டிசம்பர் – 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்!
டிசம்பர் 6,1992 – இந்திய வரலாற்றில் ஓர் மறக்க முடியா நாளாகி போனது மறுக்க முடியா உண்மையாகும். 450 ஆண்டுக்கும் மேலான பழமையான அம்மசூதி இடிக்கப்படாது என்று அதன் பாதுகாப்புக்கு அப்போதைய உத்தரபிரதேச மாநில அரசை ஆண்ட பா.ஜ.கவின் முதல்வர் கல்யாண்சிங் அளித்த உத்தரவாதத்தை ஏற்றது உச்ச நீதிமன்றம். ஆனால் அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு அம்மசூதி பட்டப்பகலில் இடிக்கப்பட்டது அனைவரும் அறிந்த உண்மை.
கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
கி.பி.1855 - பாபர் பள்ளிவாச-ன் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்-ம்களும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்-ம்களுக்கிடையே குரோதத்தை - பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி - பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வே- அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாச-ன் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாச-ன் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்-ம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்லிம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி -பர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
இம்மசூதி இடிப்பு என்பது மண்டல் கமிஷனை அமுல்படுத்த நினைத்த வி.பி.சிங் கின் திட்டத்துக்கு எதிர்வினை என்று அரசியல் ரீதியான காரணமும் சங்பரிவாரங்களின் நீண்ட திட்டத்தின் ஒரு பகுதியே என்று வேறொரு காரணமும் சொல்லப்பட்டாலும் இம்மசூதி இடிப்பு என்பது இந்திய அரசியலின் முகத்தையே மாற்றியமைத்தது எனலாம். பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து இந்தியாவின் அறிவுஜீவிகள், பல்துறை நிபுணர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைவரும் அதிர்ந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருங்கிணைந்த போராட்டம் எதுவும் நடைபெறவில்லை
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
மசூதி இடிப்புக்கு மூன்று ஆண்டுகள் கழித்து தமிழகத்தை சார்ந்த முஸ்லீம் அரசியல் கட்சிகளே ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுத்தது என்பதும் அதன் காரணமாகவே இந்தியா முழுவதும் அது பரவியது என்பதிலும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழக தலித் இயக்கங்களின் பங்களிப்பையும் ஒதுக்கி தள்ள முடியாது .
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்-ம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்-ம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்-யல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 - -பர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.
ஆனால் மசூதி இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள் கழித்து இடிப்பில் முண்ணணியில் இருந்த கல்யாண்சிங் அரசியல் சன்னியாசம் பூண்டு விட்ட நிலையில், அதன் இன்னொரு முக்கிய கதாபாத்திரமான அத்வானி தன் அரசியல் வாழ்வின் கடைசி இன்னிங்ஸை ஆடும் நிலையில், உத்தரபிரதேசத்தில் பிஜேபி துடைத்தெறியப்படும் சூழலில் பாபர் மசூதி பிரச்னை மக்களால் மறக்கப்பட்டு விட்டதா அல்லது அதன் பாதிப்புகள் இன்றும் தேர்தலில் எதிரொலிக்கும் சக்தி படைத்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை, பாபர் மசூதி இடத்தை மூன்றாக பங்கிட்டு இரண்டு பங்கை இந்துக்கள் வசமும் ஒன்றை முஸ்லீம்கள் வசமும் ஒப்படைத்தது உறங்கியிருந்த பிரச்னையையை மீண்டும் எழுப்பியது போன்று இருந்தது. தீர்ப்புக்குப்பின் எப்போதும் போல் பிஜேபி ஆவேசம் காட்டியதும் நீதி நிலைபெற செய்வோம் என்ற காங்கிரஸின் சால்ஜாப்பும் இடம் பெற்றாலும் மீண்டும் இப்பிரச்னை அமுங்கி விட்டது.
