Sunday, 25 December 2011

பரிணாமம் -தோற்றம்/மரபணுக்கள்/படிமம்/பாக்டீரியா/பறவை/மொனார்ச்வண்ணத்துப்பூச்சி/அதிசய மனிதன்........

பரிணாமம்-தோற்றம்...

இப்பதிவு எழுதுவதன் நோக்கம் பரிணாமம் பற்றி பலரும் பல விதமான எண்ணங்களை கொண்டுள்ளனர், அவர்களின் புரிதல்கள் அப்படி இருக்க, அதில் என்னுடையா புரிதல்களையும் நிதர்சனமான உண்மைகளையும் எடுத்து வைப்பது சரி என்ற எண்ணம் கொண்டே இப்பணியில் இறங்குகின்றேன்.

முதலில் பரிணாமம் என்றால் என்ன என்ற சிறிய விளக்கதுடம் துவங்குகிறேன், இவ்வுலகில் உள்ள அணைத்து உயிர்களும் ஒரு செல் உயிரிலிருந்து (common ancestor) உருவாகி படி படியாக வளர்ந்து பலவகையான மாற்றத்திற்குள்ளாகி பல்வேறு உயிர்களாக பிரிந்து தற்போது உள்ள மனிதனில் வந்து நிற்கின்றது, இவைகள் அனைத்தும் நூறு வருடங்களோ அல்ல இருநூறு வருடங்களிளோ நிகழ்ந்தவை அல்ல, பூமி உருவாகி பல லட்சகணக்கான வருடங்களுக்கு பிறகு உருவாகியவை, இம்மனிதணும் எதிர்காலத்தில் வேறு ஒரு உயிரியாக மாறக்கூடும், இதுதான் இக்கதையின் சாராம்சம்.

முதன் முதலாக உயிர் எப்படி தோன்றியது என்பது இவர்களின் கொள்கையில் வருவது இல்லை, மாறாக பூமியில் தண்ணிர் வந்தது, வந்ததும் ஒரு உயிர் தோன்றியது பிறகு அனைத்து உயிர்களும் தோன்றின என்பதே, இவைகளை பற்றி விரிவான புத்தகம் எழுதி உலகம் முழுக்க பெயர் பெற்றவர் தான் சார்லஸ் டார்வின் என்பவர்.

இவரின் இக்கொள்கைகள் மதவாதிகளின் போதனைக்கு எதிராக அமைந்தது, அதனாலேயே முதலில் அதை எதிர்க்க தொடக்கினர். பிறகு இதில் இருக்கும் ஓட்டைகளை தேடி சென்றனர், மதவாதிகள் இக்கொள்கையை ஏற்றுகொள்ளாமலும், சிலர் தங்களுடைய கொள்கையை விட்டுகொடுக்க மனம் இல்லாமலும் சிலர் நியமான முறையிலும் விமர்சனம் செய்யலாயினர், அறிவியலாளர்கள் கூட இக்கொள்கையில் பிடிப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், தற்போது இக்கொள்கையை நாத்திக வாதிகளும் தேவைப்படும் பொது கம்முனிச வாதிகளும் கையில் எடுத்து கொள்கின்றனர்.


ஓர் உயிரின் மாற்றம் என்பது மரபணுவில் (Gene) ஏற்படும் மாற்றமே,
பரிணாமத்தில் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, ஓன்று நுண் பரிணாமம் (Micro Evolution), மற்றொன்று பாரிய கூர்ப்பு (Macro Evolution),

இதில் முதல் வகையான Micro Evolution என்றால் ஒரு உயிரினத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ஆகும். அதற்கான காரணிகளாவண: Mutation, மரபு பெருக்கத்தில் ஏற்படும் சிறு பிழைகள், மரபணு இடமற்றத்தின் பொது ஏற்படும் பிழைகள் ஆகும்.

மாறுந்தன்மை (Mutation):

இதில் மாருந்தன்மை (mutation) என்பதே அதிகமாக நிகழகூடிய ஓன்று, வேதிபொருள்களின் தாக்கம், கதிர்களின் தாக்கம் மற்றும் Virus களின் தாக்கம் போன்ற காரணங்களால் மரபில் (DNA வில்) ஏற்படும் சிறு மாற்றங்களே இந்த mutation என்பதற்கு உதாரணம். இவைகள் ஏற்றுகொள்ள பட்ட ஒன்று.

மரபணு திருத்தம் செய்தல் (DNA Repair):

இது போன்ற மாற்றங்களை சரி செய்வே உடலில் DNA repair என்ற ஒரு வளர்சிதை மாற்ற வேதிவினை (Metabolishm) நடைபெறும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், இனம்பெருக்குவதற்கும், தமது உடலமைப்பைப் பராமரிப்பதற்கும் உதவுகிறன. சில நேரங்களில் இந்த வேதி வினையின் திறன் குறையும் பொது தான், மனிதனிடம் இந்த Micro Evolution மாற்றங்கள் நடைபெறும்.

பரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பதற்கு ஒரு ஆணி தரமான ஒரு விசயமே, இந்த DNA Repair என்பது தான், ஒவ்வொரு மனிதன் உடலிலும் அது போல அணைத்து விதமான விலங்குகள் உடலிலும் இந்த DNA Repair என்ற வளர்சிதை மாற்ற வேதிவினைநடைபெறுகிறது, இதனுடைய வேலை விலங்குகளின் உடலில் ஏற்படும் மாறுதல்களை அதாவது மரபணுவில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதே.

இதை புரியும் படி சொல்ல வேண்டுமானால், மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எப்படி செயல் படுகிறதோ, அதையே ஒரு உதாரணமாக சொல்லலாம். இது மனிதனை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது, அதனுடைய திறன் குறைகயில்தான் மனிதனுக்கு நோய்கள் வருகின்றன. அதே போல தான் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதே இந்த வகையான வேதி வினையின் வேலை. உதாரணமாக RAD54 என்ற ஒரு புரதம் இந்த வேலைகளை செய்கிறது.

இதில் இரண்டாம் வகையான Macro Evolution, அப்படியெனில் ஒரு உயிரினம் முழுவதுமாக மற்றொரு உயிரினமாக மாறுவது, இது உடனே ஏற்படுவது இல்லை, இந்த மாற்றத்திற்கு லட்ச கணக்கான வருடம் தேவை படும் என்பது அவர்களின் கருத்து, இப்படி ஒரு பரிணாமம் இதுவரையில் எங்கும் எப்போதும் நடந்தது இல்லை, அதற்கான ஆதாரங்களோ படிமங்களோ இது வரையில் இல்லை.

ஆக உயிரினத்தின் உடலில் உள்ள மாற்றங்களை சரி செய்ய உடலிலேயே ஒரு அமைப்பு இருந்து அதை ஒரு வேலையாக செய்து கொண்டுருக்கின்றது, ஒரு உயிரின் சிறு மாற்றத்திற்கே வேலை இல்லாத பொழுது, ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுகிறது என்பது மிகுந்த வேடிக்கையான ஒன்று.


நூறு வருடங்களுக்கு முன்பு உள்ள அறிவியல் வேறு தற்பொழுது உள்ள அறிவியல் வேறு, ஏனெனில் டார்வினுக்கு DNA பற்றியும், மரபியல் பற்றியும் நன்கு அறிவதற்கு வாய்ப்பு இல்லை, அன்றைய தினம் இருந்த விஞ்ஞானம் அப்படி, மரபியலின் தந்தை என்று அழைக்கப்படும் மெண்டலின் கூட தற்போது உள்ள மரபியல் வளர்ச்சியையும், உயிர்களின் அதிசயமான அமைப்பும் கண்டால் வியக்கத்தான் வேண்டும், இதில் முக்கியமாக பதிய பட வேண்டிய கருத்து எது எனில் தற்பொழுது வரை இக்கொள்கை நிரூபிக்க பட்டதா என்றால் ‘இல்லை’ என்பதே உண்மை.

டார்வின் இக்கொள்கையை உரத்த குரலில் கூற காரணம் மனிதன் மற்றும் குரங்குகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையே (இவ்வோற்றுமைகளை பற்றி பின் வரும் கட்டுரைகளில் விரிவாக பார்போம்), தற்போது இருக்கும் நாத்திக வாதிகள் இக்கொள்கையை தாங்கி பிடித்திருப்பதற்கு காரணம் அவர்களின் மனதில் ஏற்றுக்கொள்ளமுடியாத மதகோட்படுகளும், பகுத்தரறிவாளனாக இருக்கும் மனிதனிர்களுக்கு இடையே தங்களை பகுத்தறிவாளர்களா காண்பிப்பதர்க்காகவே, நாம் இக்கொள்கையை விமர்சிப்பதற்கான காரணங்களையும் இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும், அதில் முதன்மையாக நம் மனதில் நிற்பது, மனிதன் மற்ற எல்லா விலங்குகளை விட தனித்தே இருக்கும் நிலையும், அவனது தனித்துவம் மிக்க உருவ அமைப்பும். மற்றும் இந்த இப்பரிணாம கொள்கைகளின் அடிப்படை விசயங்களே ஆயிரம் கேள்விகளை கொடுக்கின்றன,

பரிணாமம் - மரபணுக்கள்...

மரபணுக்கள் பற்றியும், அவற்றில் நடைபெறும் செயல்கள் பற்றியும் நமக்கு ஒரு தெளிவு கிடைத்தால் மட்டுமே, அவைகள் தானாக உருவானவைகளா அல்ல எதோ ஒரு சக்தி திட்டமிட்டு உருவாக்கியதா என்ற தெளிவு கிடைக்கும். இப்பதிவில் நாம் பார்ப்பது மரபியல் பற்றிய ஒரு சிறிய விளக்கம்.

உயிரினங்கள் அனைத்தும் செல்களால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே, இவற்றில் ஒரு செல் உயிரினங்களும் இருக்கின்றன பல செல் உயிரினங்களும் இருக்கின்றன. செல்களுக்குள் என்ன இருக்கின்றன என்பதை கீழே உள்ள விலங்கு செல் படத்தின் மூலம் காணலாம்.

செல்லின் உள் பல வகையான பொருட்கள் இருந்தாலும் நாம் இங்கே எடுத்துகொள்ளும் பகுதி உட்காருவே, அதில் தான் மரபு செய்திகளை தன்னகத்தே கொண்ட குரோமொசோம்கள் இருக்கின்றன. இந்த குரோமோசோம்கள் ஜோட்டி போன்ற பின்னிய அமைப்பில் இருக்கின்றன.


குரோமோசோம்கள் எண்ணிக்கை ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபட்டு இருக்கும், மனிதனுக்கு இருப்பது 46, அவற்றில் 23,000 க்கு அதிகமான புரதத்தை (Protein) உருவாக்க கூடிய மரபுகள் (Genes) இருக்கின்றன. இவைகள் தான் மனிதனின் பரம்பரையாக வரக்கூடிய, தோற்றத்தை பற்றிய அனைத்து விதமான மரபுச்செய்திகளை (Genetic information) உள்ளடிக்கி இருக்கின்றன.

இந்த மரபின் (Gene) மொத்த அமைப்பிற்றுக்கு DNA (Deoxy Ribo Nuclic Acid) என்று பெயர். இவை Double Helix அமைப்பில் இருக்கும் (AT, GC என்று பின்னப்பட்டு இருப்பதை மேல் உள்ள படத்தில் காணலாம். இந்த மரபின் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைக்கான செய்திகளை (Gene Coding) கொண்டுள்ளன.

உதாரணமாக கை, கால், தலை இவற்றின் வடிவம், அளவு ஆகியன. அனைத்து செல்லிலும் இவை அனைத்து செய்திகளும் இருந்தாலும் ஒவ்வொரு உறுப்புகளில் உள்ள செல்களில் அந்தந்த உறுப்புகளுக்கு தேவையான மரபுகள் மட்டும் செயற்படும். உடம்பில் உள்ள அனைத்தும் செய்திகளும் செயற்படக்கூடிய செல்கள் ஒரு குறுப்பிட்ட பகுதியில் தான் இருக்கும், அவைதான் குருத்தணு (Stem Cell). அவைகளை பற்றி விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.


இந்த DNA க்கள் நான்கு வகையான அமிலத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன: Adenine, Guanine, Thymine and Cytosine. இவற்றை சுருக்கமாக A T G C என்று கூறுவார்கள், அனைத்தும் கார்பன் மூலக்கூருகளால் AT, GC என்ற அமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன. 13 வருடங்கள் உழைப்பிற்கு பிறகு மனிதனின் உடம்பில் உள்ள அனைத்து மரபுகளும் தொகுக்கப்பட்டு விட்டன, இவற்றிற்கு பெயர்தான் (HGP – Human Genome Project) ஆகும். அதேபோல மற்ற விலங்குகளின் மரபுகளும் தொகுக்க பட்டு வருகின்றன. இவற்றை தொடர்பு படுத்தி பார்ப்பதன் மூலமே அந்த உயிரினங்களுக்கு இடையே உள்ள வேற்றுமையை காணலாம், மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் இடையே உள்ள 96% ஒற்றுமையை இதை வைத்தே கண்டறிந்தனர்.

இந்த DNA க்கள் தங்களை transcription என்ற ஒரு வகையான வேதி வினைக்கு உட்படுத்தி RNA அமிலங்கள் உருவாகின்றன பிறகு இவைகள் translation என்ற மற்றொரு வேதி வினைக்கு உட்படுத்தி புரதங்கள் உருவாகின்றன. மரபுகள் எப்படி செய்திகளை கொண்டுள்ளதோ அதை போல அந்த உயிரினத்தை கட்டமைப்பு செய்யும் வேலையில் புரதங்கள் (Protein) தான் இருக்கின்றன. அமினோ அமிலத்தின் (Amino acid) கடின கட்டமைப்பை (complex structure) கொண்டவைகள் தான் இந்த புரதங்கள்.

குருத்தணுக்கள் (Stem Cells):

தற்போது அதிகமாக கவனம் செலுத்தப்படும் துறை இந்த குருத்தணு ஆராய்ச்சி துறையே (Stem Cell) ஏனெனில் மனிதனிடம் உள்ள அனைத்து நோய்களுக்கும் இதில் தீர்வு இருக்கு என்று நம்புவதே.


குருத்தணு என்பது ஆணின் அண்டமும் (Sperm) பெண்ணின் கருமுட்டையும் (Gametes) இணையும் பொது கருவில் உருவாகும் ஒரு வகை செல்களே, இந்த செல்களின் சிறப்பு என்னவெனில் இவைகள் மற்ற செல்களை (Replication) உருவாக்க கூடியவை மேலும் ஆணின் 23 குரோமோசோம்களும் பெண்ணின் 23 குரோமோசோம்களும் இதில் முழுமையாக இருப்பது தான். அதாவது மனிதனின் முழு அமைப்பும் கொண்ட மரபு இதில் பதிய பட்டுள்ளதே காரணம்.

இவைகளை இரு வகையாக பிரிகின்றனர், முதல் வகை முளைய குருத்தணுக்கள் (Embaryo Stem Cells) கருவுறும் பொது உருவாககூடியவை, மற்றொன்று வளர்ந்த குருத்தணுக்கள் (Adult Stem Cells) கரு வளர்ச்சி அடைந்த பிறகு உருவாகக்கூடிய குருத்தணு.

குழந்தையின் தொப்புள் கொடி (umbilical Cord Blood) ரத்தத்தில் இந்த செல்கள் இருப்பதால் தான் அந்த ரத்தத்தை சேகரிக்க தனி ரத்த வங்கிகள் செயல்படுகின்றன. இந்த குருத்தணுக்களை சேகரித்து வைப்பதால் புற்றுநோய் போன்ற மரபு சார்ந்த வியாதிகளுக்கும் மருந்தாக அமையும் என்று மருத்துவ உலகம் எதிர்பார்க்கிறது. மேலும் இந்த குருத்தணுக்கள் மரபணு திருத்தம் செய்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆக முழு உயிரின் உருவமும், பரம்பரை குணங்களும் ஒரு சிறு கண்ணுக்கு தெரியாத செல்லில் தான் உள்ளது என்பதே இப்பதிவின் கரு.

மனித உருவம் உருவாக்கப்பட்டு அதற்கான மரபணு உருவானது என்பது மதங்களின் கோட்பாடு, முதலில் மரபணு உருவானது பிறகுதான் மனித உருவம் வந்தது என்பது நாத்திக கொள்கை.

முதலில் மரபணு வந்து இருந்தால் உருவம் விகாரமாக கூட இருந்திருக்கலாம், யாருக்கு தெரியும் இந்த மரபணு விற்கு இந்த உருவம் தான் என்று, எப்படி இவ்வளவு கச்சிதமாக அமைய பெற்றது, தேவையான உறுப்பு தேவையான இடத்தில்?? நாத்திகர்களே!! இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன??

நீங்கள் இதில் எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் இவைகள் தானாக உருவாகவில்லை, உருவாக்கப்பட்டன என்பதை நம்பித்தான் ஆக வேண்டும.

பரிணாமம் – படிமம்...

பரிணாம கொள்கை பொய் என்பதற்கு நாம் எடுத்து வைக்கும் முதற்சான்றான ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறாது அதற்கு அறிவியலில் எந்த இடத்திலும் ஆதாரம் இல்லை, அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை இது வரை நடந்ததும் இல்லை, நடப்பதும் இல்லை, நடக்க போவதும் இல்லை என்பதை நம்முடைய முதற்பதிவிலேயே நாம் தெள்ள தெளிவாக அறிவியல் பூர்வமாக வாதங்களை எடுத்து வைத்தோம்.

எந்த ஒரு உயிரும் அதன் தேவைகேற்ப மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ள முடியாது என்பதையும், மாறுந்தன்மை (Mutation) அடிப்படையிலும் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக மாறாது, ஒரே உயிரினத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும் என்பதையும் அறிவியல் பூர்வமாக விளக்கினோம்.

அடிப்படை ஆதாரத்தை பொய் என்று நிருபிக்க முடியாத பரிணாமவாதிகள் இதுவரையில் எந்த ஒரு சரியான ஆதாரமும் எடுத்து வைக்க முடியவில்லை, ஆனால் ஒட்டகம் ஒட்டகசிவிங்கியாக மாறியது கரடி கார் ஓட்டுகிறது என்று கூறுவது வேடிக்கையான ஒன்று, இருப்பினும் அவர்களுடைய கருத்துக்களும் கதைகளாகும் என்பதை அவர்கள் அறிவார்கள்.


பிரெஞ்சு புவியியல் மேதையான லூசிஸ் லார்தட் (Louis Lartet) என்பவர் 1868 ம் ஆண்டு பிரான்சில் உள்ள குரோ மொக்னான் என்ற பகுதியில் பழமையான 2 மனித படிமத்தை (Fossils) கண்டறிந்தார் (Paglicci 52 and 12) அவற்றிற்கு குரோ மெக்னான் (Cro-Magnon) என்றும் பெயர் வைத்தார். அதே போன்ற படிமங்கள் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவை அனைத்தும் குரோ மெக்னான் காலத்தை சேர்ந்தவையாக அறியப்பட்டன.

கார்பன் வயது கணிப்பு படி அதன் வயதை கணக்கிட்டு 28,000 ம் வருடங்கள் பழமையான மனிதன் என்றும் ஐரோப்பாவில் வாழ்ந்தவர்கள் என்பதும் கண்டறிந்தனர். அவர்கள் மக்னீசியம் மற்றும் அயன் ஆக்சைடு பயன்படுத்தி குகை ஓவியங்கள் தீட்டுவதிலும், வேட்டையாடுவதில் சிறந்தவர்களாகவும், இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருந்தனர். இவர்கள் தாம் முதன் முதலில் காலண்டர் உபயோக படுத்தியதாக அறியப்படுகிறது.


கடந்த 2003 ம் ஆண்டு அந்த மனித படிமத்தின் எலும்பு செல்களிருந்து எடுக்கப்பட்ட mtDNA (Mitochondrial DNA என்பது nDNA போன்று மரபு செய்திகளை கொண்டது) மரபுகள் தொகுக்கும் பனி துவங்கி அனைத்து மரபுகளும் தொகுக்கப்பட்டன.

பிறகு தற்போது உள்ள மனிதனின் DNA வும் 26,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த குரோ மெக்னான் மனிதனின் DNA வும் ஒத்து பார்க்கப்பட்டன. சில மரபு கோடான்கள் (Base pairs) மட்டுமே மாறுவது கண்டறியப்பட்டது.

அந்த சில மரபுகோடான் மாறுவதற்கான காரணம் மாறுந்தன்மை (mutation) என்பது தான். தெளிவாக சொல்ல போனால், தற்போது உள்ள மனிதர்களுக்கும் இடையே சில மரபு வித்தியாசங்கள் இருக்கும். ஆப்பிரிக்க மனித மரபையும் ஐரோப்பா மனித மரபையும் ஒப்பிட்டு பார்த்தல் 0.1% (~) என்ற வித்தியாசத்திருக்கு தான் இருக்கும்.

தற்போது உள்ள மனிதர்களுக்கு இடையே மரபுகளில் உள்ள மாற்றமே (99.9%) அந்த மனிதர்களின் மரபுகளிலும் இருந்தது தெரிய வந்தது.

26,000 வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு மாறுதலுக்கும் இல்லாமல் மனிதன் இருந்திருக்கிறான். உடை மாற்றம், உணவு மாற்றம், இருப்பிட மாற்றம் பழக்க வழக்க மாற்றம் அனைத்தும் நிகழ்ந்தது ஆனால் மரபு மாற்றத்தை தவிர.

ஆக ஆதிமனிதனின் மரபுகளும் தற்போது உள்ள மனிதனின் மரபுகளும் ஒத்து போவதிலிருந்து நாம் அறிவது மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை என்பதையும் ஒரு முழு அறிவுடன் ஒரு சக்தி உருவாக்கியது என்பதையும் தெள்ள தெளிவாக விளங்க முடியும். மேலும் இதுவரையில் எந்த வித மாறுபட்ட படுமமும் கிடைக்க வில்லை என்பது கூடுதலான செய்தி.

ஆதாரங்கள் இல்லாமல் எழுதப்பட்ட டார்வினின் கதையான பரிணாம கொள்கை மண்ணை கவ்வும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பரிணாமம் - பாக்டீரியா

அபியோ ஜெனிசிஸ் (Abiogenesis), ஒரு உயிர் இந்த பூமியில் எப்படி உருவானது என்பதை பற்றி விளக்கக்கூடிய ஒரு பாடம். உயிரினம் எப்படி உருவானது என்பதை பற்றிய தெளிவு இல்லை என்றாலும் அனுமானங்களை வைத்து எப்படி விருவாகி இருக்கும் என்ற கொள்கையை மனிதன் உருவாக்கினான்.

பூமி உருவாகி பல லட்சகணக்கான வருடங்களுக்கு பிறகு ஒரு மின்னல் வெட்டியது அந்த மின்னலிளிருந்துதான் இந்த உயிரினம் உருவாக (உட்காரு இல்லாத ஒரு அமினோ அமிலம் மட்டும் கொண்ட உயிரினம்) ஆரம்பித்தது. பிறகு ஒவ்வொரு உயிரினமாக மாறி மனிதனாகிவிட்டது.

அது ஒரு செல் உயிரினமான உட்காரு இல்லாத (Single cell prokaryotes) பாக்டீரியாவாக இருக்கலாம் என்று கூறினாலும் இது வரையில் யாரிடமும சரியான விளக்கம் இல்லை, உயிர்களின் தோற்றத்தை பற்றி பல கொள்கைகள் முன்வைக்கபட்டலும் அதில் Iyon Sulfar World Theory – Metabolism without genetics (மரபியல் இல்லாத வளர்சிதைமாற்றம் கொண்ட) யும் RNA Life Forms Theory யும் தான் குருப்பிடத்தக்கவை.

எந்த கொள்கையாக இருந்தாலும் வளர்சிதைமாற்றம் (Metabolism) செல் நகலேடுதுத்தல் (Cell Replication) என்ற இரண்டு நிகழ்வுகளை ஏற்றுக்கொள்கின்றன,.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முன்பு வரை அரிஸ்டாட்டில் இயற்றிய ஸ்பாண்டனஸ் கொள்கையான (Spontaneous generation) ஒரு உயிர் என்பது ஒரு உயிரில்லாத பொருளிருந்து வந்ததாக நம்பப்பட்டது, அப்பொழுது அதுதான் அறிவியலாகவும் இருந்தது.

மரபணு இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை அதுபோல அமினோ அமிலம் (Amino Acids) இல்லாமலும் எந்த உயிரினமும் இல்லை எனலாம், மரபணு இருக்கிறது எனில் அவைகளுக்கு மரபுகோடன் இருந்திருக்க கூடும், அதில் அந்த உயிரினம் பற்றிய முழுமையான செய்திகள் அடங்கி இருக்கும். அந்த செய்திகள் எப்படி வந்தது யார்கொடுத்தது என்பதை கவனிக்காமலே தங்களுடைய கொள்கைகளில் முழுமை இருப்பதாக நம்பினர்.


மின்னல் வெட்டி ஒரு சாதாரண கல் வந்தது என்றாலே ஏற்றுக்கொள்ளமுடியாது, மின்னல் வெட்டி இந்த உயிர் தோன்றியது என்று எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரையில் கல் கூட வந்தது இல்லை அப்படியே ஒரு பொருள் வந்தது என்று ஒரு வாதத்திற்கு வைத்துகொன்டாலும் அதில் DNA எப்படி வந்தது, RNA எப்படி வந்தது, அமினோ அமிலங்கள் எப்படி வந்தன? அந்த ஒரு செல் உயிரிக்கு அந்த உயிரினத்தின் மரபு கொடுத்தது யார்??

இவை அனைத்தும் சேர்ந்து எப்படியோ உருவாகியது என்று மறுபடியும் ஒரு வாதத்திற்கு வைத்துகொண்டாலும். அவைகள் நகல் எடுக்கும் திறமையோடும் வளர்சிதை மாற்ற அமைப்போடும் உருவாகி இருக்க முடியாது. அப்படி நகல் எடுக்கும் திறமையோடு உருவாகியது என்றால் வேறு எதோ அந்த ஒரு சக்தி அந்த உயிரினத்தை உருவாக்கியது என்பதை நம்ப வேண்டும்.

இல்லை மரபணு பிரதி எடுத்தல் என்ற அமைப்போடு அது உருவாகவில்லை என்று கூருவீர்களானால், அதற்கு மரபு பிரதி எடுத்தலை யார் கற்று கொடுத்தது, மனிதனை முதலில் ஒரு உதாரணமாக எடுத்துகொள்ளுங்கள், ஆறறிவு படைத்த நமக்கு ஒரு செல் வலர வேண்டும் என்று நீங்கள் நினைத்தா வளருகிறது, இல்லவே இல்லை பசி உங்களை சாப்பிட வைக்கிறது செல் வளருகிறது.

அப்படி அந்த உயிருக்கும் பசி எடுத்திருக்கும் வளர்ந்திருக்கும் என்றால் அவை எப்படி வளர்ந்திருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். நகல் எடுக்கும் போது அந்த செல் எப்படி இருக்கிறதோ அப்படியே நகல் எடுக்கும், அந்த ஒரு செல் போலவே அனைத்து செல்களும் இருந்திருக்கும், முழு வடிவம் என்பது ஒரு உருண்டை வடிவத்திலோ அல்ல வடிவம் இல்லாமலோ இருந்திருக்கும். கைகால், மூக்கு, வாய், இனப்பெருக்க உறுப்பு வைத்து எடுக்காது.

இலட்சகணக்கான வருடத்தில் இவைகள் வந்தன என்பதை எடுத்துகொண்டாலும், ஒவ்வொரு உயிரினதிற்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. அப்படி அந்த உயிரினத்திற்கும் ஒரு ஆயுட்காலம் இருந்திருக்கும். முதலில் செல்கள் நகலெடுக்க நினைப்பதற்கு முன்னரே அவைகள் இறந்திருக்கும்.

ஒவ்வொரு முறையும் மின்னல் வெட்டி ஒரு உயிர் உருவாகும் என்றாலும் கூட அதுவும் முதலில் தோன்றிய உயிர் போலவே மரபு பிரதி எடுத்தல், உணவை தேடி கொள்ளுதல் போன்ற குணம் வருவதற்கு முன்னரே அது இறந்திருக்கும். அவைகள் வாழ்வை தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை.

இவைகளை எல்லாம் விட சுகம், சோகம், காமம், நினைவு போன்ற உணர்வுகளை யார் ஏற்படுத்தியது, ஆண் பெண் என்ற அமைப்பு எதற்காக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். உயிரினங்கள் எப்படி வந்தது என்று தெரியாமலே உயிரினங்களை ஒரு செல் அளவுக்கு சுருக்கி அதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டனர், ஒரு செல் உயிரினம் அதன் முழு மரபியலோடு தானாக உருவானது என்று நம்புகிறீர் எனில் மனிதன் ஏன் திடிரென உருவாக கூடாது? மற்ற விலங்குகள் ஏன் திடிரென உருவாக கூடாது?


திடிரென மனிதன் வந்தான் என்று ஏற்றாலும் அல்ல திடிரென ஒரு செல் உயிரி வந்தது என்று ஏற்றாலும், இவை அனைத்தையும் ஏற்படுத்தியது ஒரு புத்திசாலித்தனமான ஒரு சக்தி என்பதை விளங்கியே ஆகவேண்டும்.
 

பரிணாமம் - பறவை..

உயிரினங்களில் அதிசயமான உயிரினமாக இருப்பது பறவை (Birds) இனம், அதிசயம் மட்டும் அல்லாமல் பரிணாமவாதத்தை பொய் படுத்துவதில் முக்கியமானதாக பங்கை வகிக்கிறது.

இவ்வுலகில் 8600 வகையான பறவைகள் இருக்கின்றன, அனைத்தும் முட்டை இட்டு குஞ்சு போறிப்பவை. ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு தனி திறமை இருப்பது போல பறவை இனத்திற்கு பறப்பது என்ற தனித்துவம் உள்ளது.

பரிணாம வாதிகளின் கதைப்படி ஒரு பறவை எப்படி உருவாகி இருக்க வேண்டும்:

1) சூழ்நிலைகேற்ப தானாக இறக்கை முளைத்து (Natural Selection) உருவாகி இருக்கவேண்டும்.

2) வேதிபொருளால் மரபியலில் ஏற்பட்ட பாதிப்பால் (Mutation) இறக்கை முளைத்து உருவாகி இருக்க வேண்டும்.

வேதியியல் மாற்றத்தால் எந்த உருவமும் சரியாக அமையாது ஒரு உயிரினத்தின் சீர்குலைவையே ஏற்படுத்தும் என்று நான் முன்பே விளக்கி இருக்கிறோம், அப்படியெனில் முதலில் கூறிய பறக்க வேண்டும் என்ற ஒரு விலங்கின் தேவையே இறக்கையை உருவாக்கி பறக்க வைத்தது என்ற அவர்களின் கதைகளை நமது பார்வைக்கு எடுத்துகொள்வோம்.

முதலில் ஒரு விலங்கிற்கு பறக்க தேவை இருந்திருக்குமா? நிச்சயம் இருந்திருக்காது, அதனுடைய உணவு மரத்தில் தான் இருக்கிறது எதுவுமே இல்லாத வானில் எதற்கு பறக்க தேவை. முதலில் ஒரு விலங்கிற்கு பறக்க வேண்டும் என்ற தேவை என்று கூறுவதே தவறு.

பறக்கலாம் என்ற சிந்தனை ஒரு விலங்கிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை, அதற்கு முன் எதாவது பறந்திருந்தால் அதை பார்த்து நாமும் பறந்து உணவை தேடி கொள்ளலாம் என்று எண்ணி இருக்கும், யாருமே பறக்காத காலத்தில் எப்படி அந்த சிந்தனை வந்தது.

அப்படி பறக்க வேண்டும் என்று எண்ணினாலும் அது பறப்பதற்கு இறக்கை வேண்டும் என்று பறவைகளுக்கு யார் சொன்னது? தற்போதுகூட மனிதன் பறவையை பார்த்து தான் பறப்பதற்கு இறக்கை வேண்டும் என அறிந்துகொண்டான், இறக்கையே இல்லாத நேரத்தில் யார் சொன்னது பறவைக்கு? பறவைக்கு மரத்தில் கிடைக்காத உணவு பறந்து வேறு எங்கிருந்து கொண்டுவர போகிறது, மரத்தை தவிர வானத்தில் வேறு எங்கய்யா அதற்கு உணவிருக்கிறது. அப்படியெனில் அது மரம் ஏறி தானே உணவை தேடுமே தவிர பறக்க முயற்சி செய்திருக்கதே.

ஒரு பொருள் பறப்பதற்கு நான்கு தத்துவங்கள் தேவை படுகின்றன. மேல் எலும்புதல்(Lift), உந்து சக்தி (Thrust), இழு சக்தி (Drag), ஈர்ப்புசக்தி (Gravity). இந்த தத்துவங்கள் பறவையின் இறக்கைகளால் மட்டும் செயல்படுத்தப்படவில்லை அவைகளின் முழு உடல் அமைப்பாலும் சரியான முறையில் செயற்படுத்த முடிவதால் அவைகளால் பறக்க முடிகிறது. அதாவது பறவையின் இறக்கை அதன் அளவை விட இரண்டு மடங்காக இருத்தல், கனம் இல்லாத எலும்புகள் (Bones), அவைகளின் சக்தி மிகுந்த இறகுகள் (சில இறகுகள் நீளமாகவும் உந்து சக்திக்கு தேவையான அளவு அலுத்தமானதாகவும் உள்ளன), சூடான ரத்தம் (Warm Blood), திடமான இதயம் (Strong Heart) மற்றும் சுவாச அமைப்பு (Respiratory System) ஆகியவையும் தான் பறப்பதற்கு காரணம்.

பறவைகள் தங்களுடைய இறக்கைகளால் உந்து சக்தியையும் மேல் எழும்பும் சக்தியையும் உற்பத்தி செய்கின்றன. இறக்கையும் வால் பகுதியும் பறவையின் வேகத்தை நிலை படுத்துவதிலும் பறவை எத்திசையில் திறம்பவேண்டும் என்பதையும் செய்கின்றது. பறவையின் இறக்கை இறகுகளால் (Feather) ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த இறகுகளை பல நிலைகளில் (Position) வைத்தே தேவையான நிலைகளில் பறக்கிறது. பறவையின் பார்வை (Vision) என்பது ஒரு தனித்துவம் மிக்கது, அது மற்ற விலங்குகள் போல் இல்லாமல் நிறங்களை பார்க்க கூடியதாகவும், மனிதனை விட கூர்மையான பார்வை கொண்டதாகவும் உள்ளது. உடலில் எடை குறைக்கும் அமைப்பையும் (Weight Reducing System) தன்னகத்தே கொண்டது குறிப்பிடதக்கது.

ஒரு சாதாரண பறவை மேல் எழும்புவதற்கு ஒரு வினாடிக்கு மூன்று முறை இறக்கையை அசைக்க வேண்டி இருக்கிறது. இந்த வேலைக்கு உடல் அமைப்பு முக்கியம், எலும்பு கனம் குறைவானதாகும் அதிக திறன் உள்ளதாகவும், தசைகள் அதிக திறன் உள்ளதாகவும் இருக்கவேண்டும்.

பரிணாமவாதிகளின் வாதப்படி உடனே இறக்கை வந்திருக்காது எப்படியும் இரண்டு மில்லியன் (அப்பொழுது தான் யாராலும் கேள்வி கேட்க முடியாது அல்லவா!!) வருடத்தில் தான் இந்த இறக்கை முளைத்தது என்றால், பறவைக்கு கொஞ்சம் கொஞ்சமாவது இறக்கை முளைத்திருக்க வேண்டும் (இறக்கை திடிரென ஒரே நாளில் முளைத்தது என்று கூறினால் கூட அது ஒரு வாதத்திற்கு சரியாக இருந்திருக்கும்). முதலில் இறக்கை துளிர் விட்டிருக்கும் பிறகு ஒரு பகுதி இறக்கை உருவாகி இருக்கும் ஆனாலும் பறவையால் பறக்க முடியாது, எதற்காக ஒரு உபயோகம் இல்லாத இறக்கையை வைத்து கொண்டு பல மில்லியன் வருடங்கள் அந்த பறவைகள் வாழ வேண்டும். உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும்.

அப்படியெனில் பறவையின் ஒவ்வொரு சந்ததிக்கும் அது சொல்லி கொடுத்ததோ, இன்னும் ஐநூறு தலைமுறையில் நமக்கு இறக்கை என்ற ஒரு பொருள் வரும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இறக்கையை வளர்த்து கொண்டு கடைசியில் பறக்கலாம் என்று!!

சில வகையான பறவைகள் முழுமையான இறக்கை முளைக்காமல் பாதி இறக்கையுடன் தளர்ந்து பிறகு மரத்தில் ஏறி ஏறி கை முளைத்து மற்றொரு உயிரினமாக மாறியது என்பது இவர்களின் கதைகளின் தொடர்ச்சி. இந்த அடிப்படை இல்லாத கதைகளை நம்புபவர்களை என்னவென்று கூறுவது?

மனிதனுக்கு ஆதி காலம் முதல் தற்போது வரை பறக்க கூடிய தேவையே இல்லையா, விலங்குகளுக்கே அந்த எண்ணம் தோன்றி பறக்கும் போது மனிதன் ஏன் பறக்க வில்லை, மனிதனின் பறக்கும் ஆசை இருந்ததாலயே விமானத்தை உருவாக்க முடிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தற்போதும் மனிதனுக்கு உலகம் முழுவதும் செலவு இல்லாமல் சுற்ற வேண்டும் என்ற தேவை இருக்கிறது, பத்து மில்லியன் வருடத்தில் இறக்கை முளைத்து மனிதன் பறந்து விடுவானா அல்லது பறப்பதற்கு ஒரு வாகனத்தை உற்பத்தி செய்வானா? சிந்தித்து பாருங்கள். மனிதன் பறக்க வேண்டும் என்றால் இறக்கை முளைத்தால் போதாது புதிதாக மரபு வடிவமைக்க பட வேண்டும்.
ஆக ஒரு விலங்கு பல மில்லியன் ஆண்டுகள் பொறுமை காத்து இறக்கையையும் வளர்த்து உடல் அமைப்பையும் மாற்றி பறந்தது என்பது ஏற்றுகொள்ள முடியாத வாதம் என்பதும், ஒரு புத்திசாலித்தனமான சக்தி அதை பறக்கும் திறனுடன் உருவாக்கியது என்பதுமே உண்மை.
 

பரிணாமம் - மொனார்ச் வண்ணத்துப்பூச்சி...


இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு அர்த்தம் பொருந்தியவை, அதன் அமைப்பில் தனி தன்மை உள்ளதாக சிறு சிறு உடல் பாகங்கள் கூட எதோ காரணத்திற்காக தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு பாகமும் முழுமையாக வளராத வரை அது எதற்காக என்பது அந்த உயிரினத்திற்கு கூட தெரிவதில்லை, ஆனால் அந்த உயிரினத்திற்கும் தெரியாமல் அந்த பாகங்கள் சரியான முறையில் வளர்கின்றன என்கிற போது அதை வளர்க்கும் சக்தி மாபெரும் அறிவாற்றல் கொண்டதாக தான் இருக்க வேண்டும், அந்த வகையில் வண்ணத்து பூச்சிகள் கடவுளின் படைப்பில் மிகவும் அழகான படைப்பாகவே இருக்கின்றன, குறிப்பாக மொனார்ச் வண்ணத்து பூச்சிகள் (அ) அரச வண்ணத்து பூச்சிகள் (Monarch Butterfly) சிறப்பம்சம் கொண்டவை. நீண்ட நாட்கள் வாழ கூடியதாகவும் நீண்ட தூரம் பறக்க கூடியதாகவும், மற்ற வண்ணத்து பூச்சிகளை காட்டிலும் மிக அருமையான கூட்டு புழு (Pupa) நிலையை கொண்டதாகவும் இருக்கிறது.

இந்த மொனார்ச் வண்ணத்து பூச்சியை பார்க்கும் போது அதன் வடிவைப்பின் திறமைகளையும் அதை வடிவமைத்தவரின் ஆற்றலையும் அறியலாம், வண்ணத்து பூச்சியின் இறகுகள், கால்கள், உணர்கொம்பு (Antenna) என அனைத்தும் அது பறக்க எதுவாக அதன் கருவிலேயே வடிவமைக்கப்பட்டு, அவைகளின் வளர்ச்சியிலும் செயல்களிலும் எதுவும் அச்சு பிசகாமல் நடைபெற்று உலகின் மிக அழகான உயிரினமாக முழு வண்ணத்து பூச்சியாக மாறுவதை ஒரு மாபெரும் அதிசயம் என்பதையும், அது கடவுளின் மாபெரும் சக்தியை மறைமுகமாக உணர்த்துகிறது என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. இந்த வண்ணத்து பூச்சை பற்றி அறிவதன் மூலம் கடவுளின் இருப்பு, ஆற்றலையும் மற்றும் அது இயற்கையின் தேர்வு அல்ல என்பதையும் விளங்க முடியும்.


மொனார்ச் (அ) அரச வண்ணத்துப்பூச்சிகள் தங்களின் வாழ்வில் நான்கு இடைநிலைகளை கொண்டதாக உள்ளது. முட்டை (Egg), கம்பளி புழு (caterpillar), கூட்டு புழு (Pupa or chrysalis), முழுமையான வண்ணத்து பூச்சி (Butterfly).


பெண் வண்ணத்துப்பூச்சானது பால் காட்டுசெடியில் (Milk weed) உள்ள இலையில் மிகவும் நுண்ணிய முட்டையை இடும் (படத்தை காண்க), அதிலிருந்து கம்பளி புழு உருவாக ஆரம்பிக்கிக்கும், அது அந்த இலையிலையே தன்னுடைய வாழ்கையை துவங்கும். இவைகள் மேலும் வளர வளர முழு கம்பளி புழு என்ற நிலையை அடையும்.


ஒன்பது நிறங்கள் கொண்ட வளையம் கொண்டதாகவும், மூன்று ஜோடி முன்னங்கால்கள், ஐந்து ஜோடி பின்னங்கால்களும், தலை வயிறு என அனைத்து உறுப்புகளும் கொண்டவையாகவும் இருக்கும். மூன்று வாரங்களில் அதிகமாக உணவு உட்கொண்டு 2700 மடங்கு அதன் உடல் எடையை அதிகரித்து கொள்ளும், பிறகு உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டு ஒரு கடினமான பொருளில் அதன் பின்னங்கால்களை இணைத்து J வடிவத்தில் தலை கீழ் தொங்க ஆரம்பித்து விடும். கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று.


பன்னிரெண்டு மணி நேரத்திற்கு பிறகு, கம்பளி புழுவிற்கு (Caterpillar) அடுத்த நிலையான கூட்டு புழு (Pupa) நிலைக்கு மாறும். வண்ணத்து பூச்சிக்கு தேவையான வளர்ச்சியுடன் வயிற்று பகுதிக்கு மேல் 24 தங்க நிற வண்ணம் உடைய வளையமும், 12 தங்க நிற வளையம் வயிற்று பகுதிக்கு கீழும் தெரிய ஆரம்பிக்கும். இந்த நிலையில் அவற்றுக்கு கண்கள் தெரியாது, இந்த கூட்டு புழுவின் உள்ளே முதல் பதினாரு மணி நேரத்தில் ஒரு பச்சை நிறத்திலான திரவம் உருவாகி அதன் உட் பாகங்கள் உருவாகும், அதன் வெளிப்புறத்தில் உள்ள செல் அடுக்கே கடைசியில் வண்ணத்து பூச்சியின் இறக்கையாக உருவாகும், இந்த நிலையிலும் கூட அவைகளுக்கு வண்ணத்து பூச்சு என்ற தோற்றம் கூட இருக்காது. முழுமையாக மாறுபட்ட உருவமே இருக்கும்.


இரண்டு வாரங்களுக்கு பிறகு அதன் வயிற்றில் இருக்கும் திரவத்தை இறக்கை பகுதிக்கு அழுத்த (Pump) அடுத்த பதினைந்து நிமிடங்களில் அது பறக்க தயாராகிவிடும், இரண்டு மணிநேரத்துக்குள் அதன் இறக்கைகளை உளற வைத்து முழு வண்ணத்து பூச்சியாக உருவெடுக்கும், தற்போது அதற்கு ஆறு கால்களும் நான்கு இறக்கைகளும் இருக்கும். உயர்ந்த உணர் திறன் கொண்ட அதன் இரண்டு கண்களில் 6000 கண்ணாடி வில்லைகள் (Lenses) இருக்கப்பெற்று புற ஊதா உட்பட அனைத்து வண்ணங்களையும் பார்க்க கூடியதாக இருக்கும். அதன் கண்களிலிருந்து மூளைக்கு வரும் 72000 மின்தூடிப்புகள் (Electrical pulses) கண் காணும் அந்த உருவங்களை அர்த்தம் உள்ள உருவமாக மாற்றும்.


இந்த வகை அரச வண்ணத்து பூச்சிகள் அதிக தூரம் அதாவது கண்டம் விட்டு கண்டம் பறக்க கூடிய திறன் உள்ளவை, இந்த வண்ணத்து பூச்சியின் இடமாற்ற அமைப்புகூட மிகவும் சிக்கலான அமைப்பாக உள்ளது. 3000 திற்கும் அதிகமான மைல்கள் பறந்து அவைகள் பார்த்திராத புதிய இடங்களுக்கு செல்கின்றன. அரச வண்ணத்து பூச்சியின் இடை நிலைகள், அவைகளின் திறன் மற்றும் அழகு என அனைத்தும் அதன் மரபில் எழுதப்பட்ட செய்தியையே பிரதிபலிக்கின்றன.


இந்த வண்ணத்து பூச்சிகள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது இயற்கையின் தேர்வால் மட்டுமே அதன் முட்டையில் உள்ள மரபணுவில் எழுதப்பட்டது என்ற வாதத்தை வைத்தால், எதற்காக அவைகள் சிக்கலான இடைநிலைகளை ஏற்படுத்தி கொண்டு பறக்க வேண்டும், இயற்கையிலேயே பறப்பவையாக பிறக்கலாமே, அவ்வாறு கடினமான ஒரு உயிரினத்தை உருவாக்கும் அறிவு பெற்ற இயற்கையின் தேர்வு மனிதனையும் பறக்க வைக்குமா? அல்லது மனிதன் தலைகீழாக மரத்தில் தொங்கினால் தான் பறக்க முடியுமா?

ஒரு உயிரினம் உருவாக சரியான அமைப்பு, காரணம், சாதாரண தன்மை, சிக்கலான உள்அமைப்பு, அழகு, அறிவு, உணர்ச்சி, முழுமை என்ற பல தன்மைகள் தேவைப்படுகின்றன. இதில் எந்த ஒரு தனியான தன்மையும் தானாக உருவானதாக நிரூபிக்க படவில்லை என்கிறபோது இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு முழுமையான அமைப்பு தானாக உருவானது என்பது எந்த அளவிற்கு பரிணாம வாதிகளை அறிவாளி என்ற நிலைக்கு இட்டுசெல்லும் என்பதனை அவர்களின் முடிவிற்கே விட்டு விடலாம்.
 

பரிணாமம் - அதிசய மனிதன்..

பரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பதை நிரூபிக்க மனிதனுக்கு மனிதனை பற்றிய சிந்தனை இருந்தால் மட்டுமே போதுமானது.

Missing link, இதை பற்றி பலரும் சொல்ல கேள்வி பட்டிருப்பீர்கள், உதாரணமாக ஒன்று என்பது ஒழு முழுமையான எண், பத்து என்பது மற்றொரு முழுமையான எண், ஒன்று பத்தாக பரிணாமம் அடைய வேண்டுமெனில் அது இரண்டு மூண்டு.......ஒன்பது என்ற படி நிலையை கடந்து தானே பத்து என்ற நிலையை அடைய முடியும்.

ஒன்று என்பதை குரங்காகவும் பத்து என்பதை மனிதனாகவும் வைத்து கொண்டால், பரிணாம வாதிகளின் கொள்கை படி இந்த ஒன்று என்பது இரண்டு மூன்று நான்கு என்று பல கோடி வருடங்கள் பரிணாமம் பெற்று பத்தை அடைய வேண்டும். ஒன்று, இரண்டு மூன்று என அனைத்து உயிரினங்களின் உடலும் புதைக்க பட்டிருக்கும்.

ஆனால் இன்று வரை காண கிடைப்பது குரங்கின் படிமம், அல்லது மனிதனின் படிமம், இடைப்பட்ட மனிதனுக்கு முந்தைய வேறு வேறு உயிரினங்களின் படிமம் (Transitional Fossils) தொடர்ந்து காணவில்லை, இதையே missing link is still missing என்று கூறுவார்.


இப்படி இருக்க பரிணாமம் உண்மையெனில் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? பாம்பு திடிரென ஒரே நாளில் பறவையாக மாறி இருக்க வேண்டும், பறவை திடிரென மற்றொரு உயிராக மாறி இருக்க வேண்டும். குரங்கு திடிரென மனிதனாக மாறி இருக்க வேண்டும். அப்படி மாறுகிறது என்பதை பரிணாம வாதிகள் ஏற்று கொள்வார்களா? இருப்பினும் அனைத்து உயிரினங்களும் முழுமை பெற்றே உள்ளன. சரி மனிதனுக்கு வருவோம்.

அனைத்தும் எதோ முடிவு எடுத்து வைத்தார் போல, ஆணின் விந்தணுவிற்காக (Sperm) காத்திருக்கும் பெண்ணின் கரு (Egg), விந்தணுவிற்கு 72 மணி நேர ஆயுள், கரு முட்டைக்கோ 24 மணி நேர ஆயுள், இரண்டும் 24 மணி நேரத்துக்குள் இணைய வேண்டும் அடுத்த சந்ததியை உருவாக்க, யார் கற்றுகொடுத்ததோ தெரியவில்லை அந்த விந்தணுவிற்கு மனிதன் உருவாக தேவையான பாதி செய்தியை தலையில் வைத்து (X அல்லது Y ஏதாவது ஒரு குரோமோசோமுடன்) நீந்தி கொண்டு கோடிக்கணக்கான அணுவில் ஒன்று மட்டும் பெண்ணின கருவை வெற்றிகரமாக அடைகிறது, மனிதன் உருவாக மறு பாதி செய்தியுடன் (X குரோமோசோம்) அந்த கரு முட்டை விந்தணுவின் வரவை எதிர் பார்த்து காத்திருக்கிறது.

video

இந்த மனித வளர்ப்பை தாயின் கருப்பை செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் மார்பகங்கள் பிறக்க போகும் குழந்தைக்கு பால் தருவதற்காக தன்னை தயார் படுத்தி கொள்ளும் வேளையில் உள்ளது, என்ன ஒரு வியப்பு குழந்தை பிறக்கிறது அன்னையின் மார்பகங்கள் பால் தருவதற்கு தயார் நிலையில் உள்ளது.

பிறந்த குழந்தைக்கு உணவு என்றால் என்னவென்றே தெரியாது ஆனாலும் தாய் மார்போடு அணைக்கிறாள் குழந்தை பாலை உறிஞ்சி குடிக்கிறது. எதுவுமே தெரியாத குழந்தை ஒவ்வொன்றாக கற்று வளர்கிறது, அனைத்து உறுப்புகளும் வளரும் போது பற்கள் மட்டும் வளர்ந்து கொட்டி விடுகிறது (Child Teeth), பிறகு புது பற்கள் (Adult Teeth) முளைக்க ஆரம்பிக்கிறது அவன் வளர்ந்தான் என்பதற்காக.

அனைத்து பாகங்களும் இருக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவில், அனைத்திலும் மனிதனுக்கு அளவிட முடியாத போக்கிசங்களில் குறுப்பிடதக்கவை கண்கள் (Eyes) மற்றும் மூளை.

மனிதனின் கண் 70 லட்சம் (~) வண்ணங்களை (Colors) பிரித்து அறிய கூடியது, வண்ணங்கள் என்பது வேதியியல் மூலக்கூருகளால் உருவாக்கப்பட்டது என்றும் அறிவியலாளர்கள் கூறுவார். ஆனால் நமக்கு தெரிந்த வண்ணம் பிறர்க்கு வேறு ஒரு வண்ணமாக கூட தெரியலாம், ஆம் கண்ணில் இருக்க கூடிய கூம்புகள் தான் நமக்கு வண்ணங்களை உருவாக்குகின்றன, இந்த வண்ணங்களை நமது கண்களுக்கு கொடுத்தது எது? வண்ணத்திற்கும் உயிரினங்களுக்கும் என்ன சம்பந்தம், உயிர் வாழ வண்ணங்கள் தேவையே இல்லை, பல லட்ச வண்ணங்களை பிரித்து அறிய கூடிய ஆற்றலை இந்த கண்களுக்கு யார் தந்தது. உதாரணமாக ஒரு பச்சை வண்ணம் இருக்கிறது என்றால் அது பச்சை வண்ணம் என்பதை முன்னமே நாம் அறிந்திருந்தால் மட்டுமே அதை பச்சை வண்ணம் என்று கூற முடியும், எதுவுமே அறிய காலத்தில் அந்த வண்ணத்தை பச்சை வண்ணமாக எவ்வாறு நமது கண்கள் எடுத்து கொண்டன. உயிரினங்கள் பரிணாமம் அடைந்திருந்தால் அனைத்து பொருளும் ஒரே மாதிரியாக இருந்திருக்குமே தவிர வண்ணங்கள் வந்திருக்காது.

மூளை, இதன் வியத்தகு ஆற்றல் அளவிட முடியாதது, உடலில் உள்ள அனைத்து பாகங்களை விடவும் வித்தியாசமான நம்ப முடியாத ஆற்றல் கொண்ட பாகமாகவும், மனிதனுக்கு சுயமாக சிந்திக்க கூடிய ஆற்றலை உடையதாகவும் மூளை உள்ளது. நொடி பொழுதில் லட்சக்கணக்கான செய்திகளை செயல் படுத்துகிறது, பார்க்க கூடிய அனைத்து வண்ணங்களையும், பொருள்களையும் நினைவில் வைத்து கொள்ள கூடியது, உங்களை சுற்றி உள்ள சப்தம், தட்ப வெப்ப நிலை, கோபம், சுகம், துக்கம், சிரிப்பு போன்ற உணர்வுகள், மற்றும் அதையும் சேமித்து வைத்தல், அதே சமயம் உடலின் தலை முதல் கால் வரை என்னென்ன நிலைகளை உடல் சந்திக்கிறது, தற்காப்பு என அனைத்து வேலைகளையும் மூளை சேமித்து செயல்படுத்துகிறது.

நாம் ஒரு பொருளை பார்க்கும் பொழுது நுண்ணிய நரம்புகள் (Nervous) கண்கள் பார்க்கும் செய்தியை மூளைக்கு எடுத்து செல்கின்றது, மூளை அதன் தூரதிற்கேட்ப அதன் அளவை நமக்கு காண்பிக்கிறது, ஒரு பொருளை நீங்கள் அதே அளவில் கண்டால் என்ன ஆகும், அனைத்து பொருள்களையும் நம்மால் காண முடியாது, கண்கள் இருந்தும் இல்லாதது போலவே, ஆக மனிதனின் தேவை என்னவென்று உணர்ந்தே இவைகள் மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கண்ணும் மூளையும் எங்கிருந்து வந்தது எப்படி வந்தது என்பதற்கு விளக்க முடியாதவாரே இந்த பரிணாம கொள்கை உள்ளது. ஒரு உயிரற்ற பொருளிருந்து வந்த ஒன்றிற்கு மூளை போன்ற ஒரு வியத்தகு ஆற்றல் கொண்ட ஒரு உறுப்பு உருவாக சிறிதேனும் வாய்ப்பு உள்ளதா என்பதை பரிணாம வாதிகள் சிந்திக்க வேண்டும். தானாக உருவான மனிதனுக்கு அவனே அறியாத அவனுடைய தேவைக்கேற்ப யார் இந்த கண், மூளையின் திறனை மாற்றியது.

மனிதனுடைய ஒவ்வொரு உறுப்பும் கடவுளின் தெளிவான செய்திகளை மனிதனுக்கு விளக்க கூடியதாக உள்ளது, இரத்தத்தை சுத்தம் செய்வதற்கென ஒரு உறுப்பு (Heart), உணவை செரிக்க வைக்க (Intestine), பார்க்க (View), கேட்க (Listen) என அனைத்து வேலைகளுக்கும் தனி தனி உறுப்பு. அது மட்டுமல்லாமல் தங்களுக்குள் ஒரு ஒழுங்கு முறையை கொண்டுள்ளன. இரண்டு கண்களுக்கும் இடையில் ஒரு கண் இடைவெளி, மெல்லிய கண்களை பாதுகாக்க இமைகள், நெற்றியின் உயரமும் மூக்கின் நீளமும் அளந்து வைத்தாற்போல, இரண்டு காதுகளின் அளவு என அனைத்தும் கனகச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது, உள் பகுதியில் இரத்தம், நரம்பு, சதை என பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்த பட்டாலும் பார்வைக்கு மிகவும் அழகை தர கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உலகில் உள்ள அத்தனை கோடி மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக. நாத்திகம் பேசுபவர்களே இவை அனைத்தும் நடப்பது ஒரு அர்த்தம் இல்லாமலா? கோடான கோடி நட்சத்திரம், கிரகங்கள் இருந்தும் பூமியில் மட்டும் இப்படி நிகழ்வது காரணம் இல்லாமலா?

பல மில்லியன் வருடங்களில் இவைகள் நடக்கலாம் என்ற குருட்டு நம்பிக்கையை விட்டு விட்டு, ஒரு உயிரினம் அதன் வாழ்நாளில் (ஐம்பது வருடங்கள் வைத்து கொள்ளுங்கள்) என்ன மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது என்று சிந்தித்து பாருங்கள், மனிதன் தானாக உருவானவனா அல்லது அதீத சக்தியால் உருவாக்க பட்டவனா என்பது விளங்கும். இதில் இருக்கும் உண்மைகளை அறிந்தாலே பரிணாமம் என்பது பொய் என்பதையும் கடவுள் என்ற மாபெரும் சக்தி இருப்பதையும் அறிவீர்கள்.


இப்பதிவின் மூலம் பரிணாம வாதிகளிடம் கேட்கப்படும் சில நியாயமான கேள்விகள்:
அனைத்தையும் உருவாக்க கூடிய கருப்பையை யார் உருவாக்கியதோ, பிறக்க போகும் குழந்தைக்கு பால் தேவை என்பதை தாயின் மார்பகத்திற்கு யார் சொல்லி கொடுத்ததோ, குழந்தை பற்கள் விழுந்து வாலிப பற்கள் (Adult Teeth) முளைப்பது யாரால்?

பேசுதல், காதில் கேட்டால் என்றால் என்னவென்று தெரியாமலேயே பேசுவதற்கு வாயும் கேட்பதற்கு காதுகளும் உருவாகுமா?

சிந்தித்தல் என்றால் என்ன வென்று தெரியாமலேயே சிந்திப்பதற்காக மூளை தேவை என்பதை பரிணாமம் முன்கூட்டியே எப்படி அறிந்து கொண்டு மூளையை உருவாக்கியது?

கண்கள், நரம்புகள் மற்றும் விந்தணுவில் செய்திகள் போன்ற விசித்திரமானவைகள் தானாக உருவாக ஒரு சதவிகிதமேனும் சாத்தியம் இருக்கிறதா?

பரிணாமவாதிகள் இவற்றை நேர்கொண்ட பார்வையில் விளக்குவார்களா??
References:


http://health.howstuffworks.com/human-body/systems/nervous-system/brain.htm
http://bsnprogram.com/2010/50-incredibly-weird-facts-about-the-human-body/
http://wiki.answers.com/help/asking_question
http://www.youtube.com/watch?v=ySw0RVO3dwI
http://www.abc.net.au/science/photos/mathsinnature/blank.htm
http://hypertextbook.com/facts/2006/JenniferLeong.shtml
 

No comments:

Post a comment