங் நடத்துபவர்கள், பள்ளி, கல்லூரிகளில் கேன்டீன் வைத்திருப்பவர்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும். புதிய வரையறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு கொண்டுவரப்படும். முறையாக அனுமதி பெற்று அரசிதழில் இவற்றை
Related imageவெளியிட்டதும் உடனடியாக இவை அமலுக்கு வரும். உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இறைச்சி வெட்டும் இடங்களுக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குறைந்த பட்ச விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் ஏற்கெனவே உள்ள விதிகளை சில சிறிய இறைச்சிக்கூடங்கள் பின்பற்றுவது கடினம் இதற்கேற்ப மாற்றம் செய்யப்படுகின்றன என்றார். எப்எஸ்எஸ்ஏஐ வரையறை செய்துள்ள புதிய விதிமுறைகளை தேசிய ரெஸ்டாரன்ட்கள் சங்கம் வரவேற்றுள்ளது. உணவு சார்ந்த எந்த ஒரு தொழிலுக்கும் பாதுகாப்பு மற்றும் தரம் அவசியம். நுகர்வோரின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகள் செயல்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.
ரெஸ்டாரன்ட்களை போல, ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கும் கெடுபிடி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ரெஸ்டாரன்ட்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு லைசென்ஸ் பெறுவதை போல, ஆன்லைனில் உணவு விற்பனை செய்வதற்கு என உணவு பாதுகாப்பு மற்றும் தரம் உரிமம் மற்றும் பதிவு செய்தல்) திருத்த விதிகளின்படி தனி உரிமம் பெற வேண்டும். ஆன்லைனில் உணவு பொருட்களை விற்பனை செய்யும்போது, அவை எப்எஸ்எஸ்ஏஐ-யின் லைசென்ஸ் பெறப்பட்டுள்ளதா என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.
அதோடு, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நுகர்வோருக்கு சம்பந்தப்பட்ட உணவு பொருள் கிடைக்கும்போது அவற்றின் காலாவதி தேதி 30 சதவீதம் அல்லது குறைந்தது 45 நாட்கள் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு அவகாசம் இருக்க வேண்டும். காலாவதி ஆகும் தருணத்தில் உள்ள பொருட்களை நுகர்வோருக்கு ஒருபோதும் சப்ளை செய்யக்கூடாது. இது உணவு பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 1 March 2018

சிரியா மக்களுக்காக, தமிழர்களாகிய நாங்கள் அதிகம் பிரார்த்திப்போம் !!!


Related image

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப் படையினர் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு "கூத்தா" பகுதிகளில் ஓயாது வான்வெளி மற்றும் இரசாயன தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பில், கடந்த 10 தினங்களாக அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் 200 க்கும் அதிகமான குழந்தைள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்புகள் இதைவிட அதிகம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த போரில் அமேரிக்கா, ரஷ்யா, ஈராக் முக்கியமான பங்காற்றி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது

போராளிகளின் பிடியில் இருக்கும் நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா மற்றும் ஈரானின் உதவியுடன் சிரிய அதிபர் பஷர் அல் அஸாத் இந்த மனிதப் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறார்.

சிரியாவில் 2011 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 7 நாட்களில்தான் இதுகுறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சிரியா (syria) என்று ஆங்கிலத்திலும், சிரியா தமிழ் (syria tamil) என்றும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. அதன்பின் சிரியா புகைப்படங்கள், வீடியோக்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை, போர் காரணம், சேவ் சிரியா என்று நிறைய விஷயங்கள் தேடப்பட்டு இருக்கிறது.

முதல் 50 இடத்தில் முக்கால்வாசி தமிழ்நாட்டு பகுதிகள்தான் இருக்கிறது. கன்னியாகுமரி தொடங்கி பிராட்வே வரை எல்லா இடத்தில் இருந்து சிரியா குறித்து தேடி இருக்கிறார்கள். அதேபோல் பொதுவாகவே சிரியா நாடுகள் மட்டும் இதுகுறித்து தேடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் இப்படி தேடி படித்ததற்கு நிறைய உளவியல் காரணங்கள் இருக்கிறது. முக்கியமாக இலங்கை போர் ஒரு காரணமாக இருக்கிறது. போரின் கஷ்டங்கள் என்ன என்று தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தமிழர்கள் இது குறித்து அதிகம் தேடி இருக்கிறார்கள்.

தமிழர்களாகிய நாங்கள், இவ்வுலகின் மூத்த குடிமக்கள். அதனால் தான் என்னவோ!... அன்பு, இரக்கம், உணர்வு, ஏக்கத்தின் தவிப்பு, கோபம் மற்றும் வலி சற்று அதிகமாகவே உள்ளது. இங்கு யார் வீரர் எதனை பேரை கொன்றார்கள் என்பது முக்கியம் அல்ல. ஜாதி, மதம், இனம்இ, நாடு கடந்த தமிழனின் பரந்த இறக்க குணம் மற்றும் அங்கு கொள்ளப்படும் பிஞ்சு குழந்தைகளின் நிலை கண்டு மனம் துடிக்கும் தமிழனின் மாண்பு என்ன நடந்ததோ, என்ன நடக்குமோ என்ற தமிழனின் ஏக்கம் இவை அனைத்தும் சிரியாவின் நிலை பற்றி தமிழனை தூண்டவைத்திருக்கிறது. அழுவோர்க்கு ஆறுதல் தருபவுனும் அவர்களுக்காக அழுபவனும் தமிழன் தான்..தமிழர்கள் இன மத நாடு வேறுபாடின்றி அழுவார்கள்மனிதாபிமானம் என்னும் உணர்வு இன்னும் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

தமிழனுக்கு கருணை உணர்வு அதிகம். குழந்தைகள் மரணம். கொத்து கொத்தாக மனிதர்கள் மரணம் என்ற செய்தி ஒவ்வொருவரையும் பாதித்திருக்கிறது.


என் இறைவனே இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவு கட்ட ஏன் தாமதம் செய்கிறாயோ ..? 

இதெற்கெல்லாம் சேர்த்து விரைவில் ஒரு பேரழிவை நிகழ்த்தப்போகிறாயோ என்னவோ ..
பொறுமையாக விட்டுத்தானே பிடிக்கிறாய் .
எனவே, இக்கொடிய தாக்குதலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களின் பாதுகாப்புக்காக நாம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம் !



உலக நாடுகளே!! உங்கள் காதில் ஒலிக்கவில்லையா சிரியா ?

ஐக்கிய நாடுகளே ஏன் இந்த அமைதி?

அரபு நாடுகளே ஏன் இந்த அரக்கதனம்?

பிஞ்சு குழந்தைகளின் சப்தம் நெஞ்சை உருக்கவில்லையா?

பாவம் பச்சம் இளம் பிஞ்சுக்கள் என்ன செய்தது இறைவா ?

பிஞ்சு குழந்தைகளையும் பாதுகாத்திடு!! பாதுகாத்திடு ..



யா அல்லாஹ் இந்த ஆயுதத்தைத் தந்தவனையும் இதை இயக்க காரணமான அத்தனை பேரையும் இல்லாமல் ஆக்கிடுவாயாக !!குழந்தைகள் பெண்கள் முதியவர்களின் மரண ஓலம் எங்களால் காதுகளில் கேட்க முடியவில்லை இறைவா..! 

கசிந்து உருகி கேட்கிறோம் போராட்டக்காரனை இல்லாமலாக்கிடுவாயாக, வல்ல இறைவன் அந்த மக்களைப் பாதுகாத்து சிரியாவில் அமைதியை நிலைநாட்டுவானாக !!!

ஆமீன்  ஆமீன் யா ரப்பில்  ஆலமீன்..

தொகுப்பு   : அ. தையுபா  அஜ்மல் .

Wednesday, 28 February 2018

அரபு நாடுகளில் ஒருவர் இறந்தால் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர என்ன வழிமுறை?

இந்தியா - யூஏஇ தூதரகம்
பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் பிப்ரவரி 24-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் குறித்துப் பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. முதலில் ஶ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருடைய மரணம் விபத்து என்றும், குளியலறையில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி அவர் உயிரிழந்தார் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்கூறு ஆய்வுக்குப் பின், அவரின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான வழிமுறைகளை துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் துரிதப்படுத்தி வருகிறது.
அரபு நாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இறந்தால், சம்பந்தப்பட்டவரின் உடலை இந்தியா கொண்டுவர பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வழிமுறைகள் பற்றி வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்திலேயே அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வழிமுறைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். 
தேவைப்படும் ஆவணங்கள்:
1. அசல் இறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் ஏழு நகல்கள்.
2. உடல் பதப்படுத்தப்பட்ட அசல் சான்றிதழ் மற்றும் அதன் ஏழு நகல்கள்.
3. உடலைக் கொண்டுசெல்ல, சுகாதார அமைச்சகத்தின் தடுப்புமுறை மருத்துவத் துறையிலிருந்து சான்றிதழ் மற்றும் அதன் ஏழு நகல்கள்.
4. இறுதிச் சடங்குகளுக்காக உடலை இந்தியாவிற்குக் கொண்டுசெல்வதற்கான வசதிகளைக் கோரி, இறந்தவரின் நெருங்கிய உறவினர் ஒருவரின் கடிதம்.
5. இறந்தவரின் அசல் பாஸ்போர்ட், அதன் முதல் 2, கடைசி 2 மற்றும் விசா பக்கத்தின் இரண்டு நகல்கள்.
6. உடலைக் கொண்டு செல்லும்போது, உடலுடன் பயணம் செய்யும் நபரின் பாஸ்போர்ட்டின் (முதல் 2, கடைசி 2 பக்கங்கள் மற்றும் விசா பக்கம்) இரண்டு நகல்கள்.
7. இறப்புப் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக, பதிவின்போது உடலுடன் செல்லும் நபரும் உடனிருக்க வேண்டும்.
8. இறந்த நபரின் உறவினரிடம் இருந்து, பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பில் இறந்தவருக்குச் செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள தொகை பற்றிய விவரங்கள் குறித்த கடிதம்.
9. விமான நிறுவனத்திடமிருந்து இடவசதிப் பதிவு பற்றிய உறுதியளிப்புச் சான்று.
10. இறந்தவரின் நெருங்கிய உறவினரிடமிருந்து, குறிப்பிட்ட பிரதிநிதி உடலைப் பெறுவதற்கு அதிகாரம் அளிக்கும் அங்கீகாரக் கடிதம்.
குறிப்பு: இச்சேவை விடுமுறை தினங்களிலும், பணி நேரம் அல்லாத சமயங்களிலும் முழுமையாகக் கருணை அடிப்படையில் வழங்கப்படுகிறது. பணி நேரத்திற்குப்பின் சேவைக்கு, தயவுசெய்து பணியிலுள்ள அலுவலரை 02-4492700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஏற்பாட்டாளர் விமானச் செலவை ஏற்க மறுக்கின்ற அல்லது அவரைக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலைகளில், ஏர் இந்தியா / இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் இலவசமாக உடலைக் கொண்டு செல்வதற்கு, தூதரகத்தின் பணியாளர் மற்றும் நலப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அதிகாரி, ஏர் இந்தியா / இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்கு ஓர் பரிந்துரை கடிதம் வழங்குவார்.
இந்தியாவுக்கு உடலைக் கொண்டுவராமல், அரபு நாட்டிலேயே அடக்கம் செய்ய வேண்டுமெனில், அதற்கெனத் தனி வழிமுறைகள் உள்ளன. 
1. அசல் இறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் ஏழு நகல்கள்.
2. உள்ளூர் நல்லடக்கத்திற்காக தங்கள் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியிடம் உடலை ஒப்படைக்குமாறு கோருகின்ற, தூதரகத்திற்கு எழுதப்பட்டு, தூதரகம் நேரடியாகப் பெறுகின்ற இறந்தவரின் நெருங்கிய உறவினரின் கடிதம் / தொலைநகல் (ஃபேக்ஸ்).
3. இறந்தவரின் அசல் பாஸ்போர்ட், அதன் முதல் 2, கடைசி 2 மற்றும் விசா பக்கத்தின் இரண்டு நகல்கள்.
4. உடலை நல்லடக்கம் செய்வதற்கு அங்கீகாரமளிக்கப்பட்ட நபருடைய பாஸ்போர்ட்டின் (முதல் 2, கடைசி 2 மற்றும் விசா பக்கம்) இரண்டு நகல்கள்.
5. இறந்தவரின் ஏற்பாட்டாளரிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பில் இறந்தவருக்குச் செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள தொகை பற்றிய விவரங்கள் குறித்த கடிதம்.

Tuesday, 27 February 2018

Review of Padma Shri Actress Sridevi Murdered in Dubai Hotel ?


Image result for SrideviAgeless beauty, vibrant, beautiful, brilliant and iconic -- the Indian film fraternity out poured its love for Sridevi as the news of her sudden death of the veteran actress left the country shocked. Sridevi's career spanned five decades - she started working in movies at age 4. By the time she was 13, she was playing lead roles. She acted in Tamil, Telugu, Kannada and Malayalam movies before scripting a soaring career in Bollywood. A 15-year break from movies followed her marriage to Boney Kapoor. Sridevi returned in 2012 with the smash-hit "English Vinglish". She followed it up with the thriller "Mom". She shot for a special appearance in superstar Shah Rukh Khan's upcoming film - "Zero" - which releases in December. Sridevi is survived by her husband, and two daughters, Jhanvi and Khushi.The Great Female actress Sridevi and family were in town after attending the wedding of her nephew and actor Mohit Marwah, which took place in Ras Al Khaimah. Three days after actor Sridevi died in Dubai, her body has been released from the morgue and is being taken for embalming, according to Khaleej Times, a UAE daily. Sridevi's family, earlier today, got a clearance letter from the Dubai Police for embalming, the Indian Consulate had confirmed in a tweet. A forensic report has said Sridevi "accidentally drowned" in a bathtub in her hotel room on Saturday.

Looks like Indian media is more interested in getting Sridevi's Body released than in letting investigations getting completed. Procedures in such accidental cases are very normal. Based on the findings and results of the police procedures and post-mortem report, prosecutors will decide on the next step. However, the public and the media should be aware that the law in such incidents require certain and very particular law enforcement procedures that has to be carried out prior to issuing a written approval to have the body of the late Indian actress or any other deceased’s body released. Primarily and principally speaking, the family’s privacy must be respected and secondly, the authorities’ procedures and efforts must also be respected. This incident, is being treated like all other similar incident, since Dubai’s law enforcement officers and organisations treat all cases and involved individuals in the same manner ... law enforcement procedures are practiced and applied justly and equally on all individuals present on the land of the UAE,

Even when it is more than evident now that her death was not natural. They are all eagerly waiting to relay scenes of her last journey inter pressed with stock shots of songs and scenes from her hit movies. After all, this is a big spectacle that will get them huge TRPs. Hence this indirect pressure on authorities in Dubai to get her Body released soonest. No news channel is interested in finding out the truth it seems.



My friend is doctor, He troubled by the way in which actress Sridevi's death was announced. His view..


1. Nobody has told us she was intoxicated enough to be drowned in a bath tub. Was blood alcohol level done? If so, it should be declared to the public what it was and if it was high enough to cause accidental drowning.
2. Another possibility is that she could have slipped and hurt her head in bath tub and lost her consciousness. That can explain drowning even if she was not heavily under influence of alcohol.
3. Why did her husband suppress the fact that she was drowned in bath tub and call it "cardiac arrest" which is a ridiculous way of saying she died because "heart heart stopped". It may be noted that cardiac arrest is due to a predisposing cause and it has been revealed Sridevi had no prior heart condition that could cause a "cardiac arrest".
4. What happened in the 15 minutes Bonney Kapoor spent with Sridevi before she went to take a bath?
As always, we may not know everything that happened but at least public should be reassured there was no foul play.




Tons of contradictory statements & irrelevant theories only misleading the prime motive & cause in the preliminary investigation for entertainment masala ! we have to summarize there are 2 versions.


First version is of Mr Boney Kapoor.

Second version is of hotel authorities. Some questions to be answered


1. Why did Sridevi stay for 3 days even after her family left ?

2. If Sridevi was drunk why did her husband insist they go out for dinner as he should have known the circumstances and told her to take rest.

3. What surprises us is why Mr. Kapoor called his friend and not the doctor. Where as these kind of hotels do have round the clock doctor on a call. All started at 5.30 pm and called the police at at 9 pm lost the precious time of around 3 hours. What was Boney Kapoor doing from 6 pm to 9 pm.

4. See all CCTV footage who came to meet Sridevi for 3 days.

5. Did something happen which upset Boney Kapoor ?. Even if a person is drunk no sane person dies with drowning

7. Was it a sinister act which no one knows ? Boney Kapoor can only answer the truth.

8. Its like the Arushi murder case where till now no one knows who killed her as only her parents know the truth. 8. The mystery remains


I’m a great fan of her from my childhood days. She is the only actress who has acted as a daughter and heroine with many big actors in Tamil film industry. Nobody can replace her. This will be a big void which nobody can replace in near future. Anyhow, we lost a great Beauty Queen actress, "Sridevi's sudden passing away has left us in deep shock. Can't imagine how such a bubbly person, a wonderful actor, is no more. She has left a void in the industry that cannot be filled. whose agony pain cannot be measured/felt.


By : M.Ajmal Khan.

Sunday, 25 February 2018

பாலமேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவன பாதாள அறையில் முதியவர்கள் பிணக்குவியல் !!





காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.  கடந்த பிப்ரவரி.20 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு வந்துகொண்டு இருந்த, செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான போலி ஆம்புலென்ஸ் வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி, ‘அய்யய்யோ என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கத்திக்கொண்டே சென்றதைப் பார்த்து, அந்த வழியாக இருசக்கர மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் பிரபு துணிச்சலாகச் செயல்பட்டு வாகனத்தை இடைமறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார்.

இதைக் கவனித்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தின் உள்ளே இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயற்சித்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். அங்கே, சுயநினைவில்லாத திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும், அவருக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டு, காய்கறி, அரிசி மூட்டைகள் எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கூறிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் செய்தி தொலைக்காட்சி  மற்றும்  ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது அதிகபட்சமாக வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர்.


ஆதரவற்றோர் இல்லத்தில் முதியோர்கள் தொடர்ச்சியாக மரணமடைந்து வருவதாக வந்த தகவலையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.







கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான 
செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. அந்த இல்லத்தில் வயதானவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படுகின்றனர். ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர்.

அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் துவங்கிய இந்த மையம், இப்போது வணிக நோக்கத்தில் செயல்படுகின்றது என்ற புகார்களின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையின் பேரில் சமூகநலம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று கள ஆய்வு செய்தனர்.

பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்மப் பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது.
ர்மமான முறையில் ஒருநாளைக்கு 2 அல்லது 3 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 50க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவர்களின் உடல்களையும் அவர்கள் புதைக்கவோ, எரிக்கவோ இல்லை. சுவற்றில் அவற்றை பதப்படுத்தி வைத்து அவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு விற்கின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 1590 உடல்கள் இங்கே உள்ள பாதாள பிண அறையில் போடப்பட்டு உள்ளதாக சம்பந்தப்பட்ட நிர்வாகி தாமஸ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இறந்தவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மரணத்திற்குப் பின்னர் அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்ககம் செய்யப்படாமல், பாதாள அறையில் பிணக்குவியல்களை வைத்து மூடுவதால், காற்று மாசு அடைந்து சுற்றுச் சூழல் பாதித்து நோய்கள் உருவாகக் காரணமாகி, சுகாதாரச் சீர்கேடு உருவாகின்றது. இறந்தவர்களின் உடல் உறுப்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.





இதுகுறித்து காவல்துறையினர் அந்த தொகுதி எம்.எல்.ஏ சுந்தரிடம் விசாரிக்கையில் அவர் தெரிவித்ததாவது, "எனக்கு இதுகுறித்து 3 வருடங்களுக்கு முன்னதாகவே தெரியும். இங்குள்ள சிலருக்கும், அந்த இல்லத்தில் ஏதோ நடக்கிறது என்று தெரியும். ஆனால் இதை வெளிக்கொண்டுவர நாங்கள் முயற்சி செய்தோம். ஆளும் கட்சியின் சில முட்டுக்கட்டைகளால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை" என தெரிவித்தார். 


ஒரு பக்கம் என்னடானா Mother theresa லெவெலுக்கு இவுரு சேவை செஞ்ச மாறி இருக்கு, இன்னொரு பக்கம் எதோ Nazis லெவெலுக்கு திட்டமிட்டு ஆயிரக்கணக்கான கொலை பண்ணிட்ட மாறி சொல்றாங்க..அரசு விசாரிச்சு உடனே உண்மையை கண்டுபுடிக்கணும்... ஆனா இத காரணமா வெச்சு எப்ப எத வெச்சு மத துவேஷத்த தமிழ்நாட்டுல தூண்டலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்குற RSS/BJP  சமூக வலைதலங்கள்ள ரொம்ப கூவிட்டு இருக்குதுங்க இந்த வாரம்...

வழக்கம் போல அறிவார்ந்த தமிழ் சமுகம் அவுனுங்கள துப்பிட்டு அடுத்து போவட்டும்.

மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய தொண்டை குறையுள்ளவர்கள் குறை கண்டு கொண்டேதான் இருப்பார்கள். இன்னொரு உலகத்தின் வசந்தங்களை நம்பியவனுக்கு இவ்வுலகம் ......ருக்கு சமம்...
மனிதனை சேவிப்பவர்களின் பணி தொடரட்டும்..

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ...
பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்”
நூல்:திர்மிதி


தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.
அரசு சரியான உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்.  மேலும் இந்த  வழக்கை,  தமிழக அரசு CBCID  கொண்டு சென்று , பாதாள அறையைத் திறந்து  சோதனை செய்ய வேண்டும்.அப்போதுதான் திட்டமிட்டு பரப்பப்படும் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தவறு எந்தப் பக்கம் இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.


 இதுவரை திரு .வை கோ அவர்கள் மட்டுமே  குரல்  எழுப்பியுள்ளார். மற்ற  அரசியல் தலைவர்கள்  கேள்வி  எழுப்பாதது  ஏன் ? கமலஹாசன்  உள்பட  அனைவரும்   தூங்குகிறீர்களா ?  ஊழலில்  பங்குள்ளதா ?
 மனிதம்  இறந்து  விட்டதா  ?
 விடை வேண்டும்  விரைவில் ...

 ஆக்கம்  மற்றும்  தொகுப்பு  :  மு. .அஜ்மல் கான்.