உச்சநீதிமன்றமும் ஒரு தலைப்பட்சமான தீர்ப்பை அளித்தால் மீண்டும் பாபர் மசூதி பிரச்னை உயிர் பெறும் என்று சொல்கிறார் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப். பாபர் மசூதி இடிப்பிற்கு பிஜேபியை குறை கூறினாலும் காங்கிரசுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவும் முஸ்லீம்கள் தயாரில்லை என்று கூறும் ஹபீப், "ஷா பானு வழக்கை வைத்து மட்டும் பாபர் மசூதியைப் பாதுகாக்கும் விஷயத்தில் காங்கிரஸின் அலட்சியத்தை முஸ்லீம்கள் மறக்க தயாராக இல்லை" என்கிறார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பணிபுரியும் நீரஜா கோபால் ஜயாலோ, "பாபர் மசூதி இடிப்பின் மிகப் பெரிய விளைவு முஸ்லீம்களின் நம்பிக்கையை இழந்ததுதான். இவ்வமைப்பின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட நீண்ட காலம் பிடிக்கும்" என்கிறார். மேலும், "பாபர் மசூதி பிரச்சனை வரும் தேர்தலில் பாதிப்பு செலுத்துகிறதோ இல்லையோ வரலாற்றில் அது என்றும் இடம் பிடித்து கொண்டே இருக்கும்" என்றும் சொல்கிறார். மேலும் "பாபர் மசூதி பிரச்னை என்பது பிஜேபிக்கு தற்போது அவ்வளவு முக்கியத்துவம் உள்ளதாக இல்லாவிடினும் சமுதாயங்களுக்கு இடையான உறவுதான் இதில் மிக பாதிப்புக்கு உள்ளானதாகும்" என்ற நீரஜா, "நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும் சமூகங்களுக்கிடையான உறவு சீர்பட நாளாகும்" என்றும் கூறுவதைப் புறக்கணிக்க முடியவில்லை.
ஆனால் அரசியல் நிபுணர் சேத்தின் கருத்தோ வித்தியாசமாய் இருக்கிறது. "21ம் நூற்றாண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்பட இவ்விஷயத்தில் ஆர்வமிழந்து விட்டாலும் அரசியல் வரைபடத்தை விட்டு முழுமையாய் இப்பிரச்னை இன்னும் அகலவில்லை" என்கிறார். வரலாற்றாசிரியர் ஹபீபும் இக்கருத்தை ஆதரிக்கிறார். "பாபரி மஸ்ஜிதை போல் முஸ்லீம்கள் கவலைப்பட வேறு சில விஷயங்களும் உள்ளன" என்று கூறும் ஹபீப் "வேலைவாய்ப்பின்மை, கல்வி, சுகாதாரம் போன்றவை குறித்தும் முஸ்லீம்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்" என்றார்.
அதற்கு ஆதாரமாக மேற்குவங்காளத்தில் ஆண்டாண்டு காலமாய் தாங்கள் ஆதரித்த கம்யூனிஸ்டுகளைக் கைவிட்டு விட்டு மம்தாவை ஆதரித்தனர். குஜராத் கலவரங்களின் போது பாஜகவுடன் மம்தா இருந்த போதும் உணர்வு ரீதியாக வாக்களிக்காமல் மேற்கு வங்காளத்தில் பாஜகவை விட்டு விட்டு மம்தா தனியாக நின்ற போது தங்கள் பிற பிரச்னைகளான வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை முன்னிறுத்தி மம்தாவுக்கு வாக்களித்தனர். ஆனால் ஹபீபும் சேத்தும் ஒரு கருத்தில் ஒன்றுபடுகின்றனர். சில விஷயங்களை கட்சிகள் அணைய விடாமல் உயிரோடு வைத்து கொள்ளும் தங்கள் சுயநலத்துக்காக. பாபரியும் அப்படி தான். அதனால் பிஜேபிக்கும் பலனுண்டு, காங்கிரஸுக்கும் பலனுண்டு. உண்மை தானே.
பாபரி மஸ்ஜித் மீட்புக்குழுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment