Saturday, 10 May 2014

திருச்சூர் பூரம் திருவிழா பற்றிய ஒரு தவகல்!!



கேரளாவில் தோன்றிய முதல் கோயில் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயில்தான். வடக்குநாதர் என்பது விடைகுன்றுநாதர் என்ற தமிழ்ப்பெயரிலிருந்து மருவியது என்று சொன்னது வியப்பாயிருந்தது. அக்கோயில் விடைபோன்றதொரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால், அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.இத்தலத்தில் உள்ள லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் லிங்கத்தை "பனிலிங்கம்" என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை "நெய்லிங்கம்" என அழைக்கிறார்கள்.
Photos by Manoj















பூரம் கோடை அறுவடைக்குப் பிறகு மத்திய கேரளாவில்ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் திருவிழா. பல்வேறு பூரத் திருவிழக்களுள் மிகவும் புகழ் பெற்றது திருச்சூர் பூரம்.மலையாள ஆண்டு கணக்குப்படி ஒவ்வோர் ஆண்டும்  இந்த விழா  மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஏப்ரல் நடுவிலிருந்து மே மாத முதல் வாரத்திற்குள் விழா நடைபெறும்.இந்த விழாவில் பல்வேறு கோவில்களை சேர்ந்த யானைகளும்போட்டியில் கலந்து கொள்வதால் விழா களைகட்டுவதில் வியப்பில்லை.யானைகளை மட்டுமல்லாது அவை அணிந்து வரும்ஆபரணங்களுக்காகவும், சுமந்து வரும் வண்ண வண்ணகுடைகளை காணவும் உள்நாட்டினர் மட்டுமல்லாது,ஏராளமான வெளிநாட்டினரும் வருவது வழக்கமாகும்.



திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகள் அணிவகுப்பும், அலங்காரமும் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் காட்சியைக் கண்டிருக்கிறோம்.
குருவாயூர் கோவிலில் யானை ஓட்டம் பிரசித்தி பெற்றது.





யானைகளின் நெற்றிப்பட்டங்கள், வண்ணமுத்துமணிக்குடைகள், வெண்சாமரங்கள், யானைவட்டங்கள், யானைகளின் கழுத்தில் அணிகிற சலங்கைகள் இடம்பெற்றிருந்தன. வண்ணவடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள முத்துமணிக்குடைகள், உருவபொம்மை குடைகள் ஆகியன பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது. பாரமேற்காவு தேவஸ்தானத்தினுடைய அணிகலன்கள் பாரமேற்காவு மண்டபத்திலும், திருவம்பாடி தேவஸ்தானத்தினுடைய அணிகலன்கள் திருச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இதன் கண்காட்சி நடக்கும்.

 தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment