சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் நடந்த, முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு சரியலாம் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 86.20 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தினர். கடந்த ஆண்டை விட, 0.9 சதவீதம் மாணவ, மாணவியர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.
100 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றம்தான் சமசீர் கல்வி. ஒரே ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் முதல் இடத்திற்கு வரவேண்டும் என்பது அசாத்தியம். மாற்றம் படிப்படியாகதான் வரும்
10 லட்சத்து 50 ஆயிரத்து 922 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். கணிதத் தேர்வைத் தவிர, மற்ற பாடத் தேர்வுகளில் குளறுபடி இல்லாமல் தேர்வு நடந்து முடிந்தது. போராட்டங்களுக்குப் பின், புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடந்த பொதுத் தேர்வு என்பதால், தேர்ச்சி சதவீதம் ஓரளவு சரியும் என்றே, கல்வித்துறை உட்பட அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், நேற்று வெளியான தேர்வு முடிவு, எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கியது. 86.2
சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தினர். கடந்த ஆண்டு, 85.30 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 0.9 சதவீதம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட, தேர்ச்சி சதவீதம் சரியாமல் தேர்வு முடிவு வந்திருப்பது, கல்வித்துறையை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
2012
மொத்த மாணவர்கள்: 10,50,922
மாணவர்கள்: 5,26,790
மாணவியர்: 5,24,132
மொத்த தேர்ச்சி: 86.20%
மாணவர்கள் தேர்ச்சி: 83.40% (4,39,391)
மாணவியர் தேர்ச்சி: 88.90% (4,66,147)
1.5 லட்சம் பேர் தோல்வி:பத்தாம் வகுப்புத் தேர்வை, 10 லட்சத்து 50 ஆயிரத்து 922 பேர் எழுதினர். இவர்களில், 9 லட்சத்து 5,538 பேர் தேர்ச்சி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
மாணாக்கர்கள் எடுக்கும் மதிப்பெண்களை பார்த்தால், ஒன்று அவர்களின் கற்கும் திறன் அதிகரித்திருக்கும், அதே போல் கற்கும் பாடத்தின் கடினமும் குறைந்திருக்கும்.... நிச்சியமாக இந்த தலைமுறை மாணவர்களின் கற்கும் திறன் (Learning ability) மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.... ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் IQ level கூடிகொண்டே செல்கிறது.... இன்று சாதரணமாக ஒரு நான்கு வயது குழந்தை iPhone எப்படி உபயோக படுத்த வேண்டும் என்று தெரிகிறது.... அதில் எப்படி games விளையாட வேண்டும், எப்படி photo எடுக்க வேண்டும், எல்லாவற்றையும் மிக சுலபமாக கற்று கொண்டு விடுகிறது.... ஆனால் வயதானவர்களுக்கு மொபைலில் sms படிக்க கூட தெரிவதில்லை.... இன்றைய தலைமுறையினர் புதியதாக கற்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.... மிகவும் கடினமானவற்றை முயற்சி செய்து அதில் வெற்றி பெற விரும்புகின்றனர்.... இப்பொழுது கடைகளில் விற்க படும் games CD மற்றும் Playstation வகைகளை பார்த்தாலே புரியும்.. சில வருடங்களுக்கு முன் நமக்கு தெரிந்த மிகவும் கடினமான video game , super mario .... ஆனால் அது இன்று யாரும் விளையாடுவதில்லை, ஏன், அது மிகவும் எளிதான விளையாட்டாக மாறி விட்டது. கிரிக்கெட் கூட 50 ஓவரில் ஜெய்க்க வேண்டியதை, 20 ஓவராக மாற்றி கடினபடுத்தி இருக்கிறார்கள்... சாதிக்க முடியாததை சாத்திட்டு காட்டி அதில் வெற்றி பெருகிரவனே உண்மையான திறமை சாலி... ஆனால் இன்றைய கல்வி தரத்தை பார்த்தால் centum எடுப்பது மிகவும் சுலபம் போலவே உள்ளது. இப்படியே சென்றால், அடுத்த வருடம் 500/500 எடுக்கவும் கூடும்.அந்த மாணவனை பொறுத்த வரை அது பெருமை... ஆனால் கல்வி தரத்தை பொறுத்த வரை. கல்வி தரத்தை உயர்த்துங்கள். மாணவனின் தரமும் உயரும்.
ஓவ்வொரு வருடமும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கூடி கொண்டே செல்கிறது. மாணவிகள் தேர்ச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதே விகிதம் தான். இந்த ஆண்டு 1 லட்சத்து 45 ஆயிரத்து 384 பேர் தோல்வி அடைந்தனர். இவர்களுக்கு, ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வு நடக்கிறது. உங்கள் தேர்வில் தேர்ச்சி பெற என்னுடைமனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:
Post a Comment