Friday, 30 May 2014

நடிகை மோனிகா ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் ? ஒரு சிறப்பு பார்வை ..

img-0835பிரபல நடிகை மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். தன் பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.தங்கர்பச்சனின் அழகி திரைப்படம் மோனிகாவை ஒரு பேரழகியாக தமிழ்த்திரையுலகிற்கு அடையாளம் காட்டியது. அதன் பின்னர் நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க என்று வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களில் நடித்திருக்கிறார்.


அழகி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பகவதி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், சிலந்தி படத்தின் மூலம் கவர்ச்சி நாயகியாகவும் உருவெடுத்தார் .தற்போது இஸ்லாமிய மதத்தில் ஐக்கியமாகி உள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே!மேலும் தனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றியுள்ளதோடு, சினிமாவுக்கும் முழுக்கு போட முடிவெடுத்துள்ளார்.


சந்திப்பு: இடையில் தமிழ்ப் படங்களில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இன்று திடீரென செய்தியாளர்களை ஆர்கேவி ஸ்டுடியோவில் சந்தித்தார் மோனிகா.திருமணம் எனது திருமணம் பற்றிய முறையான தகவல் உரிய நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்பேன் . எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.பேட்டி  :அவர் கூறுகையில், "குழந்தை நட்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன். அதற்க்கு காரணமாக நீங்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள் உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.


பணத்துக்காக அல்ல: பணத்திற்காகேவா காதலுக்காவோ நான் மதம் மாறவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன்.


திருமணம்:  எனது திருமணம் பற்றிய முறையான தகவல் உரிய நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்பேன் . எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.புதிய பெயர்: பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் இப்போது என் பெயர் 'எம் ஜி ரஹீமா'. அதாவது மாருதி ராஜ் கிரேஸி ரஹீமா (அம்மா அப்பா பெயருடன் புதிய பெயர்).


நடிக்க மாட்டேன்
:மதம் மாறியதற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு வருத்தத்தைத் தந்தாலும், அதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.

இதுகுறித்து மோனிகா கூறியுள்ளதாவது, இந்து மதத்தில் பாதுகாப்பு இல்லை, எனவே இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். மேலும் இஸ்லாம் மதத்தின் கொள்கைகளும் எனக்கு பிடித்து இருந்தது. 2010ம் ஆண்டே மதம் மாற முடிவெடுத்தேன். ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. எனது அம்மா இந்து மதத்தை சேர்ந்தவர், அப்பா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருவரது சம்மதத்துடன் தான் மதம் மாறியுள்ளேன். விரைவில் நான் நடித்த கடைசி படமான 'நதிகள் நனைவதில்லை' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப்படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

நோ பீஸ் ஆஃப் மைன்ட்!

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து பேரும் புகழும் பணமும் இருக்கிறது.  சொந்த வீடு இருக்கிறது.ஆனால்ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் மன அமைதி இல்லை .

ஆம். மனதில் அமைதியில்லாததுதான் இது போன்ற பிரபலங்கள் இஸ்லாத்தை தாங்களாகவே ஏற்றுக் கொள்வதற்கான காரணம். அவரது பேட்டியிலும் அதனைத்தான் பிரதானமாக கூறுகிறார்.


'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!

உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'

-குர்ஆன் 110: 1,2,3

கோடிகள் புரளும் இந்த சினிமா துறையை விட்டு விட்டு வேறு தொழில்களை நாடப் போவதாக சொல்கிறார். சமூகத்தை ஆபாசத்தால் சீரழிக்கும் இந்த சினிமா தொழிலை விட்டது மிக நன்று. மற்ற தொழில்களில் இதை விட இறைவன் அதிக அபிவிருத்தியை தரலாம்.

பணத்துக்காக மாறி விட்டார்: அரபு ஷேக்கை கல்யாணம் செய்யப் போகிறார்: பைத்தியம் பிடித்து விட்டது: இந்து மதத்தில் இல்லாத தத்துவங்களா: என்றெல்லாம் பலவாறாக அவர் எள்ளி நகையாடப்படுவார். அதனை எல்லாம் ஒரு புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டு சிறந்த ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற நாமும் இந்த சகோதரியை வாழ்த்துவோம்.

 ஒரு சிறந்த வாழ்வு ..

உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு நடிகை மோனிகாவின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17

ஆம். மோனிகா இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக அவர் ஒரு சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்டு அவர் பெருமை பெறுகிறார். இது  இவருக்கு மட்டுமல்ல. உலகில்  அனைவருக்கும் பொருந்தும். இந்த சகோதரி இஸ்லாமிய  மார்க்கத்தை பற்றி பிடித்து இம்மையிலும், மறுமையிலும்  வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.

மேலும்  அவரது கனொலியை  காண கீழே  உள்ள சுட்டியை அழுத்தவும் 

http://www.youtube.com/watch?v=zh4doTCki0Y

ஆக்கம்  & தொகுப்பு : அ .தையுப அஜ்மல்.

No comments:

Post a Comment