Tuesday 18 June 2019

இன்றைய அரபுலகின் முர்ஸி முழுமையான தலைவர் கலாநிதி முஹம்மது முர்ஸி பற்றிய சிறப்பு பார்வை !!

Related imageஇஸ்லாமிய உலகில் நிலவுகின்ற வரலாற்று ரீதியிலான குரோதங்களும், கருத்து வேறுபாடுகளில் மூழ்கிப் போன சிந்தானா முகாம்களும் முஸ்லிம் உம்மத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் எதிரிகளின் காலடியில் சரணாகதியாக மண்டியிட்டு விடவே உதவும் என்பதற்கு எகிப்தின் சமகால அரசியலில் போதுமான படிப்பினைகள் இருக்கின்றன.

சர்வதேச சதிகார ஏகாதிபத்திய முதலாளித்துவ ஜனநாயக முகாம் இன்று யூதர்களால் முன்னகர்த்தப் படுகின்றது, குறிப்பாக மத்திய கிழக்கில் ஜனநாயகம் மாத்திரமல்ல மன்னர்களும் சர்வாதிகளும் கூட மேலைத்தேய மேலாதிக்க சக்திகளின் நலன்களுக்கேற்பவே ஆட்டு விக்கப் படுகின்றனர்.

2012 ல் முபாரக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை முபாரக்கின் இராணுவம் காவு கொண்ட பொழுது இக்வான்கள் அதனை மீட்டெடுக்க கைகொடுத்தார்கள், இன்றுவரை இராணுவத்தின் சதிவலைகளுக்குள்ளேயே அரபு வசந்தம் அடிபட்டுக் கிடந்தது.

உள்நாட்டு அரசியலைக் கையாளுவதில் ஆயிரம் நிலைப்பாடுகள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், பல்வேறு பட்ட சிந்தனா முகாம்கள் இருந்திருக்கலாம், ஆனால் பன்னாட்டு உளவுத் தாபனங்களின் அவசரத்திற்கும் அவசியத்திற்கும் ஏற்ப காரியம் பார்க்கும் இராணுவத்திடம் ஆட்சி அதிகாரம் சென்றிருப்பது எகிப்திற்கு மாத்திரமல்ல முழுப் பிராந்தியத்திலுமுள்ள இஸ்லாமிய முற்போக்கு சக்திகளுக்கும் ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவாகும்.

ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது...!



மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936)

மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952)

ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970)

அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981)

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012)


என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தெரிவான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..!

முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் சொல்லவில்லை, அவர்களும் கோரவில்லை, ஆனால் ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு முன்டுகொடுத்த சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பரம விரோதிகள்.

இன்றைய அரபுலகின் தலைவர்களை இவரோடு ஒப்பிட்டு பார்த்தால் இவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்என்ற உண்மை நமக்கு தெரிய வரும். தமக்கென்று புதிய வரலாற்றை படைத்து சென்றுள்ளார்.. முஹம்மது முர்ஸி.

1.அரபுலகிலேயே தேர்தல் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.

2.இவர் இன்றைய அரபுலகில் சாதாரண குடிமகனாக இருந்து அதிபராக பொறுப்புக்கு வந்த முதலாமர்.

3.இன்றைய அரபுலகில் முழு குர்ஆனையும் மனனம் செய்த முதல் அதிபராவார்.

4.இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பின் முதல் அதிபராவார்.

5.பொது மக்கள் தம்மை வெளிப்படையாக விமர்சிப்பதற்கு அனுமதியளித்த அரபுலகின் முதல் அதிபர் இவர் தான்.இதனால் 30க்கு மேற்பட்ட சேனல்கள் அவரை இரவு பகலாக விமர்சித்து வந்தன.

6.தாம் சிறைவாசம் அனுபவித்த காலங்களில் சிறை அதிகாரியாக இருந்தவரை சந்தித்து கைகுலுக்கிய உலகின் முதல் அதிபராவார்

7.அரசு அலுவலகங்களில் தமது படத்தை மாட்டி வைப்பதற்கு தடை விதித்த முதல் அரபுலகின் அதிபர் இவர்தான்.சாதாரன பொதுமக்களைப் போலவே வாடகை வீட்டில் குடியிருந்த முதல் அராபிய அதிபர் இவர் தான்.மேலும் சாதாரன எகிப்தியர்கள் பெறும் ஊதியத்தை போல இவரும் சம்பளம் சாதாரன சொற்ப சம்பளத்தையே பெற்றுக் கொண்டார்.

8.விடுமுறை காலங்களில் அரசு செலவில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லாமல் தமது சொந்த செலவிலேயே சென்ற முதல் அதிபராவார்.

அவர் மக்களுக்கு நன்மை செய்தாரோ இல்லையோ.. தமக்கென்று புதிய வரலாற்றை படைத்து சென்றுள்ளார்.. முஹம்மது முர்ஸி.

இன்றைய அரபுலகின் தலைவர்களை இவரோடு ஒப்பிட்டு பார்த்தால் இவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்என்ற உண்மை நமக்கு தெரிய வரும்.இவரது பதவி நீக்கத்திற்கு பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை இருப்பதாக நம்பப்படுகிறது.40 ஆண்டுகள் எகிப்தில் கொடுங்கோல் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்களின் கரங்கள் இன்னும் ரானுவத்தில் உயர்ந்து இருப்பதையே இவரது பதவி நீக்கம் உணர்த்துகிறது.இவர் பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு தம்மை வளப்படுத்திக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.


(நன்றி:Mohamed Ifthihar Islahi ,Al -Azhary )

டாக்டர் முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்தில் நிகழ்த்திய உரை எகிப்தியர்களின் உள்ளங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய உலகின் உள்ளங்களைத் தொட்டுள்ளது, அரபுலகத்தையே திடுக்கிடச் செய்துள்ளது. அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையடைக்கப் பட்டுள்ள அஷ் ஷேய்க் "உமர் அப்துர் ரஹ்மான்" சலபியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அழுத்தமாக சொல்லியவர்.

"நான் குண்டு நுழையாமல் இருக்க எந்தக் கவசமும் அணிவதில்லை. மக்கள்தான் அதிகாரமுள்ளவர்கள், மக்களின் அதிகாரத்துக்கு அப்பால் எந்த அதிகாரமும் இல்லை, நான் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அஞ்சுகிறவன் என்று துணிவாகச் சொல்லியுள்ளார்"

நாட்டின் சின்னமாக நாடே முன்னிலைப்படுத்தப்படவேண்டும், ஜனாதிபதியல்ல. ஏனென்றால் மக்கள் அழியக்கூடியவர்கள் நாடு நிலைத்திருக்கக்கூடியது ஜனாதிபதி பதவி ஏற்ற பின் அரசு, தனியார் நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களை தொங்கவிடுவது சட்டபூர்வமாக தடை செய்யப்படும் என்றும் அதனை மீறுவது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படும் என்றும் கூறினார். மேலும் ஜனாதிபதியை வாழ்த்துவதற்காக செலவுசெய்யப்படும் பணத்தை மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் செலவிடுமாறும் குறிப்பிட்டார்.

அவசரகால சட்டத்தை எந்த இடத்திலும் அமுல்படுத்த கூடாது, தனது சம்பளத்தை எகிப்து மக்களுக்காக வழங்கிடுவேன்
ஜனாதிபதியின் வாகன தொடரணி மூலம் பொது மக்களின் போக்குவரத்துக்கு தடையாக அமைய அனுமதிக்க மாட்டேன்,
அரசமாளிகையில் தொடர்ந்து இருக்க மாட்டேன் தனது வீட்டிலேயே இருப்பேன் .


எகிப்தின் இராணுவ நீதிமன்றம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர், பொதுக் கண்காணிப்பாளர் கலாநிதி முஹம்மத் பதீஃ அவர்களுக்கு ஆயுட் கால சிறைத் தண்டனை தீர்ப்பளித்துள்ளது.

67 வயதான முர்ஸி நீதிமன்றத்தில் விசாரணையின்போது பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இறைவன் அன்னாரின் பிழைகளை மன்னித்து அவருக்கு நியாயத்தை மறுமையிலே வழங்கி அவரின் ஏனைய சேவைகளை கபூல் செய்வானாக, சுவனத்தின் ஆக உயர்ந்த அந்தஸ்தில் அவர்களை ஆக்கி அருள் புரிவானாக!!




நன்றி -உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment