Thursday, 7 June 2012

ஈரோ கோப்பை கால்பந்து போட்டி -ஒரு சிறப்பு பார்வை

கால்பந்தாட்ட விளையாட்டு ரசிகர்களுக்கு இந்த மாத விருந்து....
16 அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 10.30 மற்றும் 1.15 மணிக்கு நடைபெறும்.
கால்பந்தில் உலக கோப்பைக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமானது, யூரோ கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

இதன்படி 14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியை போலந்து+உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இன்று தொடங்கும் இந்த கால்பந்து திருவிழா ஜுலை 1-ந்தேதி வரை 8 நகரங்களில் அரங்கேறுகிறது.

போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.
`ஏ' பிரிவில் போலந்து, கிரீஸ், ரஷியா, செக்குடியரசு ஆகிய அணிகளும்,

`பி' பிரிவில் நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, போர்ச்சுகல் ஆகிய அணிகளும்,

`சி' பிரிவில் ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து, குரோஷியா ஆகிய அணிகளும்,


`டி' பிரிவில் உக்ரைன், சுவீடன், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். தொடக்க நாளான இன்று வார்சாவில் நடக்கும் ஆட்டத்தில் உள்ளூர் அணியான போலந்து, கிரீசையும், ரோக்லாவில் நடக்கும் அடுத்த ஆட்டத்தில் ரஷியா, செக்குடியரசையும் சந்திக்கின்றன.
Spanish national soccer team players salute from a stage at the Colon square in Madrid, Spain 30 June 2008 as they celebrate the UEFA EURO 2008 title. The Spanish soccer team won the European soccer championships UEFA EURO 2008 the previous day, defeating Germany 1-0.  EPA/Victor Lerena
உலக கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி என்பதால் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களிடம் இப்போது 'EURO ஜுரம்' தொற்றிக் கொண்டுள்ளது. கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு? என்று நிபுணர்களும் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
உலக சாம்பியனும், நடப்பு ஈரோ சாம்பியனுமான ஸ்பெயின் அணிக்கே கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த அணிக்கு பின்னடைவாக கடந்த ஈரோ போட்டியில் அதிக கோல் அடித்தவரான (4 கோல்) டேவிட் வில்லா மற்றும் கார்லஸ் புயோல் ஆகியோர் காயம் காரணமாக ஸ்பெயின் அணியில் இடம் பெறவில்லை. ஆனாலும் தங்களால் சாதிக்க முடியும் என்று ஸ்பெயின் பயிற்சியாளர் வின்சென்ட் டெல் போர்க்ï நம்பிக்கை தெரிவிக்கிறார்.
கேப்டனும், கோல் கீப்பருமான இகேர் கேசில்லாஸ், ஸாவி ஹெர்னான்டஸ், பெர்னாண்டோ டோரஸ், உலக கோப்பை வெற்றி நாயகன் ஆண்ட்ரஸ் இனியஸ்டா, டேவிட் சில்வா உள்ளிட்டோர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர். தகுதி சுற்றில் தான் ஆடிய 8 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்த ஸ்பெயின் அந்த பயணத்தை தொடரும் உத்வேகத்தில் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளன. இந்த முறையும் ஸ்பெயின் வாகை சூடினால், ஈரோ, உலக கோப்பை மீண்டும் ஈரோ என்று தொடர்ச்சியாக மூன்று மெகா போட்டியில் மகுடம் சூடிய முதல் அணி என்ற அரிய சிறப்பை பெறும்.

ஜெர்மனி, நெதர்லாந்து.

