Wednesday 13 June 2012

சினிமா, டிவி படிப்புகள்- ஒரு பார்வை..








தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் டி.வி. பயிற்சி நிறுவனத்தில் 2012-13ம் ஆண்டுக்கான கல்வியாண்டில் 3 ஆண்டுகளுக்கான பட்டயப்படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டைரக்ஷன், திரைக்கதை, வசனம் எழுதுதல் மற்றும் டி.வி. தயாரிப்பு, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் டி.வி. தயாரிப்பு (ஒளிப்பதிவு), திரைப்பட தொழில் நுட்பம் மற்றும் டி.வி. தயாரிப்பு (எடிட்டிங்), ஒளிப்பதிவு மற்றும் சவுண்ட் ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ பட்டப்படிப்புகள் கற்றுத்தரப்படுகிறது.

டைரக்ஷன், திரைக்கதை வசனம் எழுதுதல் படிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சியும், மற்ற படிப்புகளுக்கு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி மற்றும் மின்னணுவியல், தொலைதொடர்பு என்ஜினியரிங் ஆகியவற்றில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் அரசு தீதீதீ.tண.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விரவங்களுக்கு முதல்வர், எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட கல்லுõரி, தரமணி, சென்னை என்ற முகவரியிலும் 04422542212 என்ற எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment