Sunday 25 December 2011

குரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா? ...

குரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா?

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக...

பரிணாமத்தை மெய்பிப்பதன் மூலம் தங்களின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு உயிர் கொடுத்து விடலாம் என்ற நினைப்பில் பல கதைகளை கூறி பரிணாமம் சரியென காட்ட விரும்பும் நண்பர்கள் கையில் எடுக்கும் தலைப்பில் ஒன்று குரோமோசோம்களின் எண்ணிக்கை, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவர், அந்த முகத்தின் அழகு எங்கு தெரியும்? அதுதான் உயிரினத்தின் மரபில். ஆம் முகம் மட்டும் அல்ல ஆதி முதல் அந்தம் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் அழகும் செயலும் மரபில் கோடிங் வடிவில் பதிய பட்டுள்ளன. அந்த மரபுகளின் (genes) கூட்டமைப்பே குரோமோசோம்கள் (Chromosome) ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்று X போன்ற தோற்றத்தில் இருக்கும்.

குரோமோசோம் என்பது கடவுள் உயிர்களை உருவாக்க எடுத்து கொண்ட வரைமுறையின் அளவீடுகளில் ஒன்றாக கூட இருக்கலாம். ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு எண்ணிக்கையிலான குரோமோசோம்களை கொண்டுள்ளது, மனித குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி) அதே போன்று குரங்கு வகை (சிம்பன்சி, ஒரங்குட்டான். கொரில்லா) குரோமோசோம்களின் எண்ணிக்கை 48 (24 ஜோடி) மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் இடையே உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கையை பரிணாமத்தை மெய்பிப்பதர்கான ஆதாரமாக நாத்திகர்கள் தங்கள் பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். சிம்பன்சியின் 48 குரோமோசோம்களில் இரண்டு தானாக (பழைய கதை) சேர்ந்து 46 குரோமோசோம்களாக மாறின என்பதுதான் டார்வினின் சீடர்கள் எழுதிய கதை. இவர்களின் இப்பிரச்சாரம் சரியா என்பதை குரோமோசோம் என்றால் என்ன அவை எந்த செய்தியை தன்னகத்தே கொண்டுள்ளன என்பதை தெளிவாக அறியும் பட்சத்தில் பொய் என்று நிருபிக்க முடியும்.

குரோமோசோம்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன, ஒன்று Autosome மற்றொன்று Sexual chromosome. இதில் Sexual chromosome என்பது பாலினத்தை குறிப்பதாக உள்ளது, Sexual chromosome அல்லாத மற்ற அனைத்தும் Autosome என்று கூறுவர். இதில் பாலினத்தை தவிர உடலில் உள்ள அனைத்து பாகங்களின் செய்திகளும் அடங்கி இருக்கும்.

உதாரணமாக ஒரு பெண்ணின் உடலில் உள்ள 23 குரோமோசோம்களில் 22 ஜோடி Autosome களும் 1 ஜோடி Sex chromosome மும் இருக்கும். அவை X மற்றும் X  வகை. இதே ஒரு ஆணின் உடலில் உள்ள செல்களில் பெண்ணின் உடலில் உள்ளது போன்று 22 ஜோடி Autosome களும் 1 ஜோடி Sex chromosomeமும் இருக்கும், அவை X மற்றும் Y வகை. இதில் பெண்ணின்  X ம் ஆணின் X ம் சேரும் பொழுது பெண் குழந்தை பிறக்கும், அதே பெண்ணின் X ம் ஆணின் Y ம் சேரும் பொழுது ஆண் குழந்தை பிறக்கும், குழந்தை ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது ஆணின் குரோமோசோம் சேர்க்கையை பொறுத்தே. (ஏண்டி பெண் குழந்தை பெத்து கொடுத்த என்று வசை பாடும் மாமியார்களே, திட்ட வேண்டியது பெண்ணை அல்ல மாப்பிள்ளையை)

ஓர் மரபு அதன் நிலையிலிருந்து அதன் மேம்பட்ட நிலைக்கு (Higher form of life) மாறும் என்பதே அறிவியலுக்கு முரணானது எனபதை நாம் பல முறை நம்முடைய கட்டுரை மூலமே விளக்கியுள்ளோம், அதற்கு எந்த ஒரு மறுப்பும் பதிலும் வந்தது இல்லை, அதுவே சரியானதும் கூட. அப்படி மரபில் மாற்றம் ஏற்பட்டு ஒரு தனி உயிரி உருவானது என்று ஒரு வாதத்திற்கு எடுத்து கொள்வோமானால் அதில் மரபு மட்டுமே மாற்றம் அடைய வேண்டும். அவ்வாறில்லாமல் பல மரபுகளை தன்னகத்தே கொண்டுள்ள குரோமோசோம்கள் பிரிந்தன என்பது ஒரு லாஜிக் இல்லாத (Baseless) வாதம்.

ஒரு விலங்கிற்கும் மற்றொரு விலங்கிற்கும் இடையே உள்ள குரோமோசோம் மற்றும் மரபு வித்தியாசம் என்பது அவ்விலங்குகளுக்கு இடையே உள்ள உள், வெளிப்புற வித்தியாசத்தை காண்பிக்குமே தவிர இதிலிருந்து அது வந்தது என்பதற்கு எந்த வகையிலும் ஆதாரமாகாது. மனிதனின் தோலும் விலங்கின் தோலும் ஒன்று போல இருக்கின்றன என்பதற்காக மனித தொலிலுருந்து தான் விலங்கின் தொல் உருவானது என்று யாராவது ஆதாரம் கூறுவார்களா? அதேபோல தான் இந்த மரபு ஒற்றுமையும் குரோமோசோம் ஒற்றுமையும்.

மரபு பிரிந்து விடாமல் குரோமோசோம்கள் அதை ஒரு கட்டுகோப்புடன் வைத்துள்ளன, அந்த குரோமோசோமே பிரிந்து வேறு உயிரினம் உருவானது என்பது வேடிக்கையான ஒன்று.

ஒரு உயிரினம் தன்னுடைய குரோசோமோமை தானாக மாற்றி கொள்ளும் என்பதற்கு இதுவரையில் எந்த ஒரு அறிவியல் நிரூபணமும் இல்லை, அதற்கான வழிமுறையும் இல்லை, ஒரு உயிரினத்தின் குரோமோசோம் என்பது மாற்ற முடியாதது (Fixed), ஒரு உயிரினத்தின் ஆண் மற்றொரு விலங்கின் பெண்ணிடம் வெற்றிகரமாக இணையமுடியாது என்பதற்கு இதுவே காரணம்.

மனிதனும் சிம்பன்ஜியும் ஒரு வழிதோன்றங்கள் என்பதற்கு குரோமோசோம்களை ஆதாரமாக கொள்வார்களானால் மனிதனுக்கு 46  குரோமோசோம்கள் அதேபோல Reevees’s Muntjac  மற்றும் Sable Antelope போன்ற விலங்கினத்திற்கும் 46 குரோமோசோம்கள் தான். ஆக மனிதனும்  அவ்விலங்குகளும் ஒன்று தான் என்று ஆகுமா? ஒரு விலங்கின் குரோமோசோம் எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது. ஒரு விலங்கு மற்றொரு விலங்காக மாறிக்கொண்டே இருக்கும் பொது அது தன்னகத்தே ஒரு தடையை ஏற்படுத்தி கொள்ள வேண்டிய அவசியமில்லை, அப்படி தடை இருக்கும் பட்சத்தில் அது வேறொரு உயிரினமாக மாற வாய்ப்பே இல்லை, தெளிவாக கூறுகிறேன் கேளுங்கள், 46 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினம் 44 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினத்திடம் புணருமானால் அந்த விந்து கருமுட்டையுடன் சேராது,  46 குரோமோசோம்கள் கொண்ட மனிதன் 46 குரோமோசோம் கொண்ட துணையுடன் சேர்ந்தால் மட்டுமே இன அபிவிருத்தி நடைபெறும். இந்த தடையை உருவாக்கியது யார்? பரிணாமம் தேவை எனில் பரிணாமத்தினாலேயே(?!) எதற்காக இந்த தடை உருவாக்கபடவேண்டும்.

இப்படி இருக்க 48 குரோமோசோம் உள்ள ஒரு விலங்கு 46 குரோமோசோம் உள்ள மனிதனாக மாறி இருப்பனானால் அது எதனுடன் சேர்ந்து இன விருத்தி செய்தது, 46 குரோமோசோம் கொண்ட மாற்ற பட்ட விலங்கு இனப்பெருக்கம் செய்ய அதே 46  குரோமோசோம் கொண்ட அதன் துணை எங்கிருந்து வந்தது, ஆணின் குரோமோசோமும் பெண்ணின் குரோமோசோமும் முழுமையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சந்ததி பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில விலங்கினங்கள் மட்டும் இதற்கு விதி விலக்காக உள்ளன, உதாரணமாக ஆண் குதிரை (Horse) பெண் கழுதையுடன் (Donkey) இணைந்து கோவேறு கழுதையை (Mule) தருகிறது, இதில் கோவேறு கழுதை என்பது தன்னுடைய சந்ததியை பெருக்க முடியாதது, அதுபோல சிங்கமும் புலியும் இணைவதால் Liger மற்றும் Tigon போன்றவை பிறக்கும், இவைகளும் பிழையினால் உருவானவை, சந்ததி அற்றவை. இந்த பிழை உள்ளவைகளின் பிறப்பில் உள்ள கோளாறுகளை வைத்து, இயற்கைக்கு முரணான செயல்களில் இடுபடுபவைகளின் நிலைமையையும், மேலும் சிங்கமும் புலியும் சரியான முறையில் வடிவமைக்க பட்டவை என்பதையும் அறியலாம்.

குரோமோசோம்களின் இந்த மாற திறன் பரிணாம வாதிகளின் வாதத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்பதை அனைவரும் நன்கு அறிவர், இரு குரோமோசோம்களை இணைப்பது என்பது தற்போது உள்ள அறிவியலில் கூட அதி நவீன ஆய்வகங்களை வைத்து கூட சாத்தியமில்லாத ஒன்று அப்படி ஒரு அதிசயத்தை தானாக ஒட்டி கொண்டது என்பது Gluestick வைத்து இரு குச்சிகளை ஓட்டுவது போல ஒட்டிக்கொள்ளும் என்று நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக தெரியலாம் அதை நன்கு ஆராய்ந்து அதன் விளைவை அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதும் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.

ஒரு மின்னல் வெட்டி அதன் மூலம் ஒரு நுண்ணுயிரி (Micro organism) உருவாகி, பிறகு பல செல்களாக மாறி அது தன்னுடைய மேன்மை அடைந்த வாழ்க்கை நிலையை பெரும் என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிவியலாளர்கள் கூட நம்பினர், ஆனால் தற்போது நவீன ஆய்வகங்களில் கூட நுண்ணுயிரிகளை உருவாக்க முடியாத நிலை அவர்களை Intelligent Design என்ற மறுக்க முடியாத கொள்கைக்கு அழைத்து சென்றுள்ளது. அதிகமான அறிவியலாளர்கள் தற்போது Intelligent Design ஐ நம்புகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. இன்னும் இந்த பழைய கதைகளை பள்ளி பாடங்களில் வைத்துள்ளனர் என்பது வேதனையான விஷயம்.

தொடர்ந்து பரிணாம பொய்களை விளக்குவோம். உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக..

Reference: 1) http://ghr.nlm.nih.gov/handbook/basics/chromosome
                     2) http://en.wikipedia.org/wiki/Chromosome
                     3) http://biology.about.com/od/basicgenetics/p/chromosgender.htm
                     4) http://www.answers.com/topic/chromosome

குறிப்பு: பரிணாமம் என்பது ஒரு கட்டுக்கதை என்பதை நம்முடைய கட்டுரையின் வாயிலாக சொல்லி வருகிறோம், நாம் ஆதாரம் இல்லாத கருத்துக்களையோ மனதில் பட்டவைகளையோ பதியாமல் உறுதி செய்த பிறகே பதிகிறோம். நம்முடைய கருத்து தவறு என்று தகுந்த ஆதாரத்துடன் நிருபிப்பார்கலானால் அதை ஏற்று கொள்ளவும் தயாராக இருக்கிறோம். மாறாக, பரிணாமம் என்பது சரி தான் என்ற எண்ணம் கொண்டவர்களும், அதை பற்றி முழுமையாக அறியாத பட்சத்தில் தங்களுக்குள்ளே ஒரு வரைமுறையை ஏற்படுத்தி கொண்டவர்களும், அதை பற்றி எதுவும் தெரியாதவர்களும் தங்களின் பரிணாமம் குறித்த சந்தேகங்களை இங்கு பதியலாம், இறைவன் நாடினால் தகுந்த ஆதாரத்துடன் பதிலளிப்போம்.

No comments:

Post a Comment