முன்னாள் சாம்பியன் ஜெர்மனியும் பட்டத்திற்கான வாய்ப்பில் மல்லுக்கட்டி நிற்கிறது. கேப்டன் பிலிப் லாம், லுகாஸ் போடோல்ஸ்கி, தாமஸ் முல்லர், மூத்த வீரர் மிரோஸ்லாவ் குளோஸ், பாஸ்டின் ஸ்வெய்ன் ஸ்டீகெர் ஆகியோர் அந்த அணியின் தூண்களாக உள்ளனர். இதில் குளோஸ், போடோல்ஸ்கி, போலந்து நாட்டில் பிறந்தவர்கள் ஆவர். சொந்த மண்ணில் அவர்கள் ஜெர்மனிக்காக விளையாட இருப்பது சுவாரஸ்யமான விஷயமாகும். இந்த அணியும் தகுதி சுற்றில் ஒரு தோல்வியும் சந்திக்கவில்லை. விளையாடிய 10 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.
உலகின் பலம் வாய்ந்த, அதிர்ச்சி அளிக்கக்கூடிய அணிகளில் ஒன்றான நெதர்லாந்தும் சாம்பியன் ரேசில் முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. 2010-ம் ஆண்டு உலக கோப்பையை ஸ்பெயினிடம் பறிகொடுத்த நெதர்லாந்து அணி, அந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க விïகங்களை அமைத்து வருகிறது. வெஸ்லே ஸ்னீடர், முன்கள வீரர் ராபின் வான் பெர்சி, எதிரணியை ஏமாற்றி கோல் அடிப்பதில் வல்லவர்கள். `ஆரஞ்ச்` என்று செல்லமாக அழைக்கப்படும் நெதர்லாந்து அணி 1988-ம் ஆண்டு ஈரோ கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.
பிரான்ஸ் அணி இரண்டு முறை யூரோ கோப்பையை வென்றிருந்தாலும், கடந்த உலக கோப்பையில் அந்த அணியின் ஆட்டம் மோசமாக இருந்ததால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் இதுவே தங்கள் அணிக்கு சாதகமான விஷயமாக இருக்கும் என்று அந்த அணி கருதுகிறது. 1998-ம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2000-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த லாரென்ட் பிளான்க் தற்போது பிரான்சின் பயிற்சியாராக உள்ளார். அவர் பயிற்சி அளிப்பது, பிரான்ஸ் அணிக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட்டாகும்.
போர்ச்சுகல் அணியில், சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியனோ ரொனால்டோ உள்ளார். ஆனால் அவரை தவிர மற்றவர்களின் ஆட்டம் ஒருங்கிணைப்புடன் இருக்குமா? என்று சொல்ல முடியாது. மேலும் `குரூப் ஆப் டெத்' எனப்படும் சவாலான பிரிவில் போர்ச்சுகல் உள்ளது. நெதர்லாந்து, ஜெர்மனியை தாண்டி அந்த அணி கால்இறுதிக்கு வருவதற்கு பெரிய யுத்தமே நடத்த வேண்டி இருக்கும்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1355 கோடியாகும். போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணமாக ஒவ்வொரு அணிக்கும் ரூ.55 கோடி வழங்கப்படும். லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.7 கோடியும், டிராவுக்கு ரூ.3 1/2 கோடியும் கிடைக்கும். கால்இறுதிக்கு வரும் அணி ரூ.14 கோடியும், அரைஇறுதிக்கு வரும் அணி ரூ.20 1/2 கோடியும், இறுதிப்போட்டியில் தோற்கும் அணி ரூ.31 கோடியும் பரிசுத்தொகையாக பெறும்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.52 கோடி அளிக்கப்படும். பங்கேற்பு கட்டணம், லீக் சுற்றுகளில் வெற்றி இவற்றை எல்லாம் சேர்த்து பார்த்தால் சாம்பியன் ஆகும் அணி மொத்தம் ரூ.162 கோடி வரை பரிசுத்தொகையாக அள்ள முடியும்.

இனி, அடுத்த 24 நாட்கள் கால்பந்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. தொடக்க ஆட்டத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு கோலாகலமான தொடக்க விழாவும் வார்சா மைதானத்தில் நடைபெறுகிறது.

-

போட்டி அட்டவணை

தேதி மோதல் இந்திய நேரம்


ஜுன். 8 போலந்து-கிரீஸ் இரவு 10.30 மணி

ஜுன். 8 ரஷியா-செக்குடியரசு நள்ளிரவு 1.15 மணி

ஜுன். 9 நெதர்லாந்து-டென்மார்க் இரவு 10.30 மணி

ஜுன். 9 ஜெர்மனி-போர்ச்சுகல் நள்ளிரவு 1.15 மணி

ஜுன். 10 ஸ்பெயின்-இத்தாலி இரவு 10 மணி

ஜுன். 10 செக்குடியரசு-குரோஷியா நள்ளிரவு 1.15 மணி

ஜுன். 11 பிரான்ஸ்-இங்கிலாந்து இரவு 10.30 மணி

ஜுன். 11 உக்ரைன்-சுவீடன் நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.12 கிரீஸ்-செக்குடியரசு இரவு 10.30 மணி

ஜுன்.12 போலந்து-ரஷியா நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.13 டென்மார்க்-போர்ச்சுகல் இரவு 10.30 மணி

ஜுன்.13 நெதர்லாந்து-ஜெர்மனி நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.14 இத்தாலி-குரோஷியா இரவு 10.30 மணி

ஜுன்.14 ஸ்பெயின்-அயர்லாந்து நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.15 சுவீடன்-இங்கிலாந்து இரவு 10 மணி

ஜுன்.15 உக்ரைன்-பிரான்ஸ் நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.16 செக்குடியரசு-போலந்து 1.15 மணி

ஜுன்.16 கிரீஸ்-ரஷியா நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.17 போர்ச்சுகல்-நெதர்லாந்து நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.17 டென்மார்க்-ஜெர்மனி நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.18 குரோஷியா-ஸ்பெயின் நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.18 இத்தாலி-அயர்லாந்து நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.19 இங்கிலாந்து-உக்ரைன் நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.19 சுவீடன்-பிரான்ஸ் நள்ளிரவு 1.


ஜுன்.21 முதலாவது கால்இறுதி நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.22 2-வது கால்இறுதி நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.23 3-வது கால்இறுதி நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.24 4-வது கால்இறுதி நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.27 முதலாவது அரைஇறுதி நள்ளிரவு 1.15 மணி

ஜுன்.28 2-வது அரைஇறுதி நள்ளிரவு 1.15 மணி


ஜுலை.1 இறுதிப்போட்டி நள்ளிரவு 1.15 மணி15 மணி
Euro 2012 Infographic



ஐரோப்பாவின் உக்ரைன் மற்றும் போலந்தில் ஐரோப்பிய கால்பந்து தொடர் பிரமாண்டமாக தொடங்கவிருக்கிறது. இதில் வெற்றி பெறப்போகும் அணியை ஆரூடம் கணிக்க,
உக்ரைன் நாடு பன்றியை அறிமுகப் படுத்தியிருக்கிறது.

கடந்த 2010 இல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில், பால் என்கிற ஆக்டோபஸ் வெற்றி, தோல்வி அணிகளை ஆரூடம் கணித்து சரியாக சொன்னது. இந்த பால் என்கிற ஆக்டோபஸை அறிமுகப் படித்திய நாடு ஜெர்மன். அதேபோல இப்போது
ஜூன் 8
இல் ஆரம்பித்து
நடைபெறவிருக்கும்
ஐரோப்பிய கால்பந்து தொடரின் வெற்றி, தோல்வி அணிகளை ஆரூடம் கணித்துக் கூற, உக்ரைன் பன்றியை அறிமுகப் படுத்தியிருக்கிறது.

உக்ரைன் நாட்டு மக்கள் முன் அறிமுகப்
படுத்தப்பட்ட இந்த பன்றிக்கு, அந்த நாட்டு அமோக வரவேற்பளித்து, இந்த பன்றி வெற்றி, தோல்வி அணிகளை சரியாக கணித்துக் கூறும் என்று தாங்கள் நம்புவதாகவும்
கூறினர்.

இறுதியாக 2008ம் ஆண்டு சுவிற்சர்லாந்து - ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இணைந்து யூரோ கோப்பையை நடத்தியிருந்தன. இதில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் பெற்றது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment