Sunday 11 May 2014

பஞ்சாயத்து தீர்ப்பால் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடந்த கொடூரம்!!

பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல்; பஞ்சாயத்து தீர்ப்பால் நடந்த கொடூரம்பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கி தண்டனை வழங்கிய சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் ஏப்ரல் 19ஆம் திகதி நடந்துள்ளது.
குறித்த பெண்ணுக்கு ஒரு இலட்சம் (இந்திய ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும் இல்லையெனின் குடும்பத்துடன் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார் என கட்டப் பஞ்சாயத்து நடத்தியவர்கள் கூறி யுள்ளனர்.
தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் தனது மருமகனை வீட்டில் தங்கவைத்தார் என்ற குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு..
பாதிக்கப்பட்ட பெண் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆசிரியை ஆவார். சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் அவர், மனித உரிமைகள் ஆணையகத்தை நாடியுள்ளார். இதையடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடந்தது என்ன?
சத்தீஸ்கரின் ‘பந்லகோன் பகுதியில்’ இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனது வீட்டில் தங்கியிருந்த ஜோடிக்கு ஏற்கனவே திருமணம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அப்பெண் எனது மருமகனை சந்தித்துப் பேச எனது வீட்டுக்கு வந்தார் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
ஆனால் அந்த இளம் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். அதற்கு அந்த ஆசிரியை உதவியாக இருந்துள்ளார் என்று கட்டப் பஞ்சாயத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தண்டனை..
கட்டப் பஞ்சாயத்தில் கூடியிருந்த அனைவரும் அப்பெண்ணை அடித்து உதைக்கலாம் என்று தீ்ர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை கடுமையாகத் தாக்கியதுடன், அவரை நிர்வாணப்படுத்தவும் செய்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது தான் அணிந்திருந்த நகைகளையும் அவர்கள் பறித்துக் கொண்டதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
என் கருத்து  :
கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரில் கொடுமைகள் எங்கு நடந்தாலும் அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும்
 ஒரு வழக்கு நீதிமன்றம் சென்றால் விசாரணைக்குப் பின் நீதி கிடைக்க பல ஆண்டுகள் ஆகின்றன. இது ஒருபுறம், இதன் மறு பக்கம் கட்டப் பஞ்சாயத்துகளில் பல நேரங்களில் நீதி என்ற பெயரில் அநியாயம் அரங்கேறுகிறது. 
இங்கு பிஜேபி ஆட்சிதான். இதற்கு என்ன நடவடிக்கை ? சத்தீஷ்கர் ஜாதி-ஹிந்துக்கள் வெறியாட்டம் ஆடும் மாநிலங்களில் ஒன்று. உரிய சட்டத்தை பயன்படுத்தாத போலிஸ் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த வன்முறை தடுப்பு சட்டம் இருக்கிறது. ஆனால் ஜாதிவெறி சட்டத்தை தோற்கடிக்கும் காட்டுமிராண்டித்தனம் மாறாமல் இருக்கிறது.
உயர் ஜாதி இந்துக்களுக்கு என்றால் தான் பிஜேபி வாய் திறக்கும். மற்றவர்கள் எல்லாம் ஓட்டுக்காக மட்டும் தான் இந்துக்கள். பிஜேபி, RSS கூறும் இந்துத்துவாவும் இப்படித்தானே..?
இந்தியாவில் செயலிழந்து கிடக்கும் மனித உரிமை-பெண்ணுரிமை நிறுவனகள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி ஆணையங்கள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! 
இந்தியாவில் நடக்கும் இந்த ஜாதிய வெறியும் சீரழிவும் உலகத்தில் கவனிக்கப்பட்டும் இது அவமானம் என்று இன்னும் நினைக்காத படித்த ஹிந்துக்கள் ஜாதி ஒழிய முன்வர வேண்டும்! 
துர்ரதிஷ்ட வசமாக மோடியை தூக்கிப் பிடிப்போர் இந்த ஜாதிய வன்முறையை கண்கொள்வார்களா? என்பது கேள்வியும் அவமானமும் கலந்த விஷயமாகும்!
ஆ வூன்னா ஹிந்து உக்கு ஆபத்து ஹிந்துஸ்தானத்துக்கு ஆபத்து என்று கூறிக் கொள்பவர்களே இந்த பெண்ணும் ஹிந்துத் தாண, இந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுங்கலேண்?இதே உயர் சாதிப் பெண்ணாக இருந்திருந்தால் இது இந்திய தலைப்பு செய்தி ஆகி இருக்கும். 
இது போல கொடூர செயல்களை சில அரசியல் கட்சிகள் கண்டித்து தண்டனை பெற்று தர வேண்டும் குறிப்பாக ஹிந்துவா பேசி மக்களை ஏமாத்தும் பிஜிபி போன்ற அரசியல் கட்சிகள் மக்களக்கு நீதியை பெற்று தர வேண்டும்.
மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.எதற்கு கொடூர செயல்களை செய்கிரகள். இதை நம் ஒரு பெண்ணுக்கு நடத்து என்று பார்க்க கூடாது.ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள பெண்ணகல்கு எதிராக பார்க்க வேண்டும்.டெல்லி பெண்ணுக்கு எப்படி போராட்டம் நடத்தி அரசுக்கு எதிராக அதேபோல இந்த பெண்ணுக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்...
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment