Friday, 21 June 2019

மாணவர்கள் பொறியியல் (Engineering) படிப்பை படிக்கலாமா ?



இஞ்சினியரிங் படித்த பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருப்பதால், மாணவர்களும் , பெற்றோர்களும் இஞ்சினியரிங் படிப்பை தவிற்கின்றனர்,உண்மையில் எதிர்கால வேலை வாய்ப்புகள் கணினி, ஆட்டோமேஷன் , தகவல் பகுப்பாய்வு (Data Analytics) துறைகளிளேயே இருக்கும்,

தற்போது தனியார் துறை மட்டும் அல்ல, அரசு துறைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன, அலுவலக வேலைகளை மென்பொருள்களே (Software) தற்போது செய்கின்றன, பல நிறுவனங்களில் தொழிலாளர்களை நிர்வகிக்கும் மேலாளர் (Manager) வேலையையும், மென்பொருள்களும் (Software) , செல்போன் செயலிகளும் (mobile Application) செய்கின்றன, வரும் காலங்களில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் தொழில் நுட்பம் சார்ந்துதான் இருக்கும்.

இதனால் பொறியியல்(Engineering) கட்டாயம் படிக்க வேண்டும் என்றில்லை, பொறியியல் அல்லாத பிற படிப்பு படித்தவர்களும் தொழில் நுட்ப துறையில் சாதிக்கின்றனர்.
பொறியியல் படிப்பது மாணவர்கள் தொழில் நுட்ப துறையில் சாதிக்க உதவியாக இருக்கும் அவ்வளவுதான்.
சரி இஞ்சினியரிங் படித்தால் உடனே வேலை கிடைக்குமா ? என்ற கேள்விக்கு விடை அறிய நமது "படித்தால் வேலை கிடைக்குமா ?" என்ற வீடியோவை பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=xiUsOg1tWOw&t=57s

பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்க்கு வேலை வாய்ப்பு எண்ணிக்கை தமிழகத்தில் உயரவில்லை. எனவே வேலை வாய்ப்பை பொருத்தவரை போட்டி கடுமையாக இருக்கும். வெறும் பொறியியல் படிப்பதால் மட்டுமே நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது, அதற்க்கு கீழ் கானும் திறன்கள் இருக்க வேண்டும் அல்லது வளர்த்துகொள்ள வேண்டும்.

பொறியியல் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு கணித அறிவு (Mathematical knowledge), பயன்பாட்டு அறிவியல் (Applied Science) பகுப்பாய்வு (Analytical skill) போன்ற திறன்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது மேற் சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.

படித்து முடித்த உடன் வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றால் நல்ல ஆங்கில மொழி திறமை (English Language skill), தொடர்பு திறன் (communication skill), தொழில் நுட்ப அறிவு (Technical knowledge or subject knowledge) ஆகிய திறன்கள் இருக்க வேண்டும் அல்லது மேற் சொன்ன திறன்களை வளர்த்து கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.

பொறியியல் படிப்பில் சேரலாமா ?

வெரும் டிகிரி வாங்குவதற்க்காக படிப்பவர்கள் கண்டிப்பாக பொறியியல் சேர வேண்டாம். தற்போது போட்டி மிக கடுமையாக உள்ளது. தொழில் நுட்ப துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் சேரலாம். பொறியியல் படிப்பிற்க்கு எதிர்காலம் இல்லை என்பதெல்லாம் பொய்யான வாதம் தான், திறனுள்ள மாணவர்களுக்கு என்றைக்கும் வேலைவாய்ப்பு காத்துகொண்டு இருகின்றது என்பதுதான் உண்மை.

பொறியியலில் எந்த பாட பிரிவில் சேரலாம் ?


தகவல் தொழில் நுட்பம் , Automation, Data Analytics, Machine learning, Artificial Intelligence போன்ற துறைகள் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றது. எனவே Electronics and communication (ECE), Computer science, Electronics and Electricals (EEE) படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

பெரிய அளவில் வளராவிட்டாலும் தொய்வடையாத துறைகளான Mechanical, Civil, Production, Automobile போன்ற துறைகளையும் தேர்தெடுத்து படிக்கலாம். மேற்கண்ட பாடபிரிவுகளை படித்தாலும் மட்டும் போதாது மேற்சொன்ன திறன்களை வளர்த்து கொண்டு இந்த பாடபிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால் எளிதில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

பொறியிலில் சிறப்பு பிரிவுகள் :

பொறியியல் படிப்பில் Aeronautical Engineering, Nano Science and Technology, Bio-Technology, Bio Medical Engineering, போன்ற சிறப்பு பிரிவுகள் பயிற்று விக்கப்படுகின்றன. சிறப்பு படிப்புகள் படிக்க ஆர்வம் இருந்தால் நல்ல மதிப்பெண் (above 95 cut off) எடுத்து அண்ணா பல்கலை கழகம், அரசு பொறியியல் கல்லுரிகள், PSG போன்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கலாம், நன்றாக படித்தால் உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இது அல்லாமல் சாதாரண கல்லூரிகளில் சிறப்பு பிரிவுகளை எடுத்து படித்தால் பெரும்பாலும் உடனடியாக வேலை கிடைக்காது.

உடனடி வேலைவாய்ப்பை மைய்யபடுத்தாமல் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்வதற்க்கும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்படிப்பு படிப்பதற்க்கும் இவை ஏற்ற படிப்புகள். மேற்படிப்பிற்க்கு பிறகு ஆய்வு துறைகளில் அல்லது படித்தற்க்கு ஏற்ற துறைகளில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே சிறப்பு பாட பிரிவு எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும், உடனடி வேலை வாய்ப்புதான் விருப்பம் என்றால் சிறப்பு பிரிவுகளை எடுக்க வேண்டாம். மேற்படிப்பு படிக்க விருப்பமும், கூடுதல் பொருளாதாரம் செலவு செய்ய வசதியும் இருந்தால் இப்படி பட்ட சிறப்பு பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம், இல்லை என்றால் இவற்றை தவிப்பதே நல்லது.

எந்த கல்லூரியில் படிக்கலாம் ?

நல்ல கல்லூரிகள் என்பது சிறந்த பயிற்றுவிக்கும் முறை, தகுதிமிக்க ஆசிரியர்கள், கேம்ப்பஸ் இன்டெட்வியூ ஆகிய அம்சங்களை கொண்ட தாகும். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முன் கல்லூரிக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்களிடம் மேற்கண்ட அம்சங்கள் சிறந்த முறையில் உள்ளதா என ஆய்வு செய்து கொள்ளலாம்.

பொதுவாக அண்ணா பல்கலை கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சிறந்த கல்லூரிகள். ஆனால் இங்கெல்லாம் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக கட்ஆஃப் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
பெரும்பாலும் கல்லூரியை நாம் தேர்வு செய்வதில்லை, நாம் எடுக்கும் மதிப்பெண்ணே தேர்வு செய்கின்றது. எனவே கூடுதல் மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர முயற்சி செய்யுங்கள், அல்லது நாம் எடுக்கும் மதிப்பெண்ணிற்க்கு ஏற்ற கல்லூரியில் சேர்ந்து நன்றாக படியுங்கள்.

பொறியியல் (Engineering) படிக்க ஆகும் செலவு :

அரசு கல்லூரிகளை தவிர்த்து தனியார் கல்லூரிகளில் படிக்க வருடத்திற்க்கு ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை செலவாகும், ஹாஸ்டலில் தங்கிபடிப்பதாக இருந்தால் கூடுதலாக ஆண்டிற்க்கு ரூ.50,000 வரை ஆகும். எனவே பொறியியல் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோற்கள் இந்த பொருளாதார செலவையும் கணக்கில் கொள்ளவேண்டும். அரசு கவுன்சிலின் மூலமே கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள், தனியார் கல்லூரிகளில் நன்கொடை (donation) கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் (Management Quota) சேர்வதை தவிர்க்கலாம்.

மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் பொறியியல் படிக்கலாமா ?

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது குறைவான மதிப்பெண் எடுத்தாலும் ஏதாவது கல்லூரியில் ECE பிரிவே கிடைக்கும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இனிமேல் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி கடினமாக உழைத்து படிக்க வேண்டும் என்ற உறுதியும், ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறனை (communication skill) வளர்த்து கொள்ள ஆர்வமும் இருந்தால் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம், நான் சுமாராகத்தான் படிப்பேன் வருங்காலத்திம் இப்படிதான் இருப்பேன் என நினைக்கும் மாணவர்கள் பொறியியல் படிப்பை தவிற்க்கலாம்.

வேறு என்ன வழிகளில் பொறியியல் படிக்க முடியும் ?


+ 2 முடித்த பிறகு , B.Sc கணிதம் (Mathematics), B.Sc இயற்பியல் (Physics), B.Sc வேதியியல் (Chemistry) 3 வருடம் படித்து , அதன் பிறகு M.Sc கணிதம் (Mathematics), M.Sc இயற்பியல் (Physics), M.Sc வேதியியல் (Chemistry) 2 வருடம் படித்து GATE அல்லது TANCET தேர்வு எழுதி தேர்சி பெற்று முதுகலை பொறியியல் படிப்பான M.E / M.Tech படிக்கலாம். அதன் பிறகு பொறியியல் துறையில் வேலைக்கு சேரலாம். இந்த முறையில் பொருளாதாரம் மிக குறைந்த அளவில் தான் செலவாகும். ஆனால் கால அளவு அதிகமாக இருக்கும். B.Sc, M.Sc பிறகு M.E/M.Tech படித்து முடிக்க மொத்தம் 7 வருடம் ஆகும்.

பொறியியல் படிக்க ஆர்வம் உள்ள 10-ஆம் வகுப்பு , 11-ஆம் வகுப்பு மாணவர்களே !


பொறியியல் படிக்க ஆர்வம் இருந்தால் முதலில் JEE எனப்படும் மத்திய அரசு நடத்தும் பொறியியல் நுழைவு தேர்வுவை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து IISc/IIT/NIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்க முயற்சி செய்யுங்கள், அடுத்ததாக +2 -ல் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) பாடத்தில் 90 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து தமிழகத்தில் தலை சிறந்த கல்லூரிகளில் பொறியியல் படிக்க முயற்ச்சி செய்யுங்கள், நேரத்தை வீணாக்காமல் இப்போதே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் பொறியியல் (Engineering) படிப்பில் (B.E/B.Tech) சேர்வது எப்படி ?

கடந்த ஆண்டில் இருந்து தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங் ஆன்லைன் (இணையதளம்) மூலம் மட்டுமே நடத்தபடுகின்றது, இதன் மூலம் நாம் வீட்டில் இருந்தே நமக்கு விருப்பமான கல்லூரி/ பிரிவுகளை தேர்வு செய்ய முடியும். சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் பிரிவு போன்ற சிறப்பு பிரிவுகளுக்கு மட்டும் ஆன்லைன் கவுன்சிலிங் இல்லை, இவர்கள் சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்க்கு வந்து நேரடியாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் .

பொறியியல் சேர்க்கைக்கான நடைமுறை மூன்று கட்டங்களாக உள்ளது, முதலில் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், இரண்டாவதாக சான்றிதழ் சரிபார்ப்பு TFC (TNEA facilitation centers) எனப்படும் உதவி மைய்யங்களில் நடைபெறும், அதன் பின்னர் RANK பட்டியல் வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடைபெறும், தற்போது RANK பட்டியல் வெளியிடப்பட்டு கவுன்சிலிங் துவங்க உள்ளது. எப்படி ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பில் இடம் தேர்வு செய்வது என்பதை பார்ப்போம்.

மாணவர்களின் Rank-கை பொருத்து பொறியியல் கவுன்சிலிங் 5 பிரிவுகளாக நடைபெறும், நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் முதல் பிரிவிலும், அடுத்து அடுத்து மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்த அடுத்த பிரிவிலும் வருவார்கள், விண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும், ஆன்லைன் மூலம் கல்லூரி /பிரிவை தேர்வு செய்ய குறிபிட்ட தேதி ஒதுக்கப்பட்டு இருக்கும், (மொத்தம் 3 நாள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்) இந்த மூன்று நாள்களில் http://tneaonline.in/ இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் User name மற்றும் பாஸ்வேர்ட் மூலம் Log-in செய்ய வேண்டும். முதலில் முன்பண தொகை ரூ.5000 கட்ட வேண்டும் (சலுகை உள்ளவர்கள் ரூ.1000 கட்ட வேண்டும்) .

பின்னர் இணையதளத்தில் உள்ள "ADD CHOICES" என்ற option மூலம் மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் உள்ள விரும்பும் பாட பிரிவை தேர்வு செய்யலாம், எத்தனை கல்லூரிகள் விருப்பமோ அத்தனை கல்லூரிகளை , பாட பிரிவுகளை தேர்வு செய்யலாம். உங்களின் முதல் விருப்பம் எது, இரண்டாம் விருப்பம் எது என வரிசைபடுத்தி கொண்டே செல்லலாம். உங்களுக்கு இடம் வழங்கும் போது உங்களின் முதல் விருப்பத்தை பார்ப்பார்கள் அது காலியாக இருந்தால் அதை உங்களுக்கு வழங்குவார்கள், இல்லை என்றால் இரண்டாவது விருப்பத்தை பார்ப்பார்கள் இப்படியே வரிசையில் உள்ள உங்களின் விருப்பத்தின் அடிப்படையில் காலியாக உள்ள இடத்தை உங்களுக்கு ஒதுக்குவார்கள் எனவே உங்களுக்கு எது மிக விருப்பமான கல்லூரியோ, பாட பிரிவோ அதை முதலில் குறிபிடுங்கள்.

கல்லூரி / பாட பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது ?

கடந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையின் விபரங்கள் http://tneaonline.in/ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்னிற்க்கு கடந்த ஆண்டு கிடைத்த கல்லூரி / பாட பிரிவுகளை பாருங்கள், இதில் இருந்து உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்னிற்க்கு எந்த கல்லூரியில் என்ன பிரிவில் இடம் கிடைக்கும் என தோராயமாக கணக்கிடலாம், இதை வைத்து கொண்டு கல்லூரி / பாட பிரிவுகளை உங்களின் விருப்ப பட்டியலில் சேருங்கள்.

பொறியியல் படிப்பில் எந்த பிரிவில் சேர்வது ?, எந்த கல்லூரியில் சேர்வது ? என்பதற்க்கான விளக்கங்கள்
"என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?" https://www.facebook.com/wisdomkalvi/posts/805392253167360/ என்ற ஆக்கத்திலும்,

“பொறியியல் (Engineering) படிக்கலாமா ? எந்த பிரிவில் சேரலாம் ?” https://www.facebook.com/wisdomkalvi/posts/842299609476624 என்ற ஆக்கத்திலும் உள்ளது. கல்லூரி, பாட பிரிவுகளை தேர்வு செய்யும் முன் அதை ஒரு முறை படித்து கொள்ளுங்கள்.

விருப்பபட்டியலை உறுதி செய்தல் :

அவர்கள் குறிபிட்ட 3 நாள்களுக்குள் உங்கள் விருப்ப பட்டியலை http://tneaonline.in/ இணையதளத்தில் பதிவு செய்யுங்கள், பின்னர் “LOCK MY CHOICES” என்ற option மூலம் உங்கள் விருப்ப பட்டியலை இறுதி செய்யுங்கள், இறுதி செய்யும் போது பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக்கு OTP நம்பர் வரும் அதை http://tneaonline.in/ வெப்சைடில் டைப் செய்து உங்கள் விருப்ப பட்டியல் இறுதி செய்யலாம், ஒரு முறை விருப்ப பட்டியலை இறுதி செய்தால் பின்னர் மாற்ற முடியாது எனவே இறுதி செய்யும் முன் கவனாமாக இருங்கள்.

தற்காலிக ஒதுக்கீடு :

மாணவர்களின் விருப்ப பட்டியல் அடிப்படையில் கல்லூரி மற்றும் பாட பிரிவு ஒதுக்கப்படும். அவர்கள் ஒதுக்கிய கல்லூரி / பாட பிரிவு நமக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட கலந்தாய்வின் மூலம் நாம் வேறு கல்லூரி / பாட பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். (அதாவது மேற் சொன்ன முறையில் மீண்டும் புதிதாக விருப்ப பட்டியல் தயார் செய்து உறுதி செய்து இடங்களை பெறலாம்). ஒரு வேளை நாம் கேட்ட அனைத்து கல்லூரிகளிலும் இடம் இல்லை என்றால் நமக்கு ஒன்றும் ஒதுக்கப்படாது, அடுத்த கட்ட கவுன்சிலிங் மூலம் மீண்டும் புதிதாக விருப்ப பட்டியல் தயார் செய்து உறுதி செய்து இடங்களை பெறலாம். கடந்த ஆண்டு பொறியல் சேர்க்கை விபரங்களை பார்த்து நமது விருப்ப பட்டியலை தேர்வு செய்தால் இப்படி பட்ட சூழ்நிலை வராது, எனவே மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்னிற்க்கு ஏற்ப கல்லூரியை, பாட பிரிவிவை தேர்வு செய்யுங்கள்.

அவர்கள் வழங்கிய தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய 2 நாள்கள் வழங்கப்படும். அதற்க்குள் நாம் ஏற்று கொள்ள வேண்டும் அல்லது நிகாரித்துவிட்டு அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும். எதுவுமே பிடிக்கவில்லை என்றாலோ, பொறியியல் படிப்பே வேண்டாம் என முடிவு செய்தாலோ கவுன்சிலிங்கில் இருந்து வெளியேறி விடலாம் (அதற்க்கான option இணையதளத்திலே உங்களுக்கு வழங்கப்படும்).

இறுதியாக அவர்கள் ஒதுக்கிய இடம் நமக்கு பிடித்து இருந்தால் அதை உறுதி செய்யலாம், பின்னர் நமக்கு Allotment order வழங்கப்படும், ஈ-மெயிலிலும் அனுப்புவார்கள் அல்லது http://tneaonline.in/ இணையதளத்திலும் download செய்து கொள்ளலாம். பின்னர் அந்த Allotment order-ரை பிரின்ட் அவுட் எடுத்து சம்மந்த பட்ட கல்லூரியில் குறிபிட்ட தேதிக்குள் சமர்பித்து மீத கட்டணத்தை செலுத்தி பொறியியல் படிப்பில் சேரலாம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 19 June 2019

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக நீரியல் நிபுணர் எஸ். ஜனகராஜன் பார்வை !!


Image may contain: 1 personநீங்கள் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாகப் பேசியதால் கேட்க்கிறேன்.940 கிமீ நீளக் கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டுக்கு இத்திட்டம் ஒரு நல்ல மாற்றாக இருக்க முடியும் என்று பலர் சொல்கிறார்கள்.ஆனால் ஏன் இத்திட்ம் முழு வேகத்தில் நடக்கவில்லை...?

ஏதாவது பிரச்சினை என்றாலே பெரியபெரிய திட்டங்களைப் பற்றிப் பேசுவது நம்மூரின் சாபக்கேடுகளில் ஒன்று. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒரு மாற்றுத் திட்டம்தான். ஆனால்...வேறுவழியே இல்லாத நகரங்களுக்கானது அது. நாம் என்ன பாலைவனத்திலா இருக்கிறோம்...?சென்னையில் மட்டும் சராசரியாக 1350 மிமீ மழை பெய்கிறது.இப்படி ஒரு இடத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றுவது தேவையற்றது.நல்ல தண்ணீர்தான் மழையாகப் பெய்து கடலில் கலக்கிறது.மழைநீரைக் கடலில் கலக்கவிட்டுவிட்டு பிறகு அதை எடுத்து நல்ல தண்ணீராக மாற்றிக்கொடுப்பது வீண் வேலையல்லவா...?கடல் நீரிலிரிலிருந்து ஒரு லிட்டர் நல்லதண்ணீர் உருவாக்க எவ்வளவு கடல்நீர் தேவைப்படும் தெரியுமா...?குறைந்த பட்சம் 30-40 லிட்டர் அதைச் சுத்தப்படுத்தி நல்ல தண்ணீர் எடுத்து விட்டால் மீதமுள்ள நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விடும் .அப்படி அதிகரித்த உப்புத் தன்மை கொண்ட நீரைக் கடலுக்குள் ஒரு கிமீ உள்ளே கொண்டு சென்று விட வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் பின்பற்றுவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.கரைக்கு அருகிலேயே விட்டுவிடுவார்கள். இப்படியே தினமும் செய்து கொண்டிருந்தால் என்னாகும்...?கடல் இறந்து விடும். அதாவது கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்காது.அவற்றுக்கு உப்பு நீரை உறிஞ்சி உறிஞ்சி நல்லதண்ணீரை எடுத்துக் கொண்டு உப்பை மீண்டும் கடலில் விடுவதற்க்கான சக்தி இருக்கிறது.ஆனால் கடலின் உப்புத்தன்மை அதிகரித்தால் அவற்றால் அதைச் செய்ய முடியாது.விளைவாக அவற்றால் உயிர்வாழ முடியாது.இதனால் கடற்கரைச் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் கடல் நீரைச் சுத்தப்படுத்துவதை விட கழிவு நீரை சுத்தப்படுத்துவதே சிறந்த தேர்வு.ஆயிரம் லிட்டர் கடல்நீரைச் சுத்தப்படுத்த ரூ.46 செலவாகும் என்றால்...அதே அளவு கழிவு நீரை சுத்தப்படுத்த ரூ .28 தான்.செலவாகும்.


-இன்றைய (18-6-2019) இந்துதமிழில் நீரியல் நிபுணர் எஸ். ஜனகராஜன் பேட்டி...

கலைஞர் செய்தார்...அரபுநாடுகளில் செய்யலையா...?சவூதி அரேபியாபை் பார்...என்று சொல்பவர்களின் கவனத்திற்க்கு....

வாய்ப்பிருந்தால் படியுங்கள். நல்ல பேட்டி.

தொகுப்பு  : மு. அஜ்மல் கான்.

Tuesday, 18 June 2019

இன்றைய அரபுலகின் முர்ஸி முழுமையான தலைவர் கலாநிதி முஹம்மது முர்ஸி பற்றிய சிறப்பு பார்வை !!

Related imageஇஸ்லாமிய உலகில் நிலவுகின்ற வரலாற்று ரீதியிலான குரோதங்களும், கருத்து வேறுபாடுகளில் மூழ்கிப் போன சிந்தானா முகாம்களும் முஸ்லிம் உம்மத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் எதிரிகளின் காலடியில் சரணாகதியாக மண்டியிட்டு விடவே உதவும் என்பதற்கு எகிப்தின் சமகால அரசியலில் போதுமான படிப்பினைகள் இருக்கின்றன.

சர்வதேச சதிகார ஏகாதிபத்திய முதலாளித்துவ ஜனநாயக முகாம் இன்று யூதர்களால் முன்னகர்த்தப் படுகின்றது, குறிப்பாக மத்திய கிழக்கில் ஜனநாயகம் மாத்திரமல்ல மன்னர்களும் சர்வாதிகளும் கூட மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் நலன்களுக்கேற்பவே ஆட்டு விக்கப் படுகின்றனர்.

2012 ல் முபாரக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை முபாரக்கின் இராணுவம் காவு கொண்ட பொழுது இக்வான்கள் அதனை மீட்டெடுக்க கைகொடுத்தார்கள், இன்றுவரை இராணுவத்தின் சதிவலைகளுக்குள்ளேயே அரபு வசந்தம் அடிபட்டுக் கிடந்தது.

உள்நாட்டு அரசியலைக் கையாளுவதில் ஆயிரம் நிலைப்பாடுகள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், பல்வேறு பட்ட சிந்தனா முகாம்கள் இருந்திருக்கலாம், ஆனால் பன்னாட்டு உளவுத் தாபனங்களின் அவசரத்திற்கும் அவசியத்திற்கும் ஏற்ப காரியம் பார்க்கும் இராணுவத்திடம் ஆட்சி அதிகாரம் சென்றிருப்பது எகிப்திற்கு மாத்திரமல்ல முழுப் பிராந்தியத்திலுமுள்ள இஸ்லாமிய முற்போக்கு சக்திகளுக்கும் ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவாகும்.

ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது...!



மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936)

மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952)

ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970)

அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981)

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012)


என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தெரிவான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..!

முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் சொல்லவில்லை, அவர்களும் கோரவில்லை, ஆனால் ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு முன்டுகொடுத்த சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பரம விரோதிகள்.

இன்றைய அரபுலகின் தலைவர்களை இவரோடு ஒப்பிட்டு பார்த்தால் இவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்என்ற உண்மை நமக்கு தெரிய வரும். தமக்கென்று புதிய வரலாற்றை படைத்து சென்றுள்ளார்.. முஹம்மது முர்ஸி.

1.அரபுலகிலேயே தேர்தல் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.

2.இவர் இன்றைய அரபுலகில் சாதாரண குடிமகனாக இருந்து அதிபராக பொறுப்புக்கு வந்த முதலாமர்.

3.இன்றைய அரபுலகில் முழு குர்ஆனையும் மனனம் செய்த முதல் அதிபராவார்.

4.இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பின் முதல் அதிபராவார்.

5.பொது மக்கள் தம்மை வெளிப்படையாக விமர்சிப்பதற்கு அனுமதியளித்த அரபுலகின் முதல் அதிபர் இவர் தான்.இதனால் 30க்கு மேற்பட்ட சேனல்கள் அவரை இரவு பகலாக விமர்சித்து வந்தன.

6.தாம் சிறைவாசம் அனுபவித்த காலங்களில் சிறை அதிகாரியாக இருந்தவரை சந்தித்து கைகுலுக்கிய உலகின் முதல் அதிபராவார்

7.அரசு அலுவலகங்களில் தமது படத்தை மாட்டி வைப்பதற்கு தடை விதித்த முதல் அரபுலகின் அதிபர் இவர்தான்.சாதாரன பொதுமக்களைப் போலவே வாடகை வீட்டில் குடியிருந்த முதல் அராபிய அதிபர் இவர் தான்.மேலும் சாதாரன எகிப்தியர்கள் பெறும் ஊதியத்தை போல இவரும் சம்பளம் சாதாரன சொற்ப சம்பளத்தையே பெற்றுக் கொண்டார்.

8.விடுமுறை காலங்களில் அரசு செலவில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லாமல் தமது சொந்த செலவிலேயே சென்ற முதல் அதிபராவார்.

அவர் மக்களுக்கு நன்மை செய்தாரோ இல்லையோ.. தமக்கென்று புதிய வரலாற்றை படைத்து சென்றுள்ளார்.. முஹம்மது முர்ஸி.

இன்றைய அரபுலகின் தலைவர்களை இவரோடு ஒப்பிட்டு பார்த்தால் இவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்என்ற உண்மை நமக்கு தெரிய வரும்.இவரது பதவி நீக்கத்திற்கு பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை இருப்பதாக நம்பப்படுகிறது.40 ஆண்டுகள் எகிப்தில் கொடுங்கோல் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்களின் கரங்கள் இன்னும் ரானுவத்தில் உயர்ந்து இருப்பதையே இவரது பதவி நீக்கம் உணர்த்துகிறது.இவர் பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு தம்மை வளப்படுத்திக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.


(நன்றி:Mohamed Ifthihar Islahi ,Al -Azhary )

டாக்டர் முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்தில் நிகழ்த்திய உரை எகிப்தியர்களின் உள்ளங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய உலகின் உள்ளங்களைத் தொட்டுள்ளது, அரபுலகத்தையே திடுக்கிடச் செய்துள்ளது. அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையடைக்கப் பட்டுள்ள அஷ் ஷேய்க் "உமர் அப்துர் ரஹ்மான்" சலபியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அழுத்தமாக சொல்லியவர்.

"நான் குண்டு நுழையாமல் இருக்க எந்தக் கவசமும் அணிவதில்லை. மக்கள்தான் அதிகாரமுள்ளவர்கள், மக்களின் அதிகாரத்துக்கு அப்பால் எந்த அதிகாரமும் இல்லை, நான் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அஞ்சுகிறவன் என்று துணிவாகச் சொல்லியுள்ளார்"

நாட்டின் சின்னமாக நாடே முன்னிலைப்படுத்தப்படவேண்டும், ஜனாதிபதியல்ல. ஏனென்றால் மக்கள் அழியக்கூடியவர்கள் நாடு நிலைத்திருக்கக்கூடியது ஜனாதிபதி பதவி ஏற்ற பின் அரசு, தனியார் நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களை தொங்கவிடுவது சட்டபூர்வமாக தடை செய்யப்படும் என்றும் அதனை மீறுவது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படும் என்றும் கூறினார். மேலும் ஜனாதிபதியை வாழ்த்துவதற்காக செலவுசெய்யப்படும் பணத்தை மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் செலவிடுமாறும் குறிப்பிட்டார்.

அவசரகால சட்டத்தை எந்த இடத்திலும் அமுல்படுத்த கூடாது, தனது சம்பளத்தை எகிப்து மக்களுக்காக வழங்கிடுவேன்
ஜனாதிபதியின் வாகன தொடரணி மூலம் பொது மக்களின் போக்குவரத்துக்கு தடையாக அமைய அனுமதிக்க மாட்டேன்,
அரசமாளிகையில் தொடர்ந்து இருக்க மாட்டேன் தனது வீட்டிலேயே இருப்பேன் .


எகிப்தின் இராணுவ நீதிமன்றம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர், பொதுக் கண்காணிப்பாளர் கலாநிதி முஹம்மத் பதீஃ அவர்களுக்கு ஆயுட் கால சிறைத் தண்டனை தீர்ப்பளித்துள்ளது.

67 வயதான முர்ஸி நீதிமன்றத்தில் விசாரணையின்போது பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இறைவன் அன்னாரின் பிழைகளை மன்னித்து அவருக்கு நியாயத்தை மறுமையிலே வழங்கி அவரின் ஏனைய சேவைகளை கபூல் செய்வானாக, சுவனத்தின் ஆக உயர்ந்த அந்தஸ்தில் அவர்களை ஆக்கி அருள் புரிவானாக!!




நன்றி -உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Sunday, 16 June 2019

, அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்!




தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மூன்றாவது ஞாயிறன்று  (இந்தாண்டு ஜூன் 22 ) தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது  

குடும்பத்திற்காக  தன்னையே இயந்திரமாக்கி கொண்டு இயங்கும் அப்பாக்களுக்கு நாம் நன்றியை தவிர வேறெதுவும் ய்ததாக தெரியவில்லை நேர நேரத்திற்கெல்லாம்.....
அவர் உண்டு உறங்கினாரா என்ற கவலையெல்லாம் நமக்கெதற்கு இரும்மிக்கொண்டு
இன்னும் இடத்தை அடச்சிட்டு இருக்கியே ஊருக்கெல்லாம் வருது
உனக்கு வரமாட்டேங்குதே போன்ற கொடும் சொற்களை அவர்கள் காதுபட பேசாதீர்கள்
உயிர் மட்டும் சுமையென சுமக்கும் அவர்களுக்கு நீங்கள் உதிர்த்துவிடும் வலியுடைய வார்த்தைகள் கிழிந்திருக்கும் இதயத்தை இன்னும் பலநூறாய்
கிழித்தெரியும் கத்தியாய் உருவெடுத்து நிற்கும் தன்னாசைகணைத்தும் நிராசையாய் போனபின்னும் தன் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்ற ஓடிக்கொண்டிருக்கும் அப்பாக்களுக்கும் கைகால் வலியெடுக்கும் முழங்கால் மூட்டெல்லாம் விட்டுப்போகும் மூச்சு இழைக்குமென்பதெல்லாம் நமக்கெதற்கு இந்த கெழடு அப்படியென்ன சம்பாருச்சு கொட்டிருச்சினு கொக்கரிக்கும் கொடிய மகன்களே  நீங்கள் நடைபழக எழ தொடங்கிய நொடியிலிருந்து தளர்ந்து  யர்ந்து உறங்கும்போதும் மகன் களச்சுப்போய் வந்திருக்கான் அவன வையாதேனெ அடைகாக்கும் அப்பாக்களைநாம் ஒரு போதும் தோளிலேற்றி கொண்டாடியதில்லை உறவுகள் இருந்தும் ஆருதலோ அன்பினையோ பெறாத இவர்கள் பிணங்கள் தான் அதுசரி பிணத்திற்கு ஏது உணர்ச்சி என்கிறீர்களா
இவர்களை கொண்டாட வேண்டாம் மனம் நோகும்படியான சொல்லொன்றை உதிர்த்துவிடாமல் இருந்தாலே போதும்
அவர்களின் உள்ளங்கையை ஒரு முறையெனும் நாம்பி பிடித்து பாருங்கள் ரேகைகளை விட காயங்கள் உருவேற்றிய தழும்புகளின் தடையங்கள் தான் தட்டுபடும்.

 தியாகங்களிற்கும் நன்றி சொல்லி விட முடியாதெனினும், கூறி விடுகிறேன் அப்பாக்கள் தின வாழ்த்துக்கள் என்று...

Friday, 14 June 2019

சென்னையை ஆட்டிப்படை க்கும் தண்ணீர் பஞ்சம் !!



Image may contain: one or more people, sky, text and outdoorதென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தைப் போலவே விரைவில் சென்னை பெங்களூ ரும் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போ கிறது என ஏற்கென வே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், நாடுமுழு வதும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் பயன்பாடு தொடர் பாக நிதி ஆயோக் விரி வான ஆய்வு நடத்தி விவரங்களை வெளியி ட்டு எச்ச ரிக்கை மணியடித்து ள்ளது 2020-ம் ஆண்டில் சென் னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட 21 நகரங் களில் நில த்தடிநீர் இல்லாத நிலை ஏற்ப டும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார் கள் என்கிற அறிக்கையின் விவரங்கள் அச்ச த்தை ஏற்படுத்து வதாக இருக்கின்றன. மோசமான நீர் மேலாண்மை கார ணமாக இந்திய வரலாற் றில் இதுவரை இல்லாத அளவு தண்ணீர் பிரச்னை தலை தூக்கியு ள்ளது எனவும், இதனால், 2030ம் ஆண்டில் மிக மோ சமான விளைவுகள் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. பெங்களூரு மட்டு மின்றி 2020-ம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றிவிடும் எனவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டி ருக்கிறது.


"இப்போது தான் பேர ழிவு துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டும் மழை பெய்யாவிட்டால் முழு மையான பேரழிவை சந்தி ப்போம்". - போங்க போய் சாவுங்க. திருத்த முடியாத முட்டாள் கூட்டம். தமிழ்நாட்டில இருக்கும் வரை அழிவு நிச்சயம். ஒருநாள் சந்தோசத்துக்காக காச வாங்கி ஓட்டுப் போடும் ஒரு கூட்டம். ரஐினி படம் வந்த பாலூத்த ஒரு கூட்டம். என்றைக்கு பகுத்தறிவு வருகுதோ அன்றைக்கு திருந்து வார்கள். இப்ப சினி மா படம் வந்த போதும். அங்கு கூட்டம் அலை மோ தும். தெளிவி ல்லாத தொலை நோக்கு திட்டமிடல் இல்லாத பொதுபணி துறை. குடி நீர் வழங்கல் துறை அதிகாரிகள், இவர்க ளின் திறமை பற்றி கொஞ்ச மும் கண்டு கொள்ளாத சுயநலமான அரசியல்வாதி கள். இதை எல்லாம் பொறு த்து கொண்டு ஆட்டு மந் தை போல மக்கள் இனிமேல் ஆவது இது நம் நாடு. இதில் தவறு நடந்தால் அது என்னையும் என் சந்ததி களை பாதிக்கும் என்று உணர்ந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு. இல்லை நம் அனை வருக்கும் தாழ் வே. அரசு பணத்தை திருட பல வழிக ளில் ஒருவழி தண்ணீர் பஞ்சம்.


சென்னையை ஆட்டிப்படை க்கும் தண்ணீர் பஞ்சம். சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு. - சாகுங்கடா முட்டாள் பயலுகளா சென்னையா சென்னை ஓடுங்கடா வென்னைகளா இவனு களுக்கு காய்கறி, அரிசி பருப்பையும் நிறுத்த னும். விவசாயிகளின் வலியுனராத படித்த முட்டா கலவானிகள். திமுக, அதிமுக, காங்கி ரஸ், பிய் ஜே பிய் போன்ற திருட்டு பயல்களு க்கு ஓட்டு போட்டா இப்படித்தான் நடக்கும்,



சென்னையின் தண்ணீர் தேவை நாள் ஒன்றுக்கு 120 கோடி லிட்டர்கள்.
அரசு தருவது 60 கோடி லிட்டர்கள்.இன்னும் 60 கோடி லிட்டர்கள் நீர் இல்லாததால் பஞ்சம்.

மறைமலை நகரில் உள்ளது போர்டு கம்பெனி. இருங்காட்டுபள்ளி, திருப்பெரும்புதூரில் உள்ளது ஹூண்டாய் கம்பெனி. இது தவிர மிட்சுபிசி, ரெனால்ட், பி.எம்.டபிள்யு என இந்த கார் கம்பனிகள் ஒரு வருடத்தில் பத்து லட்சம் கார்களை தயாரிக்கிறது. அதில் 30 சதம் ஏற்றுமதி.


ஒரு கார் தயாரிக்க குறைந்தது 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. பத்து லட்சம் கார்கள் தயாரிக்க 20 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் தேவை.
நாள் ஒன்றுக்கு இந்த கார் கம்பெனிகள் உறிஞ்சும் நீர் 55 கோடி லிட்டர்.

சென்னையில் ஒரு கோடி மக்களை பஞ்சத்தில் வைப்பது 60 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை.
கார் கம்பெனிகள் நாளொன்றுக்கு உறிஞ்சும் நீர் 55 கோடி லிட்டர்.

தண்ணீர் பஞ்சம் தீரும்வரை கார் கம்பெனிகள் மூடினால் ஒரே நாளில் தண்ணீர் பஞ்சம் தீரும்.
சென்னையில் காணாமல் போன ஏரிகள், புதிய பட்டியலுடன்:-

1.நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்) 14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
25.செம்பாக்கம் ஏரி,
26.சிட்லபாக்கம் ஏரி ,
27.போரூர் ஏரி,
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
32.ஆலப்பாக்கம் ஏரி,
33. வேப்பேரி,
34. விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
35. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
36. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
என பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சி தகவல்கள் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
37. திருவேற்காடு ஏரி
38. வட சென்னை கொடுங்கையூர் ஏரி


1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன., இதில் சென்னை மா நகரத்தில் எதுவுமே இல்லை) 96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளநிலைகள்.



இதுக்கு மேலேயும் அட்டூழியம் நடக்கும். இது மாதிரி நடக்கலனாதான் ஆச்சிரியம்... மாற வேண்டியது மக்கள். நீங்க பிழைக்க ஓட்டு போடுங்க. அடுத்தவன் பிழைக்க நீங்க ஓட்டு போடாதிங்க. இல்லனா குடும்பத்தோடா சாக வேண்டியதுதான். மக்களே என்னை கோவி த்துக்கொள்ளாதீர்கள், அரசியல்வாதிகள் ஓட்டுக்காக கொடுத்த 5000 ருபாயை வைத்து தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துக்கொள்ளுங்கள், ஆட்சி முடியும் வரை. ஏரிய பூரம் ஆட்டைய போட்டு வீடுகட்டியாச்சு இப்ப தண்ணி இல்லாம சாவுங்கடா. ஏரி குளத்தை எல்லாம் கொள்ளையடித்த போது தெரியல தண்ணீ ரின் அருமை. இனி இதே நிலைமதான் இதை விடவும் மோசமாக இருக்கும்
முதல்வர் எடப்பாடிக்கு தெரிந்தால் நிச்சயம் செய்வார்.
எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்தாலும் நிச்சயம் செய்வார்.

ஆனால் முதல்வருக்கும் எதிர்க் கட்சி தலைவருக்கும் தெரிய வேண்டுமானால், குடங்களோடு நிற்கும் மக்கள் கேட்க வேண்டுமல்லவா?


ஆக்கம் மற்றும்  தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

Wednesday, 12 June 2019

பத்து வருட காலங்களில் எத்தனை, எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?


No photo description available.

பத்து வருடங்கள் என்பது ஒரு சிறு கால அளவாக தோன்றுமாயின் அது மிக பெரிய தவறு.பத்து வருட கால அளவுகளில் எத்தனை குடும்பங்கள் வேலையிழந்தது எத்தனை அழிவுகளை சந்தித்தோம் என்று யாரேனும் சிந்தித்ததுண்டா?
1980 களில் தொலைக்காட்சி பெட்டி வந்தது.... பக்கத்து வீடுகளின் நட்பு துண்டாக ஆரம்பித்தது... ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தது...
செயற்கை உரங்கள் ஊடுருவ ஆரம்பித்தது... இயற்கை விவசாயம் அழிய ஆரம்பித்தது...
குளிர்பானங்கள் ஊடுருவ ஆரம்பித்தது...
இளநீர், பதநீர் அழிய ஆரம்பித்தது...
வெள்ளை சக்கரை பரவலாக பிரபலம் ஆனது... சர்க்கரை நோய் படர ஆரம்பித்தது...
சிகரட்டுகள் அதிக அளவில் விற்பனை தொடங்கின... வெற்றிலை பாக்கு அழிய ஆரம்பித்தது...புற்றுநோய் முலைக்க ஆரம்பித்தது...
ரீல் கேசட்டுகள் வந்தன... பாடல் நிறைந்த தட்டு கிராமோஃபோன்கள் ஒலிக்காமல் போயின...
ரஸ்னா வந்தது... எலும்பிச்சை சாறு ஆவியானது...
பெரிய ஊரிலிருந்து இன்னொரு பெரிய ஊருக்கு போகும் வழியே ஒற்றை தார் சாலை.... புளியமரங்கள் இருபுறமும் இருந்தது.
மாவட்டத்திற்க்கு ஐந்து ஆறு மருந்து கடைகள் இருந்தது...
1990 களில்
வண்ண தொலைக்காட்சி வந்தது வண்ணவண்ண விளம்பரங்கள் வரதொடங்கின... நோய்கள் அதிக அளவில் வேர்விட ஆரம்பித்தது...
ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு அழகி, அவளை உலக அழகி என்றார்கள்.... மஞ்சள் பூசிய பெண்கள் ஃபேர் அன்ட் லவ்லிக்கு மாறினார்கள்...
கலர்கலராய் பேஸ்ட்கள் வந்தது... கோபால் பல்பொடி, பையோரியா பல்பொடி, வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கரித்தூள், உப்பு, செங்கல்தூள் போட்டு பல் விளக்கியவர்கள் பேஸ்ட் பிரஷ் சகிதம் பல்லை பளிச் ஆக்கினார்கள்...
இரு சக்கர வாகனங்கள் நடுதர வர்க்கத்தினரும் வாங்ககூடி அளவுக்கு விலையில் குறைந்தது சைக்கிலில் பயனித்தவர் பலர் இன்று மூட்டுவலியோடு சக்கர நாற்க்காலியில்.
ஒன்றிரெண்டு வீடுகளில் இருந்த தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி அதிகமான வீடுகளை தொட்டது... தபால் நிலையங்கள் ஓய்வு நிலையங்களாக மாறதொடங்கின...
சீ.டி பாட்டு தட்டு வந்தது... ரீல் பாட்டு கேசட்டுகள் ரீல் உருவபட்டன...
சரக்கு பாட்டில்கள் பல வடிவங்களில் வந்தன பலர் பல கோணங்களிலில் தெருவில் நடந்தனர்...
மேகி வந்தது... பழைய சாதம், இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற காலை உணவு செரிக்காமல் போனது...
ஐஸ்கட்டி பெப்ஸி வந்தது... கப்ஐஸ், பால்ஐஸ், சேமியாஐஸ் கரைந்து போனது...
ஏசி பிரபலம் ஆனது... மரங்களுக்கு பிராபளம் ஆனது...
வாசிங் மெஷின் வந்தது... இன்று பெண்கள் எலும்பு சத்து கால்சியம் ஹார்லிக்ஸ் குடிக்கிறார்கள்...
ஃபிரிட்ஜ் வந்தது... மண்பானைகள் உடைந்தது...
ஓசோன்ல ஓட்டைங்கற புது வார்த்தை காதுக்குள் பாய்ந்தது...
வீடியோ கேம்ஸ் வந்தது... பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல் போன்ற விளையாட்டுக்கள் மாயமானது...
ஊருக்குள்ளே ஒரு பெரிய பகுதியிலிருந்து இன்னொரு பெரிய பகுதிகளுக்கு தார்சாலை... ஊர்சாலை இருவழி சாலையாக மாற்றப்பட்டது... மரங்கள் வெட்டப்பட்டது...
தாலுக்காவுக்கு பத்து பதினைந்து மருந்துக்கடைகள்... இருந்தது...
இன்னும் பல...
2000 களில்
ஆர்.ஓ சுத்திகரிப்பு வீட்டுக்குவீடு மாட்டப்பட்டது... சளி சிந்த ஆளுக்காளுக்கு கைக்குட்டை அவசியமானது... ஜலதோஷமா? ஆமாப்பா ஆமா, மூக்கடைப்பா? ஆமாப்பா ஆமா, விளம்பரம் பயன்பட்டது... மருந்து கம்பெனிக்காரன் கட்டிட கட்டுமான பொருட்களுக்கு புக் பண்ணான்.
மஞ்சள் பூசியபோது வராத தோல் நோய்கள், பரு, கரும்புள்ளி எல்லாம் மெல்லமாய் சருமம் மேல் தலைகாட்ட முகம் கருமமாக மாற கவலையடைந்த நம்ம ஊர் ஐஸ்வர்யாராய்களுக்கு விடைகிடைத்தது வண்ண தொலைக்காட்சி பெட்டியில் வந்த அடுத்தடுத்த விளம்பரங்கள்... இந்த முறை மருந்து கம்பெனிக்காரன் கட்டுமான பொருட்களையே தயாரிக்கவே ஆரம்பிச்சுட்டான் அவனோட அடுத்த கட்டிடங்களுக்கு...
டிஜிட்டல் கேமராக்கள் வந்தது... பல பிலிம் நிறுவனங்களும், ஸ்டுடியோக்களும் கடையை காலிசெய்தனர்.
குடிநீர் பாட்டில் வந்தது... ஏங்க கொஞ்சம் குடிக்க தண்ணிக்குடுங்க என்ற வார்த்தைகள் காணமல்போனது...
பட்டன் வச்ச செங்கல் செல்ஃபோன் போயி சிறுவடிவ செல்ஃபோன் வரை வந்தது லேண்ட்லைன் ஃபோன், பேஜர்களுக்கு பேஜார் ஆனது. விபத்துக்கள் அதிகம் ஆகின... ஹெல்மெட் வியாபாரம் பட்டைய கிளப்பின...
தெருவுக்கு தெரு தார்சாலை... ஊர்சாலைகள் நான்கு வழிபாதையாக மாற்றப்பட்டது... நன்கு மடங்கு மரங்கள் அழிக்கப்பட்டது...
வெப்பம் அதிகரித்தது ஆர்டிக் பனி உருக ஆரம்பித்தது...
போஸ்ட்க்கு இருபது முப்பது மருந்து கடைகள் இருந்தது...

2010 லிருந்துஉங்களுக்கே தெரிந்திருக்கும்.... தெரியலைனா தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு...
நாம் இப்பவும் ஆர்டிக் பனி உறைஞ்சு வந்தா என்ன அதான் ஓசோன்ல ஓட்டை இருக்கே அதுவழியா தண்ணி வெளியே போயிடும்யானு மொட்டை தலைக்கும் மொழங்கலுக்கும் சம்மந்தமே இல்லாம முடிச்சிபோட்டுக்கிட்டு ஜாலியா இருக்கோம்.
வீட்டுக்கு வீடு மருந்து கடை தொடங்கும் அளவுக்கு மருந்துகள் உள்ளது.
ஆக இந்த பத்து வருடம் என்பது வளர்ச்சி தரும் கால அளவுனு தீர்மானிச்சா... அது முற்றிலும் தவறு... அடுத்த பத்து வருடத்தில் அதாவது 2020 லிருந்து 2030 க்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விற்பனைக்கு வந்துவிடும். ஏற்கனவே சினாவில் வியாபாரம் ஆக தொடங்கி விட்டது
இப்போதுதாவது விழித்துக் கொள்ளுங்கள் மரங்களை நட்டால் ஆக்ஸிஜன் தானாக கிடைக்கும், மழை வரும்... நீர்நிலைகளை சரிசெய்து மழைநீரை சேமித்திடுக பாசனத்திற்க்கு திறந்து விடுக. விவசாயம் பெருகும்... கால்நடைகளை பெருக்குக இவைதான் எல்லா தொழிலுக்குமே மூலதனம்... சிந்தித்து செயல்படுவோம். மரமே மந்திரம்... மரம் ஒன்றே ஒரே மந்திரம்...
இந்த வாசகத்தைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. இன்றைய தேதியில் ஒருவர் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சேவை என்று இறங்கிவிட்டாலே அவர் முதலில் செய்ய வேண்டியதாகப் பரிந்துரைக்கப்படுவது மரம் நடும் வேலையைத்தான். அரசியல்வாதிகளும்கூட இப்போதெல்லாம் லட்சக்கணக்கான மரங்களை நட்டோம், கன்றுகளை வழங்கினோம் என்று அடித்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது.

Wednesday, 5 June 2019

உலக சுற்றுச்சூழல் தினம்!! ஒரு தவகல்..


இன்று உலக சுற்றாடல் தினம் இன்று ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது.இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்  செயற்படுகின்றது.

உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத்தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.  
உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.
நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விசயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

தமிழ் நாட்டில் நீட் தேர்வில் நல்ல தேர்ச்சி முன்னேற்றம் !!

Image may contain: 2 people, people smiling, people sitting and textநீட் தேர்வு முடிவுகள் இன்று (June 5) வெளிவந்துள்ளன. அகில இந்தியாவில் கடந்த ஆண்டை விட 14.52% அதிக மாணவர்கள் இந்த வருடம் தேர்வு எழுதியுள்ளனர். 55.22% பெண்கள், 44.78% ஆண்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர் இந்த ஆண்டு. இதில் reservation அல்லாதவர்கள் 35%, SC/ST/OBC மாணவர்கள் 65% நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
தமிழ் நாட்டில் மட்டும் 1,23,078 மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர், அந்த மாணவர்களில், சுமார் 60,000 (48.57%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 2018-ல் தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் 39.56% ஆக இருந்தது. இது நல்ல முன்னேற்றம் என்று தான் சொல்ல வேண்டும். மகாராஷ்டிரா (2,06,745, 39.26% தேர்ச்சி பெற்றுள்ளனர்), உத்திர பிரதேஷ் (1,44,994, 58.61% தேர்ச்சி பெற்றுள்ளனர்) இந்த இரு மாநிலங்களுக்கு அடுத்து, தமிழ் நாட்டில் தான் அதிக மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
நீட் தேர்வில் தோல்வியென்றால் அதற்கெல்லாம் தற்கொலை செய்துகொள்வார்களா எனக் கேட்பவர்கள் முதலில் ஒன்றை யோசிக்க வேண்டும். இந்தக் குழந்தைகளில் பலர் வறுமைக்கோட்டிற்கும் கீழ் இருப்பவர்கள். இவர்களில் பலரது பெற்றோர் பள்ளிக்கூடப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காதவர்கள். அடிப்படை வசதிகள் பல இவர்களுக்கு இருப்பதில்லை. ஆக, இப்படிப்பட்ட சூழலில் படித்து வரும் இந்தப் பிள்ளைகள் தமிழ் வழி படித்து அதிலேயும் கூட மிகச் சிறப்பாகத் தேறியவர்கள். பல கனவுகளை மனதில் சுமந்தவர்கள்.
தற்கொலையை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் கண்முன்னே நடக்கும் நிகழ்வை பார்க்காமல் அதில் உள்ள அநியாயத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது மிகத் தவறாகும்.
கல்வி ஒன்றே தனது சந்ததியின் வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புபவர்கள் இந்தக் குழந்தைகள். இத்தகைய குழந்தைகளின் மூச்சும் பேச்சும் கனவும் நனவும் கல்வியும் அதனால் கிடைக்கும் மேம்பாடும் தான். அந்தக் கனவை அழிக்கும் நீட் என்ற அரக்கனின் தாக்குதல் தாங்காமல் சிலர் தன் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.
தற்கொலை செய்பவர்கள் கோழைகளல்ல. நாமே முடிவு செய்து சாவது என்பது சுலபமல்ல. பலர் வாழ்வில் பல தருணங்களில் இதனை யோசித்து மீண்டவர்கள் தான். ஆக, தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் தங்கள் லட்சியத்திற்காக வாழ்ந்து மடிந்திருக்கின்றனர். இத்தகைய குழந்தைகளைக் குறை கூறுவோர் என் பார்வையில் மனிதாபிமானமற்றவர்கள். வறுமை என்றால் என்ன என்பதை அறியாதவர்கள். இக்குழந்தைகளைக் குறை கூறுவதை விட்டு வறுமையில் கல்வி கற்று மேம்பட நினைக்கும் குழந்தைகளுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வைக் குறை சொல்லுங்கள்!
-சுபா
தமிழ் நாட்டை சார்ந்த கெ.சுருதி என்ற மாணவி, இந்தியாவிலேயே முதல் 20 மாணவிகள் பட்டியலில், 685 மதிப்பெண்கள் வாங்கி, 10வது இடத்தைப் பெற்றிருக்கிறார். All-India Rank 57வது இடத்தையும் பிடித்திருக்கிறார்! இந்த பெண்ணின் ஜாதி சொல்ல நான் விரும்பவில்லை, இருந்தாலும் அவர் OBC சேர்ந்தவர் என்று இங்கே பதிவிட்டுக்கொள்கிறேன்.
முக்கியமான ஒரு விஷயம் சொல்லி முடிக்கிறேன். நீட் தேர்வை நடத்தும் National Testing Agency எல்லா மாணவர்களின் தேர்வுத்தாள்களையும் பதிவு செய்து தன் இணையத்தளத்தில் வைத்திருக்கிறது. மிகவும் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். ஆகையால், எந்த ஒரு மாணவனோ மாணவியோ, இணையத்தில் அவர்களுடைய தேர்வுத் தாள்களைப் பார்த்து, challenge செய்யலாம். எங்கே தவறு செய்தோம், எப்படித் தவறு செய்தோம், எப்படி மதிப்பெண்கள் கூடின, கழிந்தன என்று மாணவர்கள் ஆய்வு செய்யமுடியும். மீண்டும் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதவும் வாய்ப்பு உண்டு.
போட்டித்தன்மை என்றும் கடுமையாகத் தான் இருக்கும் இந்தியாவில். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுக் காட்டவேண்டுமே தவிர, நீட் தேர்வில் தோற்றுவிட்டோம், இனி எதிர்காலம் இல்லை என்று நம்பிக்கை இழந்து, தவறான முடிவுகளை எடுப்பது முட்டாள்தனம். அதைவிட முட்டாள்தனம், ஒரு சில மாணவர்களின் தோல்விக்காக, மத்திய அரசு நாட்டின் நலனிற்காகக் கொண்டுவரும் நீட் தேர்வு போன்ற முயற்சிகளை எதிர்ப்பது.
தேர்வு மதிப்பெண்கள் உங்கள் தகுதியை மட்டுமே குறிக்கிறது. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் என்றும் உள்ளது. நீட் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஆக்கம் மற்றும்  தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

Monday, 27 May 2019

இந்தியாவில் ஆட்சி புரிந்த மன்னர்களும் அதன் ஆண்டுகளும் !!

Image result for ruling king meaning


 . 
இந்தியாவில் ஆட்சி புரிந்த மன்னர்களும் அதன் ஆண்டுகளும்...
முஹம்மது கோரி முதல் மோடி வரை....
1193: முஹம்மது கோரி 
1206: குத்புதீன் ஐபக்
1210: ஆரம்ஷா
1211: அல்தமிஷ்
1236: ருக்னுத்தீன் ஷா
1236: ரஜியா சுல்தானா
1240: மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242: ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246: நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266: கியாசுத்தீன் பில்பன்
1286: ரங்கிஷ்வர்
1287: மஜ்தன்கேகபாத்
1290: ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)
கில்ஜி வம்சம்:
1290: 1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292:2 அலாவுதீன் கில்ஜி
1316:4ஷஹாபுதீன் உமர் ஷா
1316: குதுபுத்தீன் முபாரக் ஷா
1320: நாஸிருத்தீன் குஸரு ஷா
(கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)
துக்ளக்Thaglakவம்சம்:
1320: கியாசுத்தீன் துக்ளக்(1)
1325: (2) முஹம்மது பின் துக்ளக்
1351: (3) பெரோஸ்ஷா துக்ளக்
1388: (4) கியாசுத்தீன் துக்ளக்
1389: அபுபக்கர் ஷா
1389: மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394: அலெக்சாண்டர் ஷா(7)
1394: (8) நாஸிருத்தீன் ஷா
1395: நுஸ்ரத் ஷா
1399: (10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413:(11)தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்:
1414:1.கஜர்கான்
1421: 2 .மெஹசுத்தீன் முபாரக் ஷா
1434: 3.முஹம்மது ஷா
1445:4 அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)
லோதி வம்ச ஆட்சி:
1451: பெஹ்லூல் லோதி
1489: அலெக்சாண்டர் லோதி
1517: இப்ராஹிம் லோதி
(லோதி ஆட்சி 75 வருடம்)
முகலியாஆட்சி:
1526: ஜஹிருத்தீன் பாபர்
1530: ஹிமாயூன்
சூரி வமிச ஆட்சி:
1539: ஷேர்ஷா சூரி
1545: அஸ்லம் ஷா சூரி
1552: மெஹ்மூத் ஷா சூரி
1553: இப்றாஹிம் சூரி
1554: பர்வேஸ் ஷா சூரி
1554: முபாரக் கான் சூரி
1555: அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)
முகலாயர் ஆட்சி:
1555: ஹிமாயூன்
1556: ஜலாலுத்தீன் அக்பர்
1605: ஜஹாங்கீர் சலீம்
1628: ஷா ஜஹான் 
1659: ஒளரங்கசீப்
1707: ஷாஹே ஆலம்
1712: பஹாத்தூர் ஷா
1713: பஹாரோகஷேர்
1719: ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754: ஆலம்கீர்
1759: ஷாஹேஆலம்
1806: அக்பர் ஷா
1837: பஹதூர்ஷா ஜபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )
ஆங்கிலேயர் ஆட்சி:
1858: லார்டு கேங்க்
1862: லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864: லார்ட் ஜான் லோதேநஷ்
1869: லார்டு ரிசர்டு
1872: லார்டு நோடபக்
1876: லார்டுஎட்வர்ட்
1880: லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884: லார்டு டப்ரின்
1894: லார்டு ஹேஸ்டிங்
1899: ஜார்ஜ் கர்னல்
1905: லார்டு கில்பர்ட் 
1910: லார்டு சார்லஸ்
1916: லார்ட் பிடரிக்
1921: லார்ட் ரக்ஸ்
1926: லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936: லார்டு ஐ கே
1943: லார்டு அரக்பேல்
1947: லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)
சுதந்திர இந்தியாவின் ஆட்சி:
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966: குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்
1980: இந்திராகாந்தி
1984: ராஜீவ்காந்தி
1989: V.P.சிங்
1990: சந்திரசேகர்
1991: PN ராவ்
1992: A.B.வாஜ்பாய்
1996: A.Jகொளடா
1997: L.K.குஜ்ரால்
1998: A.B.வாஜ்பாய்
2004: மன்மோஹன்சிங்
2014: நரேந்திர மோடி
2019:நரேந்திர மோடி
இஸ்லாமியர்களை அந்நியர்கள் என்று சொல்லும் அனைவருக்கும்  இது சமர்பனம்.
இந்தியா என் தாய் நாடு..
இஸ்லாம் எனது வழிபாடு...
கட்டாயம் உங்கள் FB யில் இந்த பதிவை காப்பி செய்து பகிருங்கள் . Whatsapp குருப்பில் பகிருங்கள் . உரத்து சொல்வோம் இந்தியா 🇮🇳 எமது நாடு என்று .

தொகுப்பு : தையுபா  அஜ்மல்.