Wednesday 19 June 2019

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக நீரியல் நிபுணர் எஸ். ஜனகராஜன் பார்வை !!


Image may contain: 1 personநீங்கள் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாகப் பேசியதால் கேட்க்கிறேன்.940 கிமீ நீளக் கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டுக்கு இத்திட்டம் ஒரு நல்ல மாற்றாக இருக்க முடியும் என்று பலர் சொல்கிறார்கள்.ஆனால் ஏன் இத்திட்ம் முழு வேகத்தில் நடக்கவில்லை...?

ஏதாவது பிரச்சினை என்றாலே பெரியபெரிய திட்டங்களைப் பற்றிப் பேசுவது நம்மூரின் சாபக்கேடுகளில் ஒன்று. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒரு மாற்றுத் திட்டம்தான். ஆனால்...வேறுவழியே இல்லாத நகரங்களுக்கானது அது. நாம் என்ன பாலைவனத்திலா இருக்கிறோம்...?சென்னையில் மட்டும் சராசரியாக 1350 மிமீ மழை பெய்கிறது.இப்படி ஒரு இடத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றுவது தேவையற்றது.நல்ல தண்ணீர்தான் மழையாகப் பெய்து கடலில் கலக்கிறது.மழைநீரைக் கடலில் கலக்கவிட்டுவிட்டு பிறகு அதை எடுத்து நல்ல தண்ணீராக மாற்றிக்கொடுப்பது வீண் வேலையல்லவா...?கடல் நீரிலிரிலிருந்து ஒரு லிட்டர் நல்லதண்ணீர் உருவாக்க எவ்வளவு கடல்நீர் தேவைப்படும் தெரியுமா...?குறைந்த பட்சம் 30-40 லிட்டர் அதைச் சுத்தப்படுத்தி நல்ல தண்ணீர் எடுத்து விட்டால் மீதமுள்ள நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விடும் .அப்படி அதிகரித்த உப்புத் தன்மை கொண்ட நீரைக் கடலுக்குள் ஒரு கிமீ உள்ளே கொண்டு சென்று விட வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் பின்பற்றுவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.கரைக்கு அருகிலேயே விட்டுவிடுவார்கள். இப்படியே தினமும் செய்து கொண்டிருந்தால் என்னாகும்...?கடல் இறந்து விடும். அதாவது கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்காது.அவற்றுக்கு உப்பு நீரை உறிஞ்சி உறிஞ்சி நல்லதண்ணீரை எடுத்துக் கொண்டு உப்பை மீண்டும் கடலில் விடுவதற்க்கான சக்தி இருக்கிறது.ஆனால் கடலின் உப்புத்தன்மை அதிகரித்தால் அவற்றால் அதைச் செய்ய முடியாது.விளைவாக அவற்றால் உயிர்வாழ முடியாது.இதனால் கடற்கரைச் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் கடல் நீரைச் சுத்தப்படுத்துவதை விட கழிவு நீரை சுத்தப்படுத்துவதே சிறந்த தேர்வு.ஆயிரம் லிட்டர் கடல்நீரைச் சுத்தப்படுத்த ரூ.46 செலவாகும் என்றால்...அதே அளவு கழிவு நீரை சுத்தப்படுத்த ரூ .28 தான்.செலவாகும்.


-இன்றைய (18-6-2019) இந்துதமிழில் நீரியல் நிபுணர் எஸ். ஜனகராஜன் பேட்டி...

கலைஞர் செய்தார்...அரபுநாடுகளில் செய்யலையா...?சவூதி அரேபியாபை் பார்...என்று சொல்பவர்களின் கவனத்திற்க்கு....

வாய்ப்பிருந்தால் படியுங்கள். நல்ல பேட்டி.

தொகுப்பு  : